என் மலர்
சென்னை
- என்னை அவமதித்து விட்டீர்கள் எனக்கூறி ஆளுநர் வெளியேறினார்.
- சட்டசபை மரபை ஆளுநர் மீற வேண்டாம் என சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்தார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சட்டசபைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மலர்க்கொத்து, கலைஞர் மு.கருணாநிதி வரலாறு புத்தகத்தை கொடுத்து சபாநாயகர் அப்பாவு வரவேற்றார்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியது. சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் உரையை படிக்காமல் இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். 4-வது ஆண்டாக இந்த ஆண்டும் உரையை படிக்காமல் ஆளுநர் வெளியேறியதால் சற்றுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
சட்டசபையின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை, என்னை அவமதித்து விட்டீர்கள் எனக்கூறி ஆளுநர் வெளியேறினார்.
அப்போது, அமைச்சரவை எழுதி கொடுத்ததை படிக்க வேண்டும். சட்டசபை மரபை ஆளுநர் மீற வேண்டாம் என சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்க மறுத்த உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார்
ஆளுநர் தனது உரையை புறக்கணித்த நிலையில் தமிழக அரசின் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை சபாநாயகர் அப்பாவு பட்டியலிட்டார்.
- மாநிலம் ரூபாய் 12 லட்சம் கோடிக்கும் அதிகமான பெரும் முதலீடுகளை ஈர்த்துள்ளது என்ற கூற்று உண்மைக்கு எட்டாத தொலைவில் உள்ளது.
- 50 சதவீதத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன.
சென்னை:
சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை வாசிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்தது ஏன்? என்பது பற்றி 13 காரணங்களுடன் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1) ஆளுநரின் ஒலிவாங்கி (மைக்) மீண்டும், மீண்டும் அணைக்கப்பட்டது மற்றும் அவர் பேச அனுமதிக்கப்படவில்லை;
2) தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரையில் ஆதாரமற்ற பல கோரல்களும், தவறான தகவல்களும் இடம்பெற்றிருந்தன. மக்களைப் பாதிக்கும் பல முக்கியப் பிரச்சனைகள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன;
3) மாநிலம் ரூபாய் 12 லட்சம் கோடிக்கும் அதிகமான பெரும் முதலீடுகளை ஈர்த்துள்ளது என்ற கூற்று உண்மைக்கு எட்டாத தொலைவில் உள்ளது. வருங்கால முதலீட்டாளர்களுடனான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகித அளவிலேயே உள்ளன. உண்மையான முதலீடு அதில் ஒரு சிறு பகுதி மட்டுமே. முதலீட்டுத் தரவுகள், முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு குறைவான ஈர்ப்பு மிக்க மாநிலமாக மாறி வருவதை காட்டுகின்றன. 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை, மாநிலங்களில் அந்நிய நேரடி முதலீட்டைப் பெறுவதில் தமிழ்நாடு 4-வது பெரிய மாநிலமாக இருந்தது. இன்று அது 6-வது இடத்தில் நீடிக்கவே போராடுகிறது.
4) போக்சோ பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 55 சதவீதத்துக்கு மேலாகவும், பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் சம்பவங்கள் 33 சதவீதத்துக்கு மேலாகவும் அபாயகரமாக அதிகரித்துள்ள போதிலும், பெண்களின் பாதுகாப்புப் பிரச்சனை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது;
5) போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளின் பரவலான புழக்கம் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட இளைஞர்களிடையே போதைப்பொருள் துஷ்பிரயோக வழக்குகளின் கூர்மையான அதிகரிப்பு, ஒரு மிகத் தீவிரமான கவலையாகும். போதைப்பொருள் பழக்கத்தால் ஒரே ஆண்டில் 2ஆயிரம் பேர், அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள், தற்கொலை செய்துள்ளனர். இது நமது எதிர்காலத்தை மிகத் தீவிரமாகப் பாதிக்கிறது. இவை வெகு சாதாரணமாகப் புறக்கணிக்கப்பட்டு உள்ளன;
6) தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்களும், தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையும் கடுமையாக அதிகரித்து வருகின்றன. இருப்பினும், இவை முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளன;
7) நமது மாநிலத்தில் ஒரே ஆண்டில் சுமார் 20 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்-அதாவது கிட்டத்தட்ட தினமும் 65 தற்கொலைகள். நாட்டின் வேறு எங்கும் நிலைமை இவ்வளவு அபாயகரமாக இல்லை. தமிழ்நாடு இந்தியாவின் தற்கொலைத் தலைநகரம் என்று குறிப்பிடப்படுகிறது. இருந்தும், இது அரசாங்கத்திற்கு ஒரு கவலையாகத் தெரியவில்லை. இவை புறக்கணிக்கப்பட்டு உள்ளன;
8) கல்வித் தரத்தில் தொடர்ச்சியான சரிவும், கல்வி நிறுவனங்களில் பரவலான நிர்வாகச் சீர்கேடும் நமது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதகமாகப் பாதிக்கின்றன. 50 சதவீதத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. மேலும், கவுரவ விரிவுரையாளர்கள் மாநிலம் முழுவதும் அமைதியின்மையுடன் உள்ளனர். நமது இளைஞர்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்கின்றனர். இவை அரசுக்கு ஒரு கவலையாகத் தெரியவில்லை; மேலும், இந்தப் பிரச்சனை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது;
9) பல ஆண்டுகளாகத் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படாததால், பல ஆயிரம் கிராம ஊராட்சிகள் செயலிழந்து கிடக்கின்றன. அவை நேரடியாக அரசின் சிறப்பு அதிகாரிகளின் கீழ் உள்ளன. கோடிக்கணக்கான மக்களின் அடிமட்ட ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இவை, அரசியலமைப்பின் எழுத்துக்கும் உணர்வுக்கும் எதிரானவை. கிராம ஊராட்சிகள் மீட்டெடுக்கப்படுவதற்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும், இது ஆளுநர் உரையில் குறிப்பிடப்படவே இல்லை.
10) மாநிலத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான கோவில்கள் அறங்காவலர் குழுக்கள் இல்லாமல், மாநில அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படுகின்றன. கோடிக்கணக்கான பக்தர்கள் கோவில்களின் தவறான நிர்வாகத்தால் மிகுந்த மனவேதனையும் விரக்தியும் அடைந்துள்ளனர். பழங்கால கோவில்களை மீட்டெடுப்பது மற்றும் பாதுகாப்பது குறித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் முக்கிய வழிகாட்டுதல்கள் 5 ஆண்டுகள் கடந்தும் செயல்படுத்தப்படவில்லை. பக்தர்களின் உணர்வுகள் ஈவு இரக்கமின்றிப் புறக்கணிக்கப்படுகின்றன;
11) தொழிலை நடத்துவதற்கான வெளிப்படையான மற்றும் மறைமுக செலவுகள் காரணமாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெரும் அழுத்தத்தில் உள்ளன. அவை வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சிக்கு மிக முக்கியமான துறையாகும். இருப்பினும், நாட்டில் 5.5 கோடிக்கு அதிகமான பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ள நிலையில், மகத்தான வளர்ச்சி சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், தமிழ் நாட்டில் சுமார் 40 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில்முனை வோர் தங்கள் நிறுவனங்களை மற்ற மாநிலங்களில் அமைக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகுகின்றனர். இந்த விவகாரம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது;
12) ஏறக்குறைய அனைத்துத் துறைகளிலும் கீழ்மட்ட ஊழியர்களிடையே பரவலான அதிருப்தி நிலவுகிறது. அவர்கள் அமைதியற்றவர்களாகவும் விரக்தியுடனும் உள்ளனர். அவர்களின் நியாயமான குறைகளைத் தீர்ப்பதற்கான வழிகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை;
13) தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது மற்றும் அடிப்படை அரசியலமைப்பு கடமை புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆளுநர் உரையை படிக்காமல் இந்த ஆண்டும் ஆர்.என்.ரவி வெளியேறினார்.
- ஆளுநர் வெளியேறியதால் சற்றுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை புரிந்தார். ஆளுநருக்கு மலர்க்கொத்து, கலைஞர் மு.கருணாநிதி வரலாறு புத்தகத்தை கொடுத்து சபாநாயகர் அப்பாவு வரவேற்றார்.
பரபரப்பான சூழ்நிலையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியது.
இந்நிலையில் உரையை படிக்காமல் இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். 4-வது ஆண்டாக இந்த ஆண்டும் உரையை படிக்காமல் ஆளுநர் வெளியேறியதால் சற்றுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
ஆளுநர் வெளியேறியதை தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக்கூறி பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டம், ஒழுங்கு விவகாரம் குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததாகக்கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறி தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லை, சட்டம், ஒழுங்கு எங்கே போச்சு? ஜனநாயகம் எங்கே போச்சு? என முழக்கங்கள் எழுப்பினர்.
- தாக்கிய இளைஞர்கள் கஞ்சா போதையில் இந்த தாக்குதலை நடத்தியதாக செய்திகள் வருகின்றன.
- சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
வேளச்சேரியில் டெலிவரி ஊழியர் தாக்கப்பட்டதற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை வேளச்சேரியில் நேற்று , மளிகைப் பொருள் டெலிவரி செய்யும் நபரான பார்த்திபன் என்பவர் மீது, இருவர் நடுரோட்டில் அரிவாளால் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இந்த தாக்குதல் குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளி என்பது நெஞ்சை பதைக்க வைக்கிறது.
இன்னும் எத்தனை முறை, இதுபோன்ற கொடூரமான காட்சிகளை தமிழக மக்கள் காண வேண்டும் மு.க,.ஸ்டாலின் அவர்களே?
தாக்கிய இளைஞர்கள் கஞ்சா போதையில் இந்த தாக்குதலை நடத்தியதாக செய்திகள் வருகின்றன.
நான்கரை ஆண்டுகளாக நான் எதைத் தொடர்ந்து எச்சரித்து வந்தேனோ, அது இப்போது சர்வசாதாரணமாகி இருக்கிறது. இப்படி மக்களுக்கு உயிர் பயத்தைக் காட்டுவதை தன் சாதனையாக கருதுகிறாரா இன்றைய பொம்மை முதலமைச்சர்?
காவல்துறையை ஒட்டுமொத்தமாக சீர்குலைத்துவிட்டு, அரிவாள்களுக்கும், துப்பாக்கி கலாச்சாரதிற்கும் , போதைப் பொருட்களுக்கும் தமிழக மக்களை இரையாக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
பார்த்திபனை தாக்கியோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் காணப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரமாக மீண்டும் ஏற்றத்திலேயே இருக்கிறது.
- தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வரும் வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த டிசம்பர் மாதம் 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது. அதன் பின்னர் விலை சற்று குறைந்த நிலையில், அதே மாதம் 22-ந்தேதியில் இருந்து மீண்டும் அதிகரித்தது. 28-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு, பிறகு விறுவிறுவென இறங்கியது. தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் காணப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரமாக மீண்டும் ஏற்றத்திலேயே இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக, நேற்று தங்கம் விலை உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 280-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 240-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.170-ம், சவரனுக்கு ரூ.1,360-ம் உயர்ந்தது. அதன்படி, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 450-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. கிராமுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,610-க்கும் சவரனுக்கு 1,280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்பனையானது.
தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வரும் வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 330 ரூபாய்க்கும், பார் வெள்ளி 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
19-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,600
18-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240
17-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240
16-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,840
15-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,320
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
19-1-2026- ஒரு கிராம் ரூ.318
18-1-2026- ஒரு கிராம் ரூ.310
17-1-2026- ஒரு கிராம் ரூ.310
16-1-2026- ஒரு கிராம் ரூ.306
15-1-2026- ஒரு கிராம் ரூ.310
- தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியது.
- 4-வது ஆண்டாக இந்த ஆண்டும் உரையை படிக்காமல் ஆளுநர் வெளியேறியதால் சற்றுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் கூடும் சட்டசபை கூட்டத்தொடரின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவது வழக்கம். அதன் பின்னர் அந்த உரையை சபாநாயகர் தமிழில் வாசிப்பதும் வழக்கமாக உள்ளது.
ஆனால் கடந்த 2023-ம் ஆண்டில், அரசு கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி அப்படியே படிக்காமல், சில திருத்தங்களை மேற்கொண்டு வாசித்தார். எனவே பேரவை விதிப்படி அந்த உரையை ரத்து செய்துவிட்டு, ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அரசு கொடுத்திருந்த ஆளுநர் உரை, அவைக்குறிப்பில் பதிவு செய்யப்பட்டது.
ஆனால் 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் ஆளுநர் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல் புறக்கணித்தார். அதற்கு, தான் கேட்டுக்கொண்டபடி தேசிய கீதத்தை அவை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கவில்லை என்ற காரணத்தை கூறினார்.
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் 20-ந்தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது என்றும் அன்றைக்கு நடக்கும் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார் என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை புரிந்தார். ஆளுநருக்கு மலர்க்கொத்து, கலைஞர் மு.கருணாநிதி வரலாறு புத்தகத்தை கொடுத்து சபாநாயகர் அப்பாவு வரவேற்றார்.
பரபரப்பான சூழ்நிலையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியது.
இந்நிலையில் உரையை படிக்காமல் இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். 4-வது ஆண்டாக இந்த ஆண்டும் உரையை படிக்காமல் ஆளுநர் வெளியேறியதால் சற்றுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
சட்டசபையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடவில்லை எனக்கூறி ஆளுநர் வெளியேறினார்.
- சட்டசபை கூட்டத்தொடரின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவது வழக்கம்.
- சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் கூடும் சட்டசபை கூட்டத்தொடரின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவது வழக்கம். அதன் பின்னர் அந்த உரையை சபாநாயகர் தமிழில் வாசிப்பதும் வழக்கமாக உள்ளது.
ஆனால் கடந்த 2023-ம் ஆண்டில், அரசு கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி அப்படியே படிக்காமல், சில திருத்தங்களை மேற்கொண்டு வாசித்தார். எனவே பேரவை விதிப்படி அந்த உரையை ரத்து செய்துவிட்டு, ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அரசு கொடுத்திருந்த ஆளுநர் உரை, அவைக்குறிப்பில் பதிவு செய்யப்பட்டது.
ஆனால் 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் ஆளுநர் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல் புறக்கணித்தார். அதற்கு, தான் கேட்டுக்கொண்டபடி தேசிய கீதத்தை அவை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கவில்லை என்ற காரணத்தை கூறினார்.
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் 20-ந்தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது என்றும் அன்றைக்கு நடக்கும் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார் என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை புரிந்தார். ஆளுநருக்கு மலர்க்கொத்து, கலைஞர் மு.கருணாநிதி வரலாறு புத்தகத்தை கொடுத்து சபாநாயகர் அப்பாவு வரவேற்றார்.
பரபரப்பான சூழ்நிலையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆளும் கட்சி மீதும் அரசு மீதும் என்னென்ன குற்றச்சாட்டுகளை வைக்கலாம்? என்பதை அ.தி.மு.க., பா.ஜ.க. போன்ற கட்சிகள் பட்டியல் போட்டு கொண்டு வரும். அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்பட அரசு தரப்பினரும் தயாராகி வருவார்கள். எனவே இந்த சட்டசபை கூட்டத்தொடரில் அரசியல் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.
- முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதன் பின்னர் ஆளுநர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவார்.
- சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும்.
சென்னை:
தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவது வழக்கம். ஆனால் தேசிய கீதத்தை முதலில் இசைக்க வேண்டும் என்று ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவி வைத்த வேண்டுகோளை ஏற்காத நிலையில், ஆளுநர் இன்று உரை நிகழ்த்துவாரா? அல்லது வாசிக்காமலேயே சென்றுவிடுவாரா? என்பது இன்றுதான் தெரியும்.
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதன் பின்னர் ஆளுநர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவார். அந்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பார். ஆளுநர் உரை நிகழ்த்தாமல் சென்றுவிட்டால், சபாநாயகர் அதை வாசித்து முடிப்பார். பின்னர் தேசிய கீதம் இசைக்கப்படும். அதோடு இன்றைய அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும்.
அதன் பின்னர் சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்பது அதில் முடிவு செய்யப்படும். மறைந்த எம்.எல்.ஏ. பொன்னுசாமிக்கு சட்டசபையில் 21-ந்தேதியன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவை நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்படும் என்று தெரிகிறது.
வருகிற 22-ந் தேதியன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதில் எம்.எல்.ஏ.க்கள் விவாதம் நடைபெறும். அவர்களுக்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த கூட்டத்தொடரின் கடைசி நாளான 24-ந் தேதியன்று பதிலளிப்பார் என்று கூறப்படுகிறது.
சட்டசபையில் இன்று வாசித்தளிக்கப்படும் ஆளுநர் உரையில், தமிழக அரசின் புதிய அறிவிப்புகள் இடம் பெறுமா? என்ற பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- அதிமுக- பாஜக கூட்டணியில் இணைவது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நிலையில், இபிஎஸ்-ஐ சந்தித்து பேசி இருப்பதாக கூறப்பட்டது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்தித்ததாக தகவல் வெளியானது.
அவர், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியதாகவும், அதிமுக- பாஜக கூட்டணியில் இணைவது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியானது.
கடந்த நவம்பர் மாதம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக தனியரசு பேசி இருந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை தாம் சந்திக்கவில்லை என கொ.இ.பே தலைவர் தனியரசு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
- 90 கிலோமீட்டர் வரை செல்லும் காலிங்கராயன் கால்வாயை அமைத்து, வறண்ட பகுதிகளிலும் பாசன வசதி செய்து தந்தவர்.
- கடந்த 2018ஆம் ஆண்டு ஈரோட்டில் காலிங்கராயன் அவர்களின் மணிமண்டபத்தை நான் திறந்துவைத்ததையும் இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பாண்டிய மன்னன் சடையவர்மன் வீரபாண்டியனின் படைத் தளபதியாக இருந்தவரும், தனது விடா முயற்சியாலும் நம்பிக்கையாலும், கொண்ட கொள்கையில் இருந்து வழுவாது, 90 கிலோமீட்டர் வரை செல்லும் காலிங்கராயன் கால்வாயை அமைத்து, வறண்ட பகுதிகளிலும் பாசன வசதி செய்து தந்து, சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பே விவசாய புரட்சியை தமிழ்நாட்டில் மேற்கொண்டவருமான காலிங்கராயன் அவர்களின் நினைவாக கொண்டாடப்படும் தை 5ஆம் நாளான காலிங்கராயன் தினத்தில், அவர்தம் தியாகத்தையும் புகழையும் போற்றி வணங்குவதுடன்...
கடந்த 2018ஆம் ஆண்டு ஈரோட்டில் காலிங்கராயன் அவர்களின் மணிமண்டபத்தை நான் திறந்துவைத்ததையும் இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பா.ம.க. சின்னம், கொடியை பயன்படுத்துவதில் குழப்பம் நீடிக்கிறது.
- பா.ம.க. தங்களுக்கே சொந்தம், கட்சியில் தனக்கே முழு அதிகாரம் என்று உத்தரவிடக்கோரி குறிப்பிடப்பட்டுள்ளது.
பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
பா.ம.க. இரண்டாகப் பிளவுபட்டு கட்சியின் நிர்வாகிகள் ராமதாஸ், அன்புமணி என இரு தரப்பாகப் பிரிந்துள்ள நிலையில் சட்டசபை தேர்தலில் அன்புமணி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளார். ராமதாஸ் தரப்பு இன்னும் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பா.ம.க. சின்னம், கொடியை பயன்படுத்துவதில் குழப்பம் நீடிக்கிறது.
இதற்கிடையே ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் ஆதரவாக இருக்கிறது. இதற்கு எதிராக ராமதாஸ் டெல்லி ஐகோர்ட்டை நாடிய நிலையில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, சென்னை ஐகோர்ட்டில் ராமதாஸ் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார். பா.ம.க.விற்கு உரிமைகோரி சிவில் மற்றும் ரிட் வழக்குகளை ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்துள்ளது. மனுவில், பா.ம.க. தங்களுக்கே சொந்தம், கட்சியில் தனக்கே முழு அதிகாரம் என்று உத்தரவிடக்கோரி குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொரு ரிட் மனுவில், பா.ம.க.வின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த அன்புமணி உள்ளிட்டோருக்குத் தடை விதிக்க வேண்டும், தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க ராமதாசுக்கு அதிகாரம் என உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் ஓரிரு நாள்களில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கண் துடைப்புக்காக தி.மு.க. அமைச்சர்கள் ஆம்னி கட்டண உயர்வை எச்சரிப்பதும் தொடர்கதையாகி வருகிறதே தவிர, மக்களின் பணம் சுரண்டப்படுவது நின்றபாடில்லை.
- அறிவாலயம் அரசை, நடுத்தர வர்க்க மக்களின் வயிற்றெரிச்சலே விரைவில் வீழ்த்தும்!
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நேற்று நெல்லையில் இருந்து சென்னை வருவதற்கான ஆம்னி பேருந்தில் ஒரு நபருக்கு ரூ.7,500 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வெளிவந்துள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
பொங்கல், தீபாவளி என அனைத்துப் பண்டிகைக் காலங்களிலும், ஆம்னி பேருந்துக் கட்டணம் விண்ணைத் தொடுவதும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதும், கண் துடைப்புக்காக தி.மு.க. அமைச்சர்கள் ஆம்னி கட்டண உயர்வை எச்சரிப்பதும் தொடர்கதையாகி வருகிறதே தவிர, மக்களின் பணம் சுரண்டப்படுவது நின்றபாடில்லை.
பண்டிகை தினத்தன்று தன் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டுத் திரும்ப நினைக்கும் ஒரு குடும்பத்தின் மாதச் சம்பளத்தை ஆம்னி பேருந்துக் கட்டணம் மூலம் பறித்துவிட்டு வேடிக்கை பார்க்கும் அறிவாலயம் அரசை, நடுத்தர வர்க்க மக்களின் வயிற்றெரிச்சலே விரைவில் வீழ்த்தும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






