என் மலர்
உள்ளூர் செய்திகள்

நோய்கள் பரவலை தடுக்க பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்- மேட்டுப்பாளையம் நகரசபை வேண்டுகோள்
- குடியிருக்கும் இடத்தை சுற்றிலும் குப்பைக்கூளம் தேங்காமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.
- சளி, காய்ச்சல் ஏற்பட்டால் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் பகுதியில் காய்ச்சல் பரவலை தடுக்க பொது மக்கள் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும் என நகர சபை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹரிபாபர்வீன் அஷ்ரப் அலி வெளியிட்டு உள்ள செய்திக்கு றிப்பில் கூறியி ருப்பதாவது:-
தமிழகத்தில் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. பருவ மழை காரணமாக பவானி ஆற்றில் தண்ணீர் கலங்கலாக வருகிறது. பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடித்தால் தான் நோய்தொற்றை கட்டுப்படுத்த முடியும். அதே போல குடியிருக்கும் இடத்தை சுற்றிலும் குப்பைக்கூளம் தேங்காமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.
பழைய டயர்கள், காலி பாட்டில்கள், தேங்காய் சிரட்டைகள் ஆகியவற்றை சேர்த்து வைக்காமல் உடனடியாக அப்புறப்படுத்தி மழைநீர் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் வீட்டில் கொசுத் தொல்லையை ஒழிக்க முடியும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சலில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும். சளி, காய்ச்சல் ஏற்பட்டால் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். அடிக்கடி கபசுர குடிநீர் குடிக்க வேண்டும்.
காய்ச்சல்-சளி தொந்தரவுகள் அதிகம் இருந்தால் உடனடியாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உடனடியாக சென்று மருத்துவ பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். இதனால் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் நோய்த்தொற்று பரவாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






