என் மலர்
செங்கல்பட்டு
புத்தாண்டு நாளில் பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது, பரிசோதனையில் உடல் வெப்பநிலை மாறுபாடுகள் உள்ளவர்கள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.
செங்கல்பட்டு:
புத்தாண்டையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவில் அதிக அளவில் பார்வையாளர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக வண்டலூர் பூங்கா இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
புத்தாண்டில், உயிரியல் பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள் தங்கள் சொந்த பாதுகாப்பு மற்றும் விலங்குகளின் பாதுகாப்பிற்காக கோவிட் நடைமுறைகளை பின்பற்று மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது, பரிசோதனையில் உடல் வெப்பநிலை மாறுபாடுகள் உள்ளவர்கள் பூங்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பூங்காவினுள் பல்வேறு இடங்களில் கை கழுவும் வசதிகள் மற்றும் தானியங்கி கை சுத்திகரிப்பான்கள் வைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக 2 மீட்டர் தூர இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் இல்லாதவர்கள் நுழைவுசீட்டு வழங்கும் இடத்தில் முகக்கவசங்களை வாங்கி கொள்ளலாம். முகக்கவசம் அணியாதவர்கள் பூங்காவினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பூங்காவிற்குள் நுழையும் பார்வையாளர்கள் கிருமி நீக்கம் செய்யும் கால் குளியல் (பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல்) வழியாகவும், வாகனங்கள் நுழையும் போது டயர்கள் கிருமிநாசினியில் நனைந்த பிறகே செல்ல வேண்டும். பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, கோவிட் தொடர்பான வழிமுறைகள் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவிக்கப்படுகின்றது.
பாவையாளர்கள் கொரோனா சிறப்பு குழு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்கள் அடங்கிய பலகை பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் நடமாட்டம் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவ்வப்போது கொரொனா நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு வரப்படுகிறது. பார்வையாளர்களால் கொரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதை மேற்பார்வையிடவும் மற்றும் கண்காணிக்கவும் பூங்கா துணை இயக்குனர் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்...சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு
புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்று போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பரண்டு அரவிந்தன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் முக்கிய இடங்களில் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும், அதிவேகமாக வாகனங்களை செலுத்துபவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
இளைஞர்கள் அதிவேகமாக வாகனங்களை செலுத்தி பந்தயங்களில் ஈடுபடுவதும், வாகன சாகசங்களில் ஈடுபடுவதும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது போன்ற அபாயகரமான செயல்கள், இதர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு மிகுந்த இடையூறாகவும், அச்சுறுத்தும் விதமாகவும் இருப்பதோடு பெரும் விபத்துகளுக்கு வழிவகுப்பதோடு மட்டுமின்றி அதனால் உயிர் சேதங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுபோன்று வாகன பந்தயத்தில் ஈடுபடுவோர் மீதும், இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொழுது போக்கு தலங்கள் மற்றும் விடுதிகளின் உரிமையாளர்கள் கொரோனா மற்றும் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ள வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுமாறும், மீறுபவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்து கொள்ளப்படுகிறது. மாவட்டம் முழுவதும் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர், பொதுமக்களும் கொரோனா தாக்கத்தை மனதில் கொண்டு அரசு அறிவுறுத்தியுள்ள வழிமுறைகளை பின்பற்றுமாறும் விபத்துகள் மற்றும் நோய் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு அளித்து இந்த பண்டிகை நாட்களை மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடுங்கள் என்றும் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தங்கள் பகுதிகளில் செயல்படும் பொழுது போக்கு தலங்கள் மற்றும் விடுதிகள் மேற்கூறிய விதிமுறைகளை மீறினால் அது குறித்தும், மதுபோதையில் வாகனத்தை செலுத்துதல் மற்றும் வாகன சாகசங்களில் ஈடுபடுதல் போன்ற இளைஞர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்கள், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் ஹலோ போலீஸ் எண் 7200102104-க்கு எந்த வித தயக்கமுமின்றி தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் வாயிலாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைத்து பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வரதராஜபுரம், நசரத்பேட்டை அருகே கொளப்பஞ்சேரி, நெமிலிச்சேரி அருகே பழவேடு, பெரியமுல்லைவாயல் ஆகிய இடங்களில் 4 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு:
சென்னை வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரை 62 கிலோ மீட்டர் நீளத்துக்கு சென்னை வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் சுமார் 35 ஆயிரம் வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றன. அவற்றில் 15 ஆயிரம் லாரிகளும் அடங்கும்.
கடந்த 2012-ம் ஆண்டு முதல் கட்ட சாலையும், 2016-ம் ஆண்டு 2-ம் கட்ட சாலையும் திறக்கப்பட்டது. இதில் வண்டலூர் முதல் பூந்தமல்லி வழியாக நெமிலிச்சேரி வரை அதிக வாகனங்கள் செல்கின்றன. நெமிலிச்சேரியில் இருந்து மீஞ்சூர் வரை குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் செல்கின்றன.
இந்த நிலையில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வரதராஜபுரம், நசரத்பேட்டை அருகே கொளப்பஞ்சேரி, நெமிலிச்சேரி அருகே பழவேடு, பெரியமுல்லைவாயல் ஆகிய இடங்களில் 4 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பயன்படுத்தும் பார்முலாவின் அடிப்படையில் சுங்கச்சாவடி கட்டணங்கள் மாநில அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கிடைத்ததும் இந்த 4 சுங்கச்சாவடிகளிலும் கட்டண வசூல் தொடங்கும்.
இந்த சுங்கச்சாவடிகளில் இருபுறமும் உள்ள 3 பாதைகளில் பாஸ்டேக் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கடைசியாக பணம் செலுத்தும் பாதையும் உள்ளன.
உள்ளூர்வாசிகள் அதன் அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்ல சேவை பாதைகளை பயன்படுத்த முடியும். அவர்கள் பிரதான பாதையை பயன்படுத்தினால் சுங்கவரி செலுத்த வேண்டும்.
இதுகுறித்து அங்கு வசிக்கும் மக்கள் கூறுகையில், “இந்த சாலையோரத்தில் ஏராளமான கிராமங்கள் மற்றும் தொழிற்பேட்டைகள் உள்ளன. சிறுதொழில் செய்பவர்கள் இந்த சாலையை அடிக்கடி பயன்படுத்த வேண்டும். சாலையின் அருகே விவசாய நிலம் உள்ளவர்கள் விவசாய பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும். அவர்களுக்கு சுங்க வரி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என்றனர்.
இது தொடர்பாக நெடுஞ்சாலை என்ஜினீயர் ஒருவர் கூறுகையில், “இந்த சாலையானது வாகன உரிமையாளருக்கு எரிபொருள் சிக்கனம், பயண நேரம் குறைவு, இயக்க செலவுகள் குறைவுக்கு வழி வகுக்கும், மக்கள் சுங்க கட்டணம் செலுத்துவது பற்றி யோசிக்க வேண்டியதில்லை” என்றார்.

மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை கண்டுகளிக்க 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கட்டண கவுன்ட்டர்களில் நுழைவு சீட்டு வழங்கும் முறை நடைமுறைக்கு வந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பல்லவர் கால புராதன சிற்பங்கள் அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் அதனை கண்டு ரசிக்கின்றனர்.கொரோனா தொற்று பரவிய நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந் தேதி முதல் ஜூன் மாதம் 27-ந் தேதி வரையும் என புராதன சிற்ப பகுதிகள் மூடப்பட்டதால் மாமல்லபுரத்தில் சுற்றுலா முடங்கியது.
தமிழக அரசின் தளர்வுகளை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி சுற்றுலாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு மாமல்லபுரம் புராதன சிற்ப பகுதிகள் திறக்கப்பட்டன. பிறகு வார இறுதி நாட்கள், அரசு விடுமுறை, பண்டிகை நாட்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
தொல்லியல் துறை நிர்வாகம் கொரோனா தொற்று சூழல் கருதி நுழைவு சீட்டை கவுன்ட்டர்களில் வழங்காமல் இணைய வழியாக மட்டுமே வழங்கியது. சாதாரண மொபைல் போன் பயன்படுத்துவோர், இத்தகைய சீட்டை பெற இயலாமல் அவதியுற்று வந்தனர். ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரும் சிக்னல் நெட்வொர்க் கிடைக்காத சிக்கலால் கியூ.ஆர்., குறியீடை ஸ்கேன் செய்யவும், இணைய கட்டணம் செலுத்தவும் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய இயலாமல் பரிதவித்து வந்தனர்.
இதை சாதகமாக்கி புரோக்கர்கள் அவரவர் மொபைல் போனில் நுழைவு சீட்டு பதிவிறக்கி ரூ.40 நுழைவு கட்டணத்திற்கு ரூ.50 முதல் ரூ.100 வரை பயணிகளிடம் ஏமாற்றி கட்டணம் வசூலித்தனர். இந்த சிக்கலை தவிர்க்க, கட்டண கவுன்ட்டரில் நுழைவு சீட்டு வழங்க வேண்டிய அவசியம் குறித்து சுற்றுலா பயணிகள், சமூக ஆர்வலர்கள் தொல்லியல் துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இது குறித்து பரிசீலித்த தொல்லியல் துறை மீண்டும் கட்டண கவுன்ட்டரில் நுழைவுசீட்டு வழங்கும் பணியை 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கி நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் ரூ.40 கட்டணம் செலுத்தி நுழைவு சீட்டு பெற்று புராதன சின்னங்களை பார்த்து மகிழ்ந்ததை காண முடிந்தது. இணைய வழி இணைப்பு இல்லாத சுற்றுலா பயணிகள் இதுவரை இணைய வழி நுழைவு சீட்டு பெற அவதிக்குள்ளாகி வந்தனர். தற்போது நுழைவு கட்டண மையங்கள் திறக்கப்பட்டு, நுழைவு சீட்டு வழங்குவது தொடங்கப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற இருந்த பெண் சாமியாரின் நிகழ்ச்சிக்கு செங்கல்பட்டு போலீசார் தடை விதித்துள்ளனர்.
ஏமாறும் மக்கள் இருக்கும் வரையில் விதவிதமாக மக்களை ஏமாற்றுபவர்களும் உருவாகி கொண்டே இருப்பார்கள்.
அந்த வகையில் போலி சாமியார்கள் பலர் மக்களை பல வழிகளில் ஏமாற்றி வரும் நிலையில் புதிதாக பெண் சாமியார் கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் “டிரெண்டிங்” ஆகி பேசப்பட்டு வருகிறார்.
அன்னபூரணி அம்மாள் என்ற பெயரில் அழைக்கப்படும் அந்த பெண் சாமியார் பட்டு சேலை அணிந்து கொண்டு காரில் இருந்து இறங்கி நடந்து செல்கிறார். சுற்றிலும் மஞ்சள், சிவப்பு, பச்சை நிறங்களில் உடை அணிந்த ஆண்-பெண் பக்தர்கள் அவரை பூக்களை தூவி வரவேற்று அழைத்து செல்கிறார்கள். மண்டபம் போன்ற ஒரு இடத்துக்குள் நுழைந்ததும் பெண் சாமியார் சிறப்பு விருந்தினர்கள் அமரும் ஆடம்பர இருக்கை ஒன்றில் அமர்கிறார்.
தனது வலது கையை காட்டியபடியே பக்தர்களுக்கு ஆசி வழங்கி கொண்டிருக்கும் பெண் சாமியாரின் காலில் விழுந்து பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவருமே வழிபடுகிறார்கள்.
கோவிலில் சாமிக்கு தீபம் காட்டுவது போல பெண்கள் அன்னபூரணி அம்மாள் சாமியாருக்கு விதவிதமாக தீபாராதனையும் காட்டுகிறார்கள். அப்போது அவரிடம் ஆசி பெறும் பக்தர்கள் திடீரென சாமி வந்தது போல ஆடுகிறார்கள். அன்னபூரணி அம்மாளின் உடல் அப்போது லேசாக சிலிர்க்கிறது. அவரும் உடலை குலுக்கியபடி வலது கையை காட்டியபடி ஆசி வழங்கிக் கொண்டே இருக்கிறார்.
இந்த நேரத்தில் குடும்பத்தோடு கணவன்-மனைவி, குழந்தை ஆகிய 3 பேரும் தரையோடு படுத்து ஆசி பெறுகிறார்கள். இதுபோன்று வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருமே பெண் சாமியாரின் காலில் விழுந்து வணங்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதே நேரத்தில் செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் புத்தாண்டையொட்டி பெண் சாமியார் காலை 9 மணியில் இருந்து 12 மணி வரை அருள்வாக்கு கூறப்போவதாகவும் அதற்கு பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்றும் பரபரப்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.
இந்த நிலையில்தான் பெண் சாமியார் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் வீடியோவுடன் அவரது கடந்த கால வாழ்க்கை தொடர்பான வீடியோவும் வெளியானது. அந்த வீடியோவில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குடும்ப பிரச்சினை தொடர்பான சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியில் சாதாரண உடையில் அந்த பெண் சாமியார் பங்கெடுத்துள்ளார்.
இந்த வீடியோவையும், அவர் பெண் சாமியாக மாறிய வீடியோவையும் பலர் ஒன்றாக இணைத்து வெளியிட்டு காரசாரமான விவாதங்களையும் ஏற்படுத்தி இருந்தனர்.
இதைத் தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற இருந்த பெண் சாமியாரின் நிகழ்ச்சிக்கு செங்கல்பட்டு போலீசார் தடை விதித்துள்ளனர். மண்டப உரிமையாளரை அழைத்து இது தொடர்பாக பேச்சு நடத்தினர். அப்போது மண்டப உரிமையாளர் குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு அட்வான்ஸ் வாங்கியிருப்பதாக தெரிவித்தார். அதனை திருப்பி கொடுத்து விட வேண்டும் எனவும், நிகழ்ச்சி நடத்துவதற்கு எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்க கூடாது எனவும் போலீசார் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து மண்டப உரிமையாளரும் நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளிக்க மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்காக பெண் சாமியாரின் ஆதரவாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மண்டபத்துக்கு சென்று பூஜையும் செய்துள்ளனர். அப்போது அன்னபூரணி அம்மாள் இங்கு வைத்துதான் அருள்வாக்கு சொல்லப் போவதாக கூறி இருக்கிறார். அதற்காகத்தான் பூஜை செய்துள்ளோம் எனவும் பெண் சாமியாரின் சீடர்கள் தெரிவித்துள்ளனர். இதுவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து புத்தாண்டு அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை பிடித்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர்.
இது தொடர்பாக அவர்களது செல்போன்களை தொடர்பு கொண்டபோது அந்த எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளன. இருப்பினும் பெண் சாமியாரின் பின்னணி குறித்து உரிய விசாரணை நடத்த ரகசிய விசாரணையில் போலீசார் இறங்கி இருக்கிறார்கள்.
இது தொடர்பாக செங்கல்பட்டு போலீசார் கூறும்போது, “அருள்வாக்கு கூறுவதாக கூறி மண்டபத்தை பதிவு செய்த பெண் ஈரோட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை” என தெரிவித்தனர்.
நாட்டில் ஏற்கனவே பல போலி சாமியார்கள் பெருகி பக்தர்களை ஏமாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் திடீரென பெண் சாமியாராக அவதாரம் எடுத்திருப்பது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் காரசாரமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இது தொடர்பாக அந்த பெண்ணிடம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விசாரணை நடத்திய லட்சுமிராமகிருஷ்ணனும் கருத்து தெரிவித்து இருக்கிறார். அவர் கூறும்போது, “சம்பந்தப்பட்ட பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கருத்து சொல்வது சரியாக இருக்காது. இருப்பினும் இதுபோன்ற சாமியார்களை பொதுமக்கள் நம்புவது முட்டாள்தனமானது” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிந்து விழுந்து விபத்து
கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி 2 நாட்களில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர்.
செங்கல்பட்டு:
சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய உயிரியல் பூங்காவில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் சராசரியாக 20 லட்சம் பார்வையாளர்கள் வருகை புரிகின்றனர்.
180 வகையான 2500 எண்ணிக்கையிலான வன உயிரினங்கள் பராமரிக்கப்படுகின்றன. கிறிஸ்துமஸ் விடுமுறையான நேற்று முன்தினம் மற்றும் நேற்று என 2 நாட்களிலும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்து வன உயிரினங்களை பார்வையிட்டனர். பார்வையாளர்களின் வசதிக்காக பூங்கா நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.
கொரோனா தொற்று பரவுவதை தடுக்க பார்வையாளர்கள் அனைவரும் முககவசம் அணிந்திருப்பதை உறுதி செய்த பின்னரே பூங்காவிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
பார்வையாளர்கள் பூங்கா நுழைவுவாயிலில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பார்வையாளர்கள் நுழைவுசீட்டு எடுக்கும் இடத்தில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க கூடுதலாக கவுண்டர்கள் திறக்கப்பட்டு நெரிசலின்றி நுழைவுசீட்டு வழங்கப்பட்டது.
பார்வையாளர்கள் வசதிக்காக ஆன்லைன் மூலம் நுழைவுசீட்டு வழங்கப்பட்டது. இதற்காக தனியாக கவுண்டர்கள் அமைக்கப்பட்டது.
பார்வையாளர்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து நெரிசல் அதிகம் காணப்படும் பகுதிகளுக்கு பூங்கா பணியாளர்கள் சென்று சமூக இடைவெளியுடன் வன உயிரினங்களை பார்வையிட அறிவுறுத்தப்பட்டனர். பூங்காவுக்கு வருகைதந்த பார்வையாளர்கள் சமூக இடைவெளியுடன் பூங்காவுக்குள் வன உயிரினங்களை பார்வையிடுகின்றனரா என்பதையும் துணை இயக்குனர் தலைமையில் சிறப்பு குழுவினர் அவ்வப்போது ஆய்வு செய்து கொரோனா தடுப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த தகவலை பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட பிளஸ்-2 மாணவி உள்பட 3 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
சென்னையை அடுத்த திரிசூலம் பகுதியை சேர்ந்தவர் லியோன்சிங் ராஜா (வயது 38). அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவருடைய மகள் பெர்சி (16). இவர், பிளஸ்-2 படித்து வந்தார். லியோன்சிங் ராஜாவின் அண்ணன் சேகரின் மகன் லெனின்ஸ்டன் (20).
இவர்கள் 3 பேர் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையொட்டி நேற்றுமுன்தினம் செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம்பள்ளியில் உள்ள பாலாற்றில் குளிக்க சென்றனர்.
கடந்த மாதம் பெய்த கனமழையின் காரணமாக பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் குளித்த லியோன்சிங் ராஜா, பெர்சி, லெனின்ஸ்டன் ஆகிய 3 பேரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். செங்கல்பட்டு தீயணைப்பு நிலைய வீரர்கள், ரப்பர் படகு மூலம் 3 பேரையும் தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று மதியம் இவர்கள் மூழ்கிய இடத்திலேயே சேற்றில் சிக்கிய நிலையில் லியான்சிங் ராஜா, அவரது மகள் பெர்சி இருவரையும் தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டனர். தீவிர தேடுதலுக்கு பிறகு லெனின்ஸ்டனும் பிணமாக மீட்கப்பட்டார். 3 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தந்தை, மகள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் திரிசூலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
செங்கல்பட்டு அருகே பாலாற்றில் சுழல் நீரில் சிக்கிய மூன்று பேரை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
செங்கல்பட்டு:
சென்னை அடுத்த பல்லாவரம் திருவடி சூலம் அம்மன் நகரை சேர்ந்தவர் லியோன்சிங் வயது 38 இரது மனைவி குயின் இவர்களது மகள் பெர்சி வயது 13 எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். லியொன் சிங் அண்ணன் குணசேகரன் இவரது மனைவி குணசீலி இவர்களது மகன் டெணி வயது 16 இவர் தனியார் கல்லூரியில் டிப்ளோமா படித்து வருகிறார். கிறிஸ்மஸ் திருவிழாவையொட்டி லியோன்சிங் குடும்பமும் இவரது அண்ணன் குடும்பமும் காரில் ஜாலியாக சுற்றி பார்க்க சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது பாற்றில் தண்ணீர் இருப்பதை கண்டு பாலாற்றின் அருகே காரை நிறுத்தி விட்டு 4-30 மணிக்கு குளிப்பதர்காக லியோன்சிங் மகள் பெர்சி மற்றும் இவரது அண்ணன் மகன் டெணி ஆகியோர் தண்ணீரில் இறங்கினர். திடீர் என்று சுழலில் சிக்கி இருவரையும் தண்ணீர் இழுத்து செல்வதை கண்ட லியோன்சிங் பெர்சி மற்றும் டெணியை காப்பாற்ற தண்ணீரில் குதித்தார் மூன்று பேரும் பாலாற்று சுழலில் சிக்கி அடித்து சென்றுள்ளனர்.
உடனடியாக தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.பின்னர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தேடினர்.நேற்று இரவு 8- மணிவரை தேடினர் அப்பகுதி இருட்டு என்பதால் இரவு 8- மணிக்கு மேல் மாயமான உடலை கண்டுபிக்க முடியாததால் திரும்பி சென்றனர்.மீண்டும் இன்று காலை 8 மணியில் இருந்து தேடும் பாணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகிறது.
மறைமலைநகர் அருகே மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 48), இவர் அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் மறைமலைநகரில் உள்ள வங்கியில் இருந்து ரூ.2 லட்சத்தை எடுத்துக்கொண்டு வங்கியின் வெளியே நிறுத்தி வைத்திருந்த தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்ரோல் டேங்க் கவரில் வைத்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், சார் உங்க பணம் ஏதோ கீழே கிடக்கிறது என்று கூறியுள்ளார். உடனே முருகேசன் கீழே குனிந்து பார்க்கும் போது கண்ணிமைக்கும் நேரத்தில் முருகேசனின் மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.2 லட்சத்தை திருடி கொண்டு மர்மநபர் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விட்டார்.
இதுகுறித்து முருகேசன் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் பணத்தை திருடிய நபரை தேடி வருகின்றனர்.
கேளம்பாக்கம் அருகே 16-வது மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்:
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த ஏகாட்டூர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 16-வது மாடியில் வசித்து வருபவர் சத்தியா பால்சாமி. இவரது தந்தை வெள்ளை பால்சாமி (வயது 87). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. பல மாதங்களாக வெள்ளை பால்சாமிக்கு நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, இருதய நோய் உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு வந்தார். நேற்று கேளம்பாக்கம் அருகே ஏகாட்டூர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 16-வது மாடி ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அங்கு இருந்தவர்கள் கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
புதுப்பட்டினம், கிழக்கு கடற்கரை சாலையை வாலிபர் கடந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அங்கிருந்த தடுப்பு கல்லில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம்அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மகன் சூர்யா( வயது18). அதே பகுதியில் உள்ள சலூன் கடையில் வேலைபார்த்து வந்தார்.
இவரது தங்கை அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். அவரை பள்ளியில் விடுவதற்காக சூர்யா தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
சகோதரியை பள்ளியில் இறக்கி விட்டதும் அவர் வீடு நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
புதுப்பட்டினம், கிழக்கு கடற்கரை சாலையை கடந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அங்கிருந்த தடுப்பு கல்லில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம்அடைந்த சூர்யா சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து கல்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புத்தாண்டை கொண்டாட மாமல்லபுரம், கோவளம், கேளம்பாக்கம் பகுதிகளில் உள்ள ஹோட்டல், ரிசார்ட்களில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் முறையான ரசீதும், கொரோனா தடுப்பூசி சான்றிதழும் வைத்திருக்க வேண்டும்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் 2022- ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை கொண்டாட விடுதிகள், ரிசாட்டுகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. இதையொட்டி வருகிற 31-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் மாமல்லபுரம் பகுதியில் உள்ள விடுதிகளில் தங்குவதற்கு இப்போதே ஆன்லைன் மூலம் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜு ஆகியோர் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாமல்லபுரம் விடுதி, ரிசார்ட் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
புத்தாண்டை கொண்டாட மாமல்லபுரம், கோவளம், கேளம்பாக்கம் பகுதிகளில் உள்ள ஹோட்டல், ரிசார்ட்களில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் முறையான ரசீதும், கொரோனா தடுப்பூசி சான்றிதழும் வைத்திருக்க வேண்டும். தடுப்பூசி சான்றிதழ் இல்லாமல் வருபவர்கள் 31-ந்தேதி மாமல்லபுரம் நுழைய முடியாது.
அவர்கள் இ.சி.ஆர் - ஓ.எம்.ஆர் வழிகளில் போலீஸ் சோதணை சாவடிகளில் திருப்பி அனுப்பப்படுவர்.
விடுதிகள், கடற்கரை ஓரம் சட்ட விரோதமாக கேளிக்கை விழாவோ, தனியார் பங்களாக்களில் ஆபாச நடனமோ, அனுமதி இல்லாத வெளிநாட்டு மது, போதை விருந்தோ நடத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.