என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    லியோன்சிங்ராஜா - லெனின்ஸ்டன்
    X
    லியோன்சிங்ராஜா - லெனின்ஸ்டன்

    பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட பிளஸ்-2 மாணவி உள்பட 3 பேரும் பிணமாக மீட்பு

    பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட பிளஸ்-2 மாணவி உள்பட 3 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டு:

    சென்னையை அடுத்த திரிசூலம் பகுதியை சேர்ந்தவர் லியோன்சிங் ராஜா (வயது 38). அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவருடைய மகள் பெர்சி (16). இவர், பிளஸ்-2 படித்து வந்தார். லியோன்சிங் ராஜாவின் அண்ணன் சேகரின் மகன் லெனின்ஸ்டன் (20).

    இவர்கள் 3 பேர் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையொட்டி நேற்றுமுன்தினம் செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம்பள்ளியில் உள்ள பாலாற்றில் குளிக்க சென்றனர்.

    கடந்த மாதம் பெய்த கனமழையின் காரணமாக பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் குளித்த லியோன்சிங் ராஜா, பெர்சி, லெனின்ஸ்டன் ஆகிய 3 பேரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். செங்கல்பட்டு தீயணைப்பு நிலைய வீரர்கள், ரப்பர் படகு மூலம் 3 பேரையும் தேடி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று மதியம் இவர்கள் மூழ்கிய இடத்திலேயே சேற்றில் சிக்கிய நிலையில் லியான்சிங் ராஜா, அவரது மகள் பெர்சி இருவரையும் தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டனர். தீவிர தேடுதலுக்கு பிறகு லெனின்ஸ்டனும் பிணமாக மீட்கப்பட்டார். 3 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தந்தை, மகள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் திரிசூலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×