என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னூர் அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகைகள் கொள்ளை
    X

    அன்னூர் அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகைகள் கொள்ளை

    • அம்மனுக்கு போட்டிருந்த ஒன்றரை பவுன் மூக்குத்தி, 1 பவுன் கம்மலை அபகரித்து தப்பினர்
    • அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்களில் கொள்ளையர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கீழ்கதவுக்கரையில் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் உள்ள. இந்த கோவிலில் பூசாரியாக பத்மநாபன் (வயது 64) என்பவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த 14-ந் தேதி இவர் பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

    நள்ளிரவு கோவில் கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஒன்றரை பவுன் மூக்குத்தி, 1 பவுன் கம்மல் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    மறுநாள் காலையில் கோவிலை திறக்க வந்த பூசாரி கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அம்மன் அணிந்து இருந்த மூக்குத்தி, கம்மல் ஆகியவை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து பூசாரி கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலின் கதவை உடைத்து அம்மன் அணிந்து இருந்த நகைகளை கொள் ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்களில் கொள்ளையர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

    Next Story
    ×