என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வண்டலூர்-மீஞ்சூர் இடையே வெளிவட்ட சாலையில் விரைவில் சுங்கவரி வசூல்
வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வரதராஜபுரம், நசரத்பேட்டை அருகே கொளப்பஞ்சேரி, நெமிலிச்சேரி அருகே பழவேடு, பெரியமுல்லைவாயல் ஆகிய இடங்களில் 4 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு:
சென்னை வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரை 62 கிலோ மீட்டர் நீளத்துக்கு சென்னை வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் சுமார் 35 ஆயிரம் வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றன. அவற்றில் 15 ஆயிரம் லாரிகளும் அடங்கும்.
கடந்த 2012-ம் ஆண்டு முதல் கட்ட சாலையும், 2016-ம் ஆண்டு 2-ம் கட்ட சாலையும் திறக்கப்பட்டது. இதில் வண்டலூர் முதல் பூந்தமல்லி வழியாக நெமிலிச்சேரி வரை அதிக வாகனங்கள் செல்கின்றன. நெமிலிச்சேரியில் இருந்து மீஞ்சூர் வரை குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் செல்கின்றன.
இந்த நிலையில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வரதராஜபுரம், நசரத்பேட்டை அருகே கொளப்பஞ்சேரி, நெமிலிச்சேரி அருகே பழவேடு, பெரியமுல்லைவாயல் ஆகிய இடங்களில் 4 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பயன்படுத்தும் பார்முலாவின் அடிப்படையில் சுங்கச்சாவடி கட்டணங்கள் மாநில அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கிடைத்ததும் இந்த 4 சுங்கச்சாவடிகளிலும் கட்டண வசூல் தொடங்கும்.
இந்த சுங்கச்சாவடிகளில் இருபுறமும் உள்ள 3 பாதைகளில் பாஸ்டேக் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கடைசியாக பணம் செலுத்தும் பாதையும் உள்ளன.
உள்ளூர்வாசிகள் அதன் அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்ல சேவை பாதைகளை பயன்படுத்த முடியும். அவர்கள் பிரதான பாதையை பயன்படுத்தினால் சுங்கவரி செலுத்த வேண்டும்.
இதுகுறித்து அங்கு வசிக்கும் மக்கள் கூறுகையில், “இந்த சாலையோரத்தில் ஏராளமான கிராமங்கள் மற்றும் தொழிற்பேட்டைகள் உள்ளன. சிறுதொழில் செய்பவர்கள் இந்த சாலையை அடிக்கடி பயன்படுத்த வேண்டும். சாலையின் அருகே விவசாய நிலம் உள்ளவர்கள் விவசாய பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும். அவர்களுக்கு சுங்க வரி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என்றனர்.
இது தொடர்பாக நெடுஞ்சாலை என்ஜினீயர் ஒருவர் கூறுகையில், “இந்த சாலையானது வாகன உரிமையாளருக்கு எரிபொருள் சிக்கனம், பயண நேரம் குறைவு, இயக்க செலவுகள் குறைவுக்கு வழி வகுக்கும், மக்கள் சுங்க கட்டணம் செலுத்துவது பற்றி யோசிக்க வேண்டியதில்லை” என்றார்.

Next Story