என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • தந்தை- மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை சுல்தான்பேட்டை அருகே உள்ள செந்தேரிபுதூர் கிழக்கு வீதியை சேர்ந்தவர் கோபால்சாமி (வயது 90). கூலித் தொழிலாளி. இவரது மகன் முருகேஷ் (50). இவர் மனநலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். அவரை கோபால்சாமி பராமரித்து வந்தார்.

    தந்தை- மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு இவர்கள் 2 பேரும் வீட்டில் இருந்தனர். அப்போது கோபால்சாமிக்கும், அவரது மகன் முருகேசுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகேஷ் தனது தந்தை கோபால்சாமியை வீட்டில் இருந்த அரிவாள் மனையால் வெட்டி கொலை செய்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் முருகேஷ் எதுவும் தெரியாதது போல வீட்டில் படுத்து தூங்கினார்.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கோபால்சாமி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் முருகேஷ் அவரது தந்தையை வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் கொலை செய்யப்பட்ட கோபால்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அந்தமான் நிக்கோபார் தீவு ஆகிய இடங்களில் பணியாற்றும் 20 கப்பற்படை வீரர்கள் பங்கேற்றனர்.
    • படைப் பிரிவுக்கு சென்று அங்குள்ள மற்ற வீரர்களுக்கு யோகா கற்றுக்கொடுப்பதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டது.

    84 தரைப்படை வீரர்கள் மற்றும் 20 கப்பற்படை வீரர்கள் உட்பட 104 இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் கோவை ஈஷா யோக மையத்தில் 15 நாள் ஹத யோகா பயிற்றுநர் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

    இந்திய ராணுவத்தின் தெற்கு பிராந்திய படைப் பிரிவும், ஈஷா யோக மையமும் இணைந்து நடத்தும் ராணுவ வீரர்களுக்கான சிறப்பு யோகா வகுப்புகள் கடந்த சுதந்திர தினத்தன்று (ஆக.15) தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் சென்னை, பெங்களூரு, செகந்தராபாத், மும்பை, புனே, அகமதாபாத், குவாலியர், ஜான்சி உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் சுமார் 10,000 ராணுவ வீரர்களுக்கு ஈஷா ஹத யோகா ஆசிரியர்கள் இலவசமாக யோகா கற்றுக்கொடுத்தனர்.

    இந்நிலையில் இதன் அடுத்தகட்டமாக, ராணுவ வீரர்களையே ஹத யோகா பயிற்றுநர்களாக மாற்றும் 15 நாள் ஹத யோகா பயிற்றுநர் வகுப்பு கோவை ஈஷா யோக மையத்தில் செப்.1-ம் தேதி முதல் செப்.15-ம் தேதி வரை நடைபெற்றது.



    இதில் தரைப்படையின் தெற்கு பிராந்திய படைப் பிரிவில் பல்வேறு இடங்களில் பணியாற்றும் 84 ராணுவ வீரர்கள் மற்றும் விசாகப்பட்டினம், கொச்சின், டெல்லி, அந்தமான் நிக்கோபார் தீவு ஆகிய இடங்களில் பணியாற்றும் 20 கப்பற்படை வீரர்கள் பங்கேற்றனர்.

    அவர்களுக்கு சூர்ய க்ரியா, அங்கமர்த்தனா மற்றும் உப யோகா வகுப்புகள் கற்றுக்கொடுக்கப்பட்டது. மேலும், அவர்கள் தங்கள் படைப் பிரிவுக்கு சென்று அங்குள்ள மற்ற வீரர்களுக்கு யோகா கற்றுக்கொடுப்பதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டது.

    இவ்வகுப்பில் கற்றுக்கொண்ட யோக பயிற்சிகளை ராணுவ வீரர்கள் தினமும் செய்வதன் மூலம் தங்கள் பணியில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அழுத்தங்களை சிறப்பாக கையாள முடியும்.

    மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்து சமையல் பாத்திர தொகுப்புகளை வழங்கினார்

    கோவை

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக ஆனை மலை வட்டாரம், கோட்டூர் இலங்கை தமிழர் முகாமில் ரூ.5.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 112 புதிய குடியிருப்புகளை திறந்து வைத்ததையடுத்து, இம்முகாமில் அமைக்கப்ப ட்டிருந்த கல்வெட்டினை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் முகாமில் உள்ள நபர்களுக்கு சமையல் பாத்திர தொகுப்புகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பொள்ளா ச்சி சார் ஆட்சியர் பிரியங்கா , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, கோட்டூர் பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணன்,

    துணை தலைவர் கிருஷ்ணவேணி, வட்டாட்சியர் ஆனைமலை ரேணுகாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் அருண், உதவி செயற்பொறியாளர் முனிராஜ், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வட்டாட்சியர் ஸ்ரீரேகா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.79.70 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1591 வீடுகளை திறந்து வைத்தார். முதல்-அமைச்சர் 2021-22 சட்டமன்ற கூட்டத் தொடரின்போது பேரவையில் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்து தருவதை இந்த அரசு உறுதி செய்யும்எ ன்று அறிவித்ததுடன், இலங்கை அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்று பெயர் மாற்றம் செய்தும் அறிவித்தார்.தமிழ்நாடு அரசின் சார்பில், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு துணி மணிகள், பாத்திரங்கள், கல்வி உதவித் தொகை, இலவச சமையல் எரிவாயு இணைப்பு, அடுப்பு மற்றும் சமையல் எரிவாயு மானியம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்ட திட்டங்கள் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் கோவை மாவட்டம், ஆனைமலை வட்டாரம் கோட்டூரில் 1165 சதுர அடி பரப்பளவில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 4 வீடுகள் கொண்ட 28 தொகுப்பு வீடுகள் என மொத்தம் 112 வீடுகள் ரூ. 5.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. ஒரு சமையலறை, படுக்கை அறை, வரவேற்பறை, கழிப்பறை, எல்இடி மின் விளக்குகள், 2 மின்விசிறிகள், கான்கீ ரீட் கூரையுடன், பிவிசி கதவு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. இம்மு காமில் உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படைவசதிகளும் இங்கு அமைக்கப்பட்டு ள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 

    புலியகுளம் முந்தி விநாயகர் ராஜஅலங்காரத்தில் காட்சியளித்தார்

    கோவை

    விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தன.

    கோவை புலியகுளத்தில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில் இன்று அதி காலையில் வழக்கமாக நேரத்தை விட முன் கூட்டியே நடை திறக்கப்பட்டது. பின்னர் 19 அடி உயர சுவாமி சிலைக்கு 11 வகையான திரவியங்களை காண்டு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் 2 டன் மலர்களை கொண்டு ராஜஅலங்காரம் செய்யப்பட்டது. விநாயகர் முன்பு 21 வகையான உணவு பதார்த்தங்கள் படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனு மதிக்கப்பட்டனர். நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் விநாயகரை வழிபட்டுச் சென்றனர். பக்தர்களுக்கு பிரசாதமாக சர்க்கரை பொங்கல், தக்காளி சாதம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

    இதேபோல கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள ஈச்சனாரி விநாயகர் கோவிலில் இன்று அதிகாலையே நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. அங்கும் திரளான பக்தர்கள் பங்கேற்று விநாயகரை வழிபட்டனர்.

    ரேஸ்கோர்சில் உள்ள 108 விநாயகர் கோவில், சுகாதாரத்துறை இணைப்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள விநாயகர் கோவில் உள்பட நகரில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் கோவை கோனியம்மன், கோட்டை ஈஸ்வரன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில் என பிற கோவி ல்களில் உள்ள விநாயகர் சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

    புறநகர் பகுதிகளில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூர் பகுதியில் உள்ள விநாயகர் கோவில், நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கூடலூர் பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்துமுன்னணி, இந்து மக்கள் கட்சி, விசுவ இந்து பரிஷத், சிவசேனா, அனுமன் சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் முக்கிய இடங்களில் பல அடி உயர விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

    நகரில் 700 சிலைகளும், புறநகரில் 2500 சிலைகளும் என மொத்தம் 3200 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ப்பட்டன. அங்கு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்ப டுகிறது. இன்று முதல் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் வரை அந்தந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    தப்பி சென்று தலைமறைவாக இருந்தபோது போலீசார் கைது செய்து விட்டதாக தகவல்

    கோவை

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தொப்பம்பட்டி புதுக்காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்ற டேவிட் (வயது 34). பெயிண்டர். இவரது மனைவி கற்பகம் (33). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று கற்பகம் வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கற்பகத்தின் கணவர் ஆறுமுகம் என்ற டேவிட் அவரது மனைவியை குத்தி கொலை செய்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் இளம்பெ ண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை கொலை செய்த ஆறுமுகம் என்ற டேவிட்டை கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்த அவரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் போலீ சாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் கூறியதாவது:-

    நாங்கள் 2 பேரும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து நான் எனது மனைவியை பிரிந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள எனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தேன்.

    கடந்த 10 நாட்களாக பொள்ளாச்சியில் பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தேன். வேலை முடிந்ததும் தொப்பம்பட்டியில் உள்ள எனது மனைவி வீட்டிற்கு சென்று தங்கினேன். அப்போது நான் எனது மனைவியிடம் நாம் சேர்ந்து வாழலாம் என கூறினேன். ஆனால் அவர் சேர்ந்து வாழ மறுத்து வந்தார். இதனால் எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று நான் வேலை முடிந்ததும் வீட்டிற்கு சென்றேன். அப்போது அங்கு இருந்த எனது மனைவியிடம் நான் சேர்ந்து வாழலாம் என கூறினேன். அவர் அதற்கு மறுத்து விட்டார். இதனால் எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் கத்தியை எடுத்து குத்தி கொலை செய்தேன். இதில் அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து நான் அங்கு இருந்து தப்பி தலைமறை வாகி இருந்தேன். போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.இவ்வாறு அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.

    பின்னர் போலீசார் மனைவியை கொலை செய்த ஆறுமுகம் என்ற டேவிட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற மரியராஜாவை கைது செய்தனர்.
    • தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோவை:

    கோவை சூலூர் அருகே உள்ள மலையாண்டி பாளையத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் கடந்த 8 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது வீட்டிற்குள் ஜே.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி மரியராஜா என்ற மரியலூயிஸ்ராஜா (வயது 42) என்பவர் அத்துமீறி உள்ளே நுழைந்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் ஆடைகளை கழற்றி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார்.

    இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற மரியரா ஜாவை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் இது குறித்து சுல்தான் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற மரியராஜாவை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை
    • ஆசியாவிலேயே மிக உயரமான விநாயகர் சிலைக்கு அபிசேகம் நடைபெற்றது

    தமிழகத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா, இன்று அதிகாலை முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் காலையில் அபிசேகம் செய்யப்பட்டு, அலங்கார கோலத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் காலை முதல் தரிசனம் செய்து வருகின்றனர்.

    கோவை மாவட்டம் புளியகுளத்தில் அமைந்துள்ள ஆசியாவிலேயே மிக உயரமான விநாயகர் சிலைக்கு அபிசேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    மேலும், தமிழகத்தில் உள்ள பிரபலமான விநாயகர் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதற்கிடையே ஆங்காங்கே பிள்ளையார் சிலை வைத்து வழிபட்டு வருகின்றனர். சென்னையில் 4 ஆயிரம் இடங்களில் பிள்ளையார் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    கோவையில் சுமார் 2 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு கழித்து குளங்கள் போன்ற இடங்களில் இந்த சிலைகள் கரைக்கப்படும்.

    • கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டார்
    • பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பரம்பிக்குளம்-ஆழியார் வடிநில கோட்டப்பகுதியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தின்கீழ் புதிய ஆயக்கட்டு பாசனப்ப ரப்பு கிளை கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன.

    இதன்ஒருபகுதியாக ஆனைமலை வட்டாரத்தில் தென்சங்கம்பாளையம், சோமந்துரை, பெத்த நாயக்கனூர், அங்க லக்குறிச்சி, ஜல்லிப்பட்டி, கரியஞ்செட்டிபாளையம், ஆத்துப்பொள்ளாச்சி ஆகிய இடங்களில் ரூ.21.33 லட்சம் மதிப்பிலும், பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் மக்கினாம்பட்டி, ஊஞ்ச வேலம்பட்டி, ஜமீன் கோட்டம்பட்டி, சோள பாளையம், கோலார்பட்டி, கூலநாயக்கன்பட்டி, கஞ்சம்பட்டி, தென்குமார பாளையம், எஸ்.மலை யாண்டிபட்டிணம், பாலவூர், நாட்டுக்கல்பாளையம், சிங்காநல்லூர், ஆம்பாரம்பாளையம் ஆகிய பகுதிகளில் ரூ.11.89 லட்சம் மதிப்பிலும், பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் அய்யம்பாளையம், போடிபாளையம், மண்ணூர், திம்மங்குத்து, நல்லுத்துக்குளி ஆகிய பகுதிகளில் ரூ.4.83 லட்சம் மதிப்பிலும், சுல்தான் பேட்டை வட்டாரத்தில் செஞ்ரிசேரிப்புதூர், கம்மாளப்பட்டி, தாளக்கரை ஆகிய பகுதிகளில் ரூ.5.41 லட்சம் மதிப்பிலும் என ஒட்டுமொத்தமாக ரூ.43.46 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆயக்கட்டு பாசனப்பரப்பு கிளைக்கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் நேற்று பொள்ளாச்சி பகுதிக்கு வந்திருந்தார். அப்போது அவர் அங்கு நடக்கும் புதிய ஆயக்கட்டு பாசனப்பரப்பு கிளைக்கால்வாய் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன் பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.

    மாவட்ட கலெக்டருடன் ஆய்வின்போது வடடார வளர்ச்சி அதிகாரிகள் பாலசுப்பிரமணியன், லதா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். 

    • மாநகர-மாவட்ட அளவில் 2500 போலீசாரை பந்தோபஸ்து பணிகளில் ஈடுபடுத்த முடிவு
    • கோவை மாவட்டத்தில் வருகிற 20-ந்தேதியும், மாநகர பகுதியில் 22-ந்தேதியும் பிள்ளையார் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி (விஜர்சனம்) நடக்க உள்ளது

    கோவை,

    நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாநகரம்-மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்துவது வழக்கம்.

    அதன்படி கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார் சிலைகள் வைப்பதற்கான ஏற்பாடு களில் இந்து முன்னணி, விசுவஇந்துபரிஷத், பாரத் சேனா, சிவசேனா, அனுமன்சேனா, சக்திசேனா, விவேகானந்தர் பேரவை, இந்து மகாசபா, இந்துஸ்தான் மக்கள் இயக்கம் ஆகிய அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதுதவிர பொதுமக்கள், பொதுநலஅமைப்புகள் சார்பிலும் விநாயகர் சிலை கள் வைக்கப்பட உள்ளன.

    கோவையில் விநாயகர் சிலைகளை வைக்கும் முன்பாக உரிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முன்கூட்டியே அனுமதி பெறவேண்டும் என்று ஏற்கெனவே அறிவு றுத்தப்பட்டு இருந்தது. இதற்காக பல்வேறு அமைப்பு களும் மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்காக விண்ணப்பித்து உள்ளன.

    அதன்படி கோவை மாநகரில் 680, புறநகரில் 1611 விநாயகர் சிலைகளை வைப்பதற்கான விண்ணப்பங்கள் வந்து சேர்ந்து உள்ளன. இதுதவிர பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்புகளும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கான முயற்சிகளில் உள்ளனர். எனவே கோவை மாவட்டத்தில் ஒட்டுமொத்த 2500 விநாயகர் சிலைகள் நிறுவப்படும் என்பது தெரிய வந்து உள்ளது.

    கோவை ராஜவீதி தேர்நிலைத்திடலில் இந்து மக்கள் கட்சி சார்பில் 11 அடிஉயர ராஜவிநாயகர் சிலை மற்றும் தெப்பக்குளம் மைதானத்தில் பிரமாண்ட வெற்றி விநாயகர் சிலை ஆகியவை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. அதற்கான ஏற்பாடுகளில் இந்து அமைப்பினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி சிறப்பு வழிபாடு-பூஜைகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தவும் இந்து அமைப்புகள் முடிவு செய்து உள்ளன.

    கோவை மாவட்டத்தில் வருகிற 20-ந்தேதியும், மாநகர பகுதியில் 22-ந்தேதியும் பிள்ளையார் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி (விஜர்சனம்) நடக்க உள்ளது.

    இதன்ஒரு பகுதியாக கோவை ராஜவீதி தேர்நிலைத்திடலில் நடக்க உள்ள ராஜவிநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் பங்கேற்கிறார். காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஊர்வலத்தை தொடங்கி வைக்கிறார்.

    தெப்பக்குளம் மைதானத்தில் வெற்றி விநாயகர் விஜர்சன ஊர்வலத்துக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் முன்னிலை வகிக்கிறார். மத்திய இணைமந்திரி முருகன் பங்கேற்று ஊர்வலத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

    ேகாவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாநகரம்- மாவட்ட அளவில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி சுமார் 2500 போலீசார் பந்தோபஸ்து பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  

    • இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
    • கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    மேட்டுப்பாளையம்,

    நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அன்னூர் பகுதியில் நகரம் மற்றும் புறநகர் ஆகிய பகுதிகளில் 36 விநாயகர் சிலை வைக்கவும், சிறுமுகை பகுதியில் 26 விநாயகர் சிலைகளை வைக்கவும் இந்து மக்கள் கட்சியினர் திட்டமிட்டு இருந்தனர்.

    இதற்காக இந்து மக்கள் கட்சி சார்பில் கோவை மாவட்ட காவல்துறையிடம் முறையாக அனுமதி கேட்கப்பட்டிருந்தது. கடந்த ஆகஸ்டு மாதமே விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரபட்ட நிலையில் இதுவரை சிலை வைக்க அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

    நாளை விநாயகர் சதுர்த்தி வர உள்ள நிலையில் இன்று வரை விநாயகர் சிலை வைக்க அனுமதி அளிக்காத காவல்துறையை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் திடீர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்றனர்.

    இதுகுறித்து தகவலறிந்த அன்னூர் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையில் ஓதிமலை சாலையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இதையடுத்து இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு குழு பொதுச்செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் சந்தோஷ் தலைமையிலான கட்சியினர் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் போலீசார் தொடர்ந்து அனுமதி அளிக்காததால் இந்து அமைப்பினர் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவியது. கூடுதல் போலீசார் வரவ ழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  

    • போத்தனூர் செல்லும் வாகனங்களை காந்திஜி ரோட்டில் திருப்பிவிட வலியுறுத்தல்
    • தார்சாலை அமைக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பரந்து விரிந்து நிலையில் உள்ளதால் பயன்படுத்தி கொள்ள சமூகஆர்வலர்கள் வேண்டுகோள்

    குனியமுத்தூர்,

    கோவை பொள்ளாச்சி ரோட்டில் இருந்து சுந்தராபுரம் வழியாக போத்தனூருக்கு ஒரு நாளைக்கு சராசரியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இவை முறையே சுந்தராபுரம் சிக்னலில் இருந்து இடது பக்கம் திரும்பி சாரதா மில் ரோட்டை கடந்து போத்தனூர் செல்கிறது.

    எனவே அனைத்து வாகனங்களும் சுந்தராபுரம் சிக்னலில் காத்து நின்று செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் 4 ரோடுகள் சந்திக்கும்சுந்தராபுரம் சிக்னல் பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஒருசில நேரங்களில் ஆம்புலன்ஸ் வந்தால் கூட வழிவிடும் சூழல் இல்லாத நிலை காணப்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கும் பெரும் தலைவலியாக உள்ளது.

    இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கோவை பொள்ளாச்சி ரோடு வழியாக வரும் வாகனங்கள் போத்தனூர் சென்று அடைவதற்கு, சுந்தராபுரம் சிக்னல் வரை செல்லாமல், அதற்கு முன்பாகவே குறிச்சியில் இடதுபுறம் திரும்பி காந்திஜி ரோட்டில் பயணம் செய்தால் சாரதா மில் ரோட்டை பிடித்து விடலாம்.பின்னர் அங்கிருந்து போத்தனூர் செல்வது எளிது.

    குறிச்சி காந்தி ரோடு குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் அங்கு வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு ரோடு கரடு- முரடாக காட்சி அளித்தது. ஆனால் தற்போது காந்திஜி ரோட்டில் தார்சாலை அமைக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மிகவும் பரந்து விரிந்து நிலையில் உள்ளது.

    அங்கு தற்போது நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் தங்கு தடைஇன்றி எளிதாக செல்ல முடியும். எனவே ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள் ஆகியவை குறிச்சி காந்திஜி ரோட்டை பயன்படுத்தி போத்தனூர் சென்று வந்தால் சுந்தராபுரத்தில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.

    சுந்தராபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் போது பழனி, பொள்ளாச்சி மற்றும் நகரப் பேருந்துகள் அனைத்தும் குறித்த நேரத்தில் பயணிக்க முடியும். எனவே போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு வாகன ஓட்டிகள் செயல்பட்டால் அனைவருக்கும் நல்லது. போக்குவரத்து நெரிசல் இல்லாத பயணமும் உறுதிப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • கோவை, நெல்லை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இயல்பானஅளவில் பெய்யும்
    • மானாவாரி சாகுபடியில் விதைகளை கடினப்படுத்தி விதைப்பு செய்ய வலியுறுத்தல்

    கோவை,

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை ஆகியவை மூலம் மாநிலஅளவில் நீர்நிலைகள் பெருகி விவசாயம் செழித்து வருகிறது.

    இதன் ஒருபகுதியாக கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனாலும் இது எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. எனவே 2 மாவட்டங்களிலும் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.

    இந்த நிலையில் கோவை, நீலகிரி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த மாதம் அக்டோபர் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இது டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவை, நீலகிரியில் ஏற்கெனவே தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் குறித்து கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் முன்னறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

    அதன்படி தமிழகத்தில் அரியலூர், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், சேலம், தஞ்சை, நீலகிரி, திருச்சி, திருவாரூர், தென்காசி, தூத்துக்குடி, திருப்பத்தூர், கன்னியாக்குமரி, காஞ்சிபுரம், தேனி, மதுரை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம், நெல்லை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் வடகிழக்குபருவமழை இயல்பானஅளவில் பெய்யும்.

    சென்னை, செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விருதுநகர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இயல்பைவிட குறைவான அளவில் பெய்யும்.

    எனவே அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் வடகிழக்கு பருவமழை காலத்துக்கான குறுகிய-மத்திய கால பயிர் ரகங்களை தேர்வுசெய்து பயிரிட வேண்டும், பாசனவசதியுள்ள பகுதிகளில் மட்டும் நீண்டகால பயிர் ரகங்களை தேர்வு செய்யலாம்.

    மேலும் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் மழைநீரை சேமிக்கும் வகையில் குறுக்கும் நெடுக்குமாக 20 அடி இடைவெளியில் சிறுவரப்புகளை அமைக்கலாம். பண்ணை குட்டைகளில் மழைநீரை தேக்கி விவசாயத்துக்கு பயன்படுத்தலாம். மானாவாரி சாகுபடியில் விதைகளை கடினப்படுத்தி விதைப்பு செய்ய வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட விதை நேர்த்தி முறைகளை பின்பற்றினால் வடகிழக்கு பருவமழை மூலம் விவசாயத்தை சிறப்பாக செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×