என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
    • பல்வேறு அமர்வுகளுடன் நாளை மறுநாள் வரை இந்த ஜி-20 மாநாடு நடைபெறுகிறது.

    மாமல்லபுரம்:

    "ஜி-20" மாநாட்டு அமைப்பின் நிலையான நிதிக்கான பணிக் குழுவினர் மாநாடு, மாமல்லபுரம் "ரேடிஷன்" நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை துவங்கியது., இதில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    நாட்டின் நீடித்த வளர்ச்சி, லட்சிய இலக்குகள், சீரமைப்பு, நிதிக்கான கட்டமைப்பு நோக்கங்கள், கடந்த கூட்டங்களின் முக்கிய அம்சங்களை மறு பரிசீலனை செய்தல் உள்ளிட்டவைகள் குறித்து இன்று கருத்துக்கள் பரிமாற்றம் செய்யப்பட்டது.

    இந்திய பிரதிநிதிகளாக, பொருளாதார விவகாரங்கள் துறையின் ஆலோசகர் திருமதி கீதுஜோஷி, சந்தின் ரைனா உள்ளிட்ட இந்திய பொருளாதார நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர். இன்னும் பல்வேறு அமர்வுகளுடன் நாளை மறுநாள் வரை இந்த "ஜி-20" மாநாடு நடைபெறுகிறது.

    • வேள்வி பூஜை கடந்த இரண்டு நாட்களாக மறைமலை நகரில் நடைபெற்றது.
    • முத்து மாரியம்மன் ஆலயத்தில் சனிக்கிழமை காலை 6 மணி அளவில் மங்கல இசையுடன் விழா தொடங்கியது.

    மேல்மருவத்தூர்:

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 83- வது பிறந்த நாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் மற்றும் வேள்வி பூஜை கடந்த இரண்டு நாட்களாக மறைமலை நகரில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் வேலு தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாவட்ட தலைவர் கொண்டா ரெட்டியார், ஆன்மிக இயக்க வேள்விக் குழுவின் இணைச்செயலாளர் கோபி, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தணிக்கை குழு இணைச் செயலாளர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    துணைத்தலைவர் மன்மதன் அனைவரையும் வரவேற்றார். மறைமலை நகரில் உள்ள முத்து மாரியம்மன் ஆலயத்தில் சனிக்கிழமை காலை 6 மணி அளவில் மங்கல இசையுடன் விழா தொடங்கியது. 7 மணி அளவில் முத்துமாரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் காலை 7:30 மணிக்கு மறைமலை நகரில் உள்ள உதவும் உள்ளங்கள் இல்ல குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை 8.30 மணிக்கு சக்தி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடை பெற்றது முன்னாள் நகர மன்ற தலைவர் கோபி கண்ணன் கலந்துகொண்டு கொடியேற்றி வைத்தார்.

    காலை 9 மணிக்கு உலக நன்மைக்காகவும்,இயற்கை வளம் பெறவும், மழை வளம் வேண்டியும் நடைபெற்ற கலச விளக்கு வேள்வி பூஜையை செங்கல்பட்டு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் துவக்கி வைத்தார்.

    தொடர்ந்து காலை 10 மணிக்கு மறைமலைநகர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ரூ.7 லட்சம் மதிப்பிலான 20 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மிதிவண்டிகளும்,13 மகளிர்களுக்கு தையல் இயந்திரங்களும்,13 சலவைப் பெட்டிகள், 15 பயிர் பூச்சி மருந்து தெளிப்பான்கள், 6 விவசாய கருவிகள் 200 மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் ஆகியவற்றை மறைமலை நகர் நகர மன்ற தலைவர் சண்முகம் கலந்து கொண்டு வழங்கினார். இதனைத் தொடர்ந்து 11 மணி அளவில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

    • வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கோவிந்தன் மீது மோதியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன், (வயது65) கூலித் தொழிலாளி. இவர் சைக்கிளில் திருக்கழுக்குன்றத்தில் இருந்து காட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    நரப்பாக்கம் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கோவிந்தன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கோவிந்தன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நள்ளிரவில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த தண்டரை அருகே உள்ள சின்ன இரும்பேடு பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன்(வயது.25) திருக்கழுக்குன்றம் அடுத்த ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று நள்ளிரவு 2 மணியளவில் அவர் பணி முடிந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். சின்ன இரும்பேட்டில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகே வந்தபோது இருளில் பதுங்கி இருந்த மர்ம கும்பல் கத்தி,அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கன்னியப்பனை வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மர்ம கும்பலிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார். ஆனாலும் விடாமல் விரட்டி சென்ற கும்பல் கன்னியப்பனை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில், தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த கன்னியப்பன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    உடனே கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்ததும் திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலையுண்ட கன்னியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையாளிகள் யார்?கொலைக்கான காரணம் என்ன? என்று உடனடியாக தெரியவில்லை. பெண் தகராறில் கொலை நடந்ததா? அல்லது பணத்தகராறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது தொடர்பாக கன்னியப்பனின் நண்ப ர்கள், உறவினர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் கன்னியப்பன் கடைசியாகயாரிடம் பேசினார் என்று அவரது செல்போன் அழைப்புகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். அவர் தினந்தோறும் பணி முடிந்து வருவதை நோட்ட மிட்டு மர்ம கும்பல் தீர்த்து கட்டி உள்ளனர். அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் சோதனை சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார்ஆய்வு செய்து வருகின்றனர்.

    கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நள்ளிரவில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அனைத்து மாணவர்களையும் தனித்தனியாக சந்தித்து நடிகர் விஜய் விருதுகளை வழங்கினார்.
    • இறுதியில், வாரிசு ஸ்டைலில் பிளையிங் கிஸ் கொடுத்த நடிகர் விஜய் விடைபெற்றார்.

    சென்னை:

    அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    இந்நிலையில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் நடத்தி வரும் கல்வி விருது வழங்கும் விழா 12 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.

    இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    இறுதியில், வாரிசு ஸ்டைலில் ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்த நடிகர் விஜய் விடைபெற்றார்.

    • மாமல்லபுரத்தில் மகளிர் ஜி 20 உச்சி மாநாடு 2 நாட்கள் நடைபெற்று முடிந்தது.
    • வெளிநாட்டு பெண்கள் தங்களுக்கு பிடித்த கூட்டு, பொரியல், அப்பளம், பாயாசம் போன்றவற்றை விரும்பி சாப்பிட்டு ருசி பார்த்தனர்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் மகளிர் ஜி 20 உச்சி மாநாடு 2 நாட்கள் நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில் பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, வடகொரியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, நார்வே, டென்மார்க் உள்ளிட்ட 18 நாடுகளை சேர்ந்த பெண் பிரதிநிதிகள் 150 பேர் பங்கேற்றனர். நேற்று கடைசி நாள் மாநாடு என்பதால் வெளிநாட்டு விருந்தினர்களை தமிழ் கலாசாரப்படி திருமண விருந்தில் பந்தி பரிமாறுவது போல, வடை, பாயசத்துடன் வாழை இலை விருந்து வைக்க மத்திய சுற்றுலா மற்றும் கலாசார துறை அமைச்சகம் முடிவு செய்தது.

    அதன்படி மகளிர் ஜி 20 மாநாடு முடிந்தவுடன் வெளிநாட்டு பெண் பரதிநிதிகள் விருந்தில் அமர்ந்து வாழை இலையில் சாப்பிட்டனர். நட்சத்திர ஓட்டலின் உணவு கூட ஊழியர்கள் தமிழர்களின் பாரம்பரிய பட்டு வேட்டி, சட்டை அணிந்து விருந்து பரிமாறினர்.

    வாழை இலையில் கூட்டு, சம்பார், பொரியல், பாயாசம் வழங்கி விருந்து பறிமாறப்பட்டது. வெளிநாட்டு பெண்கள் தங்களுக்கு பிடித்த கூட்டு, பொரியல், அப்பளம், பாயசம் போன்றவற்றை விரும்பி கேட்டு வாங்கி சாப்பிட்டு ருசி பார்த்தனர்.

    வேட்டி, சட்டையில் மாறியிருந்த ஓட்டல் ஊழியர்கள் அவர்கள் அருகிலேயே நின்று கொண்டு திருமண விருந்துக்கு வரும் உற்றார், உறவினர்களை உபசரிப்பது போல சம்பார் வேண்டுமா? கூட்டு பொரியல் வேண்டுமா? என ஆங்கிலத்தில் கேட்டு பரிமாறினார்.

    இந்த விருந்தில் கலந்து கொண்டவர்களை தமிழக பா.ஜ.க. துணைத்தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் பலர் வரவேற்றதை காண முடிந்தது.

    • மாணவ, மாணவிகளுக்கு நலச்சங்கம் சார்பில் வெற்றிக் கோப்பை, ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
    • முன்னாள் மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் 1996-1997 கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் நலச்சங்கம் அமைத்து கல்வி சேவைகள் செய்து வருகின்றனர்.

    மாமல்லபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் 2023ல், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில், முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நலச்சங்கம் சார்பில் வெற்றிக் கோப்பை, ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

    விழாவில் முன்னாள் மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் பங்கேற்றனர். சங்க தலைவர் சரவணன், செயலாளர் ஜலால் சலீம், பொருளாளர் செல்வம், துணை தலைவர் தட்சிணாமூர்த்தி, துணைச் செயலாளர் ஸ்டாலின் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • பஸ்சில் கூட்டம் அதிகமானதால் மாணவிகள் இருவரையும் கீழே இறங்குமாறு கண்டக்டர் கூறி உள்ளார்.
    • மாணவிகளை நடுவழியில் இறக்கி விட்ட டிரைவர், கண்டக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    திருப்போரூர்:

    கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. மாணவ-மாணவிகள் சீருடையில் வந்தால் அவர்களை இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவிகள் 2 பேரை கண்டக்டர் கீழே இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.

    திருப்போரூர் பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கேளம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவர் 7-ம் வகுப்பு படிக்கும் தனது சகோதரியுடன் திருப்போரூர் கோவில் குளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து தாம்பரம் செல்லும் (எண்515) பஸ்சில் பள்ளிக்குச் செல்ல ஏறினர்.

    அடுத்த பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் கூட்டம் அதிகமானதால் மாணவிகள் இருவரையும் கீழே இறங்குமாறு கண்டக்டர் கூறி உள்ளார். இதனால் செய்வது அறியாமல் மாணவிகள் இருவரும் கீழே இறங்கியதும் அவர்களை மீண்டும் பஸ்சில் ஏற்றாமல் அடுத்த பஸ்சில் வருமாறு கூறினார். பின்னர் பஸ் அங்கிருந்து சென்று விட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் இதுபற்றி அவ்வழியே சென்ற ஒருவரின் செல்போன் மூலம் தங்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் வேறு பஸ்சில் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர். இதைத்தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஏராளமனோர் திருப்போரூரில் உள்ள நேரக்காப்பாளர் அறைக்கு சென்று டிரைவர், கண்டக்டர் நடந்தவிதம் குறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மாணவிகளை நடுவழியில் இறக்கி விட்ட டிரைவர், கண்டக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வண்டலூர் பூங்காவில் சிங்கம், புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
    • வண்டலூர் பூங்காவில் 5 ஆண் சிங்கம், 4 பெண் சிங்கங்கள் என மொத்தம் 9 சிங்கங்கள் உள்ளன.

    வண்டலூர்:

    வண்டலூரில் உள்ள பூங்காவில் சிங்கம், புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை கண்டு ரசிக்க தினந்தோறும் ஏராளமான பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள்.

    வண்டலூர் பூங்காவில் 5 ஆண் சிங்கம், 4 பெண் சிங்கங்கள் என மொத்தம் 9 சிங்கங்கள் உள்ளன. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு முன்பு கடந்த 2020-ம் ஆண்டு வண்டலூர் பூங்காவில் லயன்சபாரி நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது லயன்சபாரியை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் ஏற்கனவே பெங்களூருவில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து சேரு என்ற ஆண் சிங்கம் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது. இதற்கு இணையாக விலங்குகள் பரிமாற்ற திட்டத்தில் 3 ஜோடி நெருப்புக்கோழிகளுக்கு பதிலாக லக்னோவில் உள்ள பூங்காவில் இருந்து உமா என்ற பெண் சிங்கம் வரவழைக்கப்பட்டது. 45 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் அவை ஒன்றாக சேர விடுவிக்கப்பட்டன.

    ஆனால் இந்த சிங்கங்கள் ஒன்று சேர்வதில் சிக்கல் நீடித்து வந்ததாக தெரிகிறது. இதனால் இயற்கையான சூழலுக்காக சிங்கங்களை லயன்சபாரி உள்ள இடத்தில் பூங்கா ஊழியர்கள் விடுவித்து உள்ளனர். அவை அங்குள்ள அடைப்புக்குள் விடுவிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    • ஊரப்பாக்கம் அருகே காரணைப்புதுச்சேரியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.
    • ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டனர்.

    ஊரப்பாக்கம் அருகே காரணைப்புதுச்சேரியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.

    இதைத்தொடர்ந்து வண்டலூர் தாசில்தார் பாலாஜி தலைமையில், மண்டல துணை வட்டாட்சியர் புஷ்பராணி, கூடுவாஞ்சேரி வருவாய் ஆய்வாளர் அனிதாபீவி, காரணைப்புதுச்சேரி கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கரன் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டனர். இதன் மதிப்பு ரூ. 80 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • முதல் நாளான இன்று ரைபிள் பிரிவு போட்டி நடைபெறுகிறது.
    • துப்பாகி சுடும் போட்டி நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    வண்டலூர்:

    தமிழக காவல்துறையில் பணியாற்றும் போலீசாருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி இன்று கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்திவாக்கத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் தொடங்கியது. நாளை வரை இந்த போட்டிகள் நடை பெறுகின்றன.

    இதனை டி.ஜி.பி. சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார். இதில் ரைபிள் பிரிவு, பிஸ்டல், ரிவால்வர் பிரிவு மற்றும் கார்பைன் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று ரைபிள் பிரிவு போட்டி நடைபெறுகிறது. நாளை மற்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற உள்ள அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர். துப்பாகி சுடும் போட்டி நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    • வீட்டில் இருந்து வெளியே சென்ற மார்க்கிஸ் திரும்பி வரவில்லை.
    • கிளாம்பாக்கம் ஏரிக்கரை அருகே உள்ள தரைமட்ட விவசாய கிணற்றில் பிணமாக கிடந்தார்.

    ஊரப்பாக்கம் அருகே உள்ள கிளாம்பாக்கம், செல்லியம்மன் நகரை சேர்ந்தவர் மார்க்கிஸ்(வயது50) கொத்தனார். இவரது மனைவி பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற மார்க்கிஸ் திரும்பி வரவில்லை. அவர் கிளாம்பாக்கம் ஏரிக்கரை அருகே உள்ள தரைமட்ட விவசாய கிணற்றில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×