search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Murder suspect"

    • 2011-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தவர், கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவு
    • 12 ஆண்டுகளாக பதுங்கி இருந்த வெள்ளைச்சாமியை போலீசார் கைது செய்தனர்

    கோவை,

    கோவை பீளமேடு பாரதி காலனியில் சசிக்குமார் என்பவர் கெமிக்கல் கம்பெனி நடத்தி வந்தார்.

    அதே கம்பெனியில் கார் டிரைவராக சிங்காநல்லூர் அஸ்தாந்த நாயக்கர் வீதியை சேர்ந்த விக்னேஷ்(வயது35) என்பவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்டு 16-ந் தேதி விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்களான கிருஷ்ணகிரி ஊத்தங்கரையை சேர்ந்த வெள்ளைச்சாமி(33), திண்டுக்கல்லை சேர்ந்த ஜெயராஜ்(31) ஆகியோர் கொள்ளையடித்தனர்.

    சொந்த ஊருக்கு சென்ற அந்த நிறுவன மேலாளர் சத்தியமூர்த்தி அதிகாலையில் திரும்பி வந்து விட்டார். கொள்ளையடிப்பதை பார்த்த அவர் கூச்சலிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் சத்தியமூர்த்தியை வெட்டி கொலை செய்து விட்டு, அவர் அணிருந்திருந்த மோதிரம் மற்றும் காரை பறித்து கொண்டு தப்பியோடி விட்டனர்.

    இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, வெள்ளைச்சாமி, ஜெயராஜ், விக்னேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோவை நான்காவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். இதற்கிடையே கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்த வெள்ளைச்சாமி அதன்பின்னர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். மற்ற 2 பேர் மீது விசாரணை நடத்தப்பட்டு, 2018-ம் ஆண்டு ஏப்ரல் 12-ந் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வெள்ளைச்சாமியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×