என் மலர்
கடலூர்
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி சேர்ந்த 12,420 மாணவியர்களுக்கு தலா ரூ.500வீதம் 2.07 இலட்சம் ஊக்கத்தொகையாகவும், 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 43.64 இலட்சம் ஊக்கத்தொகையாகவும், மாணவியர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.43.64 இலட்சம் ஊக்கத்தொகையாகவும், 7 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் 7333 மாணவியர்களுக்கு தலா ரூ.1,500 வீதம் ரூ.1,09,99,500/- மதிப்பீட்டில் ஊக்கத்தொகையாகவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதார குறைவான பணிசெய்யும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் தூய்மைப்பணியாளர்களாக பணிபுரிவோரின் குழந்தைகள் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பல்வேறு வகையான பள்ளிகளில் சேர்ந்து விடுதியில் தங்கி மற்றும் விடுதியில் தங்காது கல்வி பயிலும் 454 மாணாக்கர்களுக்கு 2021-2022 ஆம் கல்வியாண்டில் ரூ.13.67 லட்சம் உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வி ஊக்கத்தொகையாக பட்டப்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் பயிலும் 995 மாணாக்கர்களுக்கு 2021-2022 ஆம் கல்வியாண்டில் ரூ.78.40 லட்சம் உதவித்தொகையாவும் வழங்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 60 ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1,20,000 மதிப்பீட்டிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.மேலும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 125 ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 60 ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு ரூ.1.85 லட்சம் மதிப்பீட்டிலான முதலுதவிப்பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. அழிவின் விளிம்பிலுள்ள பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பழங்குடியின மக்கள் 10 பேருக்கு ரூ.3,50,000 மதிப்பீட்டில் இலவச கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர்களில் 4 பேருக்கு ரூ.68,000/-மதிப்பீட்டில் ஈமச்சடங்கு/இயற்கை மரண உதவித்தொகை வழங்கப் பட்டுள்ளது. பழங்குடியின இளைஞர்கள் 25 பேருக்கு ரூ.1.50 லட்சம் செலவில் இலவச ஓட்டுநர் பயிற்சி அளித்து ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியின விவசாயிகள் 5 நபர்களுக்கு ரூ. 9,00,000/-மதிப்பீட்டிலான இலவச பவர் டிரில்லர் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் இனத்தை சேர்ந்த 17 நபர்களுக்கு தலா ரூ.3.00 இலட்சம் வீதம் ரூ.51,00,000/-மதிப்பீட்டிலான கான்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
- அரசு பள்ளி அருகே கரும்பு தோட்டம் பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் வழிமறித்தனர்.
- கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் திடீர் என ஜெய்சங்கரை தாக்கினர்.
கடலூர்,செப்.1-
கடலூர் அருகே உள்ள திருக்கண்டேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். (வயது 47) கார் டிரைவர். இவர் சம்பவத்தன்று சவாரிஏற்றி கொணடு காரில் விழுப்புரம் அருகே உள்ள சொர்ணாவூர் சென்றார். பின்னர் அங்கிருந்து ஊருக்கு மேல்பட்டாம்பாக்கம் வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது அரசு பள்ளி அருகே கரும்பு தோட்டம் பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் வழிமறித்தனர். அதிர்ச்சி அடைந்த ஜெய்சங்கர் காரை நிறுத்தினார். அந்த கும்பல் முகமூடி அணிந்து இருந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் திடீர் எனஜெய்சங்கரை தாக்கினர். இதில் அவர் நிலை குலைந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் ஜெய்சங்கர் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூ. 1000 ரொக்கபணத்தை பறித்தனர். பதறி போன ஜெய்சங்கர் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ஜெய்சங்கர் நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து தப்பிஓடிய முகமூடி கும்பலை தேடி வருகிறார்கள்.
- தியாகராஜன் நேற்று தனது மனைவியுடன், புதுக்கோட்டை மாவட்டம், நெய்குப்பையிலிருந்து, (டி.ஹூண்டாய் காரில் புறப்ப ட்டார்.
- மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கடலூர்:
சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் நேற்று தனது மனைவியுடன், புதுக்கோட்டை மாவட்டம், நெய்குப்பையிலிருந்து, (டி.ஹூண்டாய் காரில் புறப்ப ட்டார். காரை சென்னை, குன்றத்தூரைச் சேர்ந்த சண்முகம், ஓட்டினார். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூர் அடுத்த ஐவதுகுடி பஸ் நிறுத்தம் அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில், சென்னை, ஆழ்வா ர்பேட்டையைச் சேர்ந்த தியாகராஜன் மனைவி மீனாட்சி, (வயது 60) அதே இடத்தில் இறந்தார்.
மேலும், தியாகராஜன், அவரது வீட்டு சமைய ல்காரர் சென்னை ஆழ்வா ர்பேட்டை சேர்ந்த சேவ கன், கார் டிரைவர் சண்மு கம், ஆகியோர் காயம டைந்தனர். அனைவரும் வேப்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை சேர்க்க ப்பட்டு, மேல் சிகிச்சை க்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
- மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
- நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை இன்று மதியம் வரை விடிய விடிய பெய்து வருகின்றது.
கடலூர்:
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பல நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை இன்று மதியம் வரை விடிய விடிய பெய்து வருகின்றது. மேலும் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் இன்று வரை கொட்டி தீர்த்து வரும் பலத்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
மேலும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழாவில் தொடர் மழை காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட முடியாமல் முடக்கியது குறிப்பிடத்தக்கதாகும். சாலை யோரத்தில் விற்பனை செய்யப்பட்ட விநாயகர் சிலை பூஜை பொருட்கள் பழ வகைகள் போன்றவைகள் முழுவதும் தொடர் மழை காரணமாக நாசமடைந்ததால் லட்சக்கணக்கான ரூபாய் சாலையோர வியாபாரிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்படுத்தி உள்ளதாக வியாபாரிகள் மிகுந்த கவலையுடன் தெரிவித்தனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆறு, கெடிலம் ஆறு, கொள்ளிடம் ஆற்றில் தற்போது நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும் சிதம்பரம் சுற்றுவட்டார பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் ஆறு ஓரங்களில் இருந்த கிராமங்களில் தண்ணீர் புகுந்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களை மீட்டு பாதுகாப்பாக வைத்துள்ளனர் இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் விவசாயப் பணிகள் முழுவதும் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான ஏக்கரில் தண்ணீர் தற்போது தேங்கி வருவதால் நெற்பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு ஊடு பயிர்கள் நாசமாகும் நிலையும் ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக விவசாயிகள் மிகுந்த மனக்கவலையுடன் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் காலை முதல் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் குடை பிடித்த படியும் மிகுந்த அவதியுடன் சென்றதையும் காணமுடிந்தது. மேலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு எரிய வைத்தபடி சென்றதையும், இரு சக்கர வாகனங்களில் சென்ற மக்கள் மிகுந்த அவதியுடன் சென்றதையும் காண முடிந்தது.
கடலூர் மாவட்டத்தில் மில்லிமீட்டர் அளவில் மழையளவு பின்வருமாறு:-
. கீழச்செருவாய் - 106.0, பெல்லாந்துறை - 84.2 தொழுதூர் - 47.0, வடக்குத்து - 33.0, லால்பேட்டை - 33.0, காட்டுமன்னார்கோயில் - 32.0, வேப்பூர் - 23.௦ கொத்தவாச்சேரி - 20.0, குறிஞ்சிப்பாடி - 19.0 . ஆட்சியர் அலுவலகம் - 17.8எஸ்.ஆர்.சி. குடிதாங்கி - 12.5 லக்கூர் - 11.0 13. பண்ருட்டி - 11.0, கடலூர் - 9.6, வானமாதேவி - 9.0, அண்ணாமலைநகர் - 9.0, 17. சிதம்பரம் - 4.4 பரங்கிப்பேட்டை - 2.8, சேத்தியாத்தோப்பு - 2.2 விருத்தாசலம் - 2.2, ஸ்ரீமுஷ்ணம் - 2.1, மீ-மாத்தூர்
- சாத்தனூர்அணைக்கு நீர்வரத்துஅதிகரித்துள்ளது.
- தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்குஏற்படும் அபாயம்ஏற்பட்டுள்ளது.
கடலூர்:
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர்அணைக்கு நீர்வரத்துஅதிகரித்துள்ளது. இதனால் சாத்தனூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.சாத்தனூர் அணையில் நீர் வரத்து தொடங்கியதால் கடலூர் மாவட்டம்ப ண்ருட்டிஎனதிரிமங்கலம், கண்டரக்கோட்டை பகுதியில் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்குஏற்படும் அபாயம்ஏற்பட்டுள்ளது. இந்தஅணையின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய, பெரிய ஏரிகளும் நீர் ஆதாரம் கிடைப்பதோடு 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெற்று வருகின்றன.
மேலும் பல்வேறு பகுதி்களுக்கு சாத்தனூர்அணையின் மூலம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அணை வேகமாக நிரம்பி வருவதால் முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சாத்தனூர் அணையை நம்பி உள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்பெண்ணைஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ள தால்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பண்ருட்டி தாசில்தார் சிவா. கார்த்திகேயன் நேரில்பார்வையிட்டுஆய்வுசெய்தார் தென்னை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது எனவே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரும் பெண்ணை ஆற்று நீரில் இறங்கி குளிக்கவும் செல்பி எடுக்கவோ கூடாது என அறிவித்துள்ளனர்.
- விநாயகர் சிலை கரைந்தது வியாபாரிகள் அதிர்ச்சி
- தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் இன்றும் தொடர் மழை பெய்யும்
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகின்றன. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் இன்றும் தொடர் மழை பெய்யும் என அறிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், திருவந்திபுரம் நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம் ,நடுவீரப்பட்டு, பண்ருட்டி, விருத்தாச்சலம், சிதம்பரம் ,காட்டுமன்னார்கோவில், வேப்பூர் உள்ளிட்ட மாவட்ட முழுவதும் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகின்றன. இந்த மழை இன்று மதியம் வரை தொடர்ந்து பெய்து வந்தன.
இன்று விநாயகர் சதுர்த்தி விழா கடலூர் மாவட்டம் முழுவதும் 1300 சிலைகள் வைத்து கொண்டாடப்பட்டு வருகின்றனர். மேலும் விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் பலத்த மழை பெய்து வந்ததால் சாலை ஓரத்தில் விநாயகர் சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள், பழ வகைகள் போன்றவற்றை வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் கடலூர் நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர் மழை காரணமாக சாலை ஓரத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மழை காரணமாக கரைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் கடும் துயரத்தில் ஆழ்ந்தனர். மேலும் பழ வகைகள் பூஜை பொருட்கள் அவுல் பொறி போன்றவற்றை விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். இருந்தபோதிலும் பொதுமக்கள் குடை பிடித்த படியும் குடும்பத்துடனும் விநாயகர் சிலை பூஜை பொருட்கள் மற்றும் பழ வகைகளை வாங்கி சென்றனர். ஆனால் தொடர் மழை காரணமாக விநாயகர் சிலை மற்றும் பொருட்கள் விற்பனை குறைந்ததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர். இதன் காரணமாக கடலூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
- கணக்கெடுப்பு பணி நாட்டிலேயே முதன் முறையாக கைபேசி செயலி மூலம் நமது மாநிலத்தில் நடைபெறவுள்ளது.
- செப்டம்பர் தொடங்கி டிசம்பர் 2022-க்குள் கணக்கெடுப்பு முடியும்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 11-வது வேளாண்மை கணக்கெடுப்பு தொடர்பாக ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மற்றும் மாவட்ட அளவிலான பயிற்சி மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ணன் தலைமையில் மாவட்ட வருவாய் மற்றும் புள்ளியியல் துறை அலுவலர்களுடன் நடைபெற்றது. மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநர் துரைராஜ், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து புள்ளியியல் உதவி இயக்குநர்கள் மற்றும் அனைத்து வருவாய் வட்டாட்சியர்கள், வட்டார புள்ளி இயல் ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். இப்பயிற்சியில் மத்திய அரசின் வேளாண் உழவர் நலத்துறை அலுவலர்களால் பயிற்றுவிக்கப்பட்ட மாவட்ட முதன்மை பயிற்றுநர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது. இக்கணக்கெடுப்பு பணி நாட்டிலேயே முதன் முறையாக கைபேசி செயலி மூலம் நமது மாநிலத்தில் நடைபெறவுள்ளது. 11-வது வேளாண்மை கணக்கெடுப்பு செப்டம்பர் தொடங்கி டிசம்பர் -2022-க்குள் கணக்கெடுப்பு முடிக்க மேற்பார்வையாளர்களான சார் ஆட்சியர், கோட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- கடலூர் முதுநகர் குழந்தை காலனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் கொட்டகையில் இயங்கி வந்தது.
- தீ வைத்து எரித்த மர்ம நபர்களை உடனடியாக பிடித்து குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கடலூர்:
கடலூர் முதுநகர் குழந்தை காலனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் கொட்டகையில் இயங்கி வந்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென்று கட்சி அலுவலகம் எரிந்து சாம்பலானது. அப்போது இதனை பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதிர்ச்சி அடைந்து ஏராளமானோர் திரண்டனர். ஆனால் மர்ம நபர்கள் யார் கட்சி அலுவலகத்திற்கு தீ வைத்தனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அப்பகுதி முழுவதும் தீவிரமாக தேடி வந்தனர்.
தகவல் அறிந்த மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அப்பகுதியில் திரண்டனர். இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையும் மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைசெல்வன் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கரிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தை தீ வைத்து எரித்த மர்ம நபர்களை உடனடியாக பிடித்து குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்தன. மேலும் அப்பகுதி முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றது.
- கடலூர் மாவட்டத்தில் மழை காரணமாக பூஜை பொருட்கள் விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் விரக்தி உள்ளனர்.
- விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதால் விவசாயிகள் கடும் அவதி இருந்து வருகின்றனர்.
கடலூர்:
தமிழக பகுதிகளில் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்திருந்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகின்றன. இதன் காரணமாக இரவு நேரங்களில் மழையும், பகல் நிலவு சுட்டெரிக்கும் வெயிலும் அடித்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று இரவு கடலூர் , நெல்லிக்குப்பம், பண்ருட்டி, வேப்பூர், விருத்தாச்சலம், புவனகிரி, தொழுதூர், ஸ்ரீமுஷ்ணம், அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை, குப்பநத்தம் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்தன. இதை தொடர்ந்து இன்று காலை வரை கடலூர் நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தது.
இதன் காரணமாக நாளை விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாட உள்ள நிலையில் படைப்பதற்கு பூஜை பொருட்கள் சாலை ஓரங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது இந்த தொடர் மழை காரணமாக பூஜை பொருட்கள் பழ வகைகள் போன்றவற்றை மழை காரணமாக விற்க முடியாமல் சாலை வியாபாரிகள் கடும் அவதி அடைந்ததை காண முடிந்தது. மேலும் இந்த பொருட்கள் மற்றும் பழ வகைகள் இன்று, நாளை இரண்டு நாட்களில் விற்பனையானால் மட்டுமே வாங்கி பொருட்களுக்கு பணம் வழங்கி ஏதேனும் சிறிய அளவில் லாபம் கிடைக்கும். இந்த நிலை தொடர்ந்து இருந்தால் எங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என மிகுந்த வேதனையுடன் தெரிவித்தனர் வியாபாரிகள். கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதால் விவசாயிகள் கடும் அவதி இருந்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் மழை அளவு பின்வருமாறு- குப்பநத்தம் - 44.3வேப்பூர் - 37.0தொழுதூர் - 27.0விருத்தாசலம் - 14.1புவனகிரி - 6.0ஸ்ரீமுஷ்ணம் - 5.6 அண்ணாமலைநகர் - 1.4பரங்கிப்பேட்டை - 1.2 கடலூர் - 0.1மொத்த மழை - 136.70 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.
- ஒரு மாணவர் திடீரென கண்டக்ரின் தலையில் தட்டியதாக கூறப்படுகிறது .
- பெற்றோரை வரவழைத்து அவர்களுக்கும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பனையாந்தூர் கிராமத்திலிருந்து திட்டக்குடி நோக்கி தளம் என் 6 என்ற அரசு பேருந்து இன்று காலை 9 மணி அளவில் ஓட்டுநர் ராஜலிங்கம் பஸ்சை இயக்க கண்டக்டர் ராமசாமி பொதுமக்கள் மற்றும் மாணவர்களை ஏற்றிக்கொண்டு வைத்தியநாதபுரம் வழியாக திட்டக்குடி செல்லும் பொழுது தொழுதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பேருந்தில் வந்ததாகவும் அப்பொழுது நடத்துனரிடம் மாணவர்கள் விளையாட்டுத்தனமாக விளையாடிக் கொண்டு வந்ததாகவும் அப்போது ஒரு மாணவர் திடீரென கண்டக்ரின் தலையில் தட்டியதாக கூறப்படுகிறது .
இதனை தொடர்ந்து ஓட்டுநர் பஸ்சைராமநத்தம் காவல் நிலையம் கொண்டு வந்து நிறுத்தி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து உடனடியாக டிஎஸ்பி காவ்யாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த காவியா அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துனர் மற்றும் மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தினார் விசாரணைக்கு பிறகு படிக்கின்ற மாணவர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என எச்சரித்து அவர்களை பெற்றோரை வரவழைத்து அவர்களுக்கும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
- கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 80 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
கடலூர்:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களை பல மடங்கு உயர்த்தி உள்ளது. அரிசி, தயிர், மோர், வெண்ணை, நெய் ஆகிய உணவுகள் மீது போடப்பட்ட ஜி.எ.ஸ்டி. வரி உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஈம சடங்கிற்கு போடப்பட்ட ஜிஎஸ்டி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். உயிர்காக்கும் மருந்துகளின் மீதான விலையை 10 சதவீதம் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 30 ந்தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் துரை தலைமையில் மாவட்ட துணை செயலாளர் குளோப், மாவட்ட பொருளாளர் பாஸ்கர், நிர்வாகிகள் பன்னீர்செல்வம், குணசேகரன், மாநகர செயலாளர் நாகராஜ், சக்திவேல், மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் திரண்டனர். அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இதனை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் இருந்து ஊர்வலமாக ரயில் நிலையத்தை முற்றுகையிட மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பிக்கொண்டு சென்றனர். அப்போது அங்கிருந்து போலீசார் இந்த போராட்டத்திற்கு அனுமதி இல்லை. இதனை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படும் என அறிவுறுத்தினர். ஆனால் அதனை மீறியும் ஊர்வலமாக கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்றனர். இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திற்கு சென்ற போது சற்று கால தாமதமாக வந்த சோழன் எக்ஸ்பிரஸ் பயணிகளை இறக்குவதற்காக ரயில் நிலையத்தில் நின்றது.
இதனை பார்த்த போராட்டக்காரர்கள் சோழன் எக்ஸ்பிரஸ் முன்பு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு தண்டவாளத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய அரசு கண்டித்து கோஷம் இழுத்துக் கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து அந்த திரண்டு இருந்த போலீசார் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 80 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- பெரியகங்கணாங்குப்பம் சென்ற போது, எதிரே வந்த அரசு பஸ், கார் மீது மோதியது.
- வக்கீல்கள் ராம.ராதாகிருஷ்ணன், சந்திரசேகரன் ஆகியோர் மூலம் வழக்கு தொடர்ந்தார்.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி அருகே வடக்குத்து காந்திநகர் விரிவு அண்ணாராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகன் அஜய்குமார் (வயது 20). இவர் கடந்த 13.12.2013 அன்று கடலூர் வழியாக புதுச்சேரி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அவர் பெரியகங்கணாங்குப்பம் சென்ற போது, எதிரே வந்த அரசு பஸ், கார் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்து புதுச்சேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அஜய்குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது பற்றி ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த விபத்து வழக்கில் நஷ்டஈடு கேட்டு அவரது தாய் விஜயா கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வக்கீல்கள் ராம.ராதாகிருஷ்ணன், சந்திரசேகரன் ஆகியோர் மூலம் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், அஜய்குமார் தாயாருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழகம் வட்டி மற்றும் செலவு தொகையுடன் சேர்த்து ரூ.14 லட்சம் வழங்க உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்கவில்லை. இதையடுத்து மீண்டும் ரூ.20 லட்சத்து 97 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நிறைவேற்று மனுதாக்கல் செய்யப்–பட்டது. அந்த தொகையும் வழங்கப்படாததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் நேற்று கடலூரில் இருந்து சென்னைக்கு செல்ல இருந்த அரசு பஸ்சை, கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.






