என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலுவலர்களுக்கு பயிற்சி"

    • வாக்காளர்கள் பெயர் சேர்த்தல் குறித்து விளக்கம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் கோட்டாட்சியர் லட்சுமி தலைமையில் நாட்டறம்பள்ளி பேரூராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் உள்ள வாக்குசாவடி அலுவலர்களுக்கு பெயர் சேர்த்தல் குறித்து பயிற்சி கூட்டம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு வாக்குச் சாவடி அலுவலர்கள் மற்றும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் உள்பட 223 பங்கேற்றனர்.

    பயிற்சியின் போது தாசில்தார் க.குமார், தேர்தல் துணை வட்டாட்சியர் நிர்மலா, வருவாய் ஆய்வாளர்கள் கெளரி, அன்னலட்சுமி மற்றும் தேர்தல் மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நிலக்கடலை விதைப்பண்ணையில் விதைச்சான்று அலுவலர்களுக்கு களப்பயிற்சி வழங்கப்பட்டது.
    • தொழில் நுட்பங்கள் பற்றி சாகுபடியாளருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

    ஈரோடு:

    பெருந்துறை அருகே நிலக்கடலை விதைப்பண்ணையில் விதைச்சான்று அலுவலர்களுக்கான களப்பயிற்சி வழங்கப்பட்டது.

    நடப்பு ஆண்டில் கீழ்பவானி ஆயக்கட்டு பாசன பகுதியில் எண்ணெய் வித்து பயிர்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு ள்ளது. இதனால் விவசாயி கள் நிலக்கடலை மற்றும் எள் பயிரிட்டுள்ளனர்.

    நிலக்கடலை பயிரில் ஜி.ஜே.ஜி.9, பி.எஸ்.ஆர்.2, தரணி ஆகிய ரகங்களின் ஆதார நிலை–1 விதை ப்பண்ணை காஞ்சிகோவில் பகுதியில் அமைக்கப்பட்டு ள்ளது.

    இப்பண்ணைகளை விதை சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம் ஆய்வு செய்தார்.

    பின்னர் நிலக்கடலை ரகங்களின் மகசூல் திறன், குணாதி சயங்கள், வயலாய்வு மேற்கொள்ளும் நடை முறைகள், கலவன்களை கண்டறியும் முறைகள், அவற்றை அகற்றும் முறை குறித்து விதைச்சான்று அலுவலர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    மேலும் நிலக்கடலை பயிர் உற்பத்தி மற்றும் பயிர் பாதுகாப்பு தொழில் நுட்பங்கள் பற்றி சாகுபடியாளருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் ஈரோடு மாவட்ட விதைச்சான்று அலுவலர்கள் பங்கேற்றனர்.

    • கணக்கெடுப்பு பணி நாட்டிலேயே முதன் முறையாக கைபேசி செயலி மூலம் நமது மாநிலத்தில் நடைபெறவுள்ளது.
    • செப்டம்பர் தொடங்கி டிசம்பர் 2022-க்குள் கணக்கெடுப்பு முடியும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 11-வது வேளாண்மை கணக்கெடுப்பு தொடர்பாக ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மற்றும் மாவட்ட அளவிலான பயிற்சி மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ணன் தலைமையில் மாவட்ட வருவாய் மற்றும் புள்ளியியல் துறை அலுவலர்களுடன் நடைபெற்றது. மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநர் துரைராஜ், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து புள்ளியியல் உதவி இயக்குநர்கள் மற்றும் அனைத்து வருவாய் வட்டாட்சியர்கள், வட்டார புள்ளி இயல் ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். இப்பயிற்சியில் மத்திய அரசின் வேளாண் உழவர் நலத்துறை அலுவலர்களால் பயிற்றுவிக்கப்பட்ட மாவட்ட முதன்மை பயிற்றுநர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது. இக்கணக்கெடுப்பு பணி நாட்டிலேயே முதன் முறையாக கைபேசி செயலி மூலம் நமது மாநிலத்தில் நடைபெறவுள்ளது. 11-வது வேளாண்மை கணக்கெடுப்பு செப்டம்பர் தொடங்கி டிசம்பர் -2022-க்குள் கணக்கெடுப்பு முடிக்க மேற்பார்வையாளர்களான சார் ஆட்சியர், கோட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×