என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலாந்துறை அருகே யானை தாக்கி விவசாயி படுகாயம்
- கோவிலுக்கு சென்றவரை தூக்கி வீசியது
- கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
கோவை,
கோவை தேவராயபுரம் அருகே உள்ள புல்லா கவுண்டன்புதூரை சேர்ந்தவர் ராசா கவுண்டர் (வயது 71). விவசாயி. சம்பவத்தன்று அதிகாலை 2 மணியளவில் இவர் சாமி தரிசனம் செய்வதற்காக முள்ளங்காடு வீரகாளியம்மன் கோவிலுக்கு சென்றார்.
அப்போது அங்கு ஒற்றை காட்டு யானை வந்தது. யானையை பார்த்ததும் ராசாகவுண்டர் தப்பி ஓட முயன்றார். அதற்குள் யானை முதியவரை தாக்கி தூக்கி வீசியது.
இதில் ராசா கவுண்டருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராசா கவுண்டரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






