என் மலர்
நீங்கள் தேடியது "நம்ம ஊரு சந்தை"
- இயற்கையாக விளைந்த பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்ற பொதுமக்கள்
- ஒவ்வொரு மாதமும் 4-வது ஞாயிற்றுக்கிழமை அன்று நம்ம ஊரு சந்தை நடத்துவது என திட்டமிடப்பட்டு உள்ளது
கவுண்டம்பாளையம்,
கோவை பெரியநாய க்கன் பாளையம் அடுத்த வீரபாண்டி பிரிவில்புனித ஜான்மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளி உள்ளது. இங்கு மாணவ-மாணவிகளுக்கு இயற்கை சார்ந்த கல்வி கற்றுத்தரப்பட்டு வருகிறது.
இதற்காக பள்ளி வளாகத்தில் தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு காய்கறிகள், பழங்கள், மூலிகைகளை எப்படி இயற்கையாக பரியிடுவது, பயன்படுத்துவது ஆகியவை குறித்து ஆசிரியர்கள் கற்பி த்து வருகின்றனர்.
இந்த நிலையில் இயல்வாகை அமைப்புடன் இணைந்து, இயற்கை முறையில் விளைந்த உணவுப் பொருட்களை சந்தைப்படுத்துவது என பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக பள்ளிக்கூட வளாகத்தில், ஒவ்வொரு மாதமும் 4-வது ஞாயிற்றுக்கிழமை அன்று நம்ம ஊரு சந்தை நடத்துவது என திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான தொடக்க விழா நடந்தது.
பள்ளி தாளாளர் அரவிந்தன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் பாஸ்கர் வரவேற்றார். ஒடந்துறை ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது மூலிகை ஆராய்ச்சியாளரும், பாரம்பரிய மருத்துவருமான மரியா பெல்சின் இயற்கை வழி உணவுப் பொருட்கள்குறித்து பேசினார்.
தொடர்ந்து நம்ம ஊரு சந்தையில் இயற்கை வேளாண் உற்பத்தியாளர்கள் உருவாக்கிய செக்கு எண்ணெய் வகைகள், கொல்லிமலை இஞ்சி, முடவாட்டுக்கால் கிழங்கு உள்ளிட்ட மூலிகை உணவுப் பொருட்கள், சிறுதானிய அரிசி வகைகள், இனிப்பு வகைகள், பனை ஓலை விளையாட்டு பொருட்கள், நீரா பானங்கள், பல்வேறு கீரை வகைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.
இதில் பொதுமக்கள்ஆர்வத்துடன் பங்கேற்று இயற்கை முறையில் விளைந்த பொருட்களை வாங்கி சென்றனர்.தொடர்ந்து புத்தகக் கண்காட்சி, நிகர்கலைக்கூடத்தின் பறையிசை முழக்கம், பேராசிரியர் ராமராஜின் நாடகம்,
தாமரைசெல்வனின் ஓரிகாமி காகிதக் கலை, மரப்பாச்சி முருகனின்பாரம்பரிய விளையாட்டுகள் ஆகியனவும் நடந்தன. இறுதியில் இயல்வாகை அமைப்பின் தலைவர் அழகேஸ்வரி அசோக் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.






