என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • மாணவிகள் மலர்தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
    • கருணாநிதியின் எழுத்துக்களை படித்து மாணவர்கள் வாழ்க்கையில் பின்பற்ற கலெக்டர் அறிவுரை

    சூலூர்,

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநி தியின் நூற்றாண்டு விழா வையொட்டி, அவரது பன்முகத்தன்மையை இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் வகையில், எழுத்தாளா் கலைஞா் குழுவின் மூலம் முத்தமிழ்த்தோ் என்னும் அலங்கார ஊா்தி தமிழகம் முழுவதும்

    கடந்த 4-ந் தேதி கன்னி யாகுமரியில் தொடங்கிய இந்த பயணம், அனைத்து மாவட்டத்துக்கும் சென்று, டிசம்பர் 4 -ந் தேதி சென்னையில் நிறைவடைகி றது. கருணாநிதி பயன்ப டுத்திய பேனா வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஊா்தி, இன்று காலை கோவை மாவட்டம் சூலூர் புதிய பஸ் நிலையம் வந்தடைந்தது. அலங்கரி க்கப்பட்ட முத்தமிழ் தேர் ஊர்திக்கு மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, அரசு அதிகாரிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் திரண்டு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பேனா வடிவிலான ஊர்தியை பார்த்ததும் உற்சாகமடைந்த பள்ளி மாணவிகள் மலர் தூவி மகிழ்ச்சியை வெளி ப்படுத்தினர்.

    இதையடுத்து ஊா்தியில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கலெக்டர் கிராந்தி குமார் பாடி, முன்னாள் முதல்-அ மைச்சர் கருணாநி தியின் எழுத்துக்களை மாணவர்கள் படித்து அதில் உள்ள நெறிகளை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார். தொடர்ந்து முத்தமிழ் தேரை பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செ ன்றனர்.

    இதைத்தொடர்ந்து முத்த மிழ் தேர் அலங்கார ஊர்தி கோவை கொடிசியா வளா கத்துக்கு வந்தது. அங்கும் தி.மு.க.வினர், அதிகாரிகள் மற்றும் மாணவ-மாண விகள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • 2 நாட்கள் முகாம் அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தகவல்
    • 2-வது கட்டமாக இந்தாண்டு 3500 வீடுகள் கட்டும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

    வடவள்ளி,

    கோவை மாவட்டம் பூலுவபட்டி இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் தமிழக வெளிநாட்டு வாழ் நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆய்வு மேற்கொண்டு, அங்கு உள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகள் முறையானபடி கிடைக்கி றதா? பண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அம்சங்கள் சரியானபடி கிடைக்கிறதா என்பதையும் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து அமைச்சர் மஸ்தான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் மக்களின் தேவைகளை அறிந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி தலைமையில் நெசவாளர் கண்காட்சி விற்பனை கண்காட்சி திறப்பு விழாவில் பங்கேற்றேன்.

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணா நிதி இலங்கை வாழ் மக்கள் மீது தனி கவனம் செலுத்தி னார். மேலும் அகதிகள் முகாம் என்று கூறாமல், மறுவாழ்வு முகாம் என்று அழைக்க வலியுறுத்தினார். அந்த வகையில் நாம் அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வோடு அவர்க ளின் தேவைகளை பூர்த்தி செய்வது நமது கடமை.

    கடந்தஆண்டு முதல் கட்டமாக 3500 வீடுகளும், 2-வது கட்டமாக இந்தாண்டு 3500 வீடுகளும், மொத்தத்தில் 7000 வீடுகள் கட்டும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதேபோல கோவை பூலுவப்பட்டி இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் 320 குடும்பங்கள் உள்ளன, இந்த பகுதியில் இடத்திற்கு தகுந்தாற்போல 280 வீடுகள் கட்டப்பட உள்ளது.

    அவர்களுக்கு வழங்கப்படும் பணம் மற்றும் உதவிகள் சரியான முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

    ரேஷன் கடைகளிலும் பொருட்கள் தவறாமல் வழங்குகிறார்கள். மேலும் நான் முதல்வன் திட்டம் மூலம் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. எல்லோருக்கும், எல்லாமே கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆட்சி நடத்தும் முதல்-அமைச்சர் அவர்களுக்கு வேண்டிய உதவிகள் சரியாக கிடைக்கி றதா? என நேரிடையாக சென்று ஆய்வு செய்து வரும்படி உத்தரவிட்டார்.

    அதன்படி இங்கு வந்துள்ளேன். இந்த பகுதியில் 2 நாட்கள் முகாம் அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த முகாமில் உங்களுக்கு வேண்டிய உதவிகளை கோரி விண்ணப்பம் செய்யுங்கள். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது 3 கப்பல்களில், 172 கோடி மதிப்பீட்டில் மருந்து மற்றும் உணவு பொருட்களை இலங்கைக்கு அனுப்பி உதவி செய்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, சாமிபிள்ளை மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

    • பின்சக்கரத்தில் துப்பட்டா சிக்கியது
    • கோவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சாவு

    கோவை,

    கோவை ராமநாதபுரம் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமாரி (வயது 51). இவர் சம்பவத்தன்று மகன் ராகுல் (25) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் காந்திபுரம் சென்றார். அங்கு அவர்கள் பொருட்கள் வாங்கிக் கொண்டு திரும்பினர்.

    அப்போது சிங்காநல்லூர் திருமண மண்டபம் அருகே சாந்தகுமாரி அணிந்திருந்த சுடிதார் துப்பட்டா இருசக்கர வாகன பின்புற சக்கரத்தில் சிக்கியது. இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவருக்கு தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

    சாந்தகுமாரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் டாக்டர்களின் சிகிச்சை பலனின்றி சாந்தகுமாரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோவை கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷம்
    • 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு

    கோவை,

    திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், போராடிய விவசாயிகள் மீது பொய் வழக்கு போட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ததை கண்டித்தும் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் போராட்டக் குழு சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் அரசேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய பாதுகாப்பு நலசங்க தலைவர் சுப்பிரமணியம், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க அமைப்பு செயலாளர் பிரபாகரன், கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம், மாவட்ட செயலாளர் மந்தராசலம், தமிழ்நாடு கட்சிசார்பற்ற விவசாய சங்க பொருளாளர் டாக்டர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழக அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பினர். 

    • மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்
    • விபத்தில் காயம் அடைந்த ரமேஷ்பாபு, வைபவ் ஆகியோருக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சொக்கம்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ்பாபு. இவரது மனைவி சுருதி (வயது 30).

    இவர்கள் சொக்கம்பாளையம் பிரிவில் மளிகை மற்றும் பேக்கரி கடை ஆகியவற்றை வைத்து நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் ரமேஷ்பாபு சம்பவத்தன்று இரவு கடையை பூட்டி விட்டு மோட்டார் சைக்கி ளில் மனைவி சுருதி, மகன் வைபவ் ஆகியோருடன் புறப்பட்டு சென்றார். அப்போது அன்னூர்-சோமனூர் ரோட்டில் ரமேஷ் பாபு சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் மோதியது. இந்த விபத்தில் சுருதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் கணவரின் கண்முன்பாகவே சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த ரமேஷ்பாபு, வைபவ் ஆகியோரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து தகவலறிந்த தும் அன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான சுருதி உடலை மீட்டு, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி
    • ஐயப்ப பக்தர்கள் வாகனங்களில் திரண்டு வந்து நீராடி சென்றனர்

    கோவை,

    கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி கோவை குற்றாலம் அமைந்து உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் வரத்து இருக்கும். மேலும் பருவமழைக்காலத்தின் போது நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.

    எனவே கோவை, நீலகிரி மட்டுமின்றி திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் தினந்தோறும் அதிகளவில் கோவை குற்றாலம் வந்திருந்து அங்கு உள்ள நீர்வீழ்ச்சியில் ஆனந்தமாக நீராடி செல்வது வழக்கம்.

    இதற்கிடையே மேற்கு தொடர்ச்சி மலைப்பகு தியில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு கனமழை பெய்தது. எனவே கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    தொடர்ந்து கோவை குற்றாலத்தில் குளிக்க பொதுமக்களுக்கு வனத்துறை தடை விதித்து இருந்தது. எனவே அங்கு குளிக்க வந்து சென்ற சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்து இருந்தனர்.

    மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெரியஅளவில் மழை இல்லை. எனவே கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் தண்ணீர்வரத்து இயல்புநிலைக்கு வந்தது.

    தொடர்ந்து கோவை குற்றாலத்தில் பொதுமக்கள் குளிக்க வனத்துறை இன்று முதல் அனுமதிஅளித்து உள்ளது. இது சுற்றுலா பயணிகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

    தொடர்ந்து பொது மக்கள் குடும்பத்துடன் வந்திருந்து கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் ஆனந்தமாக நீராடிவிட்டு சென்று மகிழ்ச்சியுடன் திரும்பி செல்கின்றனர்.

    இதற்கிடையே கோவை குற்றாலம் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நீர்வீழ்ச்சிக்கு செல்லும்போது மிகுந்த பாதுகாப்புடன் தகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்து உள்ளதால் சபரிமலை செல்லும் ஐயப்பன் பக்தர்கள் வாகனங்களில் திரண்டு வந்து நீராடி சென்று வருகின்றனர்.

    மேலும் நீர்வீழ்ச்சி பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக கோவை மாவட்ட போலுவம்பட்டி வனச்சரகம் சார்பில் வனத்துறை ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக கோவை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • காஜா மைதீனை 2-வது முறையாக பாய்ந்து வந்து கடித்துவிட்டு அடர்ந்த காட்டுக்குள் தப்பி சென்றது.
    • காஜாமை தீன் மிகுந்த வலியில் அலறியபடி மயங்கி விழுந்தார்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகில் உள்ள திம்மராயம்பாளையத்தை சேர்ந்தவர் காஜாமைதீன் (வயது 43). இவருக்கு மனைவி நெபீஷா, மகள் பாத்திமா ஆகியோர் உள்ளனர்.

    திம்மராயம்பாளையம் பள்ளிவாசலில் காஜா மைதீன் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர் பாம்பு பிடிக்கும் தொழிலிலும் பகுதிநேரமாக ஈடுபட்டு வந்து உள்ளார்.

    இந்த வகையில் அவர் இதுவரை 100-க்கும் மேற்பட்ட விஷப்பாம்புகளை பிடித்து பத்திரமாக காட்டுக்குள் விடுவித்து உள்ளார். எனவே காஜா மைதீனை அங்கு உள்ள பொதுமக்கள், பாம்புபிடி மன்னன் என்று மரியாதையுடன் அழைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சிறுமுகை-அன்னூர் சாலையில் தியேட்டர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள ஒரு மினி லாரியில் நாகப்பாம்பு புகுந்து உள்ளதாக தீயணைப்பு துறைக்கு தகவல் வந்தது.

    தொடர்ந்து அவர்கள் இதுகுறித்து காஜா மைதீனுக்கு தகவல் தெரிவித்து, மினி லாரிக்குள் புகுந்திருக்கும் நாகப்பாம்பை பத்திரமாக பிடித்து ஒப்படைக்கும்படி அறிவுறுத்தினர்.

    எனவே காஜாமைதீன் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். அங்கு மினி லாரிக்குள் புகுந்து இருந்த நாகப்பாம்மை பிடிக்கும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அந்த பாம்பு எதிர்பாராதவிதமாக பாய்ந்து வந்து கொத்தியது. இருந்தபோதிலும் காஜாமைதீன் நாகப்பாம்பை பத்திரமாக பிடித்துவிட்டார்.

    தொடர்ந்து அவர் வனத்துறையினருடன் சிறுமுகை காட்டுக்குள் சென்றார். அங்கு நாகப்பாம்பு பத்திரமாக விடுவிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த பாம்பு மீண்டும் காஜா மைதீனை 2-வது முறையாக பாய்ந்து வந்து கடித்துவிட்டு அடர்ந்த காட்டுக்குள் தப்பி சென்றது.

    நாகப்பாம்பு 2 முறை கொத்தியதால் காஜாமை தீன் மிகுந்த வலியில் அலறியபடி மயங்கி விழுந்தார். தொடர்ந்து அவரை வனத்துறையினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்கை அளிக்கப்பட்டது. பின்னர் காஜாமை தீன் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதற்கிடையே நாகப்பாம்பு கொத்தியதில் படுகாயம் அடைந்த காஜாமை தீன் குடும்பத்துக்கு தனியார் ஆஸ்பத்திரியில் உயர்தர சிகிச்சைகள் அளிக்க வேண்டும், மேலும் அவருக்கு தமிழக அரசு சார்பில் உரிய நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கண்காணிப்பு காமிரா மூலம் கொள்ளையர் உருவம் தெரிந்தது
    • போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.

    சூலூர்,

    கோவை சூலூர் அருகே உள்ள செங்கத்துறையில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே சுப்பாத்தாள் (வயது 65) என்பவரது வீடு உள்ளது.

    சம்பவத்தன்று இரவு கோவில் பூசாரி பூஜைகள் முடிந்த பின்னர் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். சுப்பாத்தாளும் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று இருந்தார்.

    நள்ளிரவு கோவிலின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் 2 பேர் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அம்மன் கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தாலி செயின் மற்றும் அம்மனின் 5 கிலோ வெள்ளி கீரிடம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

    பின்னர் மர்மநபர்கள் கோவிலின் அருகே உள்ள சுப்பாத்தாள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து தப்பிச் சென்றார்.

    மறுநாள் காலையில் அந்த வழியாக சென்றவர்கள் கோவிலின் பூட்டும், அருகே உள்ள வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கொள்ளையனின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனையடுத்து போலீசார் கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அம்மனின் கீரிடம் மற்றும் தாலி செயின் ஆகியவற்றை கொள்ளை யடித்து செல்லும் காட்சிகள் பதி வாகி இருந்தது. காட்சிகளை கைப்பற்றிய போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.

    • ரூ.76 கோடி மதிப்பில் கூடலூர் அம்ரூத் குடிநீர் திட்டவடிவம் குறித்து ஆய்வு
    • திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் நகராட்சியிலுள்ள மிகவும் வயதானவர்களுக்கு நிதியுதவி அளித்தார்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரிய நாயக்க ன்பாளையம் அடுத்துள்ள கோவை கூடலூர் நகராட்சியில் பொதுநிதி மற்றும் இதர திட்டத்தின் கீழ் ரூ.403.75 லட்சம் மதிப்பில் வட்டப்பாறைப்புதூர், குறள்நகர், செல்வபுரம், ஸ்ரீபாரதி நகர், கூடலூர் கவுண்டம்பாளையம், விஜயலட்சுமி நகர், ரோஸ்பார்க் அவென்யூ, முல்லை நகர், கணேசபுரம், லட்சுமி நகர், சாமிசெட்டிபாளையம், ஜி.டி.ரெசிடேன்சி, காமராஜ் நகர், அம்பேத்கார் நகர், மற்றும் ராஜூ நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கப்படவுள்ள மழைநீர் வடிகால், சிறுபாலம், சிமெண்ட் கான்கீரீட் தளம், பேவர்பிளாக், கம்பி வேலி அமைத்தல் , ஆழ்குழாய் கிணறு அமைத்தல், மேலும் தமிழகத்தில் முதன்முறையாக மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் தானியங்கி குடிநீர் மேலாண்மை கட்டுப்பாட்டுக்கருவிகள் பொறுத்துதல், 10 பேட்டரி வாகனங்கள், 2 இலகுரக வாகனங்கள் கொள்முதல் செய்தல் உள்ளிட்ட பணிகளை நீலகிரி எம்.பி. ஆ.ராசா தொடங்கி வைத்தார்.

    மேலும் காரமடை சாலையை இணைக்கும் கட்டாஞ்சி மலையில் இருந்து பாரதி நகர் வரை புதியதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.தொடர்ந்து தமிழக அரசுக்கு அனுப்பப்படும் சுமார் ரூ. 76 கோடி மதிப்பில் கூடலூர் நகராட்சிக்கு முழுவதும் குடிநீர் கொண்டு செல்லவுள்ள அம்ரூத் குடிநீர் திட்டவடிவத்தை ஆய்வு செய்தார். முன்னதாக ஒரு பெண் குழந்தைக்கு பொற்செல்வி என்று பெயர் வைத்தார்.

    மேலும் திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் நகராட்சியிலுள்ள மிகவும் வயதானவர்களுக்கு நிதியுதவி அளித்தார். இந்த நிகழ்ச்சிக்கு கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு தலைமை தாங்கினார்.ஆணையாளர் மனோகரன், துணைத்தலைவர் ரதி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் சிறப்பாளர்களாக திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம் மற்றும் கூடலூர் நகராட்சி பொறியாளர் சோமசுந்தரம், நகரமன்ற உறுப்பினர்கள் ரேவதி, சாந்தாமணி, சங்கீதா, மணிமேகலை, சித்ரா, ரம்யா, துரை செந்தில், பாலசுப்பிரமணியன், பேங்க் முருகேசன், வக்கீல் ஸ்ரீதர், மீனா கணேசன், வனிதாமணி, ஜானகி, ஈஸ்வரி, பொன்மாடசாமி, தவமணி, திமுக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அந்தேணிராஜ், சோமையம்பாளையம் ஆனந்தகுமார், நகராட்சி பணி மேற்பார்வையாளர் தர்மராஜ், பொறுத்துநர் வேலாயுதம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • விளைபொருட்களை குறித்த நேரத்தில் சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் வேதனை
    • போக்குவரத்து கழகத்திடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை.

    கோவை,

    கோவை மாவட்ட போக்குவரத்து கழகம் சார்பில் மேட்டுப்பாளையம் தலைமை அலுவலக டெப்போ, ஒண்டிப்புதூர், சுங்கம் மற்றும் உக்கடம் ஆகிய பகுதிகளில் இருந்து வெளியூருக்கு எண்ணற்ற அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    மேலும் மாநகர அளவில் காந்திபுரம், டவுன்ஹால், சாய்பாபாகாலனி ஆகிய பகுதிகளில் இருந்து தொண்டாமுத்தூர், போளுவாம்பட்டி, நரசிபுரம் ஆகிய பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    ஆனால் மேற்கண்ட அரசு பஸ்கள் சரியான நேரத்தில் குறித்த காலத்தில் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பள்ளி குழந்தைகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு உள்ள பஸ் நிறுத்தத்தில் வெகுநேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.

    மேலும் நரசிபுரம், தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தோட்டத்தில் விளைந்த தக்காளி, கத்தரிக்காய், கீரை வகைகள் ஆகியவற்றை அரசு பஸ்கள் மூலம் உழவர் சந்தைக்கு எடுத்து சென்று விற்பனை செய்வது வழக்கம்.

    ஆனால் மேற்கண்ட பகுதிகளில் அரசு பஸ்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் சரிவர இயக்கப்படுவது இல்லை. எனவே விவசாயிகள் தோட்டத்தில் உள்ள விளைபொருட்களை குறித்த நேரத்தில் சந்தைக்கு கொண்டு செல்வது மிகப்பெரிய கேள்விக்குறியாக அமைந்து உள்ளது.

    இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கோவை போக்குவரத்து கழகத்திடம் பலமுறை புகார் அளித்து உள்ளனர். இருந்தபோதிலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே தொண்டாமுத்தூர், போலுவம்பட்டி, நரசிபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உரிய நேரத்தில் விளைபொருட்களை கொண்டு செல்ல வழியின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் அரசு பஸ் போக்குவரத்து குறித்த நேரத்தில் வராததால் பள்ளி குழந்தைகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தொண்டாமுத்தூர், போலுவம்பட்டி, நரசிபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்களை குறித்த நேரத்தில் இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தற்போது கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • காட்டில் பிணமாக கிடந்தார்
    • செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை போத்தனூர் செட்டிப்பாளையம் அருகே உள்ள எம்.ஆர்.கே. நகரை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 33). லாரி டிரைவர். இவரது மனைவி ஜெயபிரியா (30). இவர் செட்டிப்பாளையம் பேரூராட்சி 13-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார்.

    ராஜசேகரின் அண்ணன் மருதபாரதி என்பவர் கடன் பிரச்சினை காரணமாக தலைமறைவாக உள்ளார். அண்ணனை பார்க்காமல் ராஜசேகர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று ராஜசேகர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அந்த பகுதியில் டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். போதையில் இருந்த அவர் சமத்துவபுரம் அருகே உள்ள காட்டிற்கு சென்றார். அங்கு வைத்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் சம்பவஇடத்திலேயே ராஜசேகர் பரிதாபமாக இறந்தார்.

    காட்டில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்டது தி.மு.க. கவுன்சிலரின் கணவர் என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட ராஜசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவிலுக்கு சென்றவரை தூக்கி வீசியது
    • கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    கோவை,

    கோவை தேவராயபுரம் அருகே உள்ள புல்லா கவுண்டன்புதூரை சேர்ந்தவர் ராசா கவுண்டர் (வயது 71). விவசாயி. சம்பவத்தன்று அதிகாலை 2 மணியளவில் இவர் சாமி தரிசனம் செய்வதற்காக முள்ளங்காடு வீரகாளியம்மன் கோவிலுக்கு சென்றார்.

    அப்போது அங்கு ஒற்றை காட்டு யானை வந்தது. யானையை பார்த்ததும் ராசாகவுண்டர் தப்பி ஓட முயன்றார். அதற்குள் யானை முதியவரை தாக்கி தூக்கி வீசியது.

    இதில் ராசா கவுண்டருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராசா கவுண்டரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×