தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறிப்பு

கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவர்கள் பணம் பறித்தனர் வடவள்ளி போலீஸ்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டனர்.
தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறிப்பு
Published on: 

வடவள்ளி,

கோவை வடவள்ளி அருகே உள்ள யமுனா நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 45). தனியார் நிறுவன ஊழியர்.

இவர் நேற்று இரவு பணி முடிந்து சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.

அப்போது 3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து பிரபாகரன் வடவள்ளி போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார்.

விசாரணையில் 3 வாலிபர்களில் 2 பேர் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது.

3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com