என் மலர்
நீங்கள் தேடியது "வேளாண்மைகணக்கெடுப்பு"
- கணக்கெடுப்பு பணி நாட்டிலேயே முதன் முறையாக கைபேசி செயலி மூலம் நமது மாநிலத்தில் நடைபெறவுள்ளது.
- செப்டம்பர் தொடங்கி டிசம்பர் 2022-க்குள் கணக்கெடுப்பு முடியும்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 11-வது வேளாண்மை கணக்கெடுப்பு தொடர்பாக ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மற்றும் மாவட்ட அளவிலான பயிற்சி மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ணன் தலைமையில் மாவட்ட வருவாய் மற்றும் புள்ளியியல் துறை அலுவலர்களுடன் நடைபெற்றது. மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநர் துரைராஜ், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து புள்ளியியல் உதவி இயக்குநர்கள் மற்றும் அனைத்து வருவாய் வட்டாட்சியர்கள், வட்டார புள்ளி இயல் ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். இப்பயிற்சியில் மத்திய அரசின் வேளாண் உழவர் நலத்துறை அலுவலர்களால் பயிற்றுவிக்கப்பட்ட மாவட்ட முதன்மை பயிற்றுநர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது. இக்கணக்கெடுப்பு பணி நாட்டிலேயே முதன் முறையாக கைபேசி செயலி மூலம் நமது மாநிலத்தில் நடைபெறவுள்ளது. 11-வது வேளாண்மை கணக்கெடுப்பு செப்டம்பர் தொடங்கி டிசம்பர் -2022-க்குள் கணக்கெடுப்பு முடிக்க மேற்பார்வையாளர்களான சார் ஆட்சியர், கோட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.






