என் மலர்
நீங்கள் தேடியது "3200 சிலைகள் பிரதிஷ்டை"
கோவை
விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தன.
கோவை புலியகுளத்தில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில் இன்று அதி காலையில் வழக்கமாக நேரத்தை விட முன் கூட்டியே நடை திறக்கப்பட்டது. பின்னர் 19 அடி உயர சுவாமி சிலைக்கு 11 வகையான திரவியங்களை காண்டு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் 2 டன் மலர்களை கொண்டு ராஜஅலங்காரம் செய்யப்பட்டது. விநாயகர் முன்பு 21 வகையான உணவு பதார்த்தங்கள் படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனு மதிக்கப்பட்டனர். நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் விநாயகரை வழிபட்டுச் சென்றனர். பக்தர்களுக்கு பிரசாதமாக சர்க்கரை பொங்கல், தக்காளி சாதம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
இதேபோல கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள ஈச்சனாரி விநாயகர் கோவிலில் இன்று அதிகாலையே நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. அங்கும் திரளான பக்தர்கள் பங்கேற்று விநாயகரை வழிபட்டனர்.
ரேஸ்கோர்சில் உள்ள 108 விநாயகர் கோவில், சுகாதாரத்துறை இணைப்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள விநாயகர் கோவில் உள்பட நகரில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் கோவை கோனியம்மன், கோட்டை ஈஸ்வரன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில் என பிற கோவி ல்களில் உள்ள விநாயகர் சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
புறநகர் பகுதிகளில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூர் பகுதியில் உள்ள விநாயகர் கோவில், நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கூடலூர் பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்துமுன்னணி, இந்து மக்கள் கட்சி, விசுவ இந்து பரிஷத், சிவசேனா, அனுமன் சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் முக்கிய இடங்களில் பல அடி உயர விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
நகரில் 700 சிலைகளும், புறநகரில் 2500 சிலைகளும் என மொத்தம் 3200 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ப்பட்டன. அங்கு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்ப டுகிறது. இன்று முதல் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் வரை அந்தந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.






