search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்கு எதிர்ப்பு திண்டுக்கல்லில் 5000க்கும் மேற்பட்ட  அரிசி ஆலைகள், கடைகள் மூடல் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிப்பு
    X

    திண்டுக்கல்லில் அரிசி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்த காட்சி.

    ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்கு எதிர்ப்பு திண்டுக்கல்லில் 5000க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள், கடைகள் மூடல் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிப்பு

    • அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்ப ட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் அரிசி ஆலைகள், கடை உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • இதனால் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்ப ட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் அரிசி ஆலைகள், கடை உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளனர்.

    திண்டுக்கல் நகரில் மட்டும் 5000க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள், கடைகள் உள்ளன. இவை அனைத்தும் இன்று காலைமுதல் அடைக்கப்பட்டிருந்தது. மவுன்ஸ்புரம் கடைவீதி, மார்க்கெட் பகுதிகளில் கடைவாசல் முன்பு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் துண்டு பிரசுர ங்களை ஒட்டி போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அரிசி ஆலை மண்டி மற்றும் கடை உரிமையாளர் சங்க மாவட்ட தலைவர் கனி தெரிவிக்கை யில், இந்தியாவில் எப்போதும் இல்லாத வகையில் அரிசிக்கு வரிவிதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவு பட்டியலில் உள்ள அரிசிக்கு வரி விதிக்கப்பட்டால் இதன் விலை மேலும் உயரும். ஏற்கனவே வியாபாரிகள் பல்வேறு நெருக்கடிக்கு இடையில் அரிசி ஆலைகள் நடத்தி வருகின்றனர். கூடுதல் விலையேற்றத்தை நடைமுறைப்படுத்தினால் மக்கள் பெரிதும் பாதிக்க ப்படுவார்கள்.

    திண்டுக்கல் மாவட்ட த்தில் 5000-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த வரிவிதிப்பை மறுபரிசீலனை ெசய்ய வேண்டும் என்றனர்.

    Next Story
    ×