என் மலர்
நீங்கள் தேடியது "கடைகள் மூடல்"
- நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குவதால், தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
- நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சியும் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டு உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்திருந்து ஊட்டி, குன்னூர், கூடலூர் மற்றும் கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள சுற்றுலா மையங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.
இந்த மாவட்டத்தில் இயங்கி வரும் நூற்றுக்கணக்கான உணவகங்கள், டீக்கடைகள், பேக்கரிகள் உள்ளிட்டவை பெரும்பாலும் வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர்களை நம்பியே உள்ளன.
இந்நிலையில் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வணிக கியாஸ் சிலிண்டர்கள் போதிய அளவில் கிடைக்காததால், பல உணவகங்களில் சமையல் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
மேலும் ஒருசில இடங்களில் கியாஸ் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் முழுமையாக மூடப்பட்டு உள்ளன. ஏராளமான ஓட்டல்களில் பரிமாறப்படும் உணவுகளின் வகைகள் குறைக்கப்பட்டும் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் டீக்கடைகள், சிற்றுண்டி விடுதிகள் மற்றும் பேக்கரிகளிலும் கியாஸ் தட்டுப்பாடு காரணமாக, அங்கு பணிகள் சீராக நடைபெறவில்லை.
இதனால் அந்த கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது.
நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குவதால், தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் உணவகங்கள் மற்றும் டீக்கடைகள் மூடப்படுவது தொடர்ந்தால், சுற்றுலா பயணிகளுக்கு உணவு மற்றும் சிற்றுண்டி கிடைப்பதில் சிரமம் ஏற்படும் அபாயம் இருப்பதாக வணிகர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சியும் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டு உள்ளது. எனவே வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர்கள் போதிய அளவில் கிடைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட உணவக உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு 70 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.
- கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணி–யில் ஈடுபட்டு உள்ளனர்.
கடலூர்:
தமிழகம் முழுவதும் கடந்த 31 ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண் டாடப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் 1300 இடங் களில் விநாயகர் சிலை வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா முடிந்து இன்று 3- ம் நாள் என்பதால் வீடுகள் மற்றும் வெளியில் சிலைகள் வைத்து வழிபட்டவர்கள் கடல் மற்றும் ஆறுகள் பகுதியில் விநாயகர் சிலையை கரைக்கும் ஐதீகத்தை முன்னிட்டு ஊர்வலமாக வருவார்கள் என்பதால் மாவட்டம் முழுவதும் 2200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலை ஊர்வ–லத்தின் போது ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து அப்பகுதியில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 147 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி , குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி சேத்தியா தோப்பு காட்டு மன்னார்கோவில், நடுவீரப் பட்டு, திட்டக்குடி, உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 70 டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத் தப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இன்று 2- ந்தேதி 70 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த நடவடிக்கை மூலம் மாவட்டத்தில் அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்க்கப் பட்டுள்ளது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வருகிற 4- ந் தேதி மாவட்டம் முழுவதும் இதேபோல் ஒரு சில டாஸ்மாக் கடையில் மூடப்படும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
- அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்ப ட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் அரிசி ஆலைகள், கடை உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- இதனால் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்ப ட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் அரிசி ஆலைகள், கடை உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளனர்.
திண்டுக்கல் நகரில் மட்டும் 5000க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள், கடைகள் உள்ளன. இவை அனைத்தும் இன்று காலைமுதல் அடைக்கப்பட்டிருந்தது. மவுன்ஸ்புரம் கடைவீதி, மார்க்கெட் பகுதிகளில் கடைவாசல் முன்பு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் துண்டு பிரசுர ங்களை ஒட்டி போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அரிசி ஆலை மண்டி மற்றும் கடை உரிமையாளர் சங்க மாவட்ட தலைவர் கனி தெரிவிக்கை யில், இந்தியாவில் எப்போதும் இல்லாத வகையில் அரிசிக்கு வரிவிதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவு பட்டியலில் உள்ள அரிசிக்கு வரி விதிக்கப்பட்டால் இதன் விலை மேலும் உயரும். ஏற்கனவே வியாபாரிகள் பல்வேறு நெருக்கடிக்கு இடையில் அரிசி ஆலைகள் நடத்தி வருகின்றனர். கூடுதல் விலையேற்றத்தை நடைமுறைப்படுத்தினால் மக்கள் பெரிதும் பாதிக்க ப்படுவார்கள்.
திண்டுக்கல் மாவட்ட த்தில் 5000-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த வரிவிதிப்பை மறுபரிசீலனை ெசய்ய வேண்டும் என்றனர்.






