என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • நகராட்சி நிர்வாகம் எங்களிடம் ஒரு பத்திரதாளில் கையெழுத்து கேட்டு வருகிறது.
    • அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடாது.

    குனியமுத்தூர்,

    மதுக்கரை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கும் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று 2-வது நாளாக தொடருகிறது.

    இது குறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், நகராட்சி சார்பில் வேலை பார்த்து வந்த எங்களை திருப்பூர் தனியார் நிறுவனத்தின்கீழ் ஒப்படைத்து விட்டனர்.

    இந்த நிலையில் மதுக்கரை நகராட்சி நிர்வாகம் எங்களிடம் ஒரு பத்திரதாளில் கையெழுத்து கேட்டு வற்புறுத்தி வருகிறது.

    அந்தப் பத்திரத்தில் பணியாளர்கள் ஒன்றுசேர்ந்து சங்கம் அமைக்க கூடாது. முன்னறிவிப்பு இன்றி விடுமுறை எடுக்கக் கூடாது. இ. எஸ்.ஐ, பி.எப் காப்பீடு வழங்கப்படாது, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடாது. வேலை பார்க்கும்போது கையாளும் உபகரணங்களில் ஏதாவது பழுது ஏற்பட்டால் அதற்கு நாங்களே பொறுப்பு. பணியின் போதுவாடிக்கை யாளர்கள் புகார் செய்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்பவை உள்பட 22 நிபந்தனைகள் இடம்பெற்று உள்ளன. எனவே நாங்கள் அந்த பத்திரத்தில் கையெழுத்து போட மறுத்து வருகிறோம். இதுகுறித்து மதுக்கரை நகராட்சி நிர்வாகம், மற்றும் தலைவர் ஆகியோர் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பேரூர் அருகே மாசாணியம்மன் கோவில் உள்ளது.
    • 2 பேர் உண்டியலை உடைத்து பணத்தை திருட முயற்சித்து கொண்டிருந்தனர்.

    வடவள்ளி,

    கோவை பேரூர் அருகே மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பேரூர் பட்டீஸ்வரர் கோவி லின் இணைக் கோவிலாக உள்ளது.

    பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய வரு வார்கள். இதனால் எப்போதும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவி லில் உண்டியலும் உள்ளது. நேற்று இரவு கோவிலை அர்ச்சகர்கள் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றனர்.

    இந்தநிலையில் இரவு 11.30 மணியளவில் கோவிலுக்குள் இருந்து சத்தம் வந்தது. இதனை அந்த வழியாக சென்ற வர்கள் கேட்டு, கோவிலின் அருகே சென்ற போது, உள்ளே 2 பேர் உண்டியலை உடைத்து பணத்தை திருட முயற்சித்து கொண்டி ருந்தனர்.

    இதையடுத்து திருடன். திருடன்.. திருடன்.. என சத்தம் போட்டனர். பொது மக்கள் வந்ததை அறிந்ததும், கோவிலுக்குள் நின்றிருந்த 2 பேரும் தப்பியோடினர்.

    இதுகுறித்து மக்கள் பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோவிலில் பார்வையிட்டனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு செய்தனர்.

    இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து பேரூர் கோவில் சூப்பிரண்டு அமுதா கொடுத்த புகாரின் பேரில் பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது தொண்டா முத்தூர் வஞ்சிமா நகரில் வசித்து வரும் 15 வயது சிறுவன் மற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

    • மல்லப்பனும், அவரது மனைவியும் மகளுன் தங்கி இருந்தனர்.
    • மல்லப்பனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோட்டையன் தோப்பு.

    கோவை,

    கோவை சரவணம்பட்டி, கிருஷ்ணாபுரம், அப்பர் தெருவை சேர்ந்தவர் மல்லப்பன் (வயது 70). இவர் கடந்த 23-ந் தேதி வீட்டில் இருந்தார். திடீரென அவர் மாயமானார். அவர் எங்கு சென்றார், என்ன ஆனார் என்று தெரியவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மல்லப்பன் மனைவி ராமலட்சுமி, சரவணம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மல்லப்பனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோட்டையன் தோப்பு ஆகும். அவரது மகள் கோவையில் உள்ள வங்கியில் பணியாற்றுகிறார். இதனால் மல்லப்பனும் மகளுடனே தங்கியிருந்தார். இந்தநிலையில் தான் அவர் திடீரென மாயமாகி விட்டார். இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் சரவணம்பட்டி போலீஸ்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • கைதானவர்களிடம் 3 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    • கைதானவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    கோவை,

    ஆனைமலை பழைய ஆத்துப்பாலம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஆனைமலை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து ஆனைமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    அப்போது அங்கே கஞ்சா விற்ற சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த ஹக்கீம் (39) என்பவரை ஆனைமலை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர் ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கொண்டு வந்து ஆனைமலை பகுதிகளில் கஞ்சா விற்றது தெரிய வந்தது. அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் ரூ. 1900 பணம், 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனை போல கருமத்தம்பட்டி தனியார் பெட்ரோல் பங்க் அருகே கஞ்சா விற்ற பீகாரை சேர்ந்த கோண்டுகேவத் (28) என்பவரை பெரியநாயக்கன் பாளையம் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மூடப்பட வேண்டிய பள்ளிகளின் பெயர்கள் அடுத்த வாரம் வெளியாகும்.
    • அங்கீகாரம் பெறாத நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் மூடப்படும்.

    கோவை,

    கோவை மாவட்ட கல்வி அதிகாரி கீதா கூறி இருப்பதாவது:-

    கோவை மாவட்ட கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் தனியார் நர்சரி பள்ளிகளில் அங்கீகாரம் பெறாதவை, ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியவை, கூரைகள் உடன் செயல்படுபவை, அடுக்குமாடி குடியிருப்புகளில் செயல்படுபவை ஆகியவற்றை தமிழக அரசின் புதிய உத்தரவின்படி மூடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

    இருந்தபோதிலும் ஒருசில கோப்புகள் பரிசீலனையில் இருப்பதால், அந்த பள்ளிகளின் பெயர் வெளியிடப்படவில்லை. அரசு அனுமதி பெற்ற தனியார் பள்ளிகளின் பெயர்கள் விடுபட்டு இருப்பின், அடுத்த பெயர் பட்டியலில் அறிவிக்கப்படும். எனவே தமிழக அரசின் அங்கீகாரம் பெறாத எந்த பள்ளிகளிலும், பெற்றோர்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டாம். நீண்ட காலமாக அங்கீகாரம் புதுப்பிக்காத நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் பெயர் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும். அப்போது மூடப்பட வேண்டிய பள்ளிகளின் பெயர்களும் வெளியாகும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • 76 தனியார் பள்ளி பஸ்களில் குறைபாடு கண்டறியப்பட்டு, மீண்டும் ஆய்வுக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
    • பிரச்சினை இருந்தால் அதனை சரிசெய்து விட்டே வாகனங்களை இயக்க வேண்டும்

    கோவை,

    போக்குவரத்து துறை, பள்ளி கல்வித் துறை, காவல் துறை சார்பில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்பணியை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வை யிட்டார்.

    பின்னர், கலெக்டர் கிராந்திகுமார்பாடி பள்ளி வாகனங்களின் டிரைவர்க ளிடம் கூறியதாவது:-

    தினந்தோறும் வாகன ஓட்டுநர்கள் தங்களது வாகனங்கள் நல்ல நிலையில் உள்ளதா? என்பதை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

    பிரச்சினை இருந்தால் அதனை சரிசெய்த பிறகு தான் வாகனங்களை இயக்க வேண்டும். கோவை மாவட்ட சாலைகளில் அதிக வாகன போக்குவரத்து காரணமாக சில நேரங்களில் நெரிசல் ஏற்படுகிறது. அதுபோன்ற நேரங்களில் வாகன ஓட்டுநர்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்று வர வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தக்கூடாது. குழந்தைகளை பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பதுதான் உங்களு டைய பொறுப்பாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறும்போது, மொத்தம் 230 பள்ளிகளைச் சேர்ந்த 1355 தனியார் பள்ளி வாகனங்களில், நேற்று 901 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டன. இதில், 76 வாகனங்களில் அவசர கால கதவுகள் திறக்காதது, தீயணைப்பு கருவி காலா வதி, காமிரா பொருத்தாதது உள்ளிட்ட குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு, அவற்றை நிவர்த்தி செய்து மீண்டும் சம்மந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காண்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுதவிர, 378 வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. ஏற்கனவே, ஊரக பகுதிகளை சேர்ந்த பள்ளி வாகனங்களுக்கு மேட் டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சியில் கூட் டாய்வு நடைபெற்றுள்ளது என்றனர். போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில் பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பான், கண்காணிப்பு காமிராக்கள் இருந்தாலும் இக்கட்டான சூழலை எதிர்கொள்ள பயிற்சி பெற வேண்டும். திறமையான, எந்த சூழலையும் சமாளிக்கக் கூடிய டிரைவராக இருக்க லாம். அத்தகைய அதீத நம்பிக்கையில் மொபைல் போன் பேசிக் கொண்டே பஸ்களை இயக்கினால் கவனம் இல்லாமல் டிரைவர் ஓட்டுகிறார் என குழந்தைகள் நினைப்பர். அவர்களுக்கு பயம் ஏற்படும். நமது நடத்தை மிகவும் முக்கியம். அது நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். பயத்தை ஏற்படுத்தக் கூடாது.

    குழந்தைகள் வீட்டில் இருந்தால் பெற்றோர் பொறுப்பு. பள்ளிக்குள் சென்று விட்டால் ஆசிரி யர்கள் பொறுப்பு. அதேபோல் பஸ்களில் அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளுக்கு டிரைவர்க ளே பொறுப்பு. பொறுப்பை உணர்ந்து அவரது செயல் கள், நடத்தை, பாதுகாப்பு உணர்வை அளிக்கும் வகை யில் இருக்க வேண்டும் என்றார்.

    • சுப்பிரமணி கோவில்பாளையத்தில் இ-சேவை மையத்திற்கு பணம் அனுப்ப சென்றார்.
    • எதிரே வந்த மோட்டார் சைக்கிள், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

    பொள்ளாச்சி,

    சேலம் மாவட்டம் ஒமலூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது47). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். அண்மையில் நடந்த வாகன விபத்தில் சுப்பிரமணியின் மனைவி இறந்து விட்டார்.

    இதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுப்பிரமணி தனது மகன்களுடன், கோவை கிணத்துக்கடவு அருகே வடக்குபாளையம் கோபாலபுரத்திற்கு வந்தார்.

    அங்கு தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தார். நேற்று சுப்பிரமணி கோவில்பாளையத்தில் இ-சேவை மையத்திற்கு பணம் அனுப்ப சென்றார். அவருடன் அவரது நண்பரான ராமு (46) என்பவரும் சென்றார். இவரும் கட்டிடத்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    மோட்டார் சைக்கிளை ராமு ஓட்ட, சுப்பிரமணி பின்னால் அமர்ந்து இருந்தார். கோவில்பாளையம் சென்று இ-சேவை மையத்தில் பணத்தை அனுப்பி விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தனர்.

    அப்போது பொள்ளாச்சி-கோவை சாலையில் எஸ்.மேட்டுப்பாளையம் அருகே வந்த போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

    இதில், ராமு, சுப்பிரமணி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி சாலையில் வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, அவர்கள் 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது, ராமு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

    ெதாடர்ந்து பலத்த காயம் அடைந்த சுப்பிரமணியை மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விக்னேஷ் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
    • விக்னேஷ் கடந்த 5 வருடங்களாக உறவுக்கார பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

    கோவை,

    பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் அருகே உள்ள சமத்தூரை சேர்ந்தவர் விக்னேஷ்(வயது22). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் அந்த பகுதியில் தனது தாய் ரங்கநாயகியுடன் வசித்து வந்தார். விக்னேஷ் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார்.

    அப்போது ரங்கநாயகி மகனுக்கு உணவு கொடுத்து விட்டு, தூங்குவதற்காக அருகே வசிக்கும் தனது மகளின் வீட்டிற்கு சென்று விட்டார். விக்னேஷ் மட்டும் தனியாக இருந்தார்.

    அப்போது விக்னேஷ், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான 17 வயது சிறுவன், கோகுல கிருஷ்ணன்(22) ஆகியோரை ஐ.பி.எல். கிரிக்கெட் பார்ப்பதற்காக வீட்டிற்கு அழைத்தார்.

    அதன்படி அவர்களும் வீட்டிற்கு வந்தனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் கோகு லகிருஷ்ணன் அங்கிருந்து சென்று விட்டார்.

    இதையடுத்து விக்னேசும், 17 வயது சிறுவனும் சேர்ந்து ஒன்றாக மது அருந்தி விட்டு தூங்கி விட்டனர்.

    மறுநாள் அதிகாலையில் விக்னேஷின் தாய் வீட்டிற்கு வந்தார். அப்போது வீடு திறந்து கிடந்தது. இதை யடுத்து உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் உள்ள அறையில் விக்னேஷ் தூக்கில் தொங்கி கொண்டி ருந்தார்.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் கதறி அழுதார். மேலும், அங்கு தூங்கி கொண்டிருந்த 17 வயது சிறுவனை எழுப்பி, மகனை மீட்டு 108 ஆம்பு லன்சுக்கு தகவல் தெரிவித்த னர்.அவர்கள் விரைந்து வந்து, பார்த்த போது, விக்னேஷ் உயிரிழந்து விட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து கோட்டூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும், சப்-இன்ஸ்ெபக்டர் ரவி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்குப்ப திவு செய்து, வாலிபர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரிக்க தொடங்கினர். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் வீட்டில் ஏதாவது கடிதம் எழுதி வைத்துள்ளாரா என்பதை அறிய வீடு முழுவதும் சோதனை மேற்கொண்ட னர். ஆனால் எதுவும் சிக்கவில்லை.

    தொடர்ந்து அவருடன் இருந்த 17 வயது சிறுவனிடம் விசாரணை நடத்தி விட்டு, அவரது செல்போனை வாங்கி பார்த்தனர்.

    அப்போது விக்னேஷ், சிறுவனின் செல்போனில் தனது இன்ஸ்டாகிராம் ஐ.டி.யை திறந்து, அதில் குறுஞ்செய்தி அனுப்பியதை கண்டு பிடித்தனர்.

    அதில், என்னுடைய சாவுக்கு நீதான் காரணம். என்னுடைய அம்மாவை தனி வீட்டுக்கு போக வெச்சுட்டில்ல. சத்தியமா சொல்றேன் என் சாபம், என்னுடைய அம்மா சாபம் உன்னை சும்மா விடாது என கூறப்பட்டிருந்தது.இதையடுத்து போலீசார் அந்த தகவலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், விக்னேஷ் கடந்த 5 வருடங்களாக உறவுக்கார பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

    ஆனால் அந்த பெண் அவரது காதலை ஏற்க வில்லை. கடந்த 3 மாதங்க ளாக விக்னேஷ், தனது காதலை ஏற்குமாறு அந்த பெண்ணிடம் கூறி வந் துள்ளார். ஆனாலும் அவர் ஏற்க மறுத்து விட்டார். இதனால் விக்னேஷ் மன உளைச்சலில் இருந்ததும், அந்த விரக்தியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரது தாயார் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 27-ந் தேதி அவருக்கு மீண்டும் உடல்நிலை குறைவு ஏற்பட்டது.
    • ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    திருப்பூர் அருகே ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர் கருப்பன் (வயது72). இவர் காங்கேயம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த போக்சோ வழக்கில் கைதாகி கடந்த 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் கைதியாக அடைக்கப்பட்டு இருந்தார்.

    ஜெயிலில் இருந்த அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவர் சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 27-ந் தேதி அவருக்கு மீண்டும் உடல்நிலை குறைவு ஏற்பட்டது.

    அப்போது திடீரென ஜெயிலில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த சக கைதிகள் இது குறித்து ஜெயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அதிகாரிகள் விரைந்து சென்று அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறை கைதிகளுக்கான வார்டில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெற்றோர் சம்பவம் குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • போலீசார் சிறுமிக்கு அறிவுரை கூறி அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் 6-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    நேற்று வீட்டில் இருந்த சிறுமி, அருகே உள்ள கடைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    இதையடுத்து அவரது பெற்றோர் கடைக்கு சென்று விசாரித்த போது, அவர் வரவில்லை என தெரிவித்தார். இதையடுத்து பெற்றோர் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் வீடுகளில் தேடி பார்த்தனர்.

    ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. உடனடியாக சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் சிறுமி மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமி, அதே பகுதியை சேர்ந்த பெயிண்டரான பிரதீபன்(25) என்பவருடன் சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் எங்கு சென்றனர் என விசாரித்தபோது, அவர்கள் கரூரில் இருப்பது தெரிய வரவே போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்கு பிரதீபன், சிறுமியை திருமணம் செய்து, குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுமி மற்றும் அவரை திருமணம் செய்த பிரதீபனை பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    அங்கு வைத்து விசாரணை நடத்தி விட்டு, அவர்களை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் சிறுமியின் பெற்றோரை வரவழைத்து, சிறுமிக்கு அறிவுரை கூறி அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த பிரதீபனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சிறுமி இதே வாலிபருடன் மாயமானது, போலீசார் அவர்களை கண்டு பிடித்து சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்து, வாலிபரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்ததும், அவர் நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

    • திருமணமான 21 நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது அவரது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • ரமணி இறந்தது குறித்து, அவரது கணவர் சஞ்சய் மற்றும் ரமணியின் தந்தை கருப்புசாமி, சஞ்சயின் தாய், தந்தை ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

    வடவள்ளி:

    கோவை மத்வராயபுரத்தை சேர்ந்தவர் சஞ்சய் (22). இவரும் செல்வபுரத்தை சேர்ந்த ரமணி (20) என்பவரும் காதலித்து வந்தனர்.

    வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் காதலர்கள் கடந்த 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி வேளாங்கண்ணியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகினர்.

    இதையடுத்து போலீசார் 2 வீட்டு பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ரமணி காதல் கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்தால் அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை வீட்டில் இருந்த ரமணி, தனது கணவரிடம் தலைவலிப்பதாகவும், சிறிது நேரம் தூங்கி விட்டு வருகிறேன் என தெரிவித்து விட்டு அறைக்கு சென்றுள்ளார்.

    இரவு சாப்பிடுவதற்காக சஞ்சய் ரமணியை அழைக்க சென்றபோது, அவர் மூச்சு பேச்சின்றி இருந்தார். அதிர்ச்சியான சஞ்சய் மனைவியை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆலாந்துறை போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே திருமணமான 21 நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது அவரது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டு, கழுத்தில் காயங்கள் இருப்பதால், ரமணியின் சாவில் மர்மம் இருக்கிறது.

    இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதனை தொடர்ந்து உறவினர்கள் உடலை வாங்க சம்மதம் தெரிவித்தனர். அதன் பின்னர் ரமணியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படது.

    திருமணமான 21 நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்ததால் இதுகுறித்து கோவை தெற்கு ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் இன்று ஆலாந்துறை போலீஸ் நிலையத்தில் பேரூர் டி.எஸ்.பி ராஜபாண்டி இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ரமணி இறந்தது குறித்து, அவரது கணவர் சஞ்சய் மற்றும் ரமணியின் தந்தை கருப்புசாமி, சஞ்சயின் தாய், தந்தை ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

    அப்போது அவர்களிடம் ரமணி எப்படி இறந்தார். அதற்கான காரணம் என்ன என்பன உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டார்.

    ரமணியின் இறப்பில் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. முதலில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்தனர்.

    ஆனால் அவரது கழுத்தில் சிறிது அடி ஆழத்திற்கு பலமான காயமும், கையிலும் தாக்கியதற்கான காயங்கள் உள்ளது.

    இதனால் அவர் தற்கொலை தான் செய்து கொண்டாரா என்பது தெரியவில்லை. மேலும் கழுத்து, கைகளில் எப்படி காயம் ஏற்பட்டது என்பதும் புரியாத புதிராக உள்ளது.

    இப்படி புதுப்பெண் சாவில் பல்வேறு மர்மங்கள் நீடித்து வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் இந்த மர்மங்களுக்கு எல்லாம் விடை கிடைக்கும். அதில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டரா அல்லது வேறு ஏதாவது நடந்துள்ளதா? என்பது தெரியவரும்.

    • திரைப்பட விழாவின் இறுதி நாளின் போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ஈரானிய நடிகை மஹ்லாக ஜபேரி.
    • கடந்த ஆண்டு நடந்த திரைப்பட விழா ஒன்றில் உக்ரேனிய கொடியை உடலில் வரைந்து கொண்டு ரஷ்யாவிற்கு எதிர்ப்பை பதிவு செய்தார்.

    கேன்ஸ் திரைப்பட விழாவின் இறுதி நாளின் போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ஈரானிய நடிகை மஹ்லாக ஜபேரி. கடந்த ஆண்டு நடந்த திரைப்பட விழா ஒன்றில் உக்ரேனிய கொடியை உடலில் வரைந்து கொண்டு ரஷ்யாவிற்கு எதிர்ப்பை பதிவு செய்தார். அதே போல இந்த ஆண்டு நடந்த கேன்ஸ் திரைப்படவிழாவில் கலந்து கொண்ட மஹ்லாக ஜபேரி அணிந்திருந்த கருப்பு உடையில் கீழே மரண தண்டனையை நிறுத்து என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது.


    மஹ்லாக ஜபேரி

    அவருடைய உடையைப் பார்த்த ஊடகத்தினர் பரபரப்பானார்கள். சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த அவர் தனது சமூக வலைதளப் பக்கத்திலும் இந்த வீடியோவை பதிவிட்டிருக்கிறார். அதில் ஈரானிய மக்களுக்கு இதனை அர்ப்பணிக்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். இதனால் ஈரானில் நடக்கும் மரண தண்டனைகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    ×