என் மலர்
நீங்கள் தேடியது "2 பெண்கள் மீது வழக்கு"
- தனியார் வங்கியில் மகளுக்காக கடன் கேட்க சென்ற தாயிடம் நூதன முறையில் ரூ. 6.50 லட்சம் மோசடி செய்த 2 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- அதிர்ச்சி அடைந்த சித்ரா கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கடலூர்:
கடலூர் கோண்டூர் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சித்ரா (வயது 44). இவர் தனது மகள் பள்ளி கட்டணத்திற்காக கடலூர் முதுநகரில் உள்ள தனியார் வங்கியில் பணி புரியும் பெண் ஊழியர் சவுமியா என்பவரிடம் கல்வி கடன் பெறுவதற்காக நேரில் சென்று அணுகினார்.அப்போது வங்கி ஊழியர் சவுமியா தனது தோழி புதுவை மாநிலம் கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த அய்யம்மாள் என்பவரை சித்ராவுக்கு அறிமுக செய்து வைத்தார். மேலும் இவர் தனியார் டிரஸ்ட் வைத்துள்ளார். அதன் மூலம் நீங்கள் எளிதாக கடன் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து அய்யம்மாள் தனது டிரட்ஸ்டுக்கு 2 கோடி ரூபாய் பணம் வந்துள்ளது. ஆனால் அந்த பணத்தை எடுக்க வேண்டுமானால் 5 லட்சம் ரூபாய் ஜி.எஸ்.டி வரி கட்ட வேண்டும் என சித்ராவிடம் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய சித்ரா முதல் கட்டமாமக ரூ. 3 லட்சமும், பின்னர் ரூ. 2 லட்சமும் பணம் வழங்கி உள்ளார். இதனை தொடர்ந்து தனக்கு வழங்க வேண்டிய கடனை வழங்க வேண்டும் என சித்ரா மீண்டும் கேட்டபோது 2 ரூ. கோடி பணம் எடுக்க வேண்டுமானால் ஆடிட்டிங் செலவுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணம் தேவைப்படுகிறது என மீண்டும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சித்ரா அதிக வட்டிக்கு பணம் பெற்று அய்யம்மாளிடம் அதனை வழங்கி உள்ளார். இதனை தொடர்ந்து தனது மகளின் அடிப்படை வாழ்வாதாரமான கல்விக்காக லோன் உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தி கேட்டபோது, இவர்கள் பணம் தராமல் ஏமாற்றி வந்ததோடு அலைக்கழித்து உள்ளனர். மேலும் தனக்கு லோன் வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளதும் சித்ராவுக்கு தெரிய வந்துள்ளது.
அதிர்ச்சி அடைந்த சித்ரா கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் கடலூர் சேர்ந்த சவுமியா, புதுவை மாநிலம் கரிக்கலாம்பாக்கம் சேர்ந்த அய்யம்மாள் ஆகிய 2 பேரும் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் அருகே தனியார் வங்கியில் தனது மகள் கல்விக்காக கடன் கேட்க சென்ற தாயிடம் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியர் மற்றும் அவரது தோழியால் வங்கிகள் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.






