என் மலர்tooltip icon

    சென்னை

    • தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக பாராளுன்றத்தில் பிரதமர் அறிவிக்க வேண்டும் என தீர்மானம் வாசிக்கப்பட்டது.
    • அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 5 கட்சிகள் புறக்கணித்த நிலையில் 56 கட்சிகள் பங்கேற்றன.

    இக்கூட்டத்தில், 2026 மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ள உள்ள தொகுதி மறுவரையறையை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் 1977 மக்கள் தொகை அடிப்படையில் வரையறுக்கப்பட்ட தொகுதிகள் மேலும் 30 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக பாராளுன்றத்தில் பிரதமர் அறிவிக்க வேண்டும் என தீர்மானம் வாசிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இதையடுத்து, அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • சென்னையில் இருந்து இதர இடங்களுக்கு தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • மாதவரத்தில் இருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 20 பஸ்கள் என ஆக மொத்தம் 677 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

    அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 8, 9) சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்து தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (7-ந்தேதி) 265 பஸ்களும், சனிக்கிழமை (8-ந் தேதி) 270 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுபோல, கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 51 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாதவரத்தில் இருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 20 பஸ்கள் என ஆக மொத்தம் 677 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

    இதுமட்டுமன்றி, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    • ஓரங்க நாடகம் நடந்தது போல்தான் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
    • நீட், காவிரி விவகாரம், மீனவர் பிரச்சனையில் தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

    தொகுதி மறுசீரமைப்பு விவாதம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டம் நாடகமாகவே தோன்றுகிறது.

    * ஓரங்க நாடகம் நடந்தது போல்தான் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.

    * அவசரப்பட்டு எதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது?

    * தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு இன்னும் எதுவும் சொல்லவில்லை.

    * நீட், காவிரி விவகாரம், மீனவர் பிரச்சனையில் தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

    * கச்சத்தீவு, காவிரி, நீட் விவகாரத்தில் மாநிலத்தின் உரிமைகளை தாரை வார்த்தது போல் இதனையும் விட்டு விடாதீர்கள்.

    * 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 848 எம்.பி. இடங்களை அதிகரிக்க வேண்டும்.

    * தமிழ்நாட்டை தி.மு.க. தான் காப்பாற்றுவது போல் தோற்றத்தை உருவாக்க நாடகம்.

    * நாடகம் விடும் நேரம்தான் உச்ச காட்சி நடக்குதம்மா என்ற கமல் பாடலைப்போல் தான் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது என்று கூறினார்.

    • மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது.
    • முதலமைச்சர் மற்ற மாநிலங்களுக்கு நேரில் சென்று ஒருங்கிணைக்க வேண்டும்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

    தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான வரைவு தீர்மானத்தை முன்மொழிந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது என்றார்.

    இதைதொடர்ந்து, முதலமைச்சரின் தீர்மானத்திற்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய பிற கட்சிகள் கூட்டுக்குழுவிற்கு ஆதரவு தெரிவித்தன.

    இந்நிலையில், அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய தலைவர்களின் முக்கிய கருத்துக்கள் வருமாறு:-

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்: நாடாளுமன்றத்தில் தமிழ் நாட்டின் 7.2 என்ற தற் போதைய பிரதிநிதித்துவம் குறைக்கப்படக்கூடாது என்று தீர்மானத்தில் சேர்க்க வேண்டும். தீர்மானத்துக்கு அ.தி.மு.க. முழு ஆதரவு அளிக்கிறது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி: முதலமைச்சர் மற்ற மாநிலங்களுக்கு நேரில் சென்று ஒருங்கிணைக்க வேண்டும்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திரு மாவளவன்: தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய "கூட்டு நட வடிக்கை குழு"வை விசிக வரவேற்கிறது. தொகுதி மறுவரையறையில் தலித், சிறுபான்மையினர் வாக்குகளை சிதறடிக்கும் நடவடிக்கை இருக்கக் கூடாது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முத்தரசன்: ஒன்றிய அரசின் செயல்பாடுகள் மர்மமாக உள்ளன.

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா: விகிதம் என்ற வரையறையில் குழப்பம் இருக்கிறது. நம் மாநில எம்.பி எண்ணிக்கை குறையவில்லை என்பது பிரச்சினையில்லை. வட மாநிலங்களில் அதிகரிக்கப்பட்டால் அது பிரச்சினை.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன்: தமிழ்நாட்டின் விகிதாச்சாரம் 7.2 சதவீதம் என்ற எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது.

    தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ: அனைத்து கட்சி கூட்டம் நடத்துவது சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள சரியான முடிவு ஆகும். தமிழகத்தின் உரிமையை எந்த கால கட்டத்திலும் யாராலும் விட்டுக் கொடுக்க முடியாது.

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: தொகுதி மறுசீரமைப்பு என்பது ஒரு கட்சியின் பிரச்சினை இல்லை. நம் மாநிலத்தின் பிரச்சினை ஆகும். இதை அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்துள்ள 5 கட்சிகளும் உணர வேண்டும்.

    தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை, கருணாஸ்: மக்களின் உரிமைகளை பறிப்பதற்கான முயற்சியாகத்தான் நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பை பார்க்கிறோம்.

    தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தனியரசு: தொகுதி மறுசீரமைப்பின் பிரச்சனையை உணர்ந்து முதல் முதலாக குரல் கொடுத்தது முதலமைச்சர் ஸ்டாலின்தான்.

    மனிதநேய ஜனநாயக கட்சி, தமிமுன் அன்சாரி: தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களின் உச்சி மாநாட்டை முதலமைச்சர் கூட்ட வேண்டும்.

    உலகத் தமிழர் பேரமைப்பு, பழ நெடுமாறன்: எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநில முதலமைச்சர்களிடம் பேசி இந்த சதித் திட்டத்தை முறியடிக்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும்.

    புரட்சி பாரதம், ஜெகன் மூர்த்தி: தமிழ்நாட்டில் தொகுதிகளில் எண்ணிக்கை குறைந்தால் பட்டியல் சமூக மக்களுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையும் குறையும். இதனை கடுமையாக எதிர்க்கிறோம்.

    • வீட்டை ஜப்தி செய்யுமாறு பிறப்பித்த உத்தரவை செய்ய சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் நடிகர் பிரபுவுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    'ஜகஜால கில்லாடி' திரைப்படத் தயாரிப்புக்காக நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்தின் நிறுவனம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

    இந்த நிலையில், சிவாஜி வீட்டை ஜப்தி செய்யுமாறு பிறப்பித்த உத்தரவை செய்ய சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ராம்குமார் தரப்பில், சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் நடிகர் பிரபுவுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து கடன் பிரச்சனைக்கு தீர்வு காணும்படியும் ஜப்தி உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. 

    • தீர்மானத்தை முன்மொழிந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
    • மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது என்றார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநிலங் களவை உறுப்பினர் வழக்கறிஞர் வில்சன் எம்.பி., அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. வழக்கறிஞர் இன்பதுரை கலந்து கொண்டனர்.

    இதேபோல் காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் பங்கேற்றனர். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார் கலந்து கொண்டனர்.

    தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான வரைவு தீர்மானத்தை முன்மொழிந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது என்றார்.

    இதைதொடர்ந்து, முதலமைச்சரின் தீர்மானத்திற்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய பிற கட்சிகள் கூட்டுக்குழுவிற்கு ஆதரவு தெரிவித்தன.

    இந்நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

    தொகுதி மறுவரையறை செய்தால் அனைத்து மாநிலங்களுக்கும் சமவாய்ப்பு தரப்பட வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் அல்லாமல் வாக்காளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யலாம்.

    மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தென்மாநிலங்கள் பாதிக்கப்படும்.

    பட்டியலின மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் வகையில் தொகுதிகளில் எல்லை வரையறை செய்யப்படுகிறது.

    வரும் காலங்களில் முறையாக தொகுதிகளின் எல்லை வரையறை செய்யப்பட வேண்டும்.

    ஆதாயம் கருதி அரசியல் செய்வதால் தான் அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொகுதி மறுசீரமைப்பு என்னும் கத்தி தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டு இருக்கிறது.
    • தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதை குறைக்கின்ற அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

    சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது மாடி கூட்டரங்கில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான அனைத்துக் கட்சி கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநிலங் களவை உறுப்பினர் வழக்கறிஞர் வில்சன் எம்.பி., அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முன் னாள் எம்.எல்.ஏ. வழக்கறி ஞர் இன்பதுரை கலந்து கொண்டனர்.

    இதேபோல் காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் பங்கேற்றனர். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார் கலந்து கொண்டனர்.

    மேலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநில செயலாளர் முத்தரசன், முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் மாநில செயலாளர் சண்முகம், ம.தி.மு.க. சார்பில் பொதுச் செய லாளர் வைகோ, துரை வைகோ எம்.பி., பா.ம.க. சார்பில் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ், தே.மு.தி.க. சார்பில் துணை பொதுச் செயலாளர் பார்த்தசாரதி, அவைத் தலைவர் இளங்கோவன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கூட்டம் தொடங்கியதும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இங்கு வந்திருக்கும் அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வணக்கத்தை நான் தெரி வித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    தமிழ்நாடு அரசின் சார்பில் உங்கள் எல்லோரையம் வருக... வருக... என்று நான் வரவேற்கிறேன்.

    தமிழ்நாடு மிகப்பெரிய உரிமை போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு இருப்பதை உணர்த்துவதற்காகத் தான் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம். தொகுதி மறுசீரமைப்பு என்னும் கத்தி தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டு இருக்கிறது. இதனால் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

    இன்றைக்கு தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதை குறைக்கின்ற அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

    ஒன்றிய அரசு 2026-ம் ஆண்டில் பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக் கையை மறுசீரமைப்பு செய்ய இருக்கிறது. பொதுவாக இதை மக்கள் தொகையை கணக்கிட்டுதான் செய்வார்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது இந்திய நாட்டின் மிக முக்கியமான இலக்கு.

    அந்த இலக்கில் நமது தமிழ்நாடு வெற்றி பெற்று இருக்கிறது. பல பத்தாண்டு களாக வெற்றிகரமான குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள், பெண்கள் கல்வி மற்றும் சுகாதார முன் முயற்சிகள் மூலமாக நாம் இதை சாதித்து இருக்கிறோம்.

    இப்போது இருக்கின்ற 543 பாராளுமன்ற தொகுதிகள் தொடர்ந்தால் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் நமது தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

    தமிழ்நாடு மொத்தமாக 8 பாராளுமன்ற தொகுதிகளை இழக்கும் என்று சொல்கிறார்கள். அதாவது இனி 39 எம்.பி.க்கள் கிடைக்க மாட்டார்கள். 31 எம்.பி.க்கள்தான் இருப்பார்கள்.

    பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 848 ஆக உயர்த்தப்பட்டு தற்போதைய விதிதாச்சாரத்தின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டால் நமக்கு கூடுதலாக 22 தொகுதிகள் கிடைக்க வேண்டும்.

    ஆனால் தற்போதைய மக்கள் தொகையின்படி மறுசீரமைப்பு செய்தால் 10 தொகுதிகள் தான் கூடுதலாக கிடைக்கும். இதனால் 12 கூடுதல் தொகுதிகளை இழக்க நேரிடும்.

    இந்த 2 முறைகளிலுமே நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும். இதனால் தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும்.

    இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பற்றிய கவலை இல்லை. நமது தமிழ் நாட்டின் உரிமை சார்ந்த கவலை. தமிழ்நாட்டின் இந்த முக்கியமான பிரச்சினையில் எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற வேண்டுகோளை உங்கள் எல்லோர் முன்பும் நான் வைக்கிறேன்.

    எல்லா கட்சிகளும் கட்சிகளை கடந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால் அது தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதித்துவத்தை, எண்ணிக்கையை குறைத்துவிடும். எனவே இந்த சதியை நாம் அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும்.

    மக்கள் தொகை அடிப்ப டையில் மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்ற பேரவையின் இடங்கள் குறையும் என்று சொல்வது மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் கொள்கையை முனைப்பாக செயல்படுத்தி நாட்டு வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ள தென் மாநிலங்களுக்கு தரப்படுகிற தண்டனையாகத்தான் அமையும்.

    இதை முன்கூட்டியே உணர்ந்து தான் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

    தமிழ்நாட்டின் உரிமை, கூட்டாட்சி கருத்தியலோடு கோட்பாடு, தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட எதுவும் பாதிக் கப்படக்கூடாது என்பதை தீர்க்கமாக, திடமாக அப்போதே நாம் வலியுறுத்தி இருக்கிறோம்.

    இந்த தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த தென்னிந்தியா வுக்கே அபாயகரமான செயல். இதில் நமக்குள் கருத்து மாறுபாடு நிச்சயமாக இருக்காது என்று நான் நினைக்கிறேன். இருக்கக்கூடாது என்று விரும்புகிறேன்.

    இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கும், தென் மாநிலங்களின் அரசி யல் உரிமைக்கும் இது அச்சு றுத்தலை ஏற்படுத்துகிறது. இது இந்திய ஜனநாயகத்தில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கின்ற அரசியல் பிரதிநிதித்துவ உரிமை மீதான நேரடி தாக்குதல்.

    இப்படி ஒரு சமநீதியற்ற அமைதியான தொகுதி மறுசீரமைப்பு செயல்படுத்தப்பட்டால் இந்திய அரசியலில் தமிழ் நாட்டின் குரல்வளை நெரிக்கப்படும்.

    தமிழ்நாட்டின் நலன் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலன் ஆகிய வற்றை பாதுகாப்பதில் நம் மாநிலத்துக்கு இறுக்கக்கூடிய பலம் குறைக்கப்படும.

    39 எம்.பி.க்கள் இருக்கும் போது நாம் எழுப்புகிற குரலையே ஒன்றிய அரசு மறுக்கின்ற நிலையில் இந்த எம்.பி.க்கள் எண்ணிக்கை இன்னும் குறைந்தாலோ, குறைக்கப்பட்டாலோ அது தமிழ்நாட்டுக்கு கிடைக் கப்பட்ட அழிக்க முடியாத அநீதியாக மாறும் என்பதை எல்லோரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

    எனவே நமது நிலைப்பாட்டை அழுத்தம் திருத்தமாக ஒரே சிந்தனையோடு எடுத்தாக வேண்டும்.

    எதிர்காலத்தில் நடைபெற இருக்கிற மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மேற்கொள்ள இருக்கும் தொகுதி மறுசீரமைப்பை நாம் கடுமையாக ஆணித்தரமாக எதிர்க்க வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம்.

    எனவே உறுதியான ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி நான் அந்த தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

    இந்தியநாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கும் தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதி மறுசீர மைப்பை இந்த அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக கடுமையாக எதிர்க்கிறது.

    நாட்டின் நலனுக்காக மக்கள் தொகை கட்டுப்பாட்டை முனைப்பாக செயல்படுத்திய ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதி நிதித்துவம் குறைக்கப்படு வது முற்றிலும் நியாயமற்றது.

    எந்த வகையில் மக்கள் தொகை கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்களும் முன்னெடுப்பதை ஊக்கு விக்கும் வகையில் 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000-ம் ஆண்டில் அன்றைய பிரதமர் உறுதி அளித்தவாறு தற்போதும் இந்த வரையறை 2026-ல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப் படும் என்று பிரதமர், நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்.

    மேலும் நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில் 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அப்படையில் தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு தேவையான அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை இந்த அனைத்துக் கட்சி கூட்டம் வலியுறுத்துகிறது.

    தொகுதி மறு சீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரானதாக இல்லை என்றும், அதே சமயம் கடந்த 50 ஆண்டுகளாக சமூக பொருளாதார நலத்திட்டங்களை சிறப்புற செயல்படுத்தியதற்கு தண்டனையாக தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக்கூடாது எனவும், அனைத்துக்கட்சி கூட்டம் வலியுறுத்துகிறது.

    இக்கோரிக்கைகளை தமிழ்நாட்டின் குறைந்தபட்ச கோரிக்கையாக அனைத்து கட்சி கூட்டம் முன்வைக்கிறது. இக்கோரிக்கைகளையும் அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்லவும் மக்கள் மத்தியில் இப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு ஒன்றை அமைத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சிகளுக்கு அனுப்பி வைக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

    இந்த தீர்மானத்தின் மீதான உங்களின் கருத்தை அனைத்து கட்சி தலைவர்களும் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் உங்கள் எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றிைய தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து ஒவ்வொரு கட்சி சார்பிலும் வந்திருந்த பிரதிநிதிகள் இதில் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்த கருத்துக்களின் அடிப்படையில் அரசின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

    அதன் பிறகு அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் சார்பில் டெல்லி சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மனு கொடுக்கிறார்கள்.

    தொகுதி மறுசீரமைப்பால் தமிழ கத்துக்கு ஏற்படும் பாதிப்பு களை விளக்கவும், அரசின் சார்பில் திட்டமிடப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

    • தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான வரைவு தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
    • அனைத்து கட்சி கூட்டத்திற்கு 63 கட்சி, இயக்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 58 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச்செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான வரைவு தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அனைத்து கட்சி கூட்டத்திற்கு 63 கட்சி, இயக்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 58 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் 5 கட்சிகள் மட்டும் பங்கேற்கவில்லை.

    பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சி, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட 5 கட்சிகள் புறக்கணித்துள்ளன.

    • 15 மண்டலங்களிலும் தீவிரமாக கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • சட்ட விரோதமாக கட்டிட கழிவுகளை கொட்டிய 260 நபர்கள் மீது கண்காணிப்பு படையினரால் ரூ. 13 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய 7 மண்டலங்கள் முழுவதும் சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை அகற்றும் வகையில் கட்டிடக் கழிவுகளை அகற்றும் தீவிரத் தூய்மைப் பணியை 7.1.2025-ல் மேயர் பிரியா முதற்கட்டமாக தொடங்கி வைத்தார்.

    அதனடிப்படையில், 7.1.2025 முதல் 16.1.2025 வரை 7 மண்டலங்களிலும், இரண்டாம் கட்டமாக 17.1.2025 முதல் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 8 மண்டலங்கள் உட்பட அனைத்து 15 மண்டலங்களிலும் தீவிரமாக கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள் 1 முதல் 15 வரையில் கட்டடக் கழிவுகளை அகற்றும் வகையில் தீவிரத் தூய்மைப் பணிக்காக ஏற்கனவே உள்ள 102 வாகனங்களுடன் கூடுதலாக டிப்பர் லாரிகள், மினி லாரிகள், ஜே.சி.பி. வாகனங்கள், பாப்காட் வாகனங்கள் உள்ளிட்ட 57 புதிய வாகனங்களை இன்று மேயர் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கடந்த 1.1.2025 முதல் 28.2.2025 வரையிலான இரண்டு மாத காலத்தில் சட்ட விரோதமாக கட்டிட கழிவுகளை கொட்டிய 260 நபர்கள் மீது கண்காணிப்பு படையினரால் ரூ. 13 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில், துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் ஜெ.குமரகுருபரன், துணை கமிஷனர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, மத்திய வட்டார துணை கமிஷனர் கே.ஜெ.பிரவீன் குமார், நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) டாக்டர் கோ. சாந்தகுமாரி, தலைமைப் பொறியாளர் (பொது) கே.விஜயகுமார், பிரிமியர் பிரிசிசன் சர்பேஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தயாளு அம்மாள் உடல்நிலையை மருத்துவர் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
    • தற்போது தயாளு அம்மாளுக்கு சளி தொல்லை குறைந்து உள்ளதாக தெரிகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல் நலக் குறைவு காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவரது உடல்நிலையை மருத்துவர் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். தற்போது தயாளு அம்மாளுக்கு சளி தொல்லை குறைந்து உள்ளதாக தெரிகிறது.

    அடுத்த சில நாட்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கி அதன் பிறகு தயாளு அம்மாளை வீட்டுக்கு அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என்று ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அடையாளம் தெரியாதவர்களுக்கு அடையாளம் தருவதற்கு தயாராக இல்லை.
    • தேச நலனில் அக்கறை இல்லாதவர்கள் என்று அர்த்தம்.

    சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கல்வி மூலம் கலவரத்தை தூண்டுவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டி இருப்பது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

    * அடையாளம் தெரியாதவர்களுக்கு அடையாளம் தருவதற்கு தயாராக இல்லை. அவர் ஒரு புறம் பிதற்றிக்கொண்டே இருக்கட்டும்.

    * எங்கள் பணி கல்வியில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்பதை ஒன்றியத்திலே முதலமைச்சர் அரும்பணியால் நிரூபிப்பார்.

    * ஒருகாலத்தில் மாநகராட்சி பள்ளிகளை வெறுத்து ஒதுக்கிய நிலை மாறி இன்றைக்கு மாநகராட்சி பள்ளிகள் வெகுமதி பள்ளிகளாக தமிழகத்தில் நிலவுவதை கல்வியாளர்கள், மாணவர்களுடைய பெற்றோர்களும், மாணவ செல்வங்களும் உணர்ந்து இருக்கிறார்கள்.

    * இதுபோன்ற பிதற்றலுக்கு பதில் கூற தயாராக இல்லை. அதற்கு உண்டான நேரமும் இல்லை.

    மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி சூசகமாக கூறியிருப்பது...

    * பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்று எட்டிப்பார்க்கிற வேலை எங்களுக்கு இல்லை.

    * எங்களது பயணம் சீராக முதலமைச்சர் தலைமையில் உறுதிமிக்க கூட்டணியாக, மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி பொலிவோடு திகழ்ந்து கொண்டு இருக்கிறது.

    * அதற்கு தலைமை தாங்குகின்ற முதல்வர் ஏதோ நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல. உறுதியோடு 60 ஆண்டு காலம் அரசியல் பயணத்தை மேற்கொண்டவர்.

    ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி நம்பகத்தன்மை குறித்து...

    * எடப்பாடி சார் இங்கே இருந்து 8 கி.மீ. தூரத்தில் தான் இருக்கிறார். அவரிடமே பதில் வாங்கிக் கொள்ளுங்கள்.

    அனைத்துக்கட்சியில் பங்கேற்காத கட்சிகள் குறித்து...

    * தேச நலனில் அக்கறை இல்லாதவர்கள் என்று அர்த்தம்.

    * தமிழை பற்றி, தமிழ்நாட்டை பற்றி, தமிழக மக்களை பற்றி கவலை இல்லாதவர்கள் புறக்கணிப்பதை பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது.
    • மக்கள்தொகை குறைவாக உள்ளதால் தொகுதி மறுவரையறையில் தமிழகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

    தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான வரைவு தீர்மானத்தை முன்மொழிந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது என்றார்.

    இதைதொடர்ந்து, முதலமைச்சர் கொண்டு வந்த இந்த தீர்மானத்திற்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய பிற கட்சிகள் கூட்டுக்குழுவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

    அப்போது, " பிற மாநில மக்கள் தொகையுடன் தமிழக மக்கள் தொகையை ஒப்பிட்டு புள்ளி விவரங்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

    மேலும் அவர், " மக்கள்தொகை குறைவாக உள்ளதால் தொகுதி மறுவரையறையில் தமிழகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது" என்றார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், " தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக அரசின் எந்த முடிவையும் ஏற்போம்" என்றார்.

    பாமக தலைவர் அன்புமணி பேசுகையில், " தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தென்னிந்திய மாநிலங்களின் முதல்வர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச வேண்டும். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒருங்கிணைத்து நாம் எதிர்க்க வேண்டும்.

    தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தனியாக போராடினால் தீர்வு கிடைக்காது. பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றிணைக்க வேண்டும்" என்றார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில், " தொகுதி மறுவரையறை செய்தால் அனைத்து மாநிலங்களுக்கும் சமவாய்ப்பு தரப்பட வேண்டும்" என்றார்.

    தொகுதி மறுவரையறை எதிர்க்கின்ற அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து தேசிய அளவில் கூட்டம் நடத்த வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

    மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, " தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜகவுக்கு எதிரான சக்தியாக நாம் உருவாக வேண்டும். தொகுதி அரசியல் அமைப்பு என்பது மாநில சுயாட்சிக்கு எதிரானது என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபிக்க வேண்டும்.

    ஒத்த கருத்து கொண்டவர்களை நாம் ஒன்றிணைத்து மாநிலங்களின் உரிமைக்காக போராடி வேண்டியது அவசியம். பாஜக ஆளும் மாநிலங்கள் பெரும்பான்மையாக உள்ளதால் மறுவரையறையை சர்வாதிகாரத்துடன் செயல்படுத்த நினைக்கின்றனர்" என்றார்.

    ×