search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடி அருகே அரசு பஸ் கண்டக்டர்  மீது தாக்குதல்: மாணவர்களிடம் விசாரணை
    X

    திட்டக்குடி அருகே அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்: மாணவர்களிடம் விசாரணை

    • ஒரு மாணவர் திடீரென கண்டக்ரின் தலையில் தட்டியதாக கூறப்படுகிறது .
    • பெற்றோரை வரவழைத்து அவர்களுக்கும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பனையாந்தூர் கிராமத்திலிருந்து திட்டக்குடி நோக்கி தளம் என் 6 என்ற அரசு பேருந்து இன்று காலை 9 மணி அளவில் ஓட்டுநர் ராஜலிங்கம் பஸ்சை இயக்க கண்டக்டர் ராமசாமி பொதுமக்கள் மற்றும் மாணவர்களை ஏற்றிக்கொண்டு வைத்தியநாதபுரம் வழியாக திட்டக்குடி செல்லும் பொழுது தொழுதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பேருந்தில் வந்ததாகவும் அப்பொழுது நடத்துனரிடம் மாணவர்கள் விளையாட்டுத்தனமாக விளையாடிக் கொண்டு வந்ததாகவும் அப்போது ஒரு மாணவர் திடீரென கண்டக்ரின் தலையில் தட்டியதாக கூறப்படுகிறது .

    இதனை தொடர்ந்து ஓட்டுநர் பஸ்சைராமநத்தம் காவல் நிலையம் கொண்டு வந்து நிறுத்தி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து உடனடியாக டிஎஸ்பி காவ்யாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த காவியா அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துனர் மற்றும் மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தினார் விசாரணைக்கு பிறகு படிக்கின்ற மாணவர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என எச்சரித்து அவர்களை பெற்றோரை வரவழைத்து அவர்களுக்கும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

    Next Story
    ×