என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் திரும்பி வந்தபோது மொத்தம் 6 வீடுகளில் கொள்ளை நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • மழைவெள்ள பாதிப்பில் உடமைகளை இழந்த மக்களுக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தாம்பரம்:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.

    தாம்பரம் அடுத்த முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றி வெள்ள நீர் சூழ்ந்தது. தரை தளத்தில் உள்ள வீடுகள் முழுவதும் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் நின்றதால் பெரும்பாலானோர் வீடுகளை பூட்டுவிட்டு மற்ற பகுதிகளில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

    மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் படகுகளில் சென்று மீட்டனர். மேலும் வீட்டின் மாடிகளில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் ஹெலிகாப்டர்களிலும் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் வெள்ள நீர் வடிந்து உள்ளதால் வீடுகளுக்கு மக்கள் திரும்பி உள்ளனர். அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள்.

    மழை வெள்ளத்தில் மூழ்கிய வீட்டில் இருந்த பெரும்பாலான பொருட்கள் மற்றும் பிரிட்ஜ், டி.வி. உள்ளிட்ட எலெக்ட்ரிக் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்து உள்ளதை பார்த்து உரிமையாளர்கள் கண்ணீர் வடித்தனர்.

    இதற்கிடையே முடிச்சூர், வரதராஜபுரம் பகுதியில் வெள்ளம் வடிந்த பகுதியில் பொதுமக்கள் திரும்பி வரத்தொடங்கி உள்ளனர். அப்போது வீடுகளில் கொள்ளை நடந்து இருப்பதை கண்டு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    வரதராஜபுரம் பகுதியில் விஷ்னு என்ற அடுக்கு மாடி குடியிருப்பில் 17 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    கனமழை காரணமாக முடிச்சூர் முழுவதும் மழை நீரால் மூழ்கி போனதால் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியேறி உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்து இருந்தனர். தற்போது இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் திரும்பி வந்தபோது மொத்தம் 6 வீடுகளில் கொள்ளை நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    சரத்குமார் என்பவர் வீட்டில் 17 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம், கண்ணண் என்பவரது வீட்டில் 15 நகை, விஜயலட்சுமி என்பவர் வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம், கார்த்திக் என்பவர் வீட்டில் 7 பவுன் நகை, அருண் என்பவர் வீட்டில் 15 பவுன் நகை என மொத்தம் 60 பவுன் நகை மற்றும் ரூ. 3 லட்சம் ரொக்கத்தை அள்ளிச் சென்று உள்ளனர்.

    சிறுக சிறுக சேர்த்து வைத்த பணம் மற்றும் வாங்கிய நகைகளை மழை வெள்ளத்தை பயன்படுத்தி கொள்ளையர்கள் சுருட்டி சென்று இருப்பதை கண்டு அதனை பறி கொடுத்தவர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சோமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    முடிச்சூர் பகுதியில் மழை வெள்ளம் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்கள் எதுவும் செயல்படவில்லை. இதனால் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    ஏற்கனவே அதே பகுதியில் 3 மாதத்திற்கு முன்பு 50 பவுன் தங்க நகைகள் கொள்ளை போன நிலையில் குற்றவாளிகள் இதுவரை சிக்கவில்லை தற்போது மீண்டும் கை வரிசை காட்டி உள்ளனர்.

    மழைவெள்ள பாதிப்பில் இருந்து தப்பிக்கும் அவசரத்தில் வீட்டில் இருந்த நகை மற்றும் ரொக்கப்பணத்தை பெரும்பாலானோர் அப்படியே விட்டுச்சென்று இருந்தனர்.

    வெள்ளத்தின் போது பூட்டிகிடக்கும் வீடுகளை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் நகை-பணத்தை அள்ளிச்சென்று உள்ளனர். மழைவெள்ள பாதிப்பில் உடமைகளை இழந்த மக்களுக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் முடிச்சூர் பகுதியிலும் சில வீடுகளில் கொள்ளை நடந்து உள்ளது. இது தொடர்பாகபோலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மழை பாதிப்பில் சிக்கியவர்களுக்கு உதவுவது போல் நடித்து மனிதாபிமானம் இல்லாமல் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    • கோவிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மகும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பர்கத்பாஷா(25). நேற்று மதியம் அவர் கூடுவாஞ்சேரியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் முன்பு இருந்தார். அப்போது கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.

    அந்த நேரத்தில் 4 பேர் கும்பல் திடீரென பர்கத்பாஷாவிடம் தகராறில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் பர்கத்பாஷாவின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பி சென்று விட்டனர். இதனை கண்டு கோவிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பலத்த காயம் அடைந்த பர்கத்பாஷா ரத்தம் சொட்ட, சொட்ட அங்கிருந்து நடந்து சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மகும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
    • ஐந்துரதம் மற்றும் அர்ஜூனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்கள் பகுதியில் ஒளி அலங்காரம் அமைக்கப்படுகிறது.

    மாமல்லபுரம்:

    மத்திய அரசின் கலாசார அமைச்சகம் சார்பில், 75-வது சுதந்திர தினவிழாவின் ஒரு பகுதியாக, புராதன சின்னங்களை பாதுகாக்கும் வகையில் புதிய லோகோ வடிவமைக்கப்பட்டு அதை இந்தியா முழுவதும் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள 75 புராதன சின்னங்களில் டிஜிட்டல் முறையில் புரொஜக்டர் மூலம் சிற்பங்களில் ஒளி அமைக்கப்பட்டு வருகிறது.

    மாமல்லபுரத்தில் நேற்று இரவு வெண்ணெய் உருண்டைக்கல் பாறை, கடற்கரை கோவில் பகுதியில் பகுதியில் இரவு 9 மணி வரை, ஓளி அலங்காரத்துடன் டிஜிட்டல் லோகோ ஒளி அமைக்கப்பட்டது. இதை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். மேலும், வரும் நாட்களில் கடற்கரை கோவில், ஐந்துரதம் மற்றும் அர்ஜூனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்கள் பகுதியில் ஒளி அலங்காரம் அமைக்கப்படுகிறது

    • குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • பாஸ்கர், விஜயச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கூடுவாஞ்சேரி:

    காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள சுடுகாடு அருகே குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்தது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் குப்பைகளை அகற்கும் பணி பணி நடைபெற்றது. இதுவரை சுமார் 80 டன் குப்பைகள் லாரிகளில் எடுத்து செல்லப்பட்டு உள்ளது. இதனை ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி தலைமையிலும், ஒன்றிய கவுன்சிலர்கள் மோகனாகண்ணன், ஜே.கே.தினேஷ், வார்டு கவுன்சிலர்கள் சாந்திகார்த்திக், தேவிநேரு, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயாகருணாகரன், மாவட்ட உதவி திட்ட அலுவலர் கெனடிபூபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்ராகவன், சிவகுமார், ஒன்றிய பொறியாளர்கள் கருணாகரன், பாஸ்கர், விஜயச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
    • வாகனங்களும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    கூடுவாஞ்சேரி:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகள், மற்றும் குடியிருப்புகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இன்னும் பல இடங்களில் தண்ணீர் வடியாமல் உள்ளதால் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    நந்திவரம்-கூடுவாஞ்சேரி பகுதியில் பெய்த கனமழையால் அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக மாறியது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது வெள்ளம் வடிந்து மக்களின் இயல்பு நிலை மெல்ல, மெல்ல திரும்பி வருகிறது.

    இந்த நிலையில் மழை வெள்ளத்தில் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு அருள்நகர், ஜெகதீஷ் நகர், 8-வது வார்டில் உள்ள காமாட்சி நகர் ஆகிய 3 இடங்களில் உள்ள தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டன. இதனால் அப்பகுதிகளில் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டு உள்ளன. ஆதனூர், மாடம்பாக்கம், படப்பை, சோமங்கலம் செல்வதற்கான இந்த தரைப்பாலங்கள் உடைந்ததால் அந்தப் பகுதியில் இருந்து கூடுவாஞ்சேரி வருவதற்கும் அதே போல் கூடுவாஞ்சேரியில் இருந்து செல்லும் வாகனங்களும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    • புயலில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
    • கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகள் வெளியே விடப்பட்டுள்ளது.

    வண்டலூர்:

    மிச்சாங் புயல் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. புயல் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா கடந்த திங்கட்கிழமை முதல் 4 நாட்கள் மூடப்பட்டது.

    இந்நிலையில், 4 நாட்களாக மூடப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறக்கப்பட்டுள்ளது. புயலில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுச்சுவர் இடிந்த நிலையில், மறைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    தேங்கிய மழைநீர் அகற்றப்பட்ட நிலையில் கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகள் வெளியே விடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக படகு போக்குவரத்து தொடங்கப்பட்டது.
    • மருந்து மாத்திரை வாங்க கூட அவர்களால் வெளியே செல்ல முடியவில்லை.

    புயல் மழை காரணமாக தாம்பரம் வரதராஜபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. தாம்பரம்- மதுரவாயல் பைபாஸ் சாலை, வெளிவட்டச் சாலையில் இருந்து தாம்பரம் செல்லும் சாலை ஆகியவற்றின் இடையேயான பகுதிகளில் வெள்ளம் அதிக அளவில் தேங்கியுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள்.

    இதையடுத்து இந்த பகுதிகளில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக படகு போக்குவரத்து தொடங்கப்பட்டது. அதில் ஏறி பலர் வெளியேறி தங்களது உறவினர்களின் வீடுகளுக்கும், நிவாரண முகாம்களுக்கும் செல்கிறார்கள்.

    சி.டி.ஓ. காலனி, வசந்தம் நகர், ராயப்ப நகர், அஞ்சுகம் நகர் பகுதிகளில் உள்ள மக்கள் இன்னும் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறார்கள். இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச் செல்வி மோகன் அந்த பகுதிகளுக்கு படகில் சென்று ஆய்வு செய்தார். இந்த நிலையில் மழை ஓய்ந்து 4 நாட்கள் ஆகியும் அந்த பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் இன்னும் வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள். மருந்து மாத்திரை வாங்க கூட அவர்களால் வெளியே செல்ல முடியவில்லை.


    இதையடுத்து அங்கு வசிக்கும் மக்கள் முழுமையாக வெளியேற இன்னும் சில நாட்கள் ஆகும். இதனால் அந்த பகுதியில் அனைத்து மக்களையும் பாதுகாப்பாக வெளியேற்றும் வகையில் இன்னும் சில நாட்கள் படகு போக்குவரத்தும் நீடிக்க உள்ளது.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    தாம்பரம் வரதராஜபுரம் பகுதிகளில் வெள்ளம் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் மழை ஓய்ந்த பிறகும் உணவு, குடிநீர் இன்றி தவிக்கிறோம். மின்சாரமும் இல்லை. இந்த பகுதிகளில் வசிக்கும் முதியவர்கள் மருந்து மாத்திரை கிடைக்காமல் தவிக்கிறார்கள். ஏராளமான மக்கள் இன்னும் மொட்டை மாடிகளிலேயே உள்ளனர்.

    இங்குள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் கிடைக்க செய்ய வேண்டும். இந்த பகுதியில் இருந்து வெளியே செல்ல நினைப்பவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செங்கல்பட்டு மாவட்டத்தில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
    • திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டு முறை நில அதிர்வு உணரப்பட்டது.

    செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காலை 7.39 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகி இருப்பதாக தெரிகிறது.

    பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. செங்கல்பட்டு மட்டுமின்றி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளிலும் இரண்டு முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாணியம்பாடியில் காலை 7.35 மற்றும் 7.42 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது. 

    • பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் எல்லா இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
    • கடந்த திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 4 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது.

    பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் எல்லா இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இதன் எதிரொலியால், நான்கு மாவட்டங்களுக்கு கடந்த திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 4 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் மழை பாதிப்பு எதிரொலியால் செல்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, சென்னை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் தாலுகாக்களில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • புயல் தாக்கத்தால் மாமல்லபுரத்தில் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக கனமழை பெய்தது
    • அனைத்து வழித்தடங்களில் இருந்தும் பஸ்கள் இயங்கி வருவதால் இயல்பு நிலை திரும்பி சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கி உள்ளனர்.

    "மிச்சாங்" புயல் தாக்கத்தால் மாமல்லபுரத்தில் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி மாமல்லபுரம் புராதன சின்னம் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    தற்போது அனைத்து வழித்தடங்களில் இருந்தும் பஸ்கள் இயங்கி வருவதால் இயல்பு நிலை திரும்பி சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கி உள்ளனர். அதனால் கடற்கரை கோவில் சாலை, ஐந்துரதம், அர்ச்சுனன்தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வைத்திருந்த சாலையோர கடைகள் திறக்கப்பட்டது.

    கடைகளின் உள்ளே மழையால் ஈரமான தொப்பி, பொம்மைகளை வியாபாரிகள் வெயிலில் காயவைத்து வருகின்றனர். பக்கிங்காம் கால்வாயில் தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கால்வாய் கரையோர தெருக்கள் மற்றும் அப்பகுதி கட்டிடங்கள் இன்னும் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன.

    • கனமழை மற்றும் சூறைக்காற்றால் பூங்காவில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.
    • மிச்சாங் புயல் காற்றின் தாக்கத்தால் பூங்காவில் உள்ள சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக மாறி உள்ளது.

    புயலின் தாக்குதலுக்கு வண்டலூர் பூங்காவும் தப்ப வில்லை. கனமழை மற்றும் சூறைக்காற்றால் பூங்காவில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. சுமார் 30 மரங்கள் முறிந்து விழுந்து உள்ளன. மேலும் 5 இடங்களில் பூங்காவின் சுற்றுச்சுவர் சேதம் அடைந்து விட்டன. இதைத்தொடர்ந்து பூங்காவில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் இன்று வண்டலூர் பூங்கா மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சேதம் அடைந்த சுற்றுச்சுவர் சீரமைப்பு மற்றும் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    புயல் மற்றும் கனமழையின் போது பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் அனைத்தும் அதன் இருப்பிடங்களில் பாதுகாப்பாக அடைக்கப்பட்டு அதற்கான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் பாதிப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மிச்சாங் புயல் காற்றின் தாக்கத்தால் பூங்காவில் உள்ள சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. சுமார் 30 மரங்கள் விழுந்து உள்ளன. கனமழையின் போது பூங்கா ஊழியர்களால் சிலர் பணிக்கு வர முடியவில்லை என்ற போதிலும் பூங்காவில் உள்ள ஊழியர்களைப் பயன்படுத்தி விலங்குகளுக்கு உணவளிப்பது மற்றும் விலங்குகளின் அடைப்புகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. எந்த விலங்குகளும் பாதிக்கப்படவில்லை மற்றும் அனைத்து அடைப்புகளும் அப்படியே பாதுகாக்கப்பட்டன.

    வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையின் இருபுறமும் உள்ள சுவர்களில் 4 இடங்களில் 50 மீட்டர் நீளத்துக்கு சேதமடைந்து உள்ளன. பூங்காவிற்குள் அருகில் உள்ள ஓட்டேரி ஏரியும் நிரம்பி தண்ணீர் வந்ததால் 30 மீட்டர் நீளத்திற்கு சுற்றுச்சுவர் சேதமடைந்தன. மோட்டார் பம்புகள் மூலம் தேங்கிய தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. முறிந்துவிழுந்த மரங்களை அகற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கனமழை காரணமாக திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
    • கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது.

    பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் எல்லா இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கனமழை காரணமாக திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதேபோல் காஞ்சிபுரத்தில் 2 தாலுகாக்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    ×