என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கூடுவாஞ்சேரி அருகே போலீசாருக்கு மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி- டி.ஜி.பி. தொடங்கி வைத்தார்
- முதல் நாளான இன்று ரைபிள் பிரிவு போட்டி நடைபெறுகிறது.
- துப்பாகி சுடும் போட்டி நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
வண்டலூர்:
தமிழக காவல்துறையில் பணியாற்றும் போலீசாருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி இன்று கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்திவாக்கத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் தொடங்கியது. நாளை வரை இந்த போட்டிகள் நடை பெறுகின்றன.
இதனை டி.ஜி.பி. சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார். இதில் ரைபிள் பிரிவு, பிஸ்டல், ரிவால்வர் பிரிவு மற்றும் கார்பைன் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று ரைபிள் பிரிவு போட்டி நடைபெறுகிறது. நாளை மற்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற உள்ள அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர். துப்பாகி சுடும் போட்டி நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.






