என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பாலாற்றில் சுழல் நீரில் மூன்று பேர் மாயம்
  X
  பாலாற்றில் சுழல் நீரில் மூன்று பேர் மாயம்

  செங்கல்பட்டு அருகே பாலாற்றில் சுழல் நீரில் மூன்று பேர் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செங்கல்பட்டு அருகே பாலாற்றில் சுழல் நீரில் சிக்கிய மூன்று பேரை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
  செங்கல்பட்டு:

  சென்னை அடுத்த பல்லாவரம் திருவடி சூலம் அம்மன் நகரை சேர்ந்தவர்  லியோன்சிங் வயது 38 இரது மனைவி குயின் இவர்களது மகள் பெர்சி வயது 13 எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். லியொன் சிங் அண்ணன் குணசேகரன் இவரது மனைவி குணசீலி இவர்களது மகன் டெணி வயது 16 இவர் தனியார் கல்லூரியில் டிப்ளோமா படித்து வருகிறார். கிறிஸ்மஸ் திருவிழாவையொட்டி லியோன்சிங் குடும்பமும் இவரது அண்ணன் குடும்பமும் காரில் ஜாலியாக சுற்றி பார்க்க சென்றுக் கொண்டிருந்தனர்.

  அப்போது பாற்றில் தண்ணீர் இருப்பதை கண்டு பாலாற்றின் அருகே காரை நிறுத்தி விட்டு 4-30 மணிக்கு குளிப்பதர்காக லியோன்சிங் மகள் பெர்சி மற்றும் இவரது அண்ணன் மகன் டெணி ஆகியோர் தண்ணீரில் இறங்கினர். திடீர் என்று சுழலில் சிக்கி இருவரையும் தண்ணீர் இழுத்து செல்வதை கண்ட லியோன்சிங் பெர்சி மற்றும் டெணியை காப்பாற்ற தண்ணீரில் குதித்தார் மூன்று பேரும் பாலாற்று சுழலில் சிக்கி அடித்து சென்றுள்ளனர்.

  உடனடியாக தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.பின்னர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தேடினர்.நேற்று இரவு 8- மணிவரை தேடினர் அப்பகுதி இருட்டு என்பதால் இரவு 8- மணிக்கு மேல் மாயமான உடலை கண்டுபிக்க முடியாததால் திரும்பி சென்றனர்.மீண்டும் இன்று காலை 8 மணியில் இருந்து தேடும் பாணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகிறது.
  Next Story
  ×