என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணத்துக்கடவு அருகே மோட்டார் சைக்கிள் மோதி முன்னாள் அரசு ஊழியர் பலி
    X

    கிணத்துக்கடவு அருகே மோட்டார் சைக்கிள் மோதி முன்னாள் அரசு ஊழியர் பலி

    • திண்டுக்கல் சென்று தனது மனைவியையும், மகனையும் பார்த்து வருவது வழக்கம்.
    • கிணத்துக்கடவு போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள எஸ். மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ரமணி(வயது86).

    இவர் கிணத்துக்கடவு கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி ஒய்வு பெற்றவர். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், சுந்தரவடி வேலு(57) என்ற மகனும் உள்ளனர்.

    சுந்தர வடிவேலுக்கு திருமணம் ஆகி தனது மனைவி, குழந்தைகளுடன் திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். அங்கு பேன்சி கடை ஒன்றும் நடத்தி வருகிறார்.

    ரமணியின் மனைவி தனது மகனுடன் திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். ரமணி மட்டும் தனியாக எஸ்.மேட்டுப்பாளையத்தில் வசித்து வந்தார்.

    இவர் அவ்வப்போது திண்டுக்கல் சென்று தனது மனைவியையும், மகனையும் பார்த்து வருவது வழக்கம்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று, ரமணி வீட்டில் இருந்து வெளியில் வந்தார். பின்னர் அங்குள்ள சாலையில் நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக ரமணி மீது மோதியது.

    இதில் அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சை க்காக பொள்ளா ச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும், ரமணியின் குடும்பத்தினரும் பொள்ளாச்சிக்கு விரைந்து வந்தனர்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு போலீசார் விரைந்து வந்து இறந்த ரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ரமணியின் மகன் சுந்தரவடிவேலு கிணத்துக்கடவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×