என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • சிறுமியை அடிக்கடி சந்தித்து நட்பை வளர்த்து கொண்டார்
    • அக்கம்பக்க த்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்

    பொள்ளாச்சி,

    கோவை பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. சிறுமியின் தந்தை இறந்து விட்டதால் தாயுடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு சிறுமி, தனது உறவினர் ஒருவரின் திருமணத்தில் பங்கேற்க காளியாபுரத்திற்கு சென்றார். அப்போது அங்கு வந்த காளியாபுரத்தை சேர்ந்த கருப்புசாமி(வயது21) என்பவர் சிறுமிக்கு அறி முகம் ஆனார்.

    பின்னர் அவர் சிறுமியை அடிக்கடி சந்தித்து நட்பை வளர்த்து கொண்டார். இந்த நட்பு காதலாக மாறியது. 2 பேரும் காதலித்து வந்துள்ளனர்.

    இவர்களது காதல் விவகாரம் சிறுமியின் தாய்க்கு தெரியவரவே அவர், சிறுமியை கண்டி த்தார். இது தொடர்பாக சிறுமி, வாலிபரிடம் தெரி வித்துள்ளார்.

    இதையடுத்து சிறுமி வீட்டை விட்டு வெளியேறி கருப்புசாமியுடன் சென்று விட்டார். பின்னர் அவர் சிறுமியை அந்த பகுதியில், உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொ ண்டார். மேலும் அந்த பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி வீட்டில் இருந்த சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

    அவரை அக்கம்பக்க த்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்ப த்திரிக்கு அழைத்து சென்றனர் 

    • சிறப்பு விருந்தினராக உதவி ஆளுநர் ஞானசேகரன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்
    • முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ரோட்டரி சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், காரமடை விநாயகர் வித்யாலயா சி.பி.எஸ்.சி பள்ளி ஆகியவை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம், காரமடை லாரி உரிமையாளர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

    காரமடை ரோட்டரி சங்கத் தலைவர் விஜயபிரபு தலைமை தாங்கினார். செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தி னராக உதவி ஆளுநர் ஞான சேகரன் கலந்து கொண்டு முகாமை தொட ங்கி வைத்தார்.அரவிந்த் கண் மருத்துவ மனை டாக்டர்கள் அபி ப்ஷா, ஸ்ரீதா மற்றும் மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.கார மடை லாரி உரிமையாளர் சங்க தலைவர் ரவிக்குமார், ரோட்டரி சங்க உறுப்பி னர்கள் கே.ஆர்.விக்னேஷ், சிவசதீஷ்குமார், சரவணன், ஜெயக்குமார், காமராஜ், கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இயற்கையாக விளைந்த பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்ற பொதுமக்கள்
    • ஒவ்வொரு மாதமும் 4-வது ஞாயிற்றுக்கிழமை அன்று நம்ம ஊரு சந்தை நடத்துவது என திட்டமிடப்பட்டு உள்ளது

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரியநாய க்கன் பாளையம் அடுத்த வீரபாண்டி பிரிவில்புனித ஜான்மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளி உள்ளது. இங்கு மாணவ-மாணவிகளுக்கு இயற்கை சார்ந்த கல்வி கற்றுத்தரப்பட்டு வருகிறது.

    இதற்காக பள்ளி வளாகத்தில் தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு காய்கறிகள், பழங்கள், மூலிகைகளை எப்படி இயற்கையாக பரியிடுவது, பயன்படுத்துவது ஆகியவை குறித்து ஆசிரியர்கள் கற்பி த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இயல்வாகை அமைப்புடன் இணைந்து, இயற்கை முறையில் விளைந்த உணவுப் பொருட்களை சந்தைப்படுத்துவது என பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக பள்ளிக்கூட வளாகத்தில், ஒவ்வொரு மாதமும் 4-வது ஞாயிற்றுக்கிழமை அன்று நம்ம ஊரு சந்தை நடத்துவது என திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான தொடக்க விழா நடந்தது.

    பள்ளி தாளாளர் அரவிந்தன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் பாஸ்கர் வரவேற்றார். ஒடந்துறை ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது மூலிகை ஆராய்ச்சியாளரும், பாரம்பரிய மருத்துவருமான மரியா பெல்சின் இயற்கை வழி உணவுப் பொருட்கள்குறித்து பேசினார்.

    தொடர்ந்து நம்ம ஊரு சந்தையில் இயற்கை வேளாண் உற்பத்தியாளர்கள் உருவாக்கிய செக்கு எண்ணெய் வகைகள், கொல்லிமலை இஞ்சி, முடவாட்டுக்கால் கிழங்கு உள்ளிட்ட மூலிகை உணவுப் பொருட்கள், சிறுதானிய அரிசி வகைகள், இனிப்பு வகைகள், பனை ஓலை விளையாட்டு பொருட்கள், நீரா பானங்கள், பல்வேறு கீரை வகைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.

    இதில் பொதுமக்கள்ஆர்வத்துடன் பங்கேற்று இயற்கை முறையில் விளைந்த பொருட்களை வாங்கி சென்றனர்.தொடர்ந்து புத்தகக் கண்காட்சி, நிகர்கலைக்கூடத்தின் பறையிசை முழக்கம், பேராசிரியர் ராமராஜின் நாடகம்,

    தாமரைசெல்வனின் ஓரிகாமி காகிதக் கலை, மரப்பாச்சி முருகனின்பாரம்பரிய விளையாட்டுகள் ஆகியனவும் நடந்தன. இறுதியில் இயல்வாகை அமைப்பின் தலைவர் அழகேஸ்வரி அசோக் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • பாராளுமன்ற தேர்தலுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாகவே நாங்கள் தயாராகி எங்கள் பயணத்தை தொடங்கி விட்டோம்.
    • மேற்கு வங்காளத்தில் மம்தாவை காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்க்கின்றன.

    கோவை:

    கோவையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாகவே நாங்கள் தயாராகி எங்கள் பயணத்தை தொடங்கி விட்டோம். நான் ஒரு தமிழ் தேசிய மகன் என்பதால் தமிழ் நிலத்துக்கான தேர்தலில்தான் போட்டியிடுவேன். ஆனால் தமிழகத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் போட்டியிட்டால் அவர்களை எதிர்த்து நான் கண்டிப்பாக போட்டியிடுவேன்.

    மேற்கு வங்காளத்தில் மம்தாவை காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்க்கின்றன. ஆனால் தமிழகத்தில் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் ஒன்றாக இருக்கிறது. கேரளாவில் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் எதிராக இருக்கிறது. டெல்லி, பஞ்சாப்பில் கெஜ்ரிவால் காங்கிரசை எதிர்க்கிறார். ஆனால் இந்தியா என்ற கூட்டணியில் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள். இதனால் இந்த கூட்டணி வேடிக்கையானதாக இருக்கிறது.

    • அண்ணாவை கொடியில் மட்டும் வைத்திருக்கும் அ.தி.மு.க. அது குறித்து எதிர்வினையாற்றி இருக்கிறது.
    • தி.மு.க.வில் ஆர்.எஸ்.பாரதி மட்டுமே எதிர்வினையாற்றி இருக்கிறார்.

    கோவை.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணியில் நாங்கள் இல்லை. தேச நலன் என வரும் பொழுது சில விஷயங்களை விட்டுக் கொடுக்க வேண்டும்.

    மேற்கு வங்கத்தில் காங்கிரசும், கம்யூனிஸ்டும் மம்தாவை எதிர்ப்பார்கள். கேரளாவில் கம்யூனிஸ்டும், காங்கிரசும் மாறி மாறி வாக்கு செலுத்துவார்களா? மாநிலத்திற்கு ஒரு கொள்கை முடிவு எடுப்பது எப்படி சரியாக இருக்கும்.

    பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசிய விவகாரத்தில் அண்ணா தொடங்கிய கட்சியானது இதுவரை எதிர்வினையாற்றவில்லை. ஆனால் அண்ணாவை கொடியில் மட்டும் வைத்திருக்கும் அ.தி.மு.க. அது குறித்து எதிர்வினையாற்றி இருக்கிறது. பா.ஜ.கவுடன் கூட்டணி முறிந்தாலும் பரவாயில்லை என குரல் கொடுத்து இருக்கிறார்கள். அ.தி.மு.க.வின் இந்த செயல்பாடு மிகவும் பாராட்டுக்குரியது.

    தி.மு.க.வில் ஆர்.எஸ்.பாரதி மட்டுமே எதிர்வினையாற்றி இருக்கிறார். இதில் முதல்வரின் கருத்து என்ன? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    உதயநிதி, கருணாநிதி ஆகியோரை விமர்சித்து இருந்தால் பொங்கி எழுந்திருப்பார்கள். அண்ணா என்பதால் கண்டு கொள்ளவில்லை.

    எடப்பாடி பழனிச்சாமி பேசவில்லை என்றாலும் அவரது கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், 2-ம் கட்ட தலைவர்கள் என அனைவரும் பேசுகிறார்கள்.

    போரை பொறுத்தவரை மன்னன் எப்பொழுதுமே தளபதிகளை சண்டைக்கு அனுப்புவார். தோற்கும் பொழுது தான் அவர் களத்திற்கு வருவார். அது போல தான் தனது தளபதிகளை எடப்பாடியார் களத்திற்கு அனுப்பி இருக்கின்றார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையம் வந்தார்
    • திருப்பூர் மாவட்டம் காங்கயம்படியூருக்கு இன்று மாலை கார் மூலம் புறப்பட்டு செல்கிறார்

    கோவை,

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த படியூரில் மேற்கு மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி கூட்டம் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி உரையாற்றுகிறார். இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு வந்தார்.

    கோவை விமான நிலை யத்தில் அவருக்கு, கோவை மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க சார்பில் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து மேள, தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக்கொ ண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது காரில் நேராக கோவையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அங்கு அவர் ஓய்வெடுத்தார்.

    பின்னர் மாலையில் அவர் கார் மூலமாக திருப் பூர் மாவட்டம் காங்கயம் படியூரில் நடக்கும் மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு செல்கிறார். திருப்பூர் செல்லும் வழியிலும் அவருக்கு கட்சியினர் உற்சாக வர வேற்பு கொடுக்கின்றனர்.

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி கோவை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையம், அவர் தங்கும் நட்சத்திர ஓட்டல் ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் நேற்று இரவில் கோவை மாநகர் முழுவதும் ஆங்காங்கே வாகன சோதனையும் தீவிரப்ப டுத்தப் பட்டிருந்தது. போலீஸ் கமிஷனர் பாலகி ருஷ்ணன் உத்தரவின் பேரில் மாநகர பகுதிகளில் உள்ள சோதனை சாவடிக ளில் சோதனை நடத்தப்பட் டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்க ப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • 2 கிலோ கஞ்சாைவ போலீசார் பறிமுதல் செய்தனர்
    • கோவையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்து இருப்பது கண்டறியப்பட்டது

    மேட்டுப்பாளையம்,

    அன்னூர் அருகே கீழ் கதவுக்கரை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக அன்னூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.

    அப்போது கீழ் கதவுக்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்ற வாலிபரிடம் போலீசார் சோதனை நடத்தினர். இதில் அவரிடம் 2 கிலோ கஞ்சா சிக்கியது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து பிடிபட்டவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த உமேஷ்சந்திரபார்க் (வயது29) என்பதும், கோவையில் விற்பனை செய்வதற்காக 2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து இருப்பதும் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து உமேஷ்சந்திரபார்க் என்பவரை கஞ்சா விற்றதாக, அன்னூர் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • 2011-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தவர், கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவு
    • 12 ஆண்டுகளாக பதுங்கி இருந்த வெள்ளைச்சாமியை போலீசார் கைது செய்தனர்

    கோவை,

    கோவை பீளமேடு பாரதி காலனியில் சசிக்குமார் என்பவர் கெமிக்கல் கம்பெனி நடத்தி வந்தார்.

    அதே கம்பெனியில் கார் டிரைவராக சிங்காநல்லூர் அஸ்தாந்த நாயக்கர் வீதியை சேர்ந்த விக்னேஷ்(வயது35) என்பவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்டு 16-ந் தேதி விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்களான கிருஷ்ணகிரி ஊத்தங்கரையை சேர்ந்த வெள்ளைச்சாமி(33), திண்டுக்கல்லை சேர்ந்த ஜெயராஜ்(31) ஆகியோர் கொள்ளையடித்தனர்.

    சொந்த ஊருக்கு சென்ற அந்த நிறுவன மேலாளர் சத்தியமூர்த்தி அதிகாலையில் திரும்பி வந்து விட்டார். கொள்ளையடிப்பதை பார்த்த அவர் கூச்சலிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் சத்தியமூர்த்தியை வெட்டி கொலை செய்து விட்டு, அவர் அணிருந்திருந்த மோதிரம் மற்றும் காரை பறித்து கொண்டு தப்பியோடி விட்டனர்.

    இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, வெள்ளைச்சாமி, ஜெயராஜ், விக்னேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோவை நான்காவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். இதற்கிடையே கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்த வெள்ளைச்சாமி அதன்பின்னர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். மற்ற 2 பேர் மீது விசாரணை நடத்தப்பட்டு, 2018-ம் ஆண்டு ஏப்ரல் 12-ந் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வெள்ளைச்சாமியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • போத்தனூர் போலீசில் காந்தரூபன் நகைகள் மாயமானது குறித்து புகார்
    • மகேஸ்வரி வீட்டின் மேற்கூரையில் மறைத்து வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள் சிக்கின

    கோவை,

    கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் காந்தரூபன் (வயது 43). இவரது மனைவி கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே காந்த ரூபன் வீட்டு வேலை செய்வதற்காக, வெள்ளலூரை சேர்ந்த மகேஸ்வரி (வயது 37) என்பவரை பணியமர்த்தினார்.

    இந்த நிலையில் காந்தரூபன் வீட்டில் 25 பவுன் தங்க நகைகள் திடீரென மாயமானது. எனவே அவர் இதுகுறித்து மகேஸ்வரியிடம் கேட்டார். அதற்கு அவர் சரிவர பதிலளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த காந்தரூபன் வீட்டில் நகைகள் மாயமானது குறித்து போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது மகேஸ்வரி முன்னுக்குப்பின் முரணாக பேசியதாக தெரிகிறது. எனவே போலீசார் சந்தேகத்தின்பேரில் அவரது வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் வீட்டின் மேற்கூரையில் மறைத்து வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள் சிக்கின.

    அவற்றை போலீசார் பறிமுதல் செய்து மேலும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது காந்தரூபன் வீட்டில் 25 பவுன் நகைகள் திருடியதை மகேஸ்வரி ஒப்புக்கொண்டார். எனவே அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓட்டலுக்கு செல்லாமல் கோவை மாநகராட்சி 5 மற்றும் 8-வது வார்டு பகுதிகளில் நடந்து வரும் சாலை பணிகளை ஆய்வு செய்ய சென்றார்.
    • ஆய்வின் போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் கிராந்திகுமார், அரசு அதிகாரிகள் இருந்தனர்.

    கோவை:

    2024-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராகி வருகிறது.

    முதல் கட்டமாக டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி திருச்சியில் நடைபெற்றது. 2-வது கட்ட பயிற்சி பாசறை கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது.

    இந்தநிலையில் 3-வது கட்டமாக மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் படியூர் தொட்டியப்பாளையத்தில் இன்று நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி உரையாற்றுகிறார்.

    இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு வந்தார்.

    கோவை விமான நிலையத்தில் அவருக்கு, கோவை மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க சார்பில் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து மேள, தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காரில் ஓட்டலுக்கு செல்வார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

    ஆனால் திடீரென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓட்டலுக்கு செல்லாமல் கோவை மாநகராட்சி 5 மற்றும் 8-வது வார்டு பகுதிகளில் நடந்து வரும் சாலை பணிகளை ஆய்வு செய்ய சென்றார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காளப்பட்டி பகுதியில் உள்ள துளசி கார்டன் பகுதிக்கு சென்றார். அங்கு நடந்து வரும் சாலை பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சாலையில் 2 அடி தோண்டி பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து அங்கு நடக்கும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அங்கு ஆய்வை முடித்து விட்டு, நேராக விளாங்குறிச்சி நஞ்சப்பா சாலையில் நடந்து வரும் சாலை பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் கரட்டுமேடு வி.கே.நகர் பகுதிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடந்து வரும் சாலை பணியையும் பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின் போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் கிராந்திகுமார், அரசு அதிகாரிகள் இருந்தனர்.

    பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அங்கு அவர் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

    பின்னர் மாலையில் அவர் கார் மூலமாக திருப்பூர் மாவட்டம் காங்கயம் படியூரில் நடக்கும் மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு செல்கிறார்.

    திருப்பூர் செல்லும் வழியிலும் அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுக்கின்றனர்.

    முதலமைச்சர் வருகையையொட்டி கோவை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையம், அவர் தங்கும் நட்சத்திர ஓட்டல் ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் நேற்று இரவில் கோவை மாநகர் முழுவதும் ஆங்காங்கே வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாநகர பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் சோதனை நடத்தப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • வால்பாறை சட்டசபை தொகுதியின் பிரச்சினைகளை இங்குள்ள ஆட்சியாளர்கள் தீர்க்கவில்லை.
    • ஒரே ஒரு குடும்பத்துக்காகத் தான் இந்த அரசு செயல்படுகிறது. அடித்தட்டு மக்களுக்காக செயல்படவில்லை.

    கோவை:

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, என் மண், என் மக்கள் என்ற பெயரில் சட்டசபை தொகுதி வாரியாக நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    நேற்று அவர் கோவை மாவட்டத்தில் தனது நடைபயணத்தை தொடங்கினார். கோவை வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட ஆனைமலை பகுதியிலும், தொடர்ந்து பொள்ளாச்சி பகுதியிலும் நடைபயணம் மேற்கொண்டார்.

    அவருக்கு பாரதிய ஜனதாவினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பட்டாசு வெடித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் அவரை வரவேற்றனர். பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    பொதுமக்கள் வரவேற்புக்கு மத்தியில் அண்ணாமலை பேசியதாவது:-

    வால்பாறை சட்டசபை தொகுதியின் பிரச்சினைகளை இங்குள்ள ஆட்சியாளர்கள் தீர்க்கவில்லை. ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் செல்ல வனப்பகுதியின் எல்லையில் சோதனைச்சாவடி அமைத்துள்ளார்கள். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை சுற்றுலாபயணிகளுக்கு வால்பாறை செல்ல அனுமதி இல்லை என்கிறார்கள். விரைவில் சுற்றுலாபயணிகள் 24 மணி நேரமும் அனுமதிக்கப்படவில்லை என்றால் பாரதிய ஜனதா மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும்.

    காமராஜர் அணைகளை கட்டி விவசாயத்துக்கு நீரை கொண்டு வந்தார். கருணாநிதி தமிழகம் எங்கும் டாஸ்மாக் கடைகளை கொண்டு வந்தார். 65 ஆண்டுகளாக ஆனைமலை-நல்லாறு திட்டத்தை செயல்படுத்தவில்லை. தமிழகத்தின் உரிமையை கொஞ்சம், கொஞ்சமாக கேரளாவுக்கு விட்டுக் கொடுக்கிறார் தமிழக முதல்-அமைச்சர்.

    ஓணம் பண்டிகைக்கு மலையாளத்தில் வாழ்த்துக்கள் சொன்ன தமிழக முதலமைச்சருக்கு அந்த மாநில முதலமைச்சருடன் பேசி ஆனைமலை-நல்லாறு திட்டத்தை செயல்படுத்த சொல்ல முடியாதா? ஒரே ஒரு குடும்பத்துக்காகத் தான் இந்த அரசு செயல்படுகிறது. அடித்தட்டு மக்களுக்காக செயல்படவில்லை.

    இந்தியாவிலேயே தமிழகம் தான் 7 லட்சத்து 53 ஆயிரம் கோடி கடனாளி. தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் கடனாளியாகத்தான் பிறக்கிறது. அமாவாசையையும், ஆயிரம் ரூபாயையும் தி.மு.க.வினர் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க. போடும் நாடகம் தான் மகளிர் உரிமைத் தொகை. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் சாயம் வெளுக்கப்போகிறது.

    மத்தியில் தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆனால் அவர்களே நீட் தேர்வை எதிர்க்கின்றனர். பிரச்சினைகளை கிளப்பி மக்களை ஏமாற்றுவது தான் தி.மு.க.வின் வேலை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அண்ணாமலை கோவை மாவட்டத்தில் இன்று 2-வது நாள் நடைபயணம் மேற்கொள்கிறார். தொண்டாமுத்தூர் தொகுதி குனியமுத்தூரில் மாலை 3 மணிக்கு நடைபயணத்தை தொடங்குகிறார். தொடர்ந்து அவர் கிணத்துக்கடவு தொகுதியிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். வருகிற 28-ந் தேதி வரை அவர் கோவையில் முகாமிட்டு நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.

    • பாரம்பரிய கலைகளை வளர்த்தெடுக்கும் வித்தையை சத்குருவிடம் கற்றுக் கொள்ளலாம்.
    • இந்தாண்டு 1,000 இடங்களில் கேலோ இந்தியா விளையாட்டு மையங்கள் தொடங்கப்பட உள்ளது.

    இந்தியாவின் மாபெரும் கிராமிய விளையாட்டு திருவிழா என்ற பெருமைக்குரிய 'ஈஷா கிராமோத்சவம்' திருவிழாவின் இறுதிப் போட்டிகள் கோவை ஈஷா யோக மையத்தில் இன்று (செப்.23) மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் திரு. அனுராக் தாகூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    பரிசளிப்பு விழாவின் போது பேசும் போது, "ஈஷா கிராமோத்சவம் திருவிழாவை 2004-ம் ஆண்டு முதல் ஈஷா நடத்தி வருகிறது. இன்று நடக்கும் 15-வது கிராமோத்சவ விழாவில் நான் பங்கேற்றதை பெருமையாக கருதுகிறேன். இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் முழு நேர, தொழில்முறை விளையாட்டு வீரர்கள் கிடையாது. தின கூலி வேலைக்கு செல்பர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், விவசாயிகள் என பல விதமான வேலை செய்பவர்கள் தான் இப்போட்டியில் வீரர்களாக களம் கண்டு வென்றுள்ளனர். இது தான் இத்திருவிழாவின் சிறப்பு."

     

    "விளையாட்டு போட்டிகள் மட்டுமின்றி இங்கு 1,200 பேர் ஒன்று சேர்ந்து கும்மியாட்டத்தையும் ஆடி காட்டியுள்ளனர். இதுதவிர பல்வேறு கிராமிய நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் இத்திருவிழாவில் நடத்தப்பட்டுள்ளது. இதை காண ஆயிரக்கணக்கில் மக்கள் வந்துள்ளீர்கள். இவை அனைத்தையும் சாத்தியப்படுத்தியுள்ள சத்குரு அவர்கள், வாழ்க்கையையே ஒரு விளையாட்டு தன்மையுடன் அணுக கூடிய கூல் குருவாக இருக்கிறார். விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைகளை வளர்க்கும் வித்தை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்," என்று தெரிவித்தார்.

    மேலும் பேசிய அவர், "இந்தாண்டு 1,000 இடங்களில் கேலோ இந்தியா விளையாட்டு மையங்கள் தொடங்கப்பட உள்ளது. யோகா, களரி, மல்லர்கம்பம் உள்ளிட்ட 5 பாரம்பரிய கலைகளை கேலோ இந்தியா திட்டத்தில் சேர்த்துள்ளோம். இதேபோல், பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்கும் காலமும் கூடிய விரைவில் வரும்," என்று தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து சிறப்புரையாற்றிய சத்குரு, "ஈஷா கிராமோத்சவம் திருவிழா இந்தாண்டு தென்னிந்திய அளவில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் 25 ஆயிரம் கிராமங்களில் இருந்து சுமார் 60 ஆயிரம் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஜாதி, மதம், ஆண், பெண், வயது என எல்லா வேறுபாடுகளையும் கடந்து அவர்கள் ஒற்றுமையுடன் விளையாடி உள்ளனர்."

    "போட்டியிட்டு வெற்றி பெறும் நோக்கத்திற்காக நாம் இந்த கிராமோத்சவத்தை நடத்தவில்லை. இதன்மூலம், இதில் பங்கெடுத்த வீரர்கள் மற்றும் பார்வையிட்ட ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் உற்சாகத்தையும் கொண்டாட்டத்தையும் உருவாக்க இந்த விளையாட்டு போட்டிகளை நடத்தி உள்ளோம். வாழ்க்கையில் விளையாட்டு தன்மை இல்லாமல் போனால், வாழ்க்கை பெரும் சுமையாகிவிடும். குறிப்பாக, ஏழ்மை நிலையில் இருக்கும் கிராமப்புற மக்களின் வாழ்க்கை ஆனந்தமாகவும் உற்சாகமாகவும் இருக்க ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் அவசியம்," என்று தெரிவித்தார்.

    வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசு தொகைகள் மற்றும் பாராட்டு கேடயங்கள் வழங்கி கெளரவித்தனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இப்போட்டிகளை ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் கண்டு களித்தனர். மேலும், பார்வையாளர்கள் பங்கேற்பதற்கு பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    ×