என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  காதல் மனைவியை குத்தி கொன்றதாக கைதான பெயிண்டர் வாக்குமூலம்
  X

  காதல் மனைவியை குத்தி கொன்றதாக கைதான பெயிண்டர் வாக்குமூலம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தப்பி சென்று தலைமறைவாக இருந்தபோது போலீசார் கைது செய்து விட்டதாக தகவல்

  கோவை

  கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தொப்பம்பட்டி புதுக்காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்ற டேவிட் (வயது 34). பெயிண்டர். இவரது மனைவி கற்பகம் (33). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

  சம்பவத்தன்று கற்பகம் வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கற்பகத்தின் கணவர் ஆறுமுகம் என்ற டேவிட் அவரது மனைவியை குத்தி கொலை செய்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் இளம்பெ ண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை கொலை செய்த ஆறுமுகம் என்ற டேவிட்டை கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்த அவரிடம் விசாரணை நடத்தினர்.

  அப்போது அவர் போலீ சாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் கூறியதாவது:-

  நாங்கள் 2 பேரும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து நான் எனது மனைவியை பிரிந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள எனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தேன்.

  கடந்த 10 நாட்களாக பொள்ளாச்சியில் பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தேன். வேலை முடிந்ததும் தொப்பம்பட்டியில் உள்ள எனது மனைவி வீட்டிற்கு சென்று தங்கினேன். அப்போது நான் எனது மனைவியிடம் நாம் சேர்ந்து வாழலாம் என கூறினேன். ஆனால் அவர் சேர்ந்து வாழ மறுத்து வந்தார். இதனால் எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

  சம்பவத்தன்று நான் வேலை முடிந்ததும் வீட்டிற்கு சென்றேன். அப்போது அங்கு இருந்த எனது மனைவியிடம் நான் சேர்ந்து வாழலாம் என கூறினேன். அவர் அதற்கு மறுத்து விட்டார். இதனால் எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் கத்தியை எடுத்து குத்தி கொலை செய்தேன். இதில் அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து நான் அங்கு இருந்து தப்பி தலைமறை வாகி இருந்தேன். போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.இவ்வாறு அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.

  பின்னர் போலீசார் மனைவியை கொலை செய்த ஆறுமுகம் என்ற டேவிட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

  Next Story
  ×