search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரத்தில் இன்று பரபரப்பு: 2 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைப்பு:
    X

    கல் வீச்சில் சேதமடைந்த பஸ்கள்.

    சிதம்பரத்தில் இன்று பரபரப்பு: 2 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைப்பு:

    • சிதம்பரத்தில் இன்று பரபரப்பு 2 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.
    • மர்ம கும்பல் பஸ்சின் பக்கவாட்டில் சரமாரியாக கற்களை வீசியது. இதில் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்தது. கல்வீச்சு சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை.

    சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி புதுவை மாநில அரசுக்கு சொந்தமான பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் இன்று அதிகாலை சிதம்பரம் அருகே சீத்தாம்பாளையம் பகுதியில் சென்றது. அப்போது பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் ஒரு கும்பல் பஸ் மீது சரமாரியாக கற்களை வீசியது. அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். இதனால் பயணிகள் அச்சத்துடன் திடுக்கிட்டனர். உடனே அவர்கள் கீழே இறங்கினர். அப்போது அந்த பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்திருந்தது. உடனடியாக அரசு பஸ் டிரைவர் சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு பஸ்சை ஓட்டி சென்றார்.

    இதேபோல் சென்னையில் இருந்து வேளாங்கண்ணிநோக்கி தமிழக அரசுக்கு சொந்தமான சொகுசுபஸ் சென்றது. இந்த பஸ் சீத்தாம்பாளையம் பகுதியில் வந்தபோது மர்ம கும்பல் பஸ்சின் பக்கவாட்டில் சரமாரியாக கற்களை வீசியது. இதில் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்தது. கல்வீச்சு சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை. உடனடியாக இந்த பஸ் சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் வந்த கும்பல் பஸ்கள் மீது கற்களை வீசியது தெரியவந்தது. எனவே பஸ் மீது கற்களை வீசி சென்ற கும்பல் யார்? எதற்காக வீசினர்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×