என் மலர்
நீங்கள் தேடியது "மாணவர்கள் நலச்சங்கம்"
- மாணவ, மாணவிகளுக்கு நலச்சங்கம் சார்பில் வெற்றிக் கோப்பை, ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
- முன்னாள் மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் 1996-1997 கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் நலச்சங்கம் அமைத்து கல்வி சேவைகள் செய்து வருகின்றனர்.
மாமல்லபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் 2023ல், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில், முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நலச்சங்கம் சார்பில் வெற்றிக் கோப்பை, ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் முன்னாள் மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் பங்கேற்றனர். சங்க தலைவர் சரவணன், செயலாளர் ஜலால் சலீம், பொருளாளர் செல்வம், துணை தலைவர் தட்சிணாமூர்த்தி, துணைச் செயலாளர் ஸ்டாலின் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






