search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "closure of shops"

    • கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு 70 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.
    • கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணி–யில் ஈடுபட்டு உள்ளனர்.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் கடந்த 31 ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண் டாடப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் 1300 இடங் களில் விநாயகர் சிலை வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா முடிந்து இன்று 3- ம் நாள் என்பதால் வீடுகள் மற்றும் வெளியில் சிலைகள் வைத்து வழிபட்டவர்கள் கடல் மற்றும் ஆறுகள் பகுதியில் விநாயகர் சிலையை கரைக்கும் ஐதீகத்தை முன்னிட்டு ஊர்வலமாக வருவார்கள் என்பதால் மாவட்டம் முழுவதும் 2200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலை ஊர்வ–லத்தின் போது ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து அப்பகுதியில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 147 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி , குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி சேத்தியா தோப்பு காட்டு மன்னார்கோவில், நடுவீரப் பட்டு, திட்டக்குடி, உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 70 டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத் தப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இன்று 2- ந்தேதி 70 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த நடவடிக்கை மூலம் மாவட்டத்தில் அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்க்கப் பட்டுள்ளது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வருகிற 4- ந் தேதி மாவட்டம் முழுவதும் இதேபோல் ஒரு சில டாஸ்மாக் கடையில் மூடப்படும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • 100 சதவீத சொத்து வரி உயர்வை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் கடைகள் அடைத்து போராட்டம் நடைபெற்றது.
    • முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டன

    கடலூர்:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் நெல்லிக்குப்பம் நகர அனைத்து தொழில் வர்த்தகம் சங்கம் சார்பில் வர்த்தக பயன்பாட்டு 100 சதவீதம் சொத்து வரி உயர்வை நகராட்சி நிர்வாகம் மறு பரிசீலனை செய்யக்கோரியும், மாநில அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது‌. இதற்கு சங்க செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். நகர தலைவர் நாசர் அலி, நகர அமைப்பாளர் அமர்நாத், ஆலோசகர் முகமது அபுசாலிக், மேல்பட்டாம்பாக்கம் வர்த்தக சங்கத் தலைவர் சையது முகமது, துணைத்தலைவர் ராஜா ரஹீமுல்லா, இணைச் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட இணை செயலாளர் சுரேஷ் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் வீரப்பன், மாவட்ட பொருளாளர் ராஜ மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். இதில் வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டன. முடிவில் சங்க பொருளாளர் சம்சுதீன் நன்றி கூறினார். முன்னதாக நெல்லிக்குப்பம் நகர பகுதிகள் முழுவதும் அனைத்து கடைகளும் மூடப்பட்டு கடையடைப்பு போராட்டத்தில் வணிகர்கள் ஈடுபட்டனர். இதில் அத்தியாவசிய கடைகள் மட்டும் ஒரு சில கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக கடைத்தெரு வெறிச்சோடி காணப்பட்டது.

    ×