இன்றும், நாளையும் சென்னையில் இருந்து 616 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 270 பஸ்கள் இயக்கப்படும்.மாதவரத்தில் இருந்து இன்றும், நாளையும் 20 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இன்றும், நாளையும் சென்னையில் இருந்து 616 சிறப்பு பஸ்கள் இயக்கம்
Published on

அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வார விடுமுறை நாட்களையொட்டி சென்னையில் இருந்து இதர இடங்களுக்கு தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு இன்று 270 பஸ்களும், நாளை (22-ந்தேதி) 275 பஸ்களும் இயக்கப்படும்.

கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்றும், நாளையும் 51 பஸ்களும், மாதவரத்தில் இருந்து இன்றும், நாளையும் 20 பஸ்களும் என மொத்தம் 616 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

வருகிற 23-ந்தேதி சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com