search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் நாளை 2500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
    X

    சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் நாளை 2500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

    • மாநகர-மாவட்ட அளவில் 2500 போலீசாரை பந்தோபஸ்து பணிகளில் ஈடுபடுத்த முடிவு
    • கோவை மாவட்டத்தில் வருகிற 20-ந்தேதியும், மாநகர பகுதியில் 22-ந்தேதியும் பிள்ளையார் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி (விஜர்சனம்) நடக்க உள்ளது

    கோவை,

    நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாநகரம்-மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்துவது வழக்கம்.

    அதன்படி கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார் சிலைகள் வைப்பதற்கான ஏற்பாடு களில் இந்து முன்னணி, விசுவஇந்துபரிஷத், பாரத் சேனா, சிவசேனா, அனுமன்சேனா, சக்திசேனா, விவேகானந்தர் பேரவை, இந்து மகாசபா, இந்துஸ்தான் மக்கள் இயக்கம் ஆகிய அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதுதவிர பொதுமக்கள், பொதுநலஅமைப்புகள் சார்பிலும் விநாயகர் சிலை கள் வைக்கப்பட உள்ளன.

    கோவையில் விநாயகர் சிலைகளை வைக்கும் முன்பாக உரிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முன்கூட்டியே அனுமதி பெறவேண்டும் என்று ஏற்கெனவே அறிவு றுத்தப்பட்டு இருந்தது. இதற்காக பல்வேறு அமைப்பு களும் மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்காக விண்ணப்பித்து உள்ளன.

    அதன்படி கோவை மாநகரில் 680, புறநகரில் 1611 விநாயகர் சிலைகளை வைப்பதற்கான விண்ணப்பங்கள் வந்து சேர்ந்து உள்ளன. இதுதவிர பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்புகளும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கான முயற்சிகளில் உள்ளனர். எனவே கோவை மாவட்டத்தில் ஒட்டுமொத்த 2500 விநாயகர் சிலைகள் நிறுவப்படும் என்பது தெரிய வந்து உள்ளது.

    கோவை ராஜவீதி தேர்நிலைத்திடலில் இந்து மக்கள் கட்சி சார்பில் 11 அடிஉயர ராஜவிநாயகர் சிலை மற்றும் தெப்பக்குளம் மைதானத்தில் பிரமாண்ட வெற்றி விநாயகர் சிலை ஆகியவை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. அதற்கான ஏற்பாடுகளில் இந்து அமைப்பினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி சிறப்பு வழிபாடு-பூஜைகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தவும் இந்து அமைப்புகள் முடிவு செய்து உள்ளன.

    கோவை மாவட்டத்தில் வருகிற 20-ந்தேதியும், மாநகர பகுதியில் 22-ந்தேதியும் பிள்ளையார் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி (விஜர்சனம்) நடக்க உள்ளது.

    இதன்ஒரு பகுதியாக கோவை ராஜவீதி தேர்நிலைத்திடலில் நடக்க உள்ள ராஜவிநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் பங்கேற்கிறார். காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஊர்வலத்தை தொடங்கி வைக்கிறார்.

    தெப்பக்குளம் மைதானத்தில் வெற்றி விநாயகர் விஜர்சன ஊர்வலத்துக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் முன்னிலை வகிக்கிறார். மத்திய இணைமந்திரி முருகன் பங்கேற்று ஊர்வலத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

    ேகாவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாநகரம்- மாவட்ட அளவில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி சுமார் 2500 போலீசார் பந்தோபஸ்து பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    Next Story
    ×