search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் கைதிகளை அழைத்து செல்லும் போலீசாருக்கு சீருடையில் காமிரா பொருத்தம்
    X

    கோவையில் கைதிகளை அழைத்து செல்லும் போலீசாருக்கு சீருடையில் காமிரா பொருத்தம்

    • கைதிகள் தகராறு செய்வதை தடுக்க புதிய நடவடிக்கை
    • கோவை மாநகர போலீசாருக்கு முதற்கட்டமாக, 24 காமிராக்கள் வழங்கப்பட்டு உள்ளன

    கோவை,

    நீதிமன்றங்களுக்கு அழைத்து செல்லும் போது, கைதிகளின் நடவடிக்கை கண்காணிக்க, போலீசாருக்கு பாடி-ஓன் காமி ராக்கள் வழங்கப்பட்டன.

    குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின் சிறையில் அடைக்கப்படுவர். தொடர்ந்து, இவர்கள் விசாரணைக்காக கஸ்டடியில் எடுக்கப்படுவர். இதன் பின் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர்.

    இவ்வாறு கைதிகளை நீதிமன்றங்களுக்கும், சிறைக்கும் அழைத்து செல்லும் போது அவர்கள் போலீசாருடன் தகராறில் ஈடுபடுவதாக புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. அதேபோல், கைதிகளை துன்புறுத்துவதாக போலீசார் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டது.

    இதை தடுக்க, கைதிகளை அழைத்து செல்லும் போலீசாருக்கு, பாடி-ஓன் காமிரா என்னும் சீருடையில் பொருத்தக்கூடிய காமிரா வழங்கப்பட்டுள்ளது. கோவை மாநகர போலீசாருக்கு முதற்கட்டமாக, 24 காமிராக்கள் வழங்கப்பட்டு ள்ளன. இதுதவிர, கைதிகளை அழைத்து செல்லும் வாகனங்களிலும் இரு காமிரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், கைதிகளை அழைத்து செல்லும் ேபாது ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது. காமிராவில் பதிவாகும் காட்சிகளை சேமிக்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

    Next Story
    ×