என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி   அருகே வீட்டை விட்டு சென்ற பெண் திடீர் மாயம்
    X

    பண்ருட்டி அருகே வீட்டை விட்டு சென்ற பெண் திடீர் மாயம்

    • பண்ருட்டி அருகே வீட்டை விட்டு சென்ற பெண் காணவில்லை.
    • அதிர்ச்சியடைந்த விநாயகமூர்த்தி தனது மனைவி மாயமானது கண்டு பதறிபோனார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பெரிய பகண்டை கிராமத்தை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. அவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 42). இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. எனவே கடந்த சில நாட்களாக பாக்கியலட்சுமி மனஉளைச்சலில் காணப்பட்டார். கடந்த 24-ந் தேதி இரவு வீட்டில் இருந்த பாக்கியலட்சுமி திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த விநாயகமூர்த்தி தனது மனைவி மாயமானது கண்டு பதறிபோனார். இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து பாக்கியலட்சுமி எங்கு சென்றார். என்ன ஆனார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×