என் மலர்
கடலூர்
- சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் மாரத்தான் நடத்தப்பட்டது.
- சைக்கிள் மாரத்தான் முடிவில் அனைவருக்கும் பத க்கங்கள் வழங்கப்பட்டது.
கடலூர்:
என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுற்றுச்சூழல் துறை மற்றும் பீப்புள் சர்வீஸ் குரூப் தொண்டு மையம் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் விளைவுகளை எடுத்துகூறும் வகையிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தியும் விழிப்பு ணர்வு சைக்கிள் மாரத்தான் நடத்தப்பட்டது.
இதனை என்.எல்.சி.இந்தியா நிறுவன செயல் இயக்குனர் கார்த்தி தொடங்கி வைத்தார். முதன்மை பொது மேலாளர் அன்பு செல்வன் பொது மேலாளர்கள் ராமலிங்கம் ,செந்தில்குமார் ,சுப்பி ரமணியம் மற்றும் துணை பொது மேலாளர் சீராள ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணியை பீப்பிள் சர்வீஸ் குரூப் நிறுவனர் தாமரைச்செல்வன் ஏற்பாடு செய்திருந்தார். விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. சுமார் 8 கிலோமீட்டர் இந்த விழிப்புணர்வு சைக்கிள் மாரத்தான் நடைபெற்றது. முடிவில் அனைவருக்கும் பத க்கங்கள் வழங்கப்பட்டது.
- பாரதிதாசனின் மனைவி புவனிகிரி போலீசில் புகார் செய்தார்.
- புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து பாரதிதாசனை கைது செய்தனர்.
கடலூர்:
புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு பகுதியை சேர்ந்தவர் 31 வயது பெண், அதே பகுதியை சேர்ந்தவர் பாரதிதாசன்(37). இவர்கள் இருவருக்கும் இடையில் நீண்டநாட்களாக கள்ளதொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த பாரதிதாசனின் மனைவி இதுகுறித்து புவனிகிரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் புவனகிரி போலிசார் அந்த பெண்ணையும், பாரதிதாசனையும் அழைத்து இருவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று பாரதிதாசன் அந்த பெண் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் பாரதிதாசன் அந்த பெண்ணை தகாத வார்த்தையால் திட்டி அவரை தாக்கி மானபங்கம் படுத்தியுள்ளார். இதை தடுக்க வந்த பெண்ணின் கணவர் நிர்மல்ராஜையும் பாரதிதாசன் தாக்கி உள்ளார். இதுகுறித்து அந்த பெண் புவனகிரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து பாரதிதாசனை கைது செய்தனர்.
- திடீரென்று கூரை வீட்டில் இருந்து புகை மண்டலமாக காட்சியளித்தது.
- தொடர்ந்து எரிந்து கொண்டிருந்த வீட்டின் தீயை அணைக்க முயற்சி செய்தபோதும் தீயை அணைக்க முடியவில்லை.
கடலூர்:
கடலூர் அடுத்த நெல்லிக்குப்பம் பி.என். பாளையத்தை சேர்ந்தவர் கந்தன் (வயது 46). சம்பவத்தன்று இரவு கந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று கூரை வீட்டில் இருந்து புகை மண்டலமாக காட்சியளித்தது. பின்னர் தீ மளமளவென பரவி கூரை வீடு எரியத் தொடங்கியது.
அப்போது வீட்டில் இருந்த கந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் அலறி அடித்துக் கொண்டு வெளியில் வந்து பார்த்தனர். இதனைத் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்த வீட்டின் தீயை அணைக்க முயற்சி செய்தபோதும் தீயை அணைக்க முடியவில்லை. வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த 20 ஆயிரம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள், 3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரொக்க பணம் தீ யில் எரிந்து நாசமாயின. இது குறித்து கந்தன் கொடுத்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆரோக்கியராஜ் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் இருந்த நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.
- பண்ருட்டி போலீசாரை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டினார்.
கடலூர்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ்.இவர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியையாகவேலை செய்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் வீ ட்டை பூட்டிக் கொண்டு வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் இருந்த நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இது பற்றி காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக புதிதாக பொறுப்பேற்ற ராஜாராம் பழைய வழக்குகளை துப்புத் துலக்கி குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லாதலைமையில்காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன், சப்- இன்ஸ்பெக்ட ர்பிரேம்குமார்,பண்ருட்டிடி.எஸ்.பி. தனி படை சப்- இன்ஸ்பெக்டர் தங்கவேலு மற்றும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர் இதனை தொடர்ந்து பண்ருட்டி அடுத்த விலங்கல்பட்டை சேர்ந்த நடராஜன் மகன் ராஜகுமாரனை (23) அதிரடியாக கைது செய்து அவனிடம் இருந்த நகை பணம் ஆகியவற்றை மீட்டனர். ராஜகுமாரன் பண்ருட்டி நெல்லிக்குப்பம் பகுதியில்பல இடங்களில் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.வீட்டை பூட்டிக் கொண்டு வேலைக்கு செல்பவர்கள்வீட்டு சாவியை எங்கு வைத்து விட்டு செல்கிறார்கள் என்பதை நோட்டமிட்டு அந்த சாவியை எடுத்து வீட்டை திறந்து நகை- பணம் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி மீண்டும் சாவியை அதே இடத்தில் வைத்து விட்டு செல்வது தெரியவந்தது. நீண்ட நாட்களாக துப்பு துலங்காமல் இருந்து வந்த கொள்ளை வழக்கில் துப்புத் துலக்கிய பண்ருட்டி போலீசாரை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டினார்
- கடலூர் அருகே போலீஸ் சப் -இன்ஸ்பெக்டரை கத்தியால் வெட்ட முயன்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் 2 வாலிபர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
கடலூர்:
கடலூர் அடுத்த புதுக்கடை பகுதியில் 2 வாலிபர்கள் கையில் கத்தி வைத்துக் கொண்டு அனைவரையும் மிரட்டிக்கொண்டு இருந்ததாக ரெட்டிச்சாவடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் 2 வாலிபர்களிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது அவரை பணி செய்ய விடாமல் தடுத்து அவர்கள் வைத்திருந்த கத்தியால் வெட்ட முயன்றனர்.
சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் சுதாரித்துக் கொண்டு 2 வாலிபர்களையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டார். இதில் அவர்கள் கடலூர் செல்லஞ்சேரியை சேர்ந்த தேவா ( 26), மரக்காணம் கூனிமேட்டை சேர்ந்த சுமன் (27) என்பது தெரியவந்தது. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து தேவா மற்றும் சுமன் ஆகியோரை கைது செய்தனர். சப்- இன்ஸ்பெக்டரை கத்தியால் வெட்ட முயன்ற சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கிருஷ்ணவேணி, சுரேஷ் என்பவருக்கும் சொத்து சம்பந்தமாக முன் விரோத தகராறு இருந்து வருகிறது.
- காயமடைந்த கிருஷ்ணவேணி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
கடலூர்:
கடலூர் அடுத்த புதுக்கடையை சேர்ந்தவர் சுப்புராயன். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 73). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் சொத்து சம்பந்தமாக முன் விரோத தகராறு இருந்து வருகிறது. சம்பவத்தன்று சுரேஷ் உட்பட 4 பேர் திடீரென்று மூதாட்டி கிருஷ்ணவேணியிடம் தகராறில் ஈடுபட்டனர்.
பின்னர் பீர் பாட்டிலால் கிருஷ்ணவேணியை தாக்கி அவரது வீட்டில் இருந்த டி.வி. பெட்டியை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கிருஷ்ணவேணி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து ரெட்டிச் சாவடி போலீசார் சுரேஷ், நர்மதா, கிருஷ்ணமூர்த்தி, உத்திராம்பாள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.
- கோடைகால கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.
- இன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.
கடலூர்:
கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கோடைகால கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் கடலூர், நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து 15-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு இன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.
இதற்கு வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமை தாங்கி பரிசுகளை வழங்குகிறார். நிகழ்ச்சியில் ஆய்வாளர் குருமூர்த்தி மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
- விண்ணப்பங்கள் பரிந்துரை செய்யப்படுகிறது.
- இத்திட்டத்தில் விண்ணப்பிக்க கல்வி தகுதி ஏதும் இல்லை.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் மானி யத்துடன் கூடிய தொழிற் கடனுதவி பெறுவதற்கு, மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் பரிந் துரை செய்யப்படுகிறது. அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடிகள் திட்டத்தினை இந்த ஆண்டு முதல் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்த அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தொழில் முனை வோர்கள் திட்ட மதிப்பீட்டில் 65 சதவீதம் வங்கி கடனாகவும், 35 சதவீதம் மானியமாகவும் பெறலாம். முன் முனை மானியமாக அதிகபட்சமாக 1.50 கோடி வரை பெறலாம்.
வங்கி கடன் வட்டியில் 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். ஏற்கனவே தொழில் செய்து வரும் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் தொழிலை விரிவாக்கம் செய்யவும், புதியதாக தொழில் செய்ய விரும்புவோரும் இத்திட்டத் தில் விண்ணப்பித்து பயன் பெறலாம். 18 முதல் 55 வயது குட்பட்டோர், உற்பத்தி, சேவை, வணிகம் சார்ந்த தொழில் தொடங்க லாம். மேலும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க கல்வி தகுதி ஏதும் இல்லை. வாகனங்களை முதன்மை யாக கொண்டு செயல் படுத்தக்கூடிய தொழிழ்களான டாக்சி, சரக்கு வாகனங்கள், பொக் லைன் எந்திரம், கான்கிரீட் எந்திரம், ஜே.சி.பி, அழகு நிலையம், ஆம்பு லன்ஸ் சேவை, உடற் பயிற்சிக் கூடம், கயிறு தயாரித்தல், வியாபாரம், தரி அமைத்தல் மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்கள் தொடங்கு வோரும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
சுயமுத லீட்டில் தொழில் தொடங்கி னாலும், இந்த திட்டத்தின் மூலம் மானியம் பெறலாம். மேலும், கடலூர் மாவட் டத்தை சேர்ந்த பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள் தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் வாழ்வாதாரத்தை மேம் படுத்த, தொழில் தொடங்கி இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும். மேலும், விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகத்தினை நேரில் வந்து அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
- கோயம்புத்தூரில் உள்ள ஒரு கடையில் வெல்டிங் வேலை செய்து வந்தார்.
- அந்த வழியாக சென்றவர்கள் பார்த்த அதிர்ச்சியடைந்தனர்.
கடலூர்:
விருத்தாசலம் அருகே விஜயமாநகரத்தை சேர்ந்த வர் வெங்கடேசன். இவரது மகன் சுகன்ராஜ் (வயது 23). இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு கடையில் வெல்டிங் வேலை செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று விஜயமாநகரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். இதனையடுத்து சுகன்ராஜ் விஜயமாநகரத்தில் இருந்து கோவைக்கு நேற்று இரவு சென்றார்.
இந்நிலையில் இன்று காலை விஜயமாநகரம் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள ஒரு மரத்தில் சுகன்ராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்த அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மங்கலம் பேட்டை போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த மங்கலம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுகன்ராசின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து சுகன்ராசை யாரேனும் கொலை செய்து தூக்கில் பிணமாக தொங்க விட்ட னரா? அல்லது வேறு யேதேனும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மருந்து கடையில் சூப்பர்வைசராக பணி புரிந்து வருகிறார்.
- முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த நடு குப்பத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் பண்ருட்டியில் உள்ள அப்பல்லோ மருந்து கடை யில் சூப்பர்வைசராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி அனு பிரியா (வயது 28) இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகன்ஒரு மகள் உள்ளனர்.
அனுபிரியா நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது அவரது அறையில் நைலான் புடவையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித் தகவல் அறிந்து அங்கு வந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன், முத்தாண்டிக்குப்பம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் அனுபிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து அனு பிரியாவின் தாயார் சொரத் தூரை சேர்ந்த சூரியகலா முத்தாண்டிக்குப்பம் போலீ சில் புகார் கொடுத்தார். புகாரில் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி யுள்ளார். இதனையடுத்து அனுப்பிரியா இறந்தது குறித்து அவரது கணவன் மணிகண்டனிடம் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆகி யுள்ள நிலையில் அனுபிரியா மரணத்தில் ஆர்.டி.ஓ விசா ரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
- 50-க்கும் மேற்பட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பலா உணவுப் பொருட்களின் கண்காட்சி இத்திருவிழாவில் இடம்பெற உள்ளது.
- காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் பலா திருவிழா நடத்தப்படுகிறது.
விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் பண்ருட்டியில் வரும் மே 28-ம் தேதி மாபெரும் பலா திருவிழா நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் பல்வேறு முன்னோடி விவசாயிகள் மற்றும் வல்லுர்கள் பங்கேற்று பலாவில் இருந்து பத்து தலைமுறைக்கு லாபம் எடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.
இது தொடர்பாக காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் கூறுகையில், "மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் சுற்றுச்சூழலையும் விவசாயிகளின் பொருளாதாரத்தையும் ஒரு சேர முன்னேற்றும் பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இதற்காக, லாபகரமாக விவசாயம் செய்து வரும் முன்னோடி விவசாயிகளின் தோட்டத்திலேயே புது விவசாயிகளை அழைத்து பயிற்சி வகுப்புகளையும், கருத்தரங்குகளை நடத்தி வருகிறோம்.
அந்த வகையில் இம்மாதம் பண்ருட்டியைச் சேர்ந்த முன்னோடி பலா விவசாயியும் வேளாண் துறையின் முன்னாள் துணை இயக்குநருமான ஹரிதாசின் தோட்டத்தில் இந்த பலா திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளோம். ஹரிதாஸ் '100 வகை பலா, 100 விதமான சுவை' என்ற தலைப்பில் பேச உள்ளார். இந்திய உணவு பதப்படுத்துதல் நிறுவனத்தைச் சேர்ந்த வல்லுநர் டாக்டர் ஜெகன் மோகன், பலாவை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துவது குறித்தும், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த வல்லுநர் டாக்டர் கருணாகரன், சிவப்பு பலாவின் சிறப்புகள் குறித்தும் பேச உள்ளனர்.
மேலும், முன்னோடி விவசாயி குமாரவேல், தென்னைக்குள் பலாவை நட்டு லாபம் எடுப்பது குறித்தும், முன்னோடி விவசாயி திருமலை மிளகு சாகுபடி குறித்தும், மதுரையைச் சேர்ந்த ஜோஸ்பின் மேரி, தேனீ வளர்ப்பு குறித்தும் ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.
இதுதவிர, கேரளாவைச் சேர்ந்த தேசிய விருது பெற்ற ஜேம்ஸ் ஜோசப் 'பச்சை பலா மாவை தினமும் உணவோடு சேர்த்து உட்கொள்வதன் மூலம் 90 நாளில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் சாத்தியம்' குறித்தும் பேச உள்ளார். மேலும், கேரளாவில் பலாவில் இருந்து தயாரித்த பொருட்களை சிறப்பாக சந்தைப்படுத்தி வரும் 'சக்கா கூட்டம்' என்ற குழுவினரின் பொருட்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பலா உணவுப் பொருட்களின் கண்காட்சியும் இத்திருவிழாவில் இடம்பெற உள்ளது.
பலாவை நட்டு லாபம் பார்க்க விரும்பும் அனைத்து விவசாயிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம். ஆர்வமுள்ள விவசாயிகள் 94425 90079 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்" என்றார்.
- பண்ருட்டி அருகே 2 பெண்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
- காயமடைந்த இருவரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த பனப்பாக்கத்தை சேர்ந்தவர்வெள்ளிகண்ணு (48)இவருக்கும்அதே ஊரை சேர்ந்த மோகனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனைஇருந்துவந்தது. சம்பவத்தன்று மோகன், அவரது மகன் தன்ராஜ்,மனைவி காஞ்சனா ஆகியோர் ஒன்றுசேர்ந்து வெள்ளிக்கண்ணு வீட்டிற்கு சென்று வெள்ளிகண்ணுவின் மனைவி மல்லிகாமற்றும்ளி களியம்மாள்ஆகியோரை உருட்டு கட்டை மற்றும் இரும்பு கம்பியால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மோகன் அவரது மகன், மனைவி ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து மோகனை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்திசிறையில் அடைத்தனர்.






