என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு விரைவு போக்குவரத்து கழகம்"

    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
    • ஞாயிற்றுக்கிழமை 5,041 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் பயணிகள் பலர் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

    அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 340 பஸ்களும், நாளை மறுநாள் 350 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அதேபோல், சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 55 பஸ்களும், நாளை மறுநாள் 55 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்தில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் 20 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், வருகிற ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த வார விடுமுறையில் நாளை சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு 5 ஆயிரம் பயணிகளும், நாளை மறுநாள் 4,982 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை 5,041 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

    சிறப்பு பஸ் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அமைச்சர் பஸ் ஓட்டுவதை அதிகாரிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
    • பஸ்சின் வடிவமைப்பு, பயணிகளின் வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்வதோடு, பஸ்சை இயக்கியும் பார்த்தேன்.

    தமிழ்நாடு அரசு, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு 130 புதிய பஸ்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வாங்கி உள்ளது. அவற்றில் 110 குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பஸ்களும் 20 வால்வோ சொகுசு பஸ்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    படுக்கை வசதியுடன் கூடிய வால்வோ சொகுசு பஸ்களுக்கு பெங்களூருவில் அமைந்துள்ள வால்வோ நிறுவனத்தில் கூண்டு கட்டும் பணி நடந்து வருகிறது. இதை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வால்வோ சொகுசு பஸ்சினை அமைச்சர் சிவசங்கர் ஓட்டிப் பார்த்தார். அனுபவம் வாய்ந்த டிரைவர் போல் பஸ்சை ஓட்டினார். அமைச்சர் பஸ் ஓட்டுவதை அதிகாரிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    அங்கு பயிற்சி பெற்று வரும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களுக்கும் அமைச்சர் அறிவுரையும் வழங்கினார். வால்வோ நிறுவனத்தின் பயிற்சி ஓடுதளத்தில் பஸ்சினை சோதனை முறையில் அமைச்சர் நீண்ட நேரம் ஓட்டி பார்த்தார்.

    அப்போது போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலாளர் சுஞ்சோங்கம் ஜாதக் அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் மோகன் மற்றும் வால்வோ நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    இதுபற்றி அமைச்சர் சிவசங்கர் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சேவையை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, நவீன 'மல்டி-ஆக்சில் வால்வோ' பஸ்களை வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக பெங்களூருவில் உள்ள வால்வோ பஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தொழிற் சாலைக்கு நேரில் சென்று, தயாரிப்பு நிலையில் இருந்த பஸ்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். பஸ்சின் வடிவமைப்பு, பயணிகளின் வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்வதோடு, பஸ்சை இயக்கியும் பார்த்தேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    அமைச்சர் சிவசங்கர் எந்தவித பதட்டமும் இன்றி உற்சாகத்துடன் சொகுசு பஸ்சை ஓட்டி சென்றதை பஸ்சில் பயணம் செய்த அதிகாரிகள் வியந்து பார்த்தனர்.

    • பஸ்கள் மூலம் 52 ஆயிரம் பயணிகள் திருவண்ணாமலைக்கு பயணம் மேற்கொண்டனர்.
    • தொடர் விடுமுறை என்பதால் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் வார விடுமுறை, பவுர்ணமி கிரிவலம், தமிழ் புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று வரை வழக்கமாக இயக்கப்படும் அரசு பஸ்களுடன் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

    கடந்த 11-ந்தேதி முதல் நேற்று வரை வழக்கமாக இயக்கப்படும் அரசு பஸ்களுடன் கூடுதலாக சுமார் 1,900 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த 3 நாட்களிலும் அரசு பஸ்களில் மொத்தம் 4 லட்சம் பேர் சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் மற்றும் தமிழ்ப்பு த்தாண்டு விழாவையொட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து 877 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்கள் மூலம் 52 ஆயிரம் பயணிகள் திருவண்ணாமலைக்கு பயணம் மேற்கொண்டனர்.

    எனவே கடந்த 3 நாட்களிலும் அரசு பஸ்கள் மூலம் மொத்தம் 4.50 லட்சம் பயணிகள் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் தொடர்விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் இன்று சென்னைக்கு புறப்படுகிறார்கள். ஒரே நாளில் பொதுமக்கள் அனைவரும் மொத்தமாக புறப்படுவதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரெயில்கள் மற்றும் அரசு பஸ்கள் நிரம்பி வழிந்தன. இதனால் பொதுமக்கள் பலர் சென்னைக்கு திரும்ப ஆம்னி பஸ்களையே நாடியுள்ளனர். இதனால் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

    தொடர் விடுமுறை என்பதால் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக மதுரையில் இருந்து சென்னைக்கு அதிகபட்சமாக ரூ.6 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நெல்லையில் இருந்து சென்னைக்கு குறைந்தபட்சமாக ரூ.1,900 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி 4 பேர் கொண்ட குடும்பம் செல்ல ரூ.8 ஆயிரம் செலவழிக்க வேண்டி உள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

    இதுகுறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறுகையில், 'ஆம்னி பஸ்களுக்கு கட்டண நிர்ணயம் என்பது இல்லை. உரிமையாளர்களே கட்டணத்தை நிர்ணயித்து அதற்குள்ளாகவே பஸ்களை இயக்கி வருகிறோம். கட்டண விவரத்தை இணையதளங்களில் வெளியிட்டு உள்ளோம். நாங்கள் நிர்ணயிக்கும் கட்டணத்துக்கு அதிகமாக வசூலித்தால் நாங்களே புகார் செய்து நடவடிக்கை எடுக்கிறோம்' என்றனர்.

    இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், 'ஆம்னி பஸ்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதிக கட்டணம் வசூலித்தால் பயணிகள் புகார் செய்யும் பட்சத்தில் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பொதுமக்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் விடப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 270 பஸ்கள் இயக்கப்படும்.
    • மாதவரத்தில் இருந்து இன்றும், நாளையும் 20 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வார விடுமுறை நாட்களையொட்டி சென்னையில் இருந்து இதர இடங்களுக்கு தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு இன்று 270 பஸ்களும், நாளை (22-ந்தேதி) 275 பஸ்களும் இயக்கப்படும்.

    கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்றும், நாளையும் 51 பஸ்களும், மாதவரத்தில் இருந்து இன்றும், நாளையும் 20 பஸ்களும் என மொத்தம் 616 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    வருகிற 23-ந்தேதி சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு நாளை 270 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • கோயம்பேட்டில் இருந்து நாளை தலா 51 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    வார விடுமுறையையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 966 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு நாளை (14-ந்தேதி) 270 பஸ்களும், 15-ந்தேதி 275 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    கோயம்பேட்டில் இருந்து நாளை (14-ந்தேதி) மற்றும் 15-ந்தேதிகளில் தலா 51 பஸ்களும், மாதவரத்தில் இருந்து தலா 20 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் மூலமாக தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
    • சிறப்பு பஸ் இயக்கத்தினை கண்காணித்திட அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சனிக்கிழமை (22-ந்தேதி), ஞாயிற்றுக்கிழமை (23-ந்தேதி) விடுமுறை தினங்கள் மற்றும் திங்கட்கிழமை (24-ந்தேதி) சுபமுகூர்த்த நாள் என்பதால் 21-ந்தேதி (இன்று) வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் மூலமாக தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து பயணம் மேற்கொள்ள இதுநாள் வரை 9 ஆயிரத்து 298 பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர். இருந்த போதிலும் பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு, 21-ந்தேதி (இன்று) தினசரி இயக்கக்கூடிய பஸ்களுடன், கூடுதலாக 300 சிறப்பு பஸ்களும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பஸ்கள் என ஆக மொத்தம் 600 சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 7 ஆயிரத்து 258 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்தினை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பஸ் இயக்கத்தினை கண்காணித்திட அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காஞ்சிபுரத்தில் இருந்து திருச்சி, தாம்பரம், கோயம்பேடு பகுதிகளுக்கு 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
    • கோயம்பேட்டில் இருந்து திருச்சி, விழுப்புரம், பாண்டிச்சேரி, திருப்பதிக்கு 50 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 150 பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் பஸ்களில் திருச்சி, விழுப்புரம், பாண்டிச்சேரி, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி காஞ்சிபுரத்தில் இருந்து திருச்சி, தாம்பரம், கோயம்பேடு பகுதிகளுக்கு 60 சிறப்பு பஸ்களும், தாம்பரத்தில் இருந்து திருச்சி, விழுப்புரம் பகுதிகளுக்கு 40 சிறப்பு பஸ்களும், கோயம்பேட்டில் இருந்து திருச்சி, விழுப்புரம், பாண்டிச்சேரி, திருப்பதிக்கு 50 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 150 பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த தகவலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் காஞ்சிபுரம் மண்டலம் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • போக்குவரத்து கழக ஊழியர்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
    • 2 வண்டிகளில் வந்த 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மீனாட்சி புரத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் முன் பகுதியில் உள்ள அறை ஒன்றில் பஸ்சின் பழைய சீட்டுகள் மற்றும் பொருட்கள் போடப்பட்டு இருந்தது.

    இந்த அறையில் இன்று மதியம் 12.40 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த பொருட்கள் தீ பிடித்து எரிந்தன. தீ மளமளவென்று பரவியதையடுத்து அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

    மேலும் பயங்கர சத்தத்துடன் பொருட்கள் வெடித்து சிதறின. இதை பார்த்த போக்குவரத்து கழக ஊழியர்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 2 வண்டிகளில் வந்த 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். கொழுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    தீ விபத்தில் அந்த அறையில் இருந்த பழைய பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீவிபத்து ஏற்பட்டதை யடுத்து அண்ணா பஸ் நிலை யம் மற்றும் மீனாட்சிபுரம் சாலையில் கடுமையான புகை மண்டலங்கள் ஏற்ப ட்டது.

    பொதுமக்களும் அங்கு திரண்டதால் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. தீவிபத்தில் டெப்போவை ஒட்டி உள்ள ஓட்டல் ஒன்றின் ஒருபுறமும் எரிந்து சேதம் அடைந்தது. அந்த ஓட்டலின் கண்ணாடிகள் மற்றும் பைப்புகளுக்கும் சேதம் ஏற்பட்டது.

    இதுகுறித்து போக்கு வரத்து கழக ஊழியர்கள் கூறுகையில், டெப்போவை ஒட்டி உள்ள ஓட்டலின் மாடியில் வட மாநில தொழிலாளர்கள் சிலர் தங்கி உள்ளனர். அந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள வர்கள் தண்ணீரை ஊற்றி னார்கள்.

    அதன் பிறகு தான் டெப்போவில் பழைய பொருட்கள் வைத்திருந்த அறையில் தீ எரிந்தது என்றனர்.

    இது தொடர்பாக கோட்டார் போலீசில் போக்குவரத்து கழக அதிகாரிகள் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதலில் டெப்போவில் தீவிபத்து ஏற்பட்டதா? ஓட்டலில் ஏற்பட்டதா? தீ விபத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் மேயர் மகேஷ் நேரில் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

    • விண்ணப்பிக்கும் டிரைவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கும் என்று தெரிகிறது.
    • விண்ணப்பங்களை பரிசீலனை செய்து எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு அனுப்பப்படும்.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 685 டிரைவர் பணி இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

    நீண்ட நாட்களாக டிரைவர் பற்றாக்குறையால் கடுமையான நெருக்கடியில் இருந்த போக்குவரத்து கழகம் புதிதாக நடத்துனருடன் டிரைவர் பணிக்கான ஆட்களை எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்ய திட்டமிட்டு உள்ளது.

    தமிழகம் முழுவதும் இருந்தும் பஸ் டிரைவர் பணிக்கு ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இன்று காலை வரையில் 4,800 பேர் விண்ணப்பித்து இருப்பதாக அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் தெரிவித்தார்.

    அடுத்த மாதம் 18-ந்தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதனால் விண்ணப்பிக்கும் டிரைவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கும் என்று தெரிகிறது.

    இதுவரையில் அரசு போக்குவரத்து கழக டிரைவர்-கண்டக்டர் பணி நியமனத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு மட்டுமே நடைப்பெற்றது. தற்போது முதன் முறையாக எழுத்து தேர்வு நடத்தப்பட உள்ளது.

    விண்ணப்பங்களை பரிசீலனை செய்து எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு அனுப்பப்படும். அக்டோபர் மாதத்தில் எழுத்து தேர்வு நடைபெறலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

    தனியார் ஏஜென்சி மூலம் இந்த பணியினை மேற்கொள்ள போக்குவரத்து கழகம் திட்டமிட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தால் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • தற்போது வரை சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து பயணம் மேற்கொள்ள 11 ஆயிரத்து 187 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வார இறுதி நாள் மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு 1-ந் தேதி (இன்று) சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தால் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    தற்போது வரை சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து பயணம் மேற்கொள்ள 11 ஆயிரத்து 187 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

    பயணிகள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்றுமுதல் (வெள்ளிக்கிழமை) தினசரி இயக்கக்கூடிய பஸ்களுடன் கூடுதலாக 200 சிறப்பு பஸ்களும், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரில் இருந்து பிற இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 400 பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து பயணம் மேற்கொள்ள 10 ஆயிரத்து 545 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
    • இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்காக இதுவரை 9 ஆயிரத்து 299 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 9-ந்தேதி (2-ம் சனிக்கிழமை), 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு 8-ந்தேதி (நாளை) வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து பயணம் மேற்கொள்ள 10 ஆயிரத்து 545 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

    இந்தநிலையில், பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 8-ந்தேதி (நாளை) தினசரி இயக்க கூடிய பஸ்களுடன் கூடுதலாக 300 சிறப்பு பஸ்களும் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 600 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்காக இதுவரை 9 ஆயிரத்து 299 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

    மேலும், 8-ந்தேதி (நாளை) வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருவிழா முடிவடைவதை முன்னிட்டு வேளாங்கண்ணியில் இருந்து பல்வேறு இடங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக அதாவது பெங்களூரு, சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஓரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு நாளை தினசரி இயக்கக்கூடிய பஸ்களுடன் கூடுதலாக 650 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • சிறப்பு பஸ் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வார இறுதி நாட்கள் (16, 17-ந் தேதி), விநாயகர் சதுர்த்தி (18-ந் தேதி) என தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும், சுபநிகழ்ச்சிகளுக்கும் சென்று வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதை கருத்தில் கொண்டு தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 15-ந் தேதி (நாளை) தினசரி இயக்கக்கூடிய பஸ்களுடன் கூடுதலாக 650 பஸ்களும், 16-ந் தேதி கூடுதலாக 200 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

    கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 1,250 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    18-ந் தேதி (திங்கட்கிழமை) சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இந்த சிறப்பு பஸ் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு பஸ்களை பயணிகள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×