என் மலர்
கடலூர்
- மங்களூர் மற்றும் நல்லூர் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித் துறையில் மேற்கொள்ளப்பட்ட திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
- மக்காத குப்பை, தண்ணீர் மற்றும் கிராம சுகாதாரம் கணினி ஒளித்திரை மூலம் செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம், மங்களூர் மற்றும் நல்லூர் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி துறையால் மேற்கொள்ளப்பட்ட திட்ட பணிகள் குறித்தும், திட்ட பயனாளிகளின் வீடுகளை முன்னேற்றத்திற்கு கொண்டு வர வேண்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாதிரி கிராமமான சிறுகரம்பலூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட கழிப்பறை, மக்கும் குப்பை, மக்காத குப்பை, தண்ணீர் மற்றும் கிராம சுகாதாரம் குறித்து கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு கணினி ஒளித்திரை மூலம் செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. பின்னர் ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் கோரிக்கை களை மாவட்ட கலெக்டரிடம் மனுவாக அளித்தனர்.
- கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் தோப்பு உற்சவத்துக்கு சாமி தூக்குவதற்கு மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- பாடலீஸ்வரர் கோவில் முன்பு உள்ள கடைகளுக்கு தற்போது ஏலம் விடக்கூடாது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பவுர்ணமி அன்று பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மன் ஊர்வலமாக காராமணிக்குப்பம் விநாயகர் கோவில் அருகே தோப்பு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இன்று காலை வழக்கம் போல் பாடலீஸ்வரர் பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அப்போது கோவில் வளாகத்தில், கோவில் முன்பு உள்ள சிறு வியாபாரிகள் திடீரென்று திரண்டு வந்தனர். அவர்களுடன் சாமி தூக்குபவர்களும் வந்தனர். பின்னர் சாமி தூக்குபவர்கள் திடீரென்று நாங்கள் தோப்பு உற்சவத்திற்கு சாமி தூக்க மாட்டோம் என தெரிவித்ததால் கோவில் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் சிறு வியாபாரிகள் கூறுகையில், பாடலீஸ்வரர் கோவில் முன்பு உள்ள கடைகளுக்கு தற்போது ஏலம் விடக்கூடாது. அதற்கு மாறாக முன்பு யார் கடை வைத்திருந்தார்களோ அவர்களே மீண்டும் கடை வைத்திருக்க அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு ஆதரவாக தான் சாமி தூக்குபவர்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கோவில் நிர்வாகத்தினர் உடனடியாக சிறு வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று பேசி முடிவு செய்வோம்.
தற்போது தோப்பு உற்சவம் என்பது மிக முக்கியமான உற்சவம் ஆகும். ஆகையால் இதற்கு யாரும் தடையாக இருக்கக் கூடாது. மேலும் சாமி தூக்குபவர்கள் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம். ஆகையால் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக பேசி நடவடிக்கை மேற்கொள்வோம். ஆகையால் தோப்பு உற்சவத்திற்கு சாமி தூக்கிக்கொண்டு காராமணிக்குப்பத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து சிறு வியாபாரிகள் அங்கிருந்து கலந்து சென்றனர். மேலும் சாமி தூக்குபவர்கள் தோப்பு உற்சவத்திற்கு செல்வதற்காக பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனை தூக்கிக் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- கடலூர் மாநகராட்சி பள்ளியில் சத்துணவு சரியான முறையில் வழங்கப்படுகிறதா என மேயர் ஆய்வு மேற்கொண்டார்.
- பள்ளிகளை தூய்மையாக பாதுகாத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பத்தில் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் துணை மேயர் தாமரைச்செல்வன், செயற்பொறியாளர் புண்ணியமூர்த்தி ஆகியோர் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பள்ளி வளாகம் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா? அரசு சார்பில் வழங்கப்படும் சத்துணவு சரியான முறையில் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறதா? மேலும் தரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா? சத்துணவுக்காக வழங்கப்பட்டுள்ள பொருட்கள் உள்ளதா? என்பதனை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய சத்துணவு தரமாக வழங்குவதோடு சரியான முறையில் வழங்க வேண்டும் மேலும் பள்ளிகளை தூய்மையாக பாதுகாத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் என் குப்பை என் உரிமை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது. அப்போது உதவி செயற்பொறியாளர் மகாதேவன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சுபாஷிணி ராஜா, பாலசுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கடலூர்:
கடலூர் திருப்பா திரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது . இக்கோவி லில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 4- ந்தேதி திருமஞ்சனம் மற்றும் அனுக்ஞை , வாஸ்து சாந்தி , அங்குரார்ப்பணம் மற்றும் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது . தொடர்ந்து 5 - ந் தேதி ( செவ்வாய்க்கிழமை ) முக்கிய விழாவான பிரம்ம உற்சவ கொடியேற்று விழா கோவில் வளாகத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 6 - ந் தேதி திருப்பல்லக்கும் , 7 - ந் தேதி திருப்பல் லக்கு - ராஜகோபாலன் சேவையும் 8 - ந் தேதி விமானம் வேணுகோபாலன் சேவையும் , தங்க கருட சேவையும், 9 - ந் தேதி நாச்சியார் திருக்கோலம் - ஊஞ்சல் சேவையும், 10 - ந் தேதி திருப்பல்லக்கும் , 11 - ந் தேதி சூர்ணாபிஷேகம் , 108 கலச திருமஞ்சனமும், 12 - ந் தேதி வெண் ணெய்த்தாழி உற்சவம் , வேடுபரி உற்ச வமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய சிகர விழாவான தேரோட்டம் இன்று 13 - ந் தேதி ( புதன்கி ழமை ) காலையில் நடைபெற்றது.
காலையில் வரதராஜ பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். திரளாக கலந்து கொண்ட பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என்ற பக்தி கோஷத்துடன் முக்கிய மாட வீதி வழியாக தேர் வலம் வந்தது. இதனை தொடர்ந்து தீர்த்தவாரி யும் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயப்பட்டு சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இக்கோவில் கட்டி சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது . ஆனால் இது வரை கோவிலில் தேரோட்டம் நடத்தியது கிடையாது . தற்போது தான் முதல் முறையாக தேரோட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும் . அதனை தொடர்ந்து 14 மற்றும் 15 - ந் தேதிகளில் திருமஞ்சனமும் , திருக்கல் யாண உற்சவமும் , 16 - ந் தேதி விடை யாற்றி உற்சவமும் நடக்கிறது . இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி கள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.
- தனியார் வங்கியில் மகளுக்காக கடன் கேட்க சென்ற தாயிடம் நூதன முறையில் ரூ. 6.50 லட்சம் மோசடி செய்த 2 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- அதிர்ச்சி அடைந்த சித்ரா கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கடலூர்:
கடலூர் கோண்டூர் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சித்ரா (வயது 44). இவர் தனது மகள் பள்ளி கட்டணத்திற்காக கடலூர் முதுநகரில் உள்ள தனியார் வங்கியில் பணி புரியும் பெண் ஊழியர் சவுமியா என்பவரிடம் கல்வி கடன் பெறுவதற்காக நேரில் சென்று அணுகினார்.அப்போது வங்கி ஊழியர் சவுமியா தனது தோழி புதுவை மாநிலம் கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த அய்யம்மாள் என்பவரை சித்ராவுக்கு அறிமுக செய்து வைத்தார். மேலும் இவர் தனியார் டிரஸ்ட் வைத்துள்ளார். அதன் மூலம் நீங்கள் எளிதாக கடன் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து அய்யம்மாள் தனது டிரட்ஸ்டுக்கு 2 கோடி ரூபாய் பணம் வந்துள்ளது. ஆனால் அந்த பணத்தை எடுக்க வேண்டுமானால் 5 லட்சம் ரூபாய் ஜி.எஸ்.டி வரி கட்ட வேண்டும் என சித்ராவிடம் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய சித்ரா முதல் கட்டமாமக ரூ. 3 லட்சமும், பின்னர் ரூ. 2 லட்சமும் பணம் வழங்கி உள்ளார். இதனை தொடர்ந்து தனக்கு வழங்க வேண்டிய கடனை வழங்க வேண்டும் என சித்ரா மீண்டும் கேட்டபோது 2 ரூ. கோடி பணம் எடுக்க வேண்டுமானால் ஆடிட்டிங் செலவுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணம் தேவைப்படுகிறது என மீண்டும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சித்ரா அதிக வட்டிக்கு பணம் பெற்று அய்யம்மாளிடம் அதனை வழங்கி உள்ளார். இதனை தொடர்ந்து தனது மகளின் அடிப்படை வாழ்வாதாரமான கல்விக்காக லோன் உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தி கேட்டபோது, இவர்கள் பணம் தராமல் ஏமாற்றி வந்ததோடு அலைக்கழித்து உள்ளனர். மேலும் தனக்கு லோன் வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளதும் சித்ராவுக்கு தெரிய வந்துள்ளது.
அதிர்ச்சி அடைந்த சித்ரா கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் கடலூர் சேர்ந்த சவுமியா, புதுவை மாநிலம் கரிக்கலாம்பாக்கம் சேர்ந்த அய்யம்மாள் ஆகிய 2 பேரும் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் அருகே தனியார் வங்கியில் தனது மகள் கல்விக்காக கடன் கேட்க சென்ற தாயிடம் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியர் மற்றும் அவரது தோழியால் வங்கிகள் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
- விருத்தாசலத்தில் போலீசார் அதிரடி மணல் கடத்திய மாட்டுவண்டிகள்- ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
- நேற்று மணிமுத்தாறில் மணல் கடத்திவிட்டு மாட்டுவண்டிகள் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கடலூர்:
விருத்தாசலம் மணிமுத்தாற்றில் மணல் திருட்டு சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. காவல்துறையினர் ரோந்து பணியை தீவிர படுத்தியுள்ள போதும், மணல் கடத்தல்காரர்கள் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுப்பட்டு வருவது நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மணிமுத்தாறில் மணல் கடத்திவிட்டு மாட்டுவண்டிகள் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆற்றில் மணல் கடத்திவிட்டுஆலடி ரோடு வழியாக வந்து கொண்டிருந்த 2 மாட்டு வண்டிகளை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவர்கள் வண்டிகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர். அதேபோல விருத்தாசலம் பூதாமூர் அருகே உள்ள ஏனாதிமேடு என்ற பகுதியில் மணல் கடத்தலில் ஈடுப்பட்ட ஆட்டோ ஒன்றை பிடிக்க போலீசார் பிடிக்க முயன்றபோது ஆட்டோவை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டி வந்த நபர் தப்பி ஓடினார். மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 மாட்டுவண்டிகள் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
- வேப்பூர் அருகே தனியார் பஸ் மீது லாரி மோதலில் 20 பயணிகள் காயம் அடைந்தனர்.
- பஸ் வேப்பூர் அருகே விளாம்பாவூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றுக் கொண்டிருந்தது.
கடலூர்:
சின்னசேலத்தில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி நேற்று காலை 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று சென்றது. பஸ் வேப்பூர் அருகே விளாம்பாவூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றுக் கொண்டிருந்தபோது. அப்போதுபஸ்சின் பின்னா ல் வந்த சரக்கு லாரி டிரைவ ரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ்ஸின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த 20 பயணிகள் காயம் அடைந்தனர். லாரி பஸ் மீது வேகமாக மோதியது பஸ்சின் பின்புறம் சேதம் அடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் விபத்துக்குள்ளான பஸ் லாரியை அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்புகளுக்கு உள்ளானது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடலூர் மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்த வாரிசுதாரர்களுக்கு ரூ. 3 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
- பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர். மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில்; பட்டா தொடர்பான 269 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 52 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 16 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 48 மனுக்களும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு வழங்கும் திட்டம் தொடர்பாக 76 மனுக்களும், இதர மனுக்கள் 55 ஆக மொத்தம் 516 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். பொதுமக்களின் குறை தீர்ப்பது தான் நம்முடைய தலையாய கடமையாகும். அவ்வாறு அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 3 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ஒரு லட்சம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு)கிருஷ்ணன், தனித்துணை ஆட்சியர் கற்பகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கடலூர் அருகே பயணிகள் ரயில் மீண்டும் பழுதனதால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.
- கொரோனா ஊரடங்கு நேரத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் ெரயில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் இயக்கப்பட்டன.
கடலூர்:
விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறைக்கு பயணிகள் ெரயில் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் ஏற்றுக்கொண்டு சென்று வருகின்றன. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் ெரயில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் இயக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் விழுப்புரத்திலிருந்து ெரயில் பயணிகளை ஏற்றுக்கொண்டு மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது கடலூர் அருகே ஆலப்பாக்கம் ெரயில் நிலையம் சென்றடைந்தன. பின்னர் பயணிகளை ஏற்றுக்கொண்டு ெரயில் புறப்படும் போது ெரயில் என்ஜின் பழுதடைந்தது. பின்னர் ரயில்வே ஊழியர்கள் என்ஜினை பழுது சரி செய்து மீண்டும் 20 நிமிடத்தில் புறப்பட்டது. ஆனால் பயணிகள் ெரயில் சிறிது தூரம் சென்ற பிறகு பரங்கிப்பேட்டை பகுதியில் மீண்டும் ெரயில் என்ஜின் பழுதாகி நின்று விட்டது.
இதன் காரணமாக ரயில்வே ஊழியர்கள் மீண்டும் என்ஜினில் ஏற்பட்ட பழுதை உடனடியாக சரி செய்ய முயன்றனர். ஆனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு என்ஜின் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் ெரயில் புறப்பட்டது. இதன் காரணமாக காலை நேரங்களில் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் ஆயிரக்கணக்கானர் ரயில் எஞ்சின் பழுதான காரணமாக கடும் அவதி அடைந்தனர். மேலும் பெரும்பாலான பயணிகள் நீண்ட நேரமாக ெரயில்வே தண்டவாளப் பகுதிகளிலும், பிளாட்பார்மிலும் காத்திருந்தனர். இதனை தொடர்ந்து 9 மணி அளவில் ெரயில் என்ஜின் சரிய செய்யப்பட்டு மீண்டும் ெரயில் புறப்பட்டன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாகவே காணப்பட்டன.
- சிதம்பரத்தில் வீட்டு கதவை உடைத்து மர்ம நபர்கள் 30 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றனர்.
- வீட்டில் இன்டர்நெட் சேவை இல்லை. எனவே சிதம்பரம் வடக்கு ரதவீதியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு மனைவியுடன் சென்றார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பள்ளிப்படை வெற்றிநகரை சேர்ந்தவர் ஜாபர் அலி (வயது 56). இவர் சிங்கபூரில் வேலைபார்த்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இவரது வீட்டில் இன்டர்நெட் சேபை இல்லை. எனவே சிதம்பரம் வடக்கு ரதவீதியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு மனைவியுடன் சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டு கதவையை கடப்பாரையால் உடைத்தனர். பின்னர் வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த நகையை திருடிக்கொண்டு சென்றனர்.
அப்போது அந்த வழியாக சென்றவர்கள் வீட்டு கதவு திறந்துகிடப்பதை கண்டு ஜாபர் அலிக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த அவர் உடனே வீட்டுக்கு விரைந்தார். அப்போது பீரோவில் இருந்த 30 பவுன் நகை கொள்ளைபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். பதறிபோன ஜாபர்அலி இதுகுறித்து சிதம்பரம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். கொள்ளையர்கள் பற்றி துப்புதுலக்க மோப்பநாய் கடலூரில் இருந்து வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுனர்களும் கொள்ளையர்களின் ரேகையை பதிவு செய்து துப்புதுலக்கி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த பண்ருட்டி தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- 2-வது தளத்தில் மேல் குடிநீர் தொட்டியில் டைல்ஸ் ஒட்டும் பணியில்ஈடுபட்டிருந்தார் .
கடலூர்:
பண்ருட்டி அருகே சித்திரைசாவடியை சேர்ந்த வர் சிவா கணபதி (வயது32) கட்டிட தொழிலாளி இவர் திருமணம் ஆனவர் இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர் இவர் புதுவை முத்தையால்பேட்டையில் புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் கட்டிட வேலைசெய்துவந்தார். சம்பவத்தன்று மாலை கட்டிடத்தின் 2-வது தளத்தில் மேல் குடிநீர் தொட்டியில் டைல்ஸ் ஒட்டும் பணியில்ஈடுபட்டிருந்தார் . அப்போது தவறி விழுந்தார் இதனால் படுகாயம்அடைந்த அவரை புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்குசிகிச்சை பலனளிக்காமல் சிவகணபதி பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தனர். முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- 100 சதவீத சொத்து வரி உயர்வை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் கடைகள் அடைத்து போராட்டம் நடைபெற்றது.
- முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டன
கடலூர்:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் நெல்லிக்குப்பம் நகர அனைத்து தொழில் வர்த்தகம் சங்கம் சார்பில் வர்த்தக பயன்பாட்டு 100 சதவீதம் சொத்து வரி உயர்வை நகராட்சி நிர்வாகம் மறு பரிசீலனை செய்யக்கோரியும், மாநில அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். நகர தலைவர் நாசர் அலி, நகர அமைப்பாளர் அமர்நாத், ஆலோசகர் முகமது அபுசாலிக், மேல்பட்டாம்பாக்கம் வர்த்தக சங்கத் தலைவர் சையது முகமது, துணைத்தலைவர் ராஜா ரஹீமுல்லா, இணைச் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட இணை செயலாளர் சுரேஷ் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் வீரப்பன், மாவட்ட பொருளாளர் ராஜ மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். இதில் வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டன. முடிவில் சங்க பொருளாளர் சம்சுதீன் நன்றி கூறினார். முன்னதாக நெல்லிக்குப்பம் நகர பகுதிகள் முழுவதும் அனைத்து கடைகளும் மூடப்பட்டு கடையடைப்பு போராட்டத்தில் வணிகர்கள் ஈடுபட்டனர். இதில் அத்தியாவசிய கடைகள் மட்டும் ஒரு சில கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக கடைத்தெரு வெறிச்சோடி காணப்பட்டது.






