என் மலர்
நீங்கள் தேடியது "முதல் அமைச்சர் கோவைக்கு வருகை"
- சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையம் வந்தார்
- திருப்பூர் மாவட்டம் காங்கயம்படியூருக்கு இன்று மாலை கார் மூலம் புறப்பட்டு செல்கிறார்
கோவை,
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த படியூரில் மேற்கு மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி கூட்டம் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி உரையாற்றுகிறார். இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு வந்தார்.
கோவை விமான நிலை யத்தில் அவருக்கு, கோவை மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க சார்பில் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து மேள, தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக்கொ ண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது காரில் நேராக கோவையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அங்கு அவர் ஓய்வெடுத்தார்.
பின்னர் மாலையில் அவர் கார் மூலமாக திருப் பூர் மாவட்டம் காங்கயம் படியூரில் நடக்கும் மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு செல்கிறார். திருப்பூர் செல்லும் வழியிலும் அவருக்கு கட்சியினர் உற்சாக வர வேற்பு கொடுக்கின்றனர்.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி கோவை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையம், அவர் தங்கும் நட்சத்திர ஓட்டல் ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் நேற்று இரவில் கோவை மாநகர் முழுவதும் ஆங்காங்கே வாகன சோதனையும் தீவிரப்ப டுத்தப் பட்டிருந்தது. போலீஸ் கமிஷனர் பாலகி ருஷ்ணன் உத்தரவின் பேரில் மாநகர பகுதிகளில் உள்ள சோதனை சாவடிக ளில் சோதனை நடத்தப்பட் டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்க ப்பட்டது குறிப்பிடத்தக்கது.






