என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • நொய்யல் ஆற்றில் தண்ணீர் இல்லாததால் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட ஷவரில் நீராடி சென்றனர்
    • 2 அமாவாசை வருவதாலும் 2-வது அமாவாசை தான் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாலும் இன்று பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட குறைவாகவே இருந்தது.

    கோவை,

    இன்று அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் பிறந்துள்ளது. இந்த வருட ஆடி மாதத்தில் 2 ஆடி அமாவாசை வருகிறது. இன்று மற்றும் அடுத்த மாதம் 16-ந் தேதி ஆடி அமாவாசை வருகிறது.

    ஆடி அமாவாசையான இன்று தினம் தமிழகம் முழுவதும் பல இடங்களிலும் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர். கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே, நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள தர்ப்பண மண்டபத்திலும் இன்று காலை முதலே கோவை மட்டுமன்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், நீலகிரி மற்றும் கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்தனர். அவர்கள் நேராக நொய்யல் படித்துறையில் உள்ள தர்ப்பண மண்டபத்திற்கு சென்றனர்.

    அங்கு தங்கள் முன்னோர்களின் பெயரை சொல்லி திதி கொடுத்தனர். தொடர்ந்து எள் உருண்டை, பச்சரி சாதம் உள்ளிட்டவற்றை படைத்து, அவர்களை நினைத்து மனம் உருகி வழிபட்டனர்.

    மேலும் அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை படைத்து, தீபாராதனை செய்து, முன்னோர்களை வழிபட்டனர். பின்னர் எள் உருண்டை மற்றும் பச்சரி சாதத்தை காகங்களுக்கு வைத்தனர். காகங்கள் வந்து சாப்பிட்டால் அது தங்கள் முன்னோர்களே வந்து சாப்பிட்டதாக பக்தர்கள் நினைப்பது ஐதீகம்.

    திதி கொடுக்க வரும் பக்தர்கள் பேரூர் நொய்யல் ஆற்றில் நீராடுவது வழக்கம். ஆனால் தற்போது ஆறு வறண்டு காட்சியளிக்கிறது. இதன் காரணமாக கோவில் நிர்வாகம் பேரூர் படித்துறையில் பிரத்யேகமாக ஷவர் அமைத்திருந்தது.

    இன்று திதி கொடுக்க வந்த பக்தர்கள் ஷவரில் குளித்து விட்டு சென்றனர். மேலும் ஆத்து விநாயகரை வணங்கி விட்டு, அங்கு நிற்கும் மாடுகளுக்கு அகத்திக்கீரையும் வாங்கி கொடுத்தனர். தொடர்ந்து பக்தர்கள் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று, பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மனை மனம் உருகி தரிசனம் செய்தனர். பின்னர் சிறிது நேரம் அங்கு இருந்து விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.

    வழக்கமாக ஆடி மாதத்தில் வரும் அமாவாசையில் பேரூர் படித்துறையில் பக்தர்கள் நிற்க முடியாத அளவுக்கு கூட்டம் அலைமோதும். இந்த வருடம் 2 அமாவாசை வருவதாலும் 2-வது அமாவாசை தான் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாலும் இன்று பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட குறைவாகவே இருந்தது.

    பக்தர்கள் வந்து திதி கொடுப்பதும், போவதுமாக இருந்தனர். இதனால் அங்கு எந்தவித போக்குவரத்து பாதிப்பும் ஏற்படவில்லை.

    கோவில் நிர்வாகம் கூட்டம் வந்தால் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இருந்தது.

    • ரெயில் நிலையத்தில் கட்டப்பட உள்ள முகப்பு தோற்றம் கேரள கட்டிடக்கலையை பிரதிபலிப்பதாக குற்றச்சாட்டியுள்ளனர்
    • பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் மறு சீரமைத்தல் பணிக்கு ரூ.6.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    பொள்ளாச்சி, 

    பொள்ளாச்சி ரெயில் நிலையம் கடந்த 1915-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் கடந்த 2009-ம் ஆண்டு மீட்டர் கேஜ் ரெயில் பாதை, அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டது. பணிகள் நிறைவடைந்து 2015-ம் ஆண்டு முதல் ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரெயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக, ரெயில் நிலைய வளாகத்தில் பழைய கட்டிடங்கள் அகற்றப்பட்டு, மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்தநிலையில் ரெயில் நிலையத்தில் கட்டப்பட உள்ள முகப்பு தோற்றம் கேரள கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் விதத்தில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து பொள்ளாச்சி ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கூறியதாவது:-

    அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி ரெயில் நிலையத்தை மேம்படுத்தும் பணியில் ரெயில் நிலையக் கட்டிடத்தின் மாதிரி வரைபடம் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த வரைபடம், கேரள கட்டிடக்கலையை பிரதிபலிப்பதாக உள்ளது. இதேபோன்று கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் சொர்ணூர் ரெயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து படத்துடன் டிவிட்டரில் தெற்கு ரெயில்வே அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினோம், அதற்கு, கேரள கட்டிடக்கலையை போன்று கட்டவில்லை என அவர்கள் பதில் அளித்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து சொர்ணூர் ரெயில் நிலையத்தின் மாதிரி படத்துடன் மீண்டும் புகார் அனுப்பியுள்ளோம், பொள்ளாச்சியின் பாரம்பரிய கலாச்சாரத்தை குறிக்கும் மாசாணியம்மன் கோவில், சூலக்கல் மாரியம்மன் கோவில், பொள்ளாச்சி சுப்பிரமணியசாமி கோவில் ஆகிய கோவில்களின் ஏதாவது ஒரு கோவில் கோபுரத்தை போன்று பொள்ளச்சி ரெயில் நிலையத்தின் முகப்புக்கட்டிடத்தை வடிவமைக்க வேண்டும் என புகைப்படங்களுடன் கோரிக்கை வைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    தேர்ந்தெடுக்கப்பட்ட ரெயில்வே சந்திப்பு அல்லது ரெயில் நிலையங்களை மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பயணிகளுக்கான இருக்கைகள், காத்திருப்பு அறைகள், கழிப்பறை வசதிகள், மேற்கூரைகள், சுத்தமான குடிநீர் விநியோகம், குளிரூட்டப்பட்ட பயணிகள் காத்திருப்பு அறை, ரெயில் வருகை மற்றும் புறப்பாடு குறித்த டிஜிட்டல் திரைகள் உள்ளிட்டவை மேம்படுத்தப்படுகின்றன. பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் மறுசீரமைத்தல் பணிக்கு ரூ.6.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, ரெயில் நிலைய நடைமேடை மேற்கூரைகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஜாலிக்காக குடிப்பவர்களை குடிகாரர்கள் என கூறுவதில் தவறில்லை.
    • ஒழுங்கான சீர்திருத்தம் என்பது யாரையும் பாதிக்காத வகையில் செய்யப்படும்.

    கோவை:

    கோவை ஒண்டிப்புதூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

    விழாவுக்கு அமைச்சர் முத்துசாமி தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். இதில் ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் பள்ளி மற்றும் பெண்கள் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

    விழாவில் பங்கேற்ற அமைச்சர் முத்துசாமியை மாணவ, மாணவிகள், சைக்கிளுடன் வரிசையாக நின்று கொண்டு சைக்கிள் பெல் அடித்து உற்சாகமாக வரவேற்றனர்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் அரசின் சார்பில் சிறப்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ.260.57 கோடி மதிப்பில் 3,432 இடங்களில் பணிகள் நடக்க உள்ளது.

    கோவை மாவட்டம் முழுவதும் மொத்தம் 15 ஆயிரத்து 270 வழங்கப்பட இருக்கிறது. தற்போது வரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சைக்கிள் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சைக்கிள்கள் குறித்த நேரத்திற்குள் வழங்கப்படும்.

    சைக்கிள் வழங்கும்போது, மாணவர்களிடம் சைக்கிள் ஓட்ட தெரியுமா? எவ்வளவு தூரத்தில் இருந்து வருகிறார்கள் என்பதை மாணவர்களிடம் இருந்து ஆசிரியர்கள் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

    சைக்கிள் ஓட்ட தெரியவில்லை என்றால் அவர்களுக்கு சைக்கிள் ஓட்டி பழகுவதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்து கொடுக்க வேண்டும்.

    அமலாக்கத்துறை தமிழகத்தில் ஏற்கனவே சோதனை நடத்தி இருக்கிறது. தற்போது 2-வது முறையாக அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடக்கிறது. இந்த சோதனையானது திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது.

    இந்த சோதனையில் இருந்து அமைச்சர் பொன்முடி மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த அமலாக்கத்துறையின் சோதனையின் மூலம் மக்களின் கவனத்தை திசை திருப்ப பார்க்கிறார்கள்.

    இதையெல்லாம் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. எங்களுடைய மக்களுக்கான பணி வழக்கம் போல நடைபெறும்.

    டாஸ்மாக் விவகாரத்தை பொறுத்தவரை முதலில் தொழிலாளர்களுக்கு உள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக பேசி அதற்கு தீர்வு காண இருக்கிறோம்.

    ஏனென்றால் இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டு விட்டால் மற்ற அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்து விட முடியும்.

    டெட்ரா பேக் திட்டம், 90 எம்.எல் திட்டம் இன்னும் ஆய்வில் தான் இருக்கின்றன. அந்த திட்டங்கள் வந்தாலும் வரலாம். வராமலும் போகலாம்.

    இந்த அரசை பொறுத்தவரை 7 மணிக்கு டாஸ்மாக் கடையை திறக்கும் எண்ணம் இல்லவே இல்லை. குடிப்பவர்களை குடிகாரர்கள் என கூறுவதை விட்டு, அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குங்கள்.

    ஜாலிக்காக குடிப்பவர்களை குடிகாரர்கள் என கூறுவதில் தவறில்லை. ஆனால் கடுமையான பணிச்சூழலில் குடிப்பவர்களை குடிகாரர்கள் என கூற வேண்டாம்.

    புதிதாக குடிக்க வருபவர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இதுபோல வயதானவர்கள், உடலுக்கு மோசமான நிலையில் இருப்பவர்கள் குடிப்பதை தடுக்கவும் அவர்களுக்கும் கவுன்சிலிங் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    டாஸ்மாக்கில் மேற்கொள்ளப்படும். ஒழுங்கான சீர்திருத்தம் என்பது யாரையும் பாதிக்காத வகையில் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேலைநிறுத்தம் 2-வது நாளாக தொடருகிறது
    • தினமும் ரூ.90 கோடி வர்த்தகம் பாதிப்பு மற்றும் 10 லட்சம் பேருக்கு வேலையிழப்பு

    கருமத்தம்பட்டி,

    தமிழகத்தில் 1000-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. அங்கு பஞ்சில் இருந்து நூல் எடுத்து ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் பஞ்சு இறக்குமதி வரி, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் நுாற்பா லைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே துணி களை ஏற்றுமதி செய்வதிலும் சிக்கல் நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இயங்கி வரும் நுாற்பாலைகள் பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும், மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், வங்கி கடன் வட்டி விகி தங்களை 7.5 சதவீதமாக குறைக்க வேண்டும், துணி வகைகள் ஏற்றுமதியை மத்திய அரசு ஊக்குவிக்க வேண்டும், அந்நிய துணிகள், நூல் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக நூற்பாலை சங்கங்கள் ஏற்கெனவே அறிவித்து இருந்தன. அதன்படி இந்த வேலை நிறுத்தம் நேற்று முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 2-வது நாளாக நீடித்து வருகிறது.

    தமிழகத்தில் 700-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உண்டு. அவற்றில் 500 ஆலைகள் கோவை மாவட்டத்தில் உள்ளன. அவை நேற்று முதல் காலவரையறையின்றி மூடப்பட்டு உள்ளன. இத னால் அங்கு நாளொன் றுக்கு 35 லட்சம் கிலோ நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே அங்கு தினமும் ரூ.90 கோடி வர்த்த கம் பாதிக்கப் பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் நூற்பாலை களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகி ன்றனர்.

    இந்த நிலையில் நூற் பாலை களின் வேலைநி றுத்தம் காரண மாக அவர்க ளுக்கும் வேலையிழப்பு ஏற்பட்டு உள்ளது.

    • வாலிபர் கண்டக்டர் அருணை தாக்கியதுடன், பஸ் டிரைவர் முருகானந்தத்தை சட்ைடயை பிடித்து இழுத்தார்.
    • பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி பஸ் நிலை யத்தில் இருந்து இருந்து ராவணபுரத்திற்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது.

    இந்த பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் முருகானந்தம் என்பவர் ஓட்டினார்.

    இந்த பஸ்சில் நடத்து னராக பொள்ளாச்சி தென்குமா ரபாளையம் அடுத்த பொன்னேகவுண்ட னூரை சேர்ந்த அருண் (வயது35) என்பவர் இருந் தார்.

    பஸ் சந்திராபுரம் பகுதி யில் உள்ள பாலத்தின் அருகே சென்று கொண்டி ருந்தது. அப்போது அங்கு வந்த வாலிபர் திடீரென பஸ்சை வழி மறித்து நிறுத்து மாறு கூறினார்.

    இதையடுத்து பஸ்சை டிரைவர் நிறுத்தினார். பஸ்சில் ஏறு என்று சொன்னதற்கு அந்த நபர் ஏறாமல் தொடர்ந்து தகரா றில் ஈடுபட்டார்.

    இதையடுத்து டிரைவர் அங்கிருந்து பஸ்சை இயக்கி நகருவதற்கு முற்பட்டார். ஆனால் அந்த வாலிபர் பஸ்சை எடுக்கவிடாமல் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தகராறு செய்து கொண்டே இருந் தார்.

    மேலும் கண்டக்டர் அருணை தாக்கியதுடன், பஸ் டிரைவர் முருகா னந்தத்தை சட்ைடயை பிடித்து இழுத்தார். இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வாலிபரை பிடித்தனர். அப்போது அவர் குடிபோ தையில் இருந்தார்.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில், பஸ் டிரைவர், கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்டது சந்திராபுரத்தை சேர்ந்த கார்வேந்தன்(25) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து அழைத்து சென்றனர். அதன்பின்னரே பஸ் அங்கி ருந்து புறப்பட்டு சென்றது. போலீசார் வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆத்து பிள்ளையார் கோவிலில் வைத்து பெருமாளும், வர்ஷாவும் திருமணம் செய்து கொண்டனர்.
    • இன்ஸ்பெக்டர் வைரம், 2 வீட்டு பெற்றோரையும் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்தார்.

    குனியமுத்தூர்,

    கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் பெருமாள் (வயது 25). இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் தினமும் மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு உடற்பயிற்சி நிலையத்திற்கு உடற்பயிற்சி செய்ய செல்வது வழக்கம்.

    அப்போது கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, பெருமாளுக்கு உடற்பயிற்சி நிலையத்திற்கு வரும் மலுமிச்சம்பட்டியை சேர்ந்த வர்ஷா (19) என்ற இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

    அடிக்கடி பார்த்து கொண்டதால் 2 பேரும் நட்பாக பேசி வந்தனர். நட்பு காதலாக மாறியது. 2 பேரும் பரஸ்பரம் தங்களது செல்போன் எண்ணை மாற்றி கொண்டு செல்போனிலும், அடிக்கடி நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்தனர்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், தங்களது காதலை பெற்றோர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால் நாம் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளலாம் என காதல் ஜோடி முடிவு செய்தது.

    அதன்படி நேற்று வர்ஷா தனது தாயிடம் வெளியில் செல்வதாக கூறி விட்டு சென்றார். அவர் நேராக தனது காதலன் பெருமாளை சந்தித்து அவருடன் பேரூருக்கு சென்றார்.

    அங்குள்ள ஆத்து பிள்ளையார் கோவிலில் வைத்து பெருமாளும், வர்ஷாவும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தகவல் அறிந்தால் தங்கள் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் 2 பேரும் நேராக மதுக்கரை போலீஸ் நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் வைரம், 2 வீட்டு பெற்றோரையும் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்தார். இதை கேட்டதும் பதறி போன 2 வீட்டு பெற்றோரும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

    அங்கு தங்கள் பிள்ளைகள் மாலையும் கழுத்துமாக நிற்பதை பார்த்ததும் 2 வீட்டு பெற்றோருமே அதிர்ச்சியில் உறைந்து போயினர். இதையடுத்து பெண்ணின் பெற்றோர் பெண்ணிடம், வாலிபரின் பெற்றோர் அவரிடம் பேசி பார்த்தனர். ஆனால் 2 பேருமே நாங்கள் மேஜர் ஒன்றாகவே வாழ்வோம் என தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் 2 வீட்டு பெற்றோரிடம் எழுதி வாங்கி கொண்டு, பெண்ணையும், வாலிபரையும், வாலிபரின் பெற்றோருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • 44 வயது வாலிபருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது.
    • போலீசார் இளம்பெண்ணுக்கு அறிவுரை கூறி அவரது சகோதரியுடன் அனுப்பி வைத்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மேட்டுப்பா ளையம் பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி தனது கணவருடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார்.

    இளம்பெண் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அப்போது அங்கு வேலை பார்த்து வரும் 44 வயது வாலிபருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது.

    2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். மேலும் அந்த வாலிபர் இளம்பெண்ணின் வீட்டிற்கும் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதனால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்க ளுக்கு சந்தேகம் ஏற்பட்டு, இளம்பெண்ணின் கணவரிடம் தெரிவித்தனர்.

    முதலில் தனது மனைவி மீது இருந்த நம்பிக்கையால் அவர் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் மனைவியின் நடவடிக்கையில் மாற்றம் தெரியவே அவரை கண்காணித்தார். அப்போது மனைவி, வாலிபருடன் பேசுவதை அறிந்து கொண்டார்.

    இதையடுத்து 2 பேரையும் கையும், களவுமாக பிடிக்க இளம்பெண்ணின் கணவர் முடிவு செய்தார். நேற்று இரவு வேலைக்கு சென்று விட்டு இளம்பெண்ணின் கணவர் வீட்டிற்கு வந்தார்.

    .

    பின்னர் சிறிது நேரத்தில் தனக்கு வேலை இருக்கிறது என கூறி விட்டு இளம் பெண்ணின் கணவர் வெளியில் சென்று விட்டார். இந்த நிலையில் கணவர் வெளியில் சென்றதும், இளம்பெண், தன்னுடன் வேலை பார்க்கும் வாலிபரை வீட்டிற்கு அழைத்தார். அவரும், இங்கு வந்தார். பின்னர் 2 பேரும் வீட்டிற் குள் தனிமையில் இருந்தனர். இதனையறிந்த இளம் பெண்ணின் கணவர், தனது உறவினர்களுடன் வீட்டிற்கு வந்து, இளம்பெண்ணையும், அவரது ஆண் நண்பரையும் கையும், களவுமாக பிடித்தனர்.

    தொடர்ந்து 2 பேரையும் அழைத்து கொண்டு அன்னூர் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு போலீசார் 2 தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் இளம்பெண்ணுக்கு அறிவுரை கூறி அவரது சகோதரியுடன் அனுப்பி வைத்தனர்.அந்த வாலிபரை அழைத்து எச்சரித்து, அவரது மனைவியுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இன்று மீண்டும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சம்பவம் குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    வடவள்ளி,

    கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரத்தில் இருந்து கோவை டவுன்ஹால் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    இந்த பஸ்சை தேனிமாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த முருகவேல் என்பவர் ஓட்டி வந்தார். வேடப்பட்டி பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிரே கோவையில் இருந்து மாதம்பட்டி நோக்கி ஒரு கார் வந்தது. காரை மாதம்பட்டி அடுத்த தெனமநல்லூரை சேர்ந்த கோபி சங்கர் என்பவர் ஓட்டி வந்தார்.

    வேடப்பட்டி அருகே பஸ் வந்தபோது, எதிரே வந்த காரும், அரசு பஸ்சும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.

    பஸ் மீது மோதிய வேகத்தில் கார் சில அடி தூரம் தூக்கி எறியப்பட்டது. இதில் கார் முழுவதும் சுக்குநூறாக நொறுங்கியது.

    மேலும் அதில் இருந்த கோபி சங்கர் என்பவர் படுகாயங்களுடன் ரத்தம் வெளியேறிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    இதற்கிடையே காரின் மீது பஸ் மோதியதும், டிரைவர் பஸ்சை நிறுத்த முயற்சித்தார். ஆனால் பஸ் எதிர்பாராத விதமாக அந்த வழியாக சென்று கொண்டிருந்த பழ வியாபாரி சுப்பிரமணி என்பவர் மீது ேமாதியது. இதில் அவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்று காருக்குள் சிக்கி உயிருக்கு போராடிய கோபி சங்கர் மற்றும் பஸ் மோதியதில் காயம் அடைந்த சுப்பிரமணி ஆகியோரை மீட்டனர்.

    பின்னர் 2 பேரையும் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான பஸ், காரை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் காட்சி அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது பார்ப்பவர்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    • கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமாவாசையை முன்னிட்டு பேரூருக்கு திரண்டு வருவர்.
    • நொய்யல் ஆற்றுக்கு சித்திரைச்சாவடி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    பேரூர்,

    கோவை மாவட்டம் பேரூரில் உள்ள பட்டீஸ்வரர் கோவில் அருகே, நொய்யல் ஆற்றங்கரையில் தர்ப்பண மண்டபம் உள்ளது. இது காசிக்கு அடுத்தபடியாக மிகவும் புகழ்பெற்றது.

    பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் தர்ப்பணம் கொடுத்து விட்டு, நீராடியபிறகு பட்டீஸ்வரரை வழிபட்டால் முன்னோரின் ஆன்மா சாந்தி அடையும் என்று ஐதீகம்.

    எனவே தமிழகம் மட்டு மின்றி கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் பேரூர் வந்து தர்ப்பணம் கொடுத்து விட்டு செல்கிறார்கள்.

    இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை தினங்கள் வருகிறது. நாளையும் (17-ந் தேதி), ஆகஸ்டு 16-ந் தேதியும் வருகிறது. ஆடி அமாவாசையை முன்னிட்டு பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தர்ப்பண மண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பேரூர் நொய்யல் ஆற்றில் தற்போது நீர்வரத்து இல்லை. எனவே ஆற்றங்கரைகள் வறண்டு காட்சி அளிக்கின்றன.

    ஆடி அமாவாசை நாளில் முன்னோருக்கு திதி கொடுக்கும் பக்தர்கள், நீராடியபிறகு பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.

    இதனை கருத்தில் கொண்டு பேரூர் தர்ப்பண மண்டபம் அருகிலுள்ள ஆற்றங்கரையோரத்தில், பக்தர்களின் வசதிக்காக பைப்லைன் அமைத்து பிரத்யேக ஷவர் வசதி ஏற்படுத்தி தருவது என்று பேரூர் பேரூராட்சி நிர்வாகம் முடிவுசெய்து உள்ளது.

    இதற்காக அங்கு பைப்லைன்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதன்மூலம் பேரூருக்கு தர்ப்பணம் கொடுக்க வரும் பக்தர்கள், நொய்யல் ஆற்றங்கரையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு உள்ள ஷவரில் ஆனந்தமாக நீராடிவிட்டு பட்டீஸ்வரரை வழிபட்டு திரும்ப இயலும்.

    பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் தர்ப்பணம் கொடுக்க வரும் பக்தர்களின் வசதிக்காக பிரத்ேயக ஷவர் வசதி ஏற்படுத்தி தரப்பட்டு இருப்பது, பக்தர்களிடம் வரவேற்பை பெற்று உள்ளது. மேலும் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலிலும் ஆடி அமாவாசை தினங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. மேலும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

    இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமாவாசையை முன்னிட்டு பேரூருக்கு திரண்டு வருவர். எனவே பக்தர்களின் வசதிக்காக காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும்.

    நொய்யல் ஆற்றுக்கு சித்திரைச்சாவடி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. எனவே பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு அங்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும். அப்படி செய்தால் ஆடி 18 அன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் நொய்யல் ஆற்றில் நீராடி இறைவனை மகிழ்ச்சியாக வழிபட இயலும்.

    எனவே மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறை நிர்வாகமும் ஒருங்கிணைந்து நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறந்து விட ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • முதியவர் பாலத்தில் இருந்து யாரும் எதிர்பாராத வேளையில் திடீரென ஆற்றில் குதித்துள்ளார்.
    • மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஆலம்பாளையம் தெக்கலூர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கன் (70).இவருக்கு பூவா(70) என்ற மனைவியும்,தங்கமணி என்ற மகளும் உள்ளனர். தங்கமணிக்கு திருமணமாகி கணவருடன் தந்தை வீட்டிலேயே வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் அவரது வீட்டில் குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ரங்கன் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்துள்ளார்.பின்னர் நெல்லித்துறை சாலையில் உள்ள பவானி ஆற்றின் பாலத்தில் இருந்து யாரும் எதிர்பாராத வேளையில் திடீரென ஆற்றில் குதித்துள்ளார்.

    அப்போது,அப்பகுதியில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான லைப் கார்ட்ஸ் குழுவினர் உடனடியாக ஆற்றில் குதித்து பரிசல் மூலமாக அவரை பத்திரமாக மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில் குடும்ப பிரச்சினை காரணமாக ரங்கன் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை அங்கு பணியில் இருந்த லைப் கார்ட்ஸ் குழுவினர் பத்திரமாக மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவர் உடல் நலத்துடன் உள்ளார். இதுகுறித்து அவரது மகள் தங்கமணிக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது.

    தற்கொலைக்கு முயன்ற முதியவரை பத்திரமாக மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த லைப் கார்ட்ஸ் குழுவினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    • டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    • கருத்து கூறியவர்கள், அதை வெளியிட்ட சமூக ஊடகங்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டனர்.

    கோவை:

    கோவை சரக டி.ஐ.ஜியாக வேலை பார்த்தவர் விஜயகுமார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை ரேஸ்கோர்சில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் போலீஸ் துறையில் உள்ளவர்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

    டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள், அவரது வீட்டில் இருந்தவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

    தொடர்ந்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே டி.ஐ.ஜி. தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் சிலர் தங்களது கருத்துக்களையும் பதிவு செய்தனர். சிலர் சமூக ஊடகங்களில் தங்களது கருத்துக்களையும் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில், போலீசார் டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர்கள், கருத்து கூறியவர்கள், அதை வெளியிட்ட சமூக ஊடகங்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டனர்.

    அதன்படி சில நாட்களுக்கு முன்பு, டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக கருத்து தெரிவித்தவர்கள், சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள், சமூக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தவர்கள் என 8 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் இவர்கள் அனைவரும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கோவை போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

    அப்படி அவர்கள் ஆஜராகும்பட்சத்தில் அவர்களிடம் டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் எந்தவித ஆதாரத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது. யார் அதனை தெரிவித்தது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    • மார்க்கெட்டுகளில் விவசாயிகளுக்கு ஏலமுறையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
    • தியாகி குமரன் மார்க்கெட்டில் தினந்தோறும் சராசரியாக 110 சரக்கு லாரிகள் காய்கறிகளுடன் வருவது வழக்கம்.

    கோவை:

    தமிழகத்தில் தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இதனால் காய்கறிகளின் விலையேற்றத்தை சமாளிக்க முடியாமல் இல்லத்தரசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இன்னொருபுறம் ஓட்டல்களில் தக்காளி சட்னி, வெங்காய பொரியல் ஆகியவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது சாப்பாட்டு பிரியர்களை ஏமாற்றம் அடைய செய்து உள்ளது.

    கோவையில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டுமொத்த காய்கறி சந்தைகள் இயங்கி வருகின்றன. இங்கு உள்ளூர் விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

    இதுதவிர வெளி மாவட்டங்களில் இருந்தும் சரக்கு லாரிகள் மூலம் காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. கோவை மார்க்கெட்டுகளில் விவசாயிகளுக்கு ஏலமுறையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் அங்கு விளையும் காய்கறிகளை அறுவடை செய்வதில் விவசாயிகளுக்கு சிரமநிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்கள் மார்க்கெட்டுக்கு விளைபொருட்களை கொண்டு வரவில்லை. இன்னொருபுறம் வெளி மாவடடங்களில் இருந்தும் சரக்கு காய்கறி லாரிகளின் வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.

    கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் தினந்தோறும் சராசரியாக 110 சரக்கு லாரிகள் காய்கறிகளுடன் வருவது வழக்கம். ஆனால் இங்கு தற்போது 40 லாரிகள் மட்டுமே வந்து செல்கின்றன.

    கோவை காய்கறி மார்க்கெட்களில் உள்ளூர் காய்கறி வரத்து குறைவு, வெளியூர் சரக்கு லாரிகளின் வருகை குறைவு ஆகியவை காரணமாக சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை கிடுகிடுவென அதிகரிக்க தொடங்கியது.

    கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை தக்காளி விலை கிலோ ரூ. 40 ஆக இருந்தது. ஆனால் தற்போது 120 ரூபாயாக உள்ளது. அதேபோல சின்ன வெங்காயத்தின் விலை முன்பு ரூ.40 என்ற அளவில் இருந்தது. ஆனால் இன்றைக்கு ரூ.120 ஆக உள்ளது.

    கோவை மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழையின் தாக்கம் பெரியஅளவில் இல்லை. எனவே விவசாயிகள் மீண்டும் சாகுபடி பணிகளை தொடங்கி விட்டனர். அதேபோல வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து சரக்கு லாரிகளில் காய்கறி வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    எனவே கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் விலை சிறிதுசிறிதாக குறைய தொடங்கி உள்ளது. தியாகி குமரன் காய்கறி மார்க்கெட்டில் நேற்று ஒருகிலோ சின்ன வெங்காயம் ரூ.170 ஆக இருந்தது. அதன் விலையில் தற்போது 50 ரூபாய் குறைந்து, ஒருகிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆனால் தக்காளி விலை மட்டும் குறைாமல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. காய்கறி மார்க்கெட்டுகளில் நேற்று வரை ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.110, ஆப்பிள் தக்காளி ரூ.140 என்ற அளவில் இருந்தது. ஆனால் இன்றைக்கு நாட்டு தக்காளியின் விலை ரூ.10 அதிகரித்து தற்போது ரூ.120க்கு விற்கப்பட்டு வருகிறது. ஆப்பிள் தக்காளியின் விலையில் மாற்றம் இல்லை.

    கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் சின்ன வெங்காயத்தின் விலை ஓரளவு குறைந்தபோதிலும், தக்காளியின் விலை அதிகரிப்பு பொதுமக்களை கவலைப்பட வைத்து உள்ளது.

    ×