என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • பண்ணைகளில் வழங்கப்பட்டு வரும் கோழிகளின் எடை அதிகரித்து வருகிறது.
    • கூடுதல் நாட்கள் பண்ணைகளில் வைத்து கோழிகளை பராமரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இங்கு வாரம் ஒரு கோடி கறிக்கோழிகள் உற்பத்தியாகின்றன.

    பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு, கோழிகளின் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது. சமீப நாட்களாக கறிக்கோழி விற்பனை சரிந்துள்ளது. இதனால் விலையும் குறைக்கப்பட்டு உள்ளது.

    தற்போது சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி விட்டதாலும், கார்த்திகை மாதம் என்பதாலும் கறிக்கோழியை வாங்குவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    தீபாவளிக்கு முன்பு வரை பண்ணைகளில் கறிக்கோழிகளின் கொள்முதல் விலை கிலோ ரூ.100 ஆக இருந்தது. தற்போது ரூ.20 குறைந்து கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை கடைகளில் கிலோ ரூ.250 வரை விற்பனையானது. தற்போது நுகர்வு குறைந்துள்ளதால் விலை குறைந்து கிலோ ரூ.200-க்கு தான் விற்பனை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு செயலர் சுவாதி கண்ணன் கூறியதாவது:-

    சில நாட்களாக கறிக்கோழி நுகர்வு குறைந்து வருகிறது. ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கி வருவதால் கார்த்திகை மாதம் விற்பனை குறைவது வழக்கம் தான். இந்த முறை முன் கூட்டியே விற்பனை சரிவடைந்துள்ளது.

    இதனால் பண்ணைகளில் வழங்கப்பட்டு வரும் கோழிகளின் எடை அதிகரித்து வருகிறது. கூடுதல் நாட்கள் பண்ணைகளில் வைத்து கோழிகளை பராமரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. விற்பனையை அதிகப்படுத்த வேண்டி கொள்முதல் விலையை குறைத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாகப்பாம்பு வீட்டுக்குள் நுழைய முயல்வதும், இதனை வளர்ப்புப்பூனை சீறியபடி தடுக்க முயல்வதும் தெரியவந்தது.
    • சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

    கோவை:

    கோவை கவுண்டம்பாளையம், சரவணாநகரை சேர்ந்தவர் விஜர். இவர் தனது வீட்டில் பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் விஜர் குடும்பத்தினர் சம்பவத்தன்று வீட்டில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது விஜர் வீட்டு வளாகத்தில் நாகப்பாம்பு ஒன்று புகுந்தது.

    தொடர்ந்து அந்த பாம்பு வீட்டுக்குள் நுழைய முயன்றது. இதற்கிடையே அங்கு நின்றிருந்த வளர்ப்பு பூனை தற்செயலாக நாகப்பாம்பை பார்த்தது. அது உடனடியாக பாம்பை நோக்கி சீறிக்கொண்டு வந்தது. இருந்தபோதிலும் அந்த பாம்பு வீட்டுக்குள் நுழைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. வீட்டு வாசலில் பூனையின் சீறலை தற்செயலாக கேட்ட விஜர் குடும்பத்தினர் உடனடியாக அங்கு வந்து பார்த்தனர். அப்போது நாகப்பாம்பு வீட்டுக்குள் நுழைய முயல்வதும், இதனை வளர்ப்புப்பூனை சீறியபடி தடுக்க முயல்வதும் தெரியவந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உடனடியாக வீட்டுக்கதவை மூடினர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். பாம்பு வீட்டுக்குள் நுழைய முயல்வதையும், அதனை பூனை தடுத்து நிறுத்துவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அந்த காட்சியை செல்போனில் படம் பிடித்தனர்.

    பூனையின் எதிர்ப்பால் பாம்பு அடங்கி அங்கிருந்து வெளியேறிச் சென்றது. இந்த காட்சிகளை வீடியோ எடுத்த சிலர் அதனை இணையத்தில் பரப்பினர். தற்போது சமூகவலை தளத்தில் அந்த காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

    • வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு நடக்கிறது
    • வாசியோகி மவுனகுரு பாரதிராஜா சுவாமிகள் உள்பட பலர் பங்கேற்பு

    குனியமுத்தூர், 

    கோவை கெம்பட்டி காலனியில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னூற்று பத்திரகாளியம்மன் கோவில், ஸ்ரீ கருப்பண்ணசாமி கோவிலில் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

    இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. இரவு 7 மணிக்கு இறை சக்திகளை திருகுடங்களில் எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இரவு 8 மணிக்கு முளைப்பாரி வழிபாடு, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை காலை 6 மணிக்கு திருமுறை பாராயணம் நடைபெறுகிறது.

    24-ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 4 மணிக்கு நான்காம் கால வேள்வியும், திருக்குடங்கள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    காலை 7 மணிக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நிகழ்ச்சியில் வாசியோகி மவுனகுரு பாரதி ராஜா சுவாமிகள், கோவைபுதூர் சிவ ஸ்ரீ சிவஜோதி சித்தரையா, சிவ ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள் உள்பட பலரும் கலந்து கொள்கின்றனர். 

    • ஆவேசத்துடன் தாக்கி தூக்கி வீசியது
    • வனத்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை

    வால்பாறை, 

    கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அதிலும் காட்டு யானைகள், சிறுத்தை, கரடி, காட்டெருமை ஆகியை அடிக்கடி வனத்தில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது,

    வால்பாறை அருகே ரயான் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 65). இவர் சம்பவத்தன்று மாலை பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றார்.

    அப்போது தேயிலை தோட்டத்துக்குள் பதுங்கி இருந்த காட்டெருமை ஆவேசத்துடன் தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த செல்லப்பன் சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியானார்.இதுகுறித்து தகவலறிந்ததும் வால்பாறை போலீசார் மற்றும் மானாம்பள்ளி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் செல்லப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டுமென வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வங்கி கணக்கில் பணம் எடுத்த விவகாரம்
    • விஷம் குடித்து இறந்தார்

    கோவை,

    கோவை பீளமேடு, ராஜகோபால் வீதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் விஷ்வா (வயது 22). இவர் கண்காணிப்புகாமிரா பொருத்தும் வேலை செய்துவந்தார்.

    இந்த நிலையில் அவர் கடந்த 18-ந்தேதி தாய் கீதாவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரம் பணத்தை எடுத்தார். இதுகுறித்து கீதாவின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தது.

    யார் பணத்தை எடுத்தனர் என்று தெரியாததால், கீதா போலீசில் புகார் அளிப்பது என முடிவு செய்தார். அதன்படி அவர் வெளியே சென்று இருந்த விஷ்வாவிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க உடன் வரும்படி அழைத்தார்.

    போலீசில் புகார் அளித்தால் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் இருந்த விஷ்வா, சாணிப்பவுடரை கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் விஷ்வா பரிதாபமாக இறந்தார்.

    • கத்தியை காட்டி மிரட்டிவிட்டு தப்பியோட்டம்
    • போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    கோவை, 

    கோவை பீளமேடு சக்தி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 70). இவர் சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் கோயில் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர் கண்ணம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த 2 அரை பவுன் தங்க செயினை பறித்து தப்பி ஓடினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மூதாட்டி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார்.

    இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் தப்பி ஓடிய வாலிபரை மடக்கி பிடிக்க முயன்றார். ஆனால் பிடிக்க முயன்றவர்களை வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி அங்கு இருந்து தப்பி ஓடினார்.

    இது குறித்து கண்ணம்மாள் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மூதாட்டியின் 2 அரை பவுன் செயினை பறித்த வெள்ளலூரை சேர்ந்த ஆகாஷ் (23) என்பவரை கைது செய்தனர்.

    பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • மதிப்பெண் குறைவாக எடுத்ததை பெற்றோர் கண்டித்ததால் வேதனை
    • கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சாவு

    கோவை, 

    கோவை மதுக்கரை அருகே உள்ள எம்.எல்.ஏ., வீதியை சேர்ந்தவர் மகேஷ்கு மார். இவர் கண்ணம்பா ளையம் பஞ்சாயத்தில் உதவி செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சுருதிகா (வயது 19).

    இவர் தனியார் கல்லூரியில் பி.சி.ஏ., 2-ம் ஆண்டு படித்து வந்தார். மாணவி நடந்து முடிந்த செமஸ்டர் தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்து இருந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த போது அவரது பெற்றோர் மதிப்பெண் குறைவாக எடுத்ததற்கு கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த சுருதிகா வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் இருந்த சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கினார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக மாணவியை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவி க்கு டாக்டர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சுருதிகாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 29-ந்தேதிக்குள் புகார் மனுக்களை அனுப்பி வைக்க வேண்டும்
    • கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு மண்டல தபால்துறை அலுவலகம் வேண்டுகோள்

    கோவை,

    கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு மண்டல தபால்துறை அலுவலகத்தில் மண்டலஅளவிலான குறைதீர்ப்புக்கூட்டம் விரைவில் நடக்க உள்ளது.

    எனவே வாடிக்கையாளர்கள் தங்களின் புகார் மனுக்களை துணை இயக்குநர், மேற்கு மண்டல அலுவலகம், கோவை என்ற முகவரிக்கு வருகிற 29-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    மேலும் கடிதத்தின் மேலுறையில் தபால்குறைதீர்ப்பு கூட்ட புகார் என எழுதியிருக்க வேண்டும். மேலும் பதிவு தபால், விரைவு தபால், பணவிடை தொடர்பான புகார்களில் தபால் பதிவு செய்த நாள், நேரம், அனுப்புநர், பெறுநர், முழு முகவரி, தபால் பதிவெண் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும்.

    அஞ்சலக சேமிப்பு கணக்கு மற்றும் காப்பீடு தொடர்பான புகார்களில் சேமிப்பு கணக்கு எண், காப்பீட்டு எண், சேமிப்பு கணக்கு வைத்திருப்பவரின் பெயர், பணப்பிடித்தம் தொடர்பான தகவல்கள் குறிப்பிட வேண்டியது அவசியம்.

    மேற்கண்ட தகவலை கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு மண்டல தபால்துறை அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • மீட்டுத்தரக்கோரி கணவர் போலீசில் புகார்
    • 29 வயது வாலிபர் மற்றும் பெண்-2 குழந்தைக்கு போலீசார் வலை

    கோவை, 

    கோவை சூலூர் அருகே உள்ள செல்வலட்சுமி புரத்தை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.

    இளம்பெண் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்த 29 வயது வாலிபர் ஒருவருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாள டைவில் கள்ளக்காதலாக மாறியது.

    கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் வாலிபரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது.

    இதனையடுத்து அவர் தனது மனைவியை கண்டித்து வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறி விட்டார். இதனால் இளம்பெண் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் தனது 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவரது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். வேலை முடிந்து மாலையில் வீட்டிற்கு திரும்பிய இளம்பெண்ணின் கணவர் தனது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தாார்.

    அவர் இளம்பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து இளம்பெண்ணின் கணவர் சூலூர் போலீசில் மாயமான தனது மனைவி மற்றும் குழந்தைகளை மீட்டு தரும்படி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாணவி, தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகளிடம் அவர் தனித்தனியாக விசாரித்தார்.
    • தலைமை ஆசிரியை கூறுகையில் மாணவியின் தரப்பின் அவரது பெற்றோர் அளித்தள்ள புகார் பொய்யானது.

    கோவை:

    கோவை மாவட்டம் துடியலூர் அசோகபுரம் பகுதியில் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைந்து உள்ளது. இங்கு 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த பள்ளியில் 7-ம்வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் மாவட்ட முதன்மை கல்லி அதிகாரியை நேரில் சந்தித்து அவரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தார்.

    நான் சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவள். துடியலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 7-ம்வகுப்பு படித்து வருகிறேன். இந்த நிலையில் எங்கள் பள்ளி வகுப்பு ஆசிரியை என்னிடம் அடிக்கடி மதரீதியாக விரோதம் காட்டி வருகிறார்.

    மேலும் அவர் என்னை நேரில் வரவழைத்து அவரது செருப்பை துடைக்க சொல்லி வற்புறுத்தினார். இதற்கு நான் மறுத்து விட்டேன். எனவே ஆத்திரம் அடைந்த ஆசிரியை என்னை அவதூறாக பேசி தாக்க பாய்ந்தார். மேலும் என் தந்தை செய்யும் தொழில் குறித்து அவதூறாக பேசி ஏளனம் செய்தார்.

    இது என்னை வெகுவாக பாதித்தது. மேலும் எனது கல்வித்திறனும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே நான் இதுகுறித்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியையிடம் நேரடியாக புகார் அளித்தேன். ஆனாலும் அவர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே கோவை மாவட்ட கல்வித்துறை உயரதிகாரிகள் இதுதொடர்பாக நேரடி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    மாணவி புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கு கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி இன்று நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மாணவி, தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகளிடம் அவர் தனித்தனியாக விசாரித்தார்.

    பள்ளி தலைமை ஆசிரியை கூறுகையில் மாணவியின் தரப்பின் அவரது பெற்றோர் அளித்தள்ள புகார் பொய்யானது. எதற்காக இந்த புகார் கொடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. புகாரில் குறிப்பிட்டது போன்று எந்த சம்பவங்களும் இங்கு நிகழவில்லை என்றார்.

    • மலைரெயில் பாதையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 முறை மண்சரிவு ஏற்பட்டது.
    • ரெயில்வே ஊழியர்கள் தண்டவாள பாதைகளை சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தினந்தோறும் மலை ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    இந்த ரெயிலில் பயணம் செய்தால் வழியில் இருக்கும் குகைகள், பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் பச்சைப்பசேல் இயற்கை காட்சிகளை கண்குளிர கண்டுகளிக்க முடியும்.

    எனவே தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் மேட்டுப்பாளையம்-ஊட்டி ரெயிலில் பயணம் செல்ல அதிகம் விரும்புவர்.

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அங்குள்ள பல்வேறு பகுதிகளில் மண்சரிவு, பாறைகள் உருண்டு விழுதல், சாலையோர மரங்கள் முறிந்து விழுவது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

    மேலும் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான மலைரெயில் பாதையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 முறை மண்சரிவு ஏற்பட்டது. இதன்காரணமாக அந்த பகுதிகளில் மலைரெயில் போக்குவரத்து ஏற்கனவே 2 தடவைகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் அங்கு சீரமைப்பு பணிகள் முடிந்தன. தொடர்ந்து கடந்த 19-ந் தேதி மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

    இந்த நிலையில் மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மேட்டுப்பாளையம்-ஹில்குரோவ் இடையே 3 பகுதிகளில் தண்டவாள பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன. மேலும் மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தை மணல் மூடியது. பாதையோரத்தில் நின்றிருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், தண்டவாளத்தில் ஜல்லிக்கற்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. எனவே தண்டவாளப்பாதைகள் அந்தரத்தில் தொங்கின.

    இதற்கிடையே மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து 180 பயணிகளுடன் மலைரெயில் இன்று காலை 7:10 மணிக்கு புறப்பட்டது. அப்போது ஹில்குரோவ் அருகே 3 இடங்களில் தண்டவாள பாதையில் மண்சரிவு ஏற்பட்டது தெரியவந்தது.

    தொடர்ந்து மலைரெயில் கல்லாறு பகுதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த ரெயில் மீண்டும் மேட்டுப்பாளையத்தை வந்தடைந்தது. தொடர்ந்து மலை ரெயிலில் பயணிப்பதற்காக டிக்கெட் எடுத்திருந்த சுற்றுலா பயணிகளிடம் கட்டணத்தொகை திருப்பி தரப்பட்டது. இதனால் சுற்றுலாபயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    மண்சரிவு பற்றிய தகவல் அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு தற்போது 25-க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் தண்டவாள பாதைகளை சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான மலைரெயில் போக்குவரத்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சுவாசக் குழாய் மூலமாகத்தான் இந்த வைரஸ் உடலுக்குள் செல்கிறது.
    • ஒருவர் இருமும் போதும், தும்மும் போதும் மற்றவருக்கு பரவுகிறது.

    கோவை:

    கோவையில் ஃபுளூ வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதன் காரணமாக உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    கோவை மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சராசரியாக காய்ச்சல் பாதிப்புக்காக ஒரு நாளைக்கு உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையானது 100-ஐ கடந்துள்ளது.

    காலநிலை மாற்றம், பண்டிகை காலத்தை முன்னிட்டு கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களுக்கு மக்கள் சென்று வந்தது ஆகியவை ஃபுளூ வைரஸ் பரவ காரணங்கள் ஆகும். குழந்தைகள், முதியவர்களுக்கு விரைவாக இந்த வைரஸ் பரவுகிறது.

    சுவாசக் குழாய் மூலமாகத்தான் இந்த வைரஸ் உடலுக்குள் செல்கிறது. ஒருவர் இருமும் போதும், தும்மும் போதும் மற்றவருக்கு பரவுகிறது.

    பொதுமக்கள் மருந்து கடைகளில் சுயமாக மருந்து வாங்கி உட்கொள்ளக் கூடாது. மருத்துவரின் ஆலோசனை பெற்றே மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

    இந்நிலையில், ஃபுளூ காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக கோவையில் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்துகொள்ள வேண்டும். முடிந்தவரை கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×