என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்கொலை
கேளம்பாக்கம் அருகே 16-வது மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை
கேளம்பாக்கம் அருகே 16-வது மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்:
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த ஏகாட்டூர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 16-வது மாடியில் வசித்து வருபவர் சத்தியா பால்சாமி. இவரது தந்தை வெள்ளை பால்சாமி (வயது 87). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. பல மாதங்களாக வெள்ளை பால்சாமிக்கு நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, இருதய நோய் உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு வந்தார். நேற்று கேளம்பாக்கம் அருகே ஏகாட்டூர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 16-வது மாடி ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அங்கு இருந்தவர்கள் கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story






