search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flu virus fever"

    • சுவாசக் குழாய் மூலமாகத்தான் இந்த வைரஸ் உடலுக்குள் செல்கிறது.
    • ஒருவர் இருமும் போதும், தும்மும் போதும் மற்றவருக்கு பரவுகிறது.

    கோவை:

    கோவையில் ஃபுளூ வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதன் காரணமாக உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    கோவை மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சராசரியாக காய்ச்சல் பாதிப்புக்காக ஒரு நாளைக்கு உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையானது 100-ஐ கடந்துள்ளது.

    காலநிலை மாற்றம், பண்டிகை காலத்தை முன்னிட்டு கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களுக்கு மக்கள் சென்று வந்தது ஆகியவை ஃபுளூ வைரஸ் பரவ காரணங்கள் ஆகும். குழந்தைகள், முதியவர்களுக்கு விரைவாக இந்த வைரஸ் பரவுகிறது.

    சுவாசக் குழாய் மூலமாகத்தான் இந்த வைரஸ் உடலுக்குள் செல்கிறது. ஒருவர் இருமும் போதும், தும்மும் போதும் மற்றவருக்கு பரவுகிறது.

    பொதுமக்கள் மருந்து கடைகளில் சுயமாக மருந்து வாங்கி உட்கொள்ளக் கூடாது. மருத்துவரின் ஆலோசனை பெற்றே மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

    இந்நிலையில், ஃபுளூ காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக கோவையில் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்துகொள்ள வேண்டும். முடிந்தவரை கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×