search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mother daughter"

    • லாரி எதிர்பாராத விதமாக மொபட்டின் மீது மோதியது.
    • இதில் பலத்த அடிபட்ட 2 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோயில், சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி பூமணி (வயது 45). இவர் தனது தாய் சரஸ்வதியை (வயது 65) அழைத்துக்கொண்டு காஞ்சிக்கோயில் பகுதியில் உள்ள தனது உறவினரின் திருமணத்திற்கு மொபட்டில் வந்தனர்.

    பின்னர் திருமணம் முடிந்து மதியம் வீட்டுக்கு செல்வதற்காக காஞ்சிக்கோயில்-திங்களூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். மொபட்டை பூமணி ஓட்டி வர அவரது தாய் சரஸ்வதி பின்னால் உட்கார்ந்து இருந்தார்.

    இவர்கள் காஞ்சிக்கோயில் அடுத்துள்ள பூசம்பதி அருகே வரும்போது இவர்களுக்கு எதிரில் வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக மொபட்டின் மீது மோதியது.

    இதில் பலத்த அடிபட்ட 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் அவர்களை பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே சரஸ்வதி இறந்து விட்டதாக கூறினர். பலத்த அடிபட்ட பூமணி ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு உடல்நிலை மோசமாகி விட்டதாக கூறி மீண்டும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் பூமணியின் உடலை பரிசோதித்து விட்டு அவரும் இறந்து விட்டதாக கூறினர்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த காஞ்சிக்கோயில் போலீசார் லாரியை ஓட்டி வந்த பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம் பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 29) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாய்-மகள் கொலை வழக்கு விசாரணை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • கொள்ளையர்கள் வீட்டை தீயிட்டு கொளுத்துவதும் நடந்து வந்தது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த 11-ந் தேதி கொள்ளையர்கள் வீடு புகுந்து தாய்-மகளை கொடூரமாக கொலை செய்து, திருமணத்திற்காக வைத்திருந்த 60 பவுன் தங்க நகைகளை கொள்ளை யடித்துச் சென்றனர்.

    இந்த சம்பவத்தில் கொலையுண்ட வேலுமதியின் மகன் மூவரசு என்பவரையும் கொள்ளையர்கள் வெட்டி னர். இதில் படுகாயம் அடைந்த சிறுவன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான்.

    தாய்-மகள் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் துப்பு துலக்குவதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் சில தடயங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை கொள்ைளயர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.

    டி.ஐ.ஜி. துரை ஆலோசனையின்பேரில் விசாரணை அதிகாரியாக தேவகோட்டை டி.எஸ்.பி. கணேஷ் குமார் நியமிக்கப் பட்டார்.

    தேவகோட்டை பகுதி களில் இதுவரை சுமார் 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் கதவுகள் உடைக்கப்பட்டு விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்டும், பொருட்கள் இல்லை என்றால், கொள்ளையர்கள் வீட்டை தீயிட்டு கொளுத்துவதும் நடந்து வந்தது.

    இந்த நிலையில் வீட்டில் கொள்ளையடிக்க சென்ற மர்ம நபர்கள் தாய்-மகளை வெட்டி கொலை செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.இரட்டை கொலை நடந்து 19 நாட்கள் ஆகியும் துப்பு துலங்காதது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே காரைக்குடியில் தனியார் இடத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையை அகற்றியதால் காரைக்குடி தாசில்தார் மற்றும் தேவகோட்டை டி.எஸ்.பி. கணேஷ்குமார் ஆகியோர் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

    இரட்டைக் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக செயல்பட்ட கணேஷ்குமார் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதால் இரட்டை கொலை வழக்கு விசாரணை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இரட்டை கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளி களை உடனடியாக கைது செய்யாவிட்டால் கிராம மக்கள் ஒன்றிணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.

    • மாட்டுத்தாவணியில் ஜவுளி கடையில் நகை திருடிய தாய்- மகள் கைது செய்யப்பட்டனர்.
    • கவரிங் நகையை வைத்து விட்டு ஒரிஜினல் நகையை திருடி சென்றது தெரிய வந்தது.

    மதுரை

    மதுரை மாட்டுத்தா வணியில் ஜவுளிக்கடை இயங்கி வருகிறது. அங்கு ஊழியர்கள் நேற்று மாலை பணியில் இருந்தனர். அப்போது அங்கு ரூ.2.10 லட்சம் மதிப்புடைய 5 பவுன் நகை திருடு போனது.

    இதுகுறித்து மாட்டுத்தா வணி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    இதில் பர்தா அணிந்த 2 பெண்கள், ஜவுளிக்கடையில் நகை திருடியது தெரியவந்தது. இருவரும் செக்கானூரணி, பன்னியான் ரோடு ராமகிருஷ்ணன் மனைவி சுமதி (50), சரவணன் மனைவி பிரியதர்ஷினி (28) என்பது தெரிய வந்தது. இருவரும் தாய்-மகள் ஆவார்கள்.

    மாட்டுத்தாவணி ஜவுளிக்கடையில் கவரிங் செயினை வாங்கிய அவர்கள், ஒரிஜினல் நகைக்கடை பிரிவுக்கு வந்தனர். அப்போது அவர்கள் பார்வையிடுவது போல், கவரிங் நகையை வைத்து விட்டு ஒரிஜினல் நகையை திருடி சென்றது தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • திட்டக்குடி அருகே: நள்ளிரவில் தாய் - மகளை தாக்கி நகை மர்ம நபர்களால் பறிக்கப்பட்டது.
    • சுதாரித்துக் கொண்ட திருடர்கள் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் பரமேஸ்வரியின் கையில் கிழித்து விட்டு வலது காலில் கட்டையால் பலமாக தாக்கினர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே வடகரை கிராமத்தை சேர்ந்தவர் சேகர் விவசாயி. இவரது மனைவி பரமேஸ்வரி(வயது43). இவர்களது மகள் பவானி(24) மற்றும் 9 மாத குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப் போது இரவு சேகர் மட்டும் வீட்டின் பின்புறம் உள்ள கரும்பு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்று விட்டார். இந்நிலையில் இரவு சுமார் ஒரு மணி அளவில் மூன்று மர்ம நபர்கள் வீட்டில் பின்பக்க கதவை லாவகமாக திறந்து உள்ளே சென்றனர். அப்போது தூக்கத்தில் இருந்த பவானி கழுத்தில் இருந்த 8 பவுன் தாலி செயினை பறித்தனர். இதனால் பவானியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் படுத்திருந்த பரமேஸ்வரி முழித்துக் கொண்டு அருகில் கிடந்த அருவாமனையை எடுத்து திருடர்களை வெட்ட முயன்றார்.

    சுதாரித்துக் கொண்ட திருடர்கள் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் பரமேஸ்வரியின் கையில் கிழித்து விட்டு வலது காலில் கட்டையால் பலமாக தாக்கினர். தொடர்ந்து பவானியின் முகத்தில் செங்கலால் தாக்கினர். இவர்களின் சத்தத்தால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஓடி வந்து மர்ம நபர்களை துரத்தி பிடிக்க முயற்சித்தனர் அப்போது திருடர்கள் அணிந்திருந்த செருப்பை விட்டு விட்டு அருகில் உள்ள கரும்பு வயலில் குதித்து தப்பிச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த விருத்தாச்சலம் போலீஸ் டி.எஸ்.பி. அங்கித்ஜெயின் மற்றும் பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருட வந்த மர்ம நபர்கள் கால் சட்டை மற்றும் டீ-ஷர்ட் அணிந்தும் முகத்தில் முகமூடி அணிந்தும் திருட வந்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்கள் யாரேனும் வந்தது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்

    அமைச்சர் மீது புகார் கூறிய தாய் மற்றும் மகள் மீது சென்னை ஐகோர்ட்டு வக்கீல் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ராயபுரம்:

    பிராட்வே, பிரகாசம் சாலையைச் சேர்ந்தவர் சாந்தி. இவரது மகள் சிந்து.

    இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ஜெயக்குமார் மீது சர்ச்சைக்குரிய புகார் தெரிவித்து இருந்தார். இது தொடர்பான வாட்ஸ்-அப் உரையாடலும் வெளியாகி இருந்தது.

    இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு வக்கீல் கண்ணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சிந்து, அவரது தாய் சாந்தி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அவர் கொடுத்துள்ள புகாரில், “ஒரு வழக்கு சம்பந்தமாக சாந்தியும், சிந்துவும் என்னை சந்தித்தனர். இதற்கான செலவு பணத்தை தரவில்லை. இதனை கேட்ட போது எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்” என்று தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் சாந்தி, சிந்து மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த புகார் மனு கடந்த செப்டம்பர் மாதம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.
    ஆண்டிப்பட்டி அருகே தாய், மகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள சுந்தர்ராஜபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 42). இவருக்கும் மணிமேகலை (40) என்பவருக்கும் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஷாலினி (12) என்ற மகள் உள்ளார்.

    கருத்துவேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்த முத்துச்சாமி அழகம்மாள் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த அழகம்மாள் மற்றும் முத்துச்சாமி ஆகியோர் மணிமேகலை வீட்டுக்கு சென்று தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். மேலும் கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.

    இது குறித்து ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் மணிமேகலை புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து முத்துச்சாமி மற்றும் அழகம்மாளை கைது செய்தனர்.

    ×