என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • மழலையர் பிரிவு மாணவர்கள் விநாயகர் போல வேடமிட்டு அசத்தல்
    • களிமண்ணாலான விதை விநாயகரை செய்து விழிப்புணர்வு

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையம் அடுத்த புஜங்கனூர் விநாயக வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளி நிர்வாக அலுவலர் நிர்மலாதேவி தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் சர்லின் முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பட்டய கணக்கர் கோபிநாத் கலந்துகொண்டு பேசினார். மழலையர் பிரிவு மாணவ-மாணவியர்கள் விநாயகர் போல் வேடமிட்டு விழாவிற்கு அழகுசேர்த்தனர். பின்னர் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் களிமண்ணாலான விதை விநாயகரை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • பொதுப்பணிதுறையினர் ஆற்றின் நீர்வரத்தை கண்காணிக்க உத்தரவு
    • தடுப்புகள் அமைத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த அறிவுறுத்தல்

    மேட்டுப்பாளையம்,

    கோவை மேட்டுப்பா ளையம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு கோட்ட அளவில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக, அனைத்து துறை அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டம், வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெ ற்றது.

    கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் தலைமைதாங்கினார். தாசில்தார் வி. பி.சந்திரன் வரவேற்றார்.

    வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் பேசும்போது, விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது போலீசார் சாலையில் பாதுகாப்பு பணிகளை செய்ய வேண்டும், பவானி ஆற்றில் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக சிலைகளைக் கரைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், பொதுப்பணி துறையினர் பவானி ஆற்றின் நீர்வரத்தை கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.ஆலோசனை கூட்டத்தில் மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா, காரமடை நகராட்சி கமிஷனர் மனோகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நவநீதகிருஷ்ணன் (மேட்டுப்பாளையம்), ராஜசேகர் (காரமடை), சித்ரா (சிறுமுகை), மின்வாரிய உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர்கள் தினேசன், சுரேஷ்குமார்,

    நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் பிரசன்னா, சாலை ஆய்வாளர் ரமேஷ்குமார், சிறுமுகை பேரூராட்சி தலைமை எழுத்தர் சுந்தர்ராஜன், மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அதிகாரி சிவக்குமார், தீயணைப்பு நிலைய அதிகாரி பாலசுந்தரம்,

    வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ராமமூர்த்தி, மேட்டுப்பாளையம் வருவாய் ஆய்வாளர்கள் வெண்ணிலா, காரமடை ரேணுகாதேவி, மேட்டுப்பாளையம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் பாஸ்கரன், மகாராஜன், உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் நலிந்தோர் நலத்திட்ட தாசில்தார் ரங்கராஜன் நன்றி கூறினார்.

    • தாலியை எடுத்துக்கொடுத்து மணமக்களுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களை அண்ணாமலை வாழ்த்தினார்.
    • விழாவில் திருமணம் செய்துகொண்ட 73 ஜோடிகளுக்கும் 73 விதமான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

    கோவை:

    பிரதமர் மோடியின் 73-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

    இதை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா சார்பில் தாமரை திருமண விழா என்ற பெயரில் 73 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    கோவை போத்தனூர் செட்டிப்பாளையம் பகுதியில் நடந்த இந்த விழாவில் தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு 73 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். தாலியை எடுத்துக்கொடுத்து மணமக்களுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களை வாழ்த்தினார்.

    விழாவில் திருமணம் செய்துகொண்ட 73 ஜோடிகளுக்கும் 73 விதமான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. தலா ஒரு நாட்டு மாடு மற்றும் கிரைண்டர், மிக்சி, பீரோ, கட்டில், மெத்தை, குத்துவிளக்கு, பூ, பழம், காய்கறிகள், பாய், வீட்டு பாத்திரங்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன. அவற்றை புதுமண தம்பதிகளுக்கு அண்ணாமலை வழங்கினார்.

    • பல்வேறு மாவட்டங்களில் அடுத்த மாதம் அக்டோபர் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.
    • பண்ணை குட்டைகளில் மழைநீரை தேக்கி விவசாயத்துக்கு பயன்படுத்தலாம்.

    கோவை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை ஆகியவை மூலம் மாநிலஅளவில் நீர்நிலைகள் பெருகி விவசாயம் செழித்து வருகிறது.

    இதன் ஒருபகுதியாக கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனாலும் இது எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. எனவே 2 மாவட்டங்களிலும் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.

    இந்த நிலையில் கோவை, நீலகிரி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த மாதம் அக்டோபர் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இது டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவை, நீலகிரியில் ஏற்கெனவே தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் குறித்து கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் முன்னறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

    அதன்படி தமிழகத்தில் அரியலூர், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், சேலம், தஞ்சை, நீலகிரி, திருச்சி, திருவாரூர், தென்காசி, தூத்துக்குடி, திருப்பத்தூர், கன்னியாக்குமரி, காஞ்சிபுரம், தேனி, மதுரை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம், நெல்லை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் வடகிழக்குபருவமழை இயல்பானஅளவில் பெய்யும்.

    சென்னை, செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விருதுநகர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இயல்பைவிட குறைவான அளவில் மழை பெய்யும்.

    எனவே அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் வடகிழக்கு பருவமழை காலத்துக்கான குறுகிய-மத்திய கால பயிர் ரகங்களை தேர்வுசெய்து பயிரிட வேண்டும், பாசனவசதியுள்ள பகுதிகளில் மட்டும் நீண்டகால பயிர் ரகங்களை தேர்வு செய்யலாம்.

    மேலும் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் மழைநீரை சேமிக்கும் வகையில் குறுக்கும் நெடுக்குமாக 20 அடி இடைவெளியில் சிறுவரப்புகளை அமைக்கலாம்.

    பண்ணை குட்டைகளில் மழைநீரை தேக்கி விவசாயத்துக்கு பயன்படுத்தலாம். மானாவாரி சாகுபடியில் விதைகளை கடினப்படுத்தி விதைப்பு செய்ய வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட விதை நேர்த்தி முறைகளை பின்பற்றினால் வடகிழக்கு பருவமழை மூலம் விவசாயத்தை சிறப்பாக செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • குடியிருக்கும் இடத்தை சுற்றிலும் குப்பைக்கூளம் தேங்காமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.
    • சளி, காய்ச்சல் ஏற்பட்டால் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் பகுதியில் காய்ச்சல் பரவலை தடுக்க பொது மக்கள் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும் என நகர சபை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹரிபாபர்வீன் அஷ்ரப் அலி வெளியிட்டு உள்ள செய்திக்கு றிப்பில் கூறியி ருப்பதாவது:-

    தமிழகத்தில் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. பருவ மழை காரணமாக பவானி ஆற்றில் தண்ணீர் கலங்கலாக வருகிறது. பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடித்தால் தான் நோய்தொற்றை கட்டுப்படுத்த முடியும். அதே போல குடியிருக்கும் இடத்தை சுற்றிலும் குப்பைக்கூளம் தேங்காமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

    பழைய டயர்கள், காலி பாட்டில்கள், தேங்காய் சிரட்டைகள் ஆகியவற்றை சேர்த்து வைக்காமல் உடனடியாக அப்புறப்படுத்தி மழைநீர் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் வீட்டில் கொசுத் தொல்லையை ஒழிக்க முடியும்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சலில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும். சளி, காய்ச்சல் ஏற்பட்டால் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். அடிக்கடி கபசுர குடிநீர் குடிக்க வேண்டும்.

    காய்ச்சல்-சளி தொந்தரவுகள் அதிகம் இருந்தால் உடனடியாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உடனடியாக சென்று மருத்துவ பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். இதனால் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் நோய்த்தொற்று பரவாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கலந்து கொள்ளும் மாணவர்கள் கல்லூரியை தேர்வு செய்யும் முன் கலந்தாய்வு கட்டணத்தை செலுத்த தேவையில்லை
    • மாணவர் சேர்க்கைக்கான காலி இடங்கள் அவ்வப்போது புதுப்பிக்கபடும்.

    கோவை,

    கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான உடனடி மாணவர் சேர்க்கை வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ளது.

    உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் கலந்தாய்வுக் குரிய குறிப்பிட்ட தேதியில் கோவையில் உள்ள வேளாண்மை பல்கலைக் கழகத்துக்கு வர வேண்டும்.

    உடனடி மாணவர் சேர்க்கை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் இணைப்பு கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும். உறுப்பு கல்லூரிகளுக்கு பொருந்தாது. இதில் இடம் கிடைக்கப்பெற்ற மாணவர்களிடம் இருந்து மட்டுமே கலந்தாய்வு கட்டணம் பெறப்படும். பொது கலந்தாய்வில் இடம் கிடைக்கப் பெற்று தவறவிட்டவர்கள் மற்றும் இடம் கிடைத்து சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்கள் உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ளலாம்.

    பொது கலந்தாய்வில் இடம் கிடைக்கப் பெற்று, முன்னரே சேர்க்கை பெற்றவர்கள் அல்லது இடை நிறுத்தம் செய்து கொண்டவர்கள் உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ள முடியாது.

    கலந்து கொள்ளும் மாணவர்கள் கல்லூரியை தேர்வு செய்யும் முன் கலந்தாய்வு கட்டணத்தை செலுத்த தேவையில்லை. கலந்தாய்வில் இடம் கிடைக்க பெற்ற மாணவர்களில் எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் ரூ.1,500 மற்றும் இதர பிரிவினர் ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும். இணைப்பு கல்லூரிக ளுக்கான ஆண்டுக்கட்டணம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை இருக்கும். உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்து கொண்ட மாணவர்களின் வருகைப்பதிவேடு குறிக்கப்பட்டு, தரவரிசை நிர்ணயிக்கப்படும்.

    தரவரிசையின் அடிப்ப டையில் மாணவர்கள் கல்லூரி மற்றும் பட்டப் படிப்பை தேர்வு செய்ய அழைக்கப்படுவார்கள். வகுப்பு வாரியான இட ஒதுக்கீடு கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள் மற்றும் காலியிடங்களுக்கான அட்டவணை வருகிற 21-ந் தேி இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கைக்கான காலி இடங்கள் அவ்வப்போது புதுப்பிக்கபடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • 2-3 பஸ்கள் மாறி பயணம் செய்து தான் மருதமலை செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.
    • கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

    குனியமுத்தூர்,

    கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள மலுமிச்சம்பட்டி, ஈச்சனாரி, காந்திநகர், சுந்தராபுரம், குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மருதமலைக்கு பஸ்கள் இயங்கி வந்தன. அது மருதமலை செல்லும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது. எளிதாக பயணம் செய்து மருதமலை சென்று முருகனை தரிசித்து வந்தனர்.

    ஆனால் தற்போது சில ஆண்டுகளாக அந்த பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். மருதமலை பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று. தமிழகத்தில் உள்ள பல பகுதியில் இருந்தும் பக்தர்கள் மருதமலைக்கு செல்வது வழக்கம்.

    வெவ்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் கூட காந்திபுரம் அல்லது ரயில் நிலையத்திலிருந்து மருதமலைக்கு எளிதாக பஸ் ஏறி செல்கின்றனர். ஆனால் கோவையிலேயே பொள்ளாச்சி ரோட்டில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு மருதமலைக்கு செல்லும் அவல நிலை தற்போது உள்ளது.

    2-3 பஸ்கள் மாறி பயணம் செய்து தான் மருதமலை செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே பொள்ளாச்சி சாலையில் இருந்து மருதமலைக்கு மீண்டும் பஸ்கள் இயக்கப்பட்டால், இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    பொள்ளாச்சி ரோட்டில் இருந்து மருதமலைக்கும், திருச்சி சாலை சிங்காநல்லூருக்கும், மேட்டுப்பாளையம் ரோடு துடியலூருக்கும் நேரடி பஸ் வசதி கிடையாது. ஏற்கனவே 8 ஏ பேருந்து போத்தனூரில் இருந்து திருச்சி சாலை வழியாக சிங்காநல்லூர் மற்றும் இருகூர் பகுதிக்கு இயங்கி வந்தது.

    46-ம் நம்பர் பஸ் போத்தனூரில் இருந்து மருதமலைக்கு சென்று வந்தது. 4-ம் நம்பர் பஸ் கோவை பொள்ளாச்சி ரோடு குறிச்சி ஹவுசிங் யூனிட்டில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையத்திற்கு சென்று வந்தது. இவை அனைத்தும் தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.

    இத்தகைய வழித்தடங்களில் பேருந்து இல்லாத காரணத்தால் இந்த பகுதிக்கு செல்லும் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்த நிலையில் உள்ளனர். மேலும் அங்கு வசிக்கும் பயணிகள் 2-3 பஸ்கள் மாறி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    கோவை பொள்ளாச்சி ரோடு, குறிச்சி, சுந்தராபுரம் பகுதியில் ஏராளமான குடியிருப்பு பகுதிகள் உள்ளன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் அன்றாடம் வேலைக்கு செல்பவர்களும், கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

    எனவே போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை பொள்ளாச்சி ரோட்டில் இருந்து மேற்படி வழித்த டங்களில் பேருந்துகளை இயக்கினால் பயணிகளின் சிரமம் குறைவது மட்டுமின்றி, இனிதான பயணமும் மேற்கொள்ள முடியும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • தோல், திசு மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் வைட்டமின் ஏ’ தேவையானதாகும்.
    • நடப்பாண்டு இம்முகாமானது வரும் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட உள்ளது.

    கோவை,

    கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வைட்டமின் 'ஏ' ஆரோ க்கியமான கண்பார்வைக்கு முக்கிய பங்களிக்கிறது. இது மட்டும் அல்லாமல் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திக்கும், தோல், திசு மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் முக்கியமானதாகும்.

    இந்த சத்து குறைபாட்டினால் வறண்ட விழித்திரை, விழிவெண் திரையில் முக்கோண வடிவத்தில் வெண்ணிறமாக தடித்தல் மற்றும் மாலைக்கண் நோய் போன்றவை ஏற்படும்.

    இவற்றுக்கு தக்க சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் பார்வை இழக்க நேரிடும். இதனை கருத்தில் கொண்டுதேசிய அளவில் ஆண்டுக்கு இருமுறை வைட்டமின் ஏ திரவம் நாடு முழுவதும் 6 மாதம் முதல் 5 வரை உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

    நடப்பாண்டில் இந்த முகாமானது வருகிற 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகா தார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட உள்ளது. இந்த முகாம்களில் பொது சுகாதாரத்துைற மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறைகளை சார்ந்த கணப்பணியளாளர்கள் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

    இந்த முகாமின் மூலம் கோவை மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 68 ஆயிரத்து 740 குழந்தை களுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளுக்கு வைட்ட மின் ஏ திரவத்தை அளித்து கண் பார்வை குறைபா டில்லாத இளைய சமுதா யத்தினரை உருவாக்க ஒத்து ழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவத்தை அளித்து கண் பார்வை குறைபா டில்லாத இளைய சமுதா யத்தினரை உருவாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

    இவற்றுக்கு தக்க சிகிச்சையளிக்கப்பட வில்லை என்றால் பார்வையை பணியாற்ற உள்ளனர். இழக்கநேரிடும். இதனைக் கருத்தில் கொண்டு தேசிய அளவில் ஆண்டுக்கு இருமுறை வைட்டமின் 'ஏ' திரவம் நாடு முழுவதும் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவ சமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 'வைட்டமின் ஆரோக்கி யமான கண்பார்வைக்கு முக்கிய பங்களிக்கிறது. இதுமட்டுமல்லாமல் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திக்கும், தோல், திசு மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் வைட்டமின் ஏ' தேவையானதாகும்.

    நடப்பாண்டு இம்முகாமானது வரும் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட உள்ளது.  

    • கார்த்திகேயன் என்பவரிடம் 1,46,200 பணம் கொடுத்தேன்.
    • கரும்புக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை.

    கோவை சாரமேடு பகுதியை சேர்ந்த கயுப்கான் (வயது49) என்பவர் கரும்புக்கடைபோலீசில் கொடுத்து உள்ள புகார் மனுவில், நான் துபாய் செல்வதற்காக திருச்சி திருவானைக்கால் டிராவல்ஸ் நிறுவன ஊழியர் கார்த்திகேயன் என்பவரை தொடர்பு கொண்டேன்.

    அவரிடம்ரூ.1,46,200 பணம் கொடுத்தேன். ஆனால் எனக்கு அங்கு வேலை கிடைக்கவில்லை. எனவே நான் திரும்பி வந்து விட்டேன்.

    கார்த்திகேயனை தொடர்புகொண்டு துபாயில் வேலை இல்லை, என்னை ஏமாற்றி விட்டீர்கள், நான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டேன். அவர் தர மறுத்து மிரட்டல் விடுப்பதாக கூறப்பட்டு உள்ளது. இது குறித்து கரும்புக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (18-ந் தேதி) கொண்டாடப்படுகிறது.
    • விநாயகர் சிலைகளை மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு விசர்ஜனம் செய்ய வேண்டும்.

    கோவை,

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (18-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை கரைக்க 16 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவையில் விநாயகர் சிலைகளை வைக்க உரிய அதிகாரிகளிடம் முன்அனுமதி பெறவேண்டும். அதன்பிறகு தான் சம்பந்தப்பட்ட இடங்களில் சிலைகளை வைக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை கொண்டு உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக, கோவையில் 16 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

    அதன்படி முத்தண்ணன்குளம், பவானி ஆறு (சிறுமுகை, எலகம்பாளையம், மேட்டுப்பாளையம் சுப்ரமணியர் கோவில் மற்றும் தேக்கம்பட்டி), அம்பராம்பாளையம் ஆறு, நொய்யல் ஆறு, உப்பாறு, நடுமலை ஆறு, ஆனைமலை முக்கோணம் ஆறு, சிறுமுகை பழத்தோட்டம், சாடிவயல், வாளையார் அணை, ஆழியாறு ஆத்துப்பாறை, குறிச்சிகுளம், குனியமுத்தூர் குளம், சிங்காநல்லூர் குளத்தேரி, வெள்ளக்கிணறு குளம் மற்றும் நாகராஜபுரம் குளம் ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகளை மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு விசர்ஜனம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • பானுமதி கடந்த 3 நாட்களாக சரியாக தூக்கம் வராமல் அவதிப்பட்டு வந்தார்.
    • பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள செல்லம்மாள் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக கண்டக்டர். இவரது மனைவி பானுமதி (வயது 63). இவர்களது ஒரே மகளுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். அவர் தற்போது திருப்பூரில் வசித்து வருகிறார்.

    கணவன்-மனைவி மட்டும் தனியாக வசித்து வந்தனர். பானுமதி கடந்த 3 நாட்களாக சரியாக தூக்கம் வராமல் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்வத்தன்று இரவு தூக்கம் வராமல் அவதிப்பட்ட பானுமதி வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    காலையில் எழுந்த உடன் பாலசுப்பிரமணியம் அவரது மனைவியை தேடினார். அப்போது அவர் தண்ணீர் தொட்டிக்குள் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவர் இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் தற்கொலை செய்து கொண்ட மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அம்மனுக்கு போட்டிருந்த ஒன்றரை பவுன் மூக்குத்தி, 1 பவுன் கம்மலை அபகரித்து தப்பினர்
    • அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்களில் கொள்ளையர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கீழ்கதவுக்கரையில் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் உள்ள. இந்த கோவிலில் பூசாரியாக பத்மநாபன் (வயது 64) என்பவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த 14-ந் தேதி இவர் பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

    நள்ளிரவு கோவில் கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஒன்றரை பவுன் மூக்குத்தி, 1 பவுன் கம்மல் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    மறுநாள் காலையில் கோவிலை திறக்க வந்த பூசாரி கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அம்மன் அணிந்து இருந்த மூக்குத்தி, கம்மல் ஆகியவை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து பூசாரி கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலின் கதவை உடைத்து அம்மன் அணிந்து இருந்த நகைகளை கொள் ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்களில் கொள்ளையர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

    ×