என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
2 நாட்களில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 12 ஆயிரம் பேர் வருகை
2 நாட்களில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 12 ஆயிரம் பேர் வருகை - பூங்கா நிர்வாகம் தகவல்
By
மாலை மலர்27 Dec 2021 2:59 AM GMT (Updated: 27 Dec 2021 2:59 AM GMT)

கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி 2 நாட்களில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர்.
செங்கல்பட்டு:
சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய உயிரியல் பூங்காவில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் சராசரியாக 20 லட்சம் பார்வையாளர்கள் வருகை புரிகின்றனர்.
180 வகையான 2500 எண்ணிக்கையிலான வன உயிரினங்கள் பராமரிக்கப்படுகின்றன. கிறிஸ்துமஸ் விடுமுறையான நேற்று முன்தினம் மற்றும் நேற்று என 2 நாட்களிலும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்து வன உயிரினங்களை பார்வையிட்டனர். பார்வையாளர்களின் வசதிக்காக பூங்கா நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.
கொரோனா தொற்று பரவுவதை தடுக்க பார்வையாளர்கள் அனைவரும் முககவசம் அணிந்திருப்பதை உறுதி செய்த பின்னரே பூங்காவிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
பார்வையாளர்கள் பூங்கா நுழைவுவாயிலில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பார்வையாளர்கள் நுழைவுசீட்டு எடுக்கும் இடத்தில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க கூடுதலாக கவுண்டர்கள் திறக்கப்பட்டு நெரிசலின்றி நுழைவுசீட்டு வழங்கப்பட்டது.
பார்வையாளர்கள் வசதிக்காக ஆன்லைன் மூலம் நுழைவுசீட்டு வழங்கப்பட்டது. இதற்காக தனியாக கவுண்டர்கள் அமைக்கப்பட்டது.
பார்வையாளர்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து நெரிசல் அதிகம் காணப்படும் பகுதிகளுக்கு பூங்கா பணியாளர்கள் சென்று சமூக இடைவெளியுடன் வன உயிரினங்களை பார்வையிட அறிவுறுத்தப்பட்டனர். பூங்காவுக்கு வருகைதந்த பார்வையாளர்கள் சமூக இடைவெளியுடன் பூங்காவுக்குள் வன உயிரினங்களை பார்வையிடுகின்றனரா என்பதையும் துணை இயக்குனர் தலைமையில் சிறப்பு குழுவினர் அவ்வப்போது ஆய்வு செய்து கொரோனா தடுப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த தகவலை பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
