என் மலர்
கோயம்புத்தூர்
- கைதிகள் தகராறு செய்வதை தடுக்க புதிய நடவடிக்கை
- கோவை மாநகர போலீசாருக்கு முதற்கட்டமாக, 24 காமிராக்கள் வழங்கப்பட்டு உள்ளன
கோவை,
நீதிமன்றங்களுக்கு அழைத்து செல்லும் போது, கைதிகளின் நடவடிக்கை கண்காணிக்க, போலீசாருக்கு பாடி-ஓன் காமி ராக்கள் வழங்கப்பட்டன.
குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின் சிறையில் அடைக்கப்படுவர். தொடர்ந்து, இவர்கள் விசாரணைக்காக கஸ்டடியில் எடுக்கப்படுவர். இதன் பின் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர்.
இவ்வாறு கைதிகளை நீதிமன்றங்களுக்கும், சிறைக்கும் அழைத்து செல்லும் போது அவர்கள் போலீசாருடன் தகராறில் ஈடுபடுவதாக புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. அதேபோல், கைதிகளை துன்புறுத்துவதாக போலீசார் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதை தடுக்க, கைதிகளை அழைத்து செல்லும் போலீசாருக்கு, பாடி-ஓன் காமிரா என்னும் சீருடையில் பொருத்தக்கூடிய காமிரா வழங்கப்பட்டுள்ளது. கோவை மாநகர போலீசாருக்கு முதற்கட்டமாக, 24 காமிராக்கள் வழங்கப்பட்டு ள்ளன. இதுதவிர, கைதிகளை அழைத்து செல்லும் வாகனங்களிலும் இரு காமிரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், கைதிகளை அழைத்து செல்லும் ேபாது ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது. காமிராவில் பதிவாகும் காட்சிகளை சேமிக்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
- சரக்குகளை பெற்றுக்கொண்டு பணம் தராமல் ஏமாற்றினர்
- கோவை பெண் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு
கோவை.
சென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 48). இவர் கோவை ராமநாதபுரம் போலீசில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் சென்னையில் ஏலக்காய்-மிளகு மொத்த வியாபாரம் செய்து வருகிறேன். இந்த நிலையில் கோவை ராமநாதபுரம், கொங்கு நகரை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் என்னை தொடர்பு கொண்டு, நாங்கள் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ஏலக்காய், மிளகு ஆகிய பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறோம் என்று கூறினர். இதனை நம்பிய நான் கோவைக்கு புறப்பட்டு வந்தேன்.
அங்குள்ள அலுவ லகத்தில் இருந்த புருஷோத்த மன், மோசஸ்மேத்யூ, காஜாஉசேன், மருதாசலம், கீதாஞ்சலி, பரத், ஆனந்த் உள்பட 7 பேரிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு ரூ.14 லட்சத்து 45 ஆயிரத்து 718 மதிப்பில் ஏலக்காய், மிளகு ஆகியவற்றை அனுப்பி வைத்தேன்.
சரக்குகளை பெற்று க்கொண்ட அவர்கள், இதற்கான பணத்தை தராமல் ஏமாற்றி வருகின்ற னர். எனவே சம்பந்தப்பட்ட வர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
புகாரின்பேரில் ராமநாதபுரம் போலீசார் பெண் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மூதாட்டி, வாலிபரிடம் நகை பறித்த 2 பேர் கைது
- யோனேஷ்உசேனும், மொகல்ஜாபரும் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள்
கோவை,
கோவை சூலூர் ஜெர்மன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது 74). இவர் சம்பவத்தன்று காலை வீட்டுவாசலை பெருக்கி கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், ஈஸ்வரியிடம் 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு மின்னல்வேகத்தில் தப்பிசென்றனர்.
இதுதொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராவை கைப்பற்றி அதில் இடம்பெற்று உள்ள காட்சிப்பதிவுகளை ஆய்வுசெய்து பார்த்தனர். இதில் மூதாட்டி ஈஸ்வரியிடம் செயின் பறித்த 2 பேர் பற்றிய விவரம் தெரியவந்தது.
மேலும் அவர்கள் செட்டிப்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் கவுசிக் என்பவரிடமும் 2 பவுன் சங்கிலியை பறித்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.
இந்த நிலையில் சூலூர் அடுத்த கலங்கல் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்த 2 பேரை போலீசார் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்த யோனேஷ்உசேன் (22), ஆந்திராவை சேர்ந்த மொகல்ஜாபர் (21) என்பது தெரிய வந்தது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணை யில் அவர்கள் பற்றிய மேலும் திடுக்கிடும் தகவ ல்கள் வெளியாகி உள்ளன.
யோனேஷ்உசேன், மொகல்ஜாபர் ஆகிய 2 பேரும் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள். பின்னர் அவர்கள் இந்தியாவுக்கு குடிபெயர்ந்து ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில் யோனேஷ்உசேன் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி யில் குடியேறி வசித்து வந்து உள்ளார்.
அப்போது அவருக்கு வழிப்பறியில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் யோசனை வந்தது. அதன்படி இவர் ஆந்திராவில் வசித்த மொகல்ஜாபரை கூட்டு சேர்த்து கொண்டு வழிப்பறியில் ஈடுபட்டு வந்து உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி ஈரோடு பெருந்துறை, சேலம் ஆகிய பகுதிகளிலும் தொடர்ந்து கைவரிசை காட்டி வந்து உள்ளனர்.
வாரம் ஒரு மாவட்டம் என்ற ரீதியில் அந்த கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டு வந்து உள்ளது. எனவே அவர்களை போலீசாரால் பிடிக்க முடியவில்லை. கோவையில் வழிப்பறி செய்துவிட்டு அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் திருப்பூருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தது.
இந்த நிலையில் தான் அவர்களை சூலூர் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து உள்ளனர் என்பது தெரியவந்து உள்ளது. இதனை தொடர்ந்து சூலூர் ஈஸ்வரி, செட்டிப்பாளையம் கவுசிக் ஆகியோரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட தாக யோனேஷ்உ சேன், மொகல்ஜாபரை ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 5 பவுன் தங்கச்சங்கிலி, வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
- ஆற்றுநீருடன் கலக்கும் சாக்கடை நீர்
- காற்றில் பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
நீலாம்பூர்,
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ராவுத்தூர் என்ற இடத்தில் நொய்யல் நதி செல்கிறது.
இதன் காரணமாக ராவுத்தூருக்கு செல்வதற்கு என்று ஆற்றுப்பாலம் உள்ளது.
இதனை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆற்றில் தற்போது குறைந்த அளவு தண்ணீரே சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த ஆற்றுப்பாலத்திற்கு கீழ் பகுதியில் அனுமதி இன்றி நொய்யல் ஆற்று நீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறது.
இதன் காரணமாக ஆற்று நீருடன் சாக்கடை நீரும் கலந்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் நுரை தழும்பி நுரையுடன் ஆற்று நீர் சென்று வருகிறது.
மேலும் அவ்வாறு நுரை தழும்பி காற்றுடன் மேலே பறந்து வந்து வாகன ஓட்டிகள் மீதும் விழுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், அவ்வழியாக நடந்து செல்ப வர்களும் மிகவும் சிரமம் அடைகின்றனர்.
எனவே நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை உடனடியாக தடுத்து நிறுத்தி கழிவுகள் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரமும் அறிவிப்பு
- கலெக்டர் கிராந்திகுமார்பாடி தகவல்
கோவை,
அண்ணா பிறந்தநாளையொட்டி அக்டோபர் 14-ந் தேதி மிதிவண்டி போட்டிகள் நடைபெற உள்ளதாக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கோவை மாவட்டப் பிரிவு மூலமாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டிகள் அக்ேடாபர் 14-ந் தேதி காலை 8 மணிக்கு நடைபெற உள்ளன.
இப்போட்டியானது, கோவைப்புதூர் மின்வாரிய அலுவலகம் முன் தொடங்கி, ஆர்.டி.ஓ. அலுவலகம், சிபிஎம் கல்லூரி வழியாகச் சென்று திரும்பி மீண்டும் மின்வாரிய அலுவலகம் வந்தடையும் வகையில் மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகள் மாணவர்கள், மாணவிகளுக்குத் தனித்தனியாக நடத்தப்பட உள்ளன.
13 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ., மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 வயதுக்கு உள்பட்ட மாண வர்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ., 17 வயதுக்கு உள்பட்ட மாண வர்களுக்கு 20 கி.மீ., மாண விகளுக்கு 15 கி.மீ. தொலைவு நிர்ணயிக்கப்ப ட்டுள்ளது.
போட்டியில் பங்கேற்பவர்கள் தலைமை ஆசிரியர் கையொப்பமிட்ட வயது சான்றிதழ், ஆதார், வங்கிக் கணக்கு புத்தக நகல்களை அக்டோபர் 13-ந் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இப்போட்டியில் பங்கேற்க இந்தியாவில் தயாரான சாதாரண மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு ரூ.250 பரிசுகளும், தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்தார்
- வார்லி கலையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வதே குறிக்கோள் என பேட்டி
நீலாம்பூர்,
சூலூரில் ஒயிலாட்ட நடன கலைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கில் அதன் அசைவுகளை வார்லி என்ற வரைபட பெயிண்டிங் மூலம் வரைந்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த கோவை பெண்ணின் முயற்சி வரவேற்பை பெற்றுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஊத்துப்பாளையம் பகு தியை சேர்ந்தவர் தேவராஜ். விவசாயி. இவரது மனைவி ரம்யா.
ஒயிலாட்டம் ஆடுவதில் ஆர்வம் கொண்ட ரம்யா கடந்த 2019-ம் ஆண்டில் ஒயிலாட்டக் கலையை கனகராஜ் என்ற ஒயிலாட்ட ஆசிரியரிடம் கற்றுக்கொண்டார்.
சங்கமம் கலைக்குழு என்ற ஒயிலாட்டக் குழுவை மீட்டெடுத்து, ஒயிலாட்ட ஆசிரியராகவும் இருந்து வருகிறார்.
ஒயிலாட்டக் கலைகளை ஒயிலாட்ட ஆசிரியர் கனகராஜ் உடன் சேர்ந்து குழுவாக வெளி நாடுகளிலும் பரப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் இக்கலையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் வகையிலும், அவர்களும் அதனைக் கற்றுக் கொள்ளும் முறைகள் குறித்தும், நடன வடிவங்கள் குறித்தும் ஓவியமாக வரைந்து ஆவணப்படுத்த வேண்டும் என ரம்யாவுக்கு ஆசை ஏற்பட்டது.
இதனை அடுத்து ஒயிலாட்ட நடன அசைவுகளை வார்லி என்ற ஓவிய முறை வாயிலாக ஓவியமாக வரைந்து உள்ளார். 3 பகுதிகளாக 64 பக்கங்களில் வடிவ முறைகள் மற்றும் அசைவு முறைகளை வரைந்து உள்ளார்.
பின்னர் இந்த அசைவுகளை ஆவணப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் என்ற சாதனை புத்தக அமைப்பிற்கு அனுப்பி வைத்தார்.ரம்யாவின் இந்த முயற்சியை வரவேற்ற இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரப்படுத்தியது.
இது இப்பகுதி கிராம மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து ரம்யா கூறியதாவது:-
கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து இந்த கலையை கற்று வருகிறோம். நாங்கள் மலேசியாவுக்கு நிகழ்ச்சிக்காக சென்றபோது அங்கிருந்த மக்கள் எங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர்.
அவர்கள் கொடுத்த இந்த வரவேற்பு எங்களுக்கு பிரம்மிப்பாக இருந்தது. இந்த கலையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல வேண்டும் என்பதே எனது குறிக்கோளாக இருந்தது.
இதுதொடர்பாக நானும் எனது குழுவினரும் எப்போதும் யோசித்து கொண்டே இருந்தோம். அப்போது தான், வார்லி என்ற ஓவிய வண்ணம் தீட்டும் முறையை பற்றி அறிந்தேன்.அந்த ஓவியத்தின் வாயிலாகவே நமது கலைகளையும், அதன் வடிவங்களையும் அடுத்த தலைமுறைக்கு உணர்த்த விரும்பி வரைந்தேன். பின்னர் அதனை இந்தியன் புக் ஆப் ரெகார்ட்சுக்கு அனுப்பி வைத்தேன். இதற்கு எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் உறுதுணையாக இருந்தனர்.
பின்னர் அதனை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் அமைப்பினர் அங்கீகரித்து என்னை பாராட்டி சான்றிதழும் பதக்கங்களும் வழிங்கினர். இது எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. அத்துடன், ஒயிலாட்ட கலை அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைவதற்கு இது ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளது.
- அது ஆண் உடலா? பெண் உடலா? என்பதை கண்டுபிடிப்பதிலும் போலீசாருக்கு குழப்பமாக உள்ளது.
- தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவனாபுரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்தை நாமக்கல்லை சேர்ந்த ஒருவர் குத்தகைக்கு எடுத்து வாழை விவசாயம் செய்து வருகிறார். நேற்று தோட்டத்தில் வேலை பார்க்கும் ஒருவர் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது தோட்டத்தின் ஒரு பகுதியில், எலும்பு கூடுகள் துண்டு துண்டாக கிடந்தன. இதை பார்த்ததும் அதிர்ச்சியான அந்த நபர், சம்பவம் குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி.பாலாஜி, காரமடை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர்.
அப்போது தோட்டத்தில் சிதைந்த நிலையில் மனித சடலம் கிடந்தது. கை, கால், தலை மற்றும் உடல் பகுதிகள் அனைத்தும் துண்டு, துண்டாக அழுகிய நிலையில் கிடந்தது.
இதையடுத்து போலீசார் மனித உடலை மீட்டு விசாரித்தனர். மேலும் கோவையில் இருந்து மோப்பநாய் வீராவும் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் வீரா தோட்டத்தில் இருந்து சிறிது தூரம் விரட்டி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இது தொடர்பாக தடயவியல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்களும் விரைந்து வந்து, சம்பவ இடத்தில் கிடைத்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.
இந்த சம்பவம் தொட ர்பாக காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தோட்டத்தில் மீட்கப்பட்ட உடல், மிகவும் சிதைந்த நிலையில் காணப்படுவதால், அது ஆண் உடலா? பெண் உடலா? என்பதை கண்டுபிடிப்பதிலும் போலீசாருக்கு குழப்பமாக உள்ளது.
தொடர்ந்து போலீசார் தோட்டம் முழுவதும் அலசி ஆராய்ந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது உடல் கிடந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் ஒரு கல் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன.
அந்த கல்லை சுற்றிலும் விளக்குகளும் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்த கல் முழுவதும் ரத்தக்கறையாகவும் இருந்தது. இதனால் மர்மநபர், யாரையாவது அழைத்து வந்து நரபலி கொடுத்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. அந்த கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
மேலும் அந்த கல்லில் இருந்த ரத்தம் மனித ரத்தமா? அல்லது கோழியின் ரத்தமா? என்பதை உறுதிபடுத்துவதற்காக, அதில் இருந்த ரத்த மாதிரிகளையும் சேகரித்து ஆய்வுக்காக கோவையில் உள்ள பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் முடிவுகள் வந்த பின்னரே நரபலி கொடுக்கப்பட்டதா என்பது தெரியவரும்.
மனித உடல் கிடந்த இடத்தில் காலணி ஒன்றும் கிடந்தது. அதனையும் போலீசார் மீட்டுள்ளனர். அதனை வைத்து விசாரணையாது நடக்கிறது. இதுதவிர அண்மையில் யாராவது காணாமல் போய் உள்ளனரா? என்பதை அறிந்து கொள்வதற்காக கோவை மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ள காணாமல் போனவர்களின் தகவல்களை சேகரித்தும் விசாரித்து வருகின்றனர். கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான நீலகிரி, திருப்பூர் பகுதி போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக தனிப்ப டையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தோட்டத்தில் மனித உடல் மீட்கப்பட்டதும், அங்கு நரபலி கொடுக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுவதும் காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- தகவல் அறிந்து வந்த தொண்டாமுத்தூர் போலீசார், கல்வி துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வடவள்ளி,
கோவை தொண்டாமுத்தூர் சாலை நாகராஜபுரம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் தற்போது கட்டிட வேலை நடந்து வருகிறது. இதற்காக அங்கு தண்ணீர் தொட்டி ஒன்றும் உள்ளது.
கடந்த 6-ந் தேதி இந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்தான். இது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் காலாண்டு விடுமுறை முடிந்து இன்று முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. அதன்படி நாகராஜபுரத்தில் உள்ள தொடக்கப்பள்ளியும் திறக்கப்பட்டது. மேலும் அதன் அருகே உள்ள அங்கன்வாடி மையமும் திறக்கப்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு திறந்திருந்த அங்கன்வாடி மையத்திற்கு சென்று, அங்கு பணியில் இருந்தவரிடம் பள்ளியில் வேலை நடந்து வரும் நிலையில், வேலையை முடிக்காமல் எப்படி பள்ளிைய திறக்கலாம் என கேட்டனர்.
மேலும் பள்ளியை உடனே மூட வேண்டும். வேலை முடிந்த பின்னர் திறக்க வேண்டும் என்றனர். ெதாடர்ந்து அங்குள்ள சாலையில் அமர்ந்து சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் தொண்டாமுத்தூர் போலீசார், கல்வி துறை அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கட்டிட வேலைகள் முடிக்கும் வரை பள்ளி திறக்கப்படாது என்றும், அதுவரை அருகில் உள்ள வேறு இடத்தில் அங்கன்வாடி செயல்படும் எனவும் உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- பேரூராட்சி குப்பைகளை விவசாய நிலத்தில் கொட்டக்கூடாது
- அரசாங்கம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று காலை தொடங்கியது. அப்போது எண்ணற்றோர் கோரிக்கை மனுக்களை நேரடியாக கலெக்டரிடம் வழங்கினர். இதன்ஒருபகுதியாக ஆனைமலை தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வா கிகள் இன்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-
கோவை மாவட்டம் ஆனைமலை தாலுகா, கோட்டூர் மலையாண்டி பட்டணம் பகுதிக்கு உட்ப ட்ட பேரூராட்சியில் எண்ணற்றோர் விவசாயம் செய்து வருகின்றனர். அங்கு உள்ள வழித்தடங்களில் பேரூராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களாக குப்பைகளை கொட்டி வருகிறது. இதனால் அங்கு விவசாயம் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
ஆனைமலை விவசாயிகள் சொந்த செலவில் பாதை அமைத்தும், குளம்-குட்டைகள் மூலம் மழை நீரை சேகரித்து விவசாயம்-குடிநீருக்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலை யில் பேரூராட்சி நிர்வாகம் நீர்நிலைகளுக்கு அருகிலும், விவசாய பாதை களுக்கு செல்ல முடியாத வகையி லும் குப்பைகள் கொட்டுவது, தமிழகஅரசு மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவு களை மீறுவதாக உள்ளது.
மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆனைமலை தாலுகாவிற்கு நேரடியாக வந்திருந்து ஆய்வு செய்து இவ்விடத்தில் குப்பைகளை கொட்ட கூடாது, ஏற்கனவே உள்ள பேரூராட்சி குப்பை கிடங்கை பயன்படுத்த வேண்டும் எனற அறிவுறுத்தி சென்றார்.
இருந்தபோதிலும் விவசாய நிலங்கள் உள்ள பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து குப்பைகளை கொட்டி வருகிறது. எனவே அரசாங்கம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
- கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவர்கள் பணம் பறித்தனர்
- வடவள்ளி போலீஸ்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டனர்.
வடவள்ளி,
கோவை வடவள்ளி அருகே உள்ள யமுனா நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 45). தனியார் நிறுவன ஊழியர்.
இவர் நேற்று இரவு பணி முடிந்து சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது 3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து பிரபாகரன் வடவள்ளி போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார்.
விசாரணையில் 3 வாலிபர்களில் 2 பேர் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது.
3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- மருத்துவ அறிக்கை அரசு ஆஸ்பத்திரி டீன் மற்றும் அரசுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டது.
- ஆஸ்பத்திரிக்குள் புகுந்து, நர்சுகளை மிரட்டிய மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி டாக்டர்கள் புகார் அளித்தனர்.
கோவை,
மதுரை அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டுக்குள் புகுந்து, அங்கு பணியாற்றிய நர்சுகளை மிரட்டிய மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று தமிழகம் முழுவதும் டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை அரசு ஆஸ்ப த்திரி வளாகம் முன்பு 150க்கும் மேற்பட்ட டாக்டர்கள் இன்று காலை திடீர் தர்ணா போராட்ட த்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது பல்வேறு கோஷங்களையும் எழுப்பினர்.போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் கூறியதாவது:-
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரசவ வார்டில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் சிகிச்சையின் போது இறந்து விட்டார்.
இது தொடர்பான மருத்துவ அறிக்கையை அரசு ஆஸ்பத்திரி டீன் மற்றும் அரசுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி வினோத் என்பவர் 5 பேருடன் சம்பவத்தன்று மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார். அவர் நேராக கர்ப்பிணிகள் வார்டுக்குள் சென்று, அங்கிருந்தவர்களை வீடியோ, புகைப்படம் எடுத்துள்ளார். இது தொடர்பாக அங்கு பணியாற்றிய நர்சுகள் கேட்ட போது, அவர்களை மிரட்டியுள்ளார்.
ஆஸ்பத்திரிக்குள் புகுந்து, நர்சுகளை மிரட்டிய மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன், தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை அதிகாரிகளிடம் டாக்டர்கள் புகார் அளித்தனர்.
ஆனால் அந்த புகாரின் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று தமிழகம் முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- திண்டுக்கல் சென்று தனது மனைவியையும், மகனையும் பார்த்து வருவது வழக்கம்.
- கிணத்துக்கடவு போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள எஸ். மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ரமணி(வயது86).
இவர் கிணத்துக்கடவு கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி ஒய்வு பெற்றவர். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், சுந்தரவடி வேலு(57) என்ற மகனும் உள்ளனர்.
சுந்தர வடிவேலுக்கு திருமணம் ஆகி தனது மனைவி, குழந்தைகளுடன் திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். அங்கு பேன்சி கடை ஒன்றும் நடத்தி வருகிறார்.
ரமணியின் மனைவி தனது மகனுடன் திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். ரமணி மட்டும் தனியாக எஸ்.மேட்டுப்பாளையத்தில் வசித்து வந்தார்.
இவர் அவ்வப்போது திண்டுக்கல் சென்று தனது மனைவியையும், மகனையும் பார்த்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் சம்பவத்தன்று, ரமணி வீட்டில் இருந்து வெளியில் வந்தார். பின்னர் அங்குள்ள சாலையில் நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக ரமணி மீது மோதியது.
இதில் அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சை க்காக பொள்ளா ச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும், ரமணியின் குடும்பத்தினரும் பொள்ளாச்சிக்கு விரைந்து வந்தனர்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு போலீசார் விரைந்து வந்து இறந்த ரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ரமணியின் மகன் சுந்தரவடிவேலு கிணத்துக்கடவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






