என் மலர்
நீங்கள் தேடியது "வியாபாரிகள் அதிர்ச்சி"
- விநாயகர் சிலை கரைந்தது வியாபாரிகள் அதிர்ச்சி
- தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் இன்றும் தொடர் மழை பெய்யும்
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகின்றன. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் இன்றும் தொடர் மழை பெய்யும் என அறிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், திருவந்திபுரம் நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம் ,நடுவீரப்பட்டு, பண்ருட்டி, விருத்தாச்சலம், சிதம்பரம் ,காட்டுமன்னார்கோவில், வேப்பூர் உள்ளிட்ட மாவட்ட முழுவதும் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகின்றன. இந்த மழை இன்று மதியம் வரை தொடர்ந்து பெய்து வந்தன.
இன்று விநாயகர் சதுர்த்தி விழா கடலூர் மாவட்டம் முழுவதும் 1300 சிலைகள் வைத்து கொண்டாடப்பட்டு வருகின்றனர். மேலும் விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் பலத்த மழை பெய்து வந்ததால் சாலை ஓரத்தில் விநாயகர் சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள், பழ வகைகள் போன்றவற்றை வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் கடலூர் நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர் மழை காரணமாக சாலை ஓரத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மழை காரணமாக கரைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் கடும் துயரத்தில் ஆழ்ந்தனர். மேலும் பழ வகைகள் பூஜை பொருட்கள் அவுல் பொறி போன்றவற்றை விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். இருந்தபோதிலும் பொதுமக்கள் குடை பிடித்த படியும் குடும்பத்துடனும் விநாயகர் சிலை பூஜை பொருட்கள் மற்றும் பழ வகைகளை வாங்கி சென்றனர். ஆனால் தொடர் மழை காரணமாக விநாயகர் சிலை மற்றும் பொருட்கள் விற்பனை குறைந்ததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர். இதன் காரணமாக கடலூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.






