என் மலர்tooltip icon

    அரியலூர்

    • ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்டசோழபுரத்தில் பௌர்ணமி கிரிவலம் நிகழ்ச்சி நடைபெற்றது
    • இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் ஸ்ரீ பிரகன்நாயகி சமேத ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி தினத்தையொட்டி கிரிவல பெருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று மாலை ஸ்ரீகணக்க விநாயகர் ஆலயத்தில் மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பெளர்ணமி கிரிவலம் நடைபெற்றது. கிரிவலம் கோவிலில் தொடங்கி வன்னியர்குழி, கணக்க வினாயகர் கோவில் வழியாக சென்று மீண்டும் பிரகதீஸ்வரர் கோவிலை வந்தடைந்தது. அதைதொடர்ந்து கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. விழாவில் சுற்று வட்டார கிராமமக்கள் மற்றும் சிவனடியார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வயிறு வலியால் அவதிபட்டவர் தற்கொலை செய்து கொண்டார்
    • புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் அழகப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    உடையார்பாளையம்,

    காரைக்குறிச்சி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் ராஜேந்திரன்(வயது 58). ராஜேந்திரன் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறியதாகவும், உறவினர்கள் உதவியுடன் கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த நிலையில், சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் அழகப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • டூவீலரில் புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது செய்யபட்டார்
    • அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    உடையார்பாளையம், 

    அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீஸ் எஸ் ஐ பூபாலன் மற்றும் போலீசார் விளாங்குடி சிவன் கோயில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிறுவளூர் வடக்கு தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ராஜரத்தினம்(20) விளாங்குடி அருகே டூவீலரில் சாக்குமூட்டையுடன் வந்த வரை போலீசார் தடுத்து நிறுத்தி மூட்டையை ஆய்வு செய்த போது ஹான்ஸ் 750 பாக்கெட்டுகளும்,சுமார் 13 கிலோ விமல் பாக்கும் எடுத்து வந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் ராஜரத்தினத்தை கைது செய்து அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    • பொதுமக்களுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
    • கூட்டமானது புதுப்பாளையம் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை ஈஸ்வரன் கோவில் ஏரி எதிர்புறம், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரியலூர், கயர்லாபாத் கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் புதுப்பாளையம் சுண்ணாம்புக்கல் மற்றும் சுண்ணாம்பு கன்கர் குவாரி விரிவாக்கம் தொடர்பாக 23.35.0 ஹெக்டேர், புல எண்கள். 222/1, 222/2A, 222/11A, 225, மற்றும் பிற., இதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டமானது வரும் 07ந்தேதி பிற்பகல் 2.30 மணிக்கும், புதுப்பாளையம் சுண்ணாம்புக்கல் மற்றும் சுண்ணாம்பு கன்கர் குவாரி விரிவாக்கம் தொடர்பாக 23.02.5 ஹெக்டேர், புல எண்கள். 229/3A, 230/2A, 237/1, 237/4A, மற்றும் பிற., இதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டமானது வரும் 8ந்தேதி காலை 10.30 மணிக்கும், புதுப்பாளையம் சுண்ணாம்புக்கல் மற்றும் சுண்ணாம்பு கன்கர் குவாரி விரிவாக்கம் தொடர்பாக 22.89.0 ஹெக்டேர், புல எண்கள். 350, 351/1A, 351/4A, 351/7A, மற்றும் பிற., இதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டமானது 8ந்தேதி மதியம் 2.30 மணிக்கும் நடைபெறும்.

    இதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டமானது புதுப்பாளையம் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை ஈஸ்வரன் கோவில் ஏரி எதிர்புறம், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்ற இடங்களில் வாழும் உண்மையான குடிமக்கள், சுற்றுச்சூழல் குழுக்கள் மற்றும் பிறர் உள்ளடங்கலாக அனைவரும் பொதுமக்கள் கேட்டுணரும் கூட்டத்தில் பங்கேற்கலாம். மேலும் மேற்கண்ட தொழிற்திட்டங்களைப்பற்றி அவர்களுடைய கருத்துக்களை வாய் மொழியாகவோ, எழுத்து வடிவிலோ தெரிவிக்கலாம். அவை பதிவு செய்யப்பட்டு மேல்நடவடிக்கைக்காக மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சென்னை அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்படும். இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தின் மீதான குறிப்பிடத்தகுந்த வாய்ப்பினை பெற்றிருக்கும் சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

    • கிளைசிறைகளில் தூய்மைப்பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
    • காலியாக உள்ள 2 தூய்மை பணியாளர் பணியிடத்துக்கு எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

    அரியலூர்,

    திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மத்திய சிறை கட்டுப்பாட்டில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் கிளைச் சிறைகளில் காலியாக உள்ள 2 தூய்மை பணியாளர் பணியிடத்துக்கு எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான வயது வரம்பு எஸ்.சி.ஏ,எஸ்.சி, எஸ்.டியினருக்கு 37, எம்.பி.சி, பி.சி.யினருக்கு 34, ஓ.சி.யினருக்கு 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். மேற்படி தூய்மை பணியாளர் பதவிக்கு தகுதி பெற்றவர்கள் சுய விவரங்களை வருகிற 13-ந் தேதிக்குள் திருச்சி மத்திய சிறைக் கண்காணிப்பாளர், திருச்சி-20 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தா.பழூரில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
    • இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாக கூட்ட மன்றத்தில் நடைபெற்றது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்யராஜ் வரவேற்று பேசினார். கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி வீரமணிகண்டன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தலிங்கம், விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கணக்கர் அரிய தங்கம் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதித்தனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குருநாதன் நன்றி கூறினார்.

    • சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
    • பிரதோஷத்தையொட்டி சுவாமி, அம்பாள், நந்திபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் மகா பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்தியம்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து பிரதோஷ நாயகர்கள் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம் முழங்க கோவிலில் பிரகார பிரதட்சணம் நடைபெற்றது.

    இதேபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்திரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில், மதனத்தூர் ராமலிங்கேஸ்வரர் கோவில், அருள்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சுவாமி, அம்பாள், நந்திபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    • விபத்தை ஏற்படுத்தி காதலியை கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டார்
    • ஜெயக்கொண்டம் கிளைச்சிறையில் அடைப்பு

    செந்துறை,

    பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகள் அபிநயா (வயது 23). தந்தை இறந்து விட்ட நிலையில் தனது தாயார், தங்கை, தம்பியுடன் வசித்து வந்தார். பட்டதாரியான இவர் குடும்ப வறுமை காரணமாக அரியலூரில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 30-ந்தேதி மதியம் உடல் நிலை சரியில்லை என்று கூறிவிட்டு கடையில் இருந்து சென்றவர் வீடு திரும்ப–வில்லை. இந்தநிலையில் உடை–யார்பாளையம் அருகே தத்தனூர் கீழவெளி கிரா–மத்தில் உடலில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி உடலை கைப் பற்றி விசாரணை நடத்தி–னார்.

    விசாரணையில் தஞ்சா–வூர் மாவட்டம் பந்தநல் லூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் பார்த்தி–பன் (32) என்பவர் அரிய–லூரில் உள்ள ஒரு டீக்கடை–யில் கேஷியராக வேலை பார்த்து வந்ததும், இவரும் அபிநயாவும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் தெரியவந்தது.

    ஆனால் அவர்களது கா தலுக்கு எதிர்ப்பு கிளம் பிய நிலையில், வருகிற 6-ந்தேதி பார்த்திபனுக்கும், வேறு ஒரு பெண்ணிற்கும் பந்தநல்லூரில் திருமணம் நடக்க இருந்தது. இந்த பத்திரிகையை நண்பர்க–ளுக்கு வழங்க உடையார்பா–ளையத்துக்கு பார்த்திபன் வந்துள்ளார்.

    இதனை அறிந்த அபி–நயாவும் உடையார்பாளை–யம் வந்து பார்த்திபனை சந்தித்து பேசினார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட் டுள்ளது. இந்த நிலையில் தான் அபிநயா மர்ம–மான முறையில் இறந்து கிடந்தார். போலீசார் செல்போன் டவர் மூலம் ஆய்வு செய்து வீட்டில் இருந்த பார்த்தி–பனை கைது செய்ததோடு அவரது மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது பார்த்திபன் தன்னை சந்திக்க வந்த அபிநயாவை நள்ளிரவில் அரியலூரில் கொண்டு விட வேகமாக சென்றதாகவும், அந்த சமயத்தில் ஏற்பட்ட விபத்தில் அபிநயா பலத்த காயமடைந்து சுயநினைவு இழந்து விட்டதாகவும், இதனால் அச்சம் அடைந்து அபிநயாவை சாலை ஓரம் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாகவும் பார்த்திபன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

    காயமடைந்து உயிருக்கு போராடிய காதலியை காப்பாற்ற முயற்சி செய்யா–மல் காதலன் மனிதாபம் இல்லாமல் தப்பிச் சென்றது போலீசார் இடையே சந்தே–கத்தை ஏற்படுத்தியது. எனவே இது விபத்து தானா அல்லது பார்த்திபன் வேறு பெண்ணை திருமணம் செய்வதால் ஏற்பட்ட தக–ராறில் அடித்து கொலை செய்து வீசி சென்றாரா என்கிற கோணத்தில் விசா–ரணை நடத்தினர். விசாரணை முடிவில் பார்த்திபன் வேண்டும் என்றே விபத்தை ஏற்படுத்தி காதலியை கொலை செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரை இன்ஸ்பெக்டர் வேலுசாமி கைது செய்து ஜெயங்கொண்டம் நீதி–மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

    • அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்
    • வாரணவாசி சமத்துவபுரத்தில் தனிநபர் இல்லங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புணரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.

    அரியலூர்.

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், திருமானூர் ஒன்றியம், வாரணவாசி ஊராட்சி, வாரணவாசியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பிள்ளையார் குட்டை ஏரி தூர்வாருதல் மற்றும் கரைகளை பலப்படுத்துதல் பணிகளை பார்வையிட்டு உரிய காலத்திற்குள் விரைவாக முடித்திடவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து, வாரணவாசி சமத்துவபுரத்தில் கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நிதி திட்டத்தின் கீழ் ரூ.4.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலையின் தரம்குறித்து ஆய்வு செய்தார். பின்னர் வாரணவாசி சமத்துவபுரத்தில் தனிநபர் இல்லங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புணரமைப்பு பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து, 15வது நிதிக்குழு மான்யம் வட்டார ஊராட்சி திட்டத்தின்கீழ் ரூ.54,000 மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சமையலறை கட்டிடம் பழுது நீக்கம் செய்தல் பணியினை ஆய்வு செய்தார்.

    பின்னர், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.5.91 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய துவக்கிபள்ளியில் நடைபெற்றுவரும் கழிவறை கட்டுமானப் பணியினை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து, வாரணவாசி கிராமம், திருமானூர் ஒன்றியம், சாத்தமங்கலம் கிராமம், சுள்ளங்குடி கிராமம், ள்ளங்குடி கிராமம் ஆகியவறறில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) திரு.முருகண்ணன், வட்டார வளரச்சி அலுவலர்கள் திரு.பொய்யாமொழி, திரு.ஜாகிர் உசைன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • அரியலூர் மாவட்டத்தில் எண்ணும், எழுத்தும் பயிற்சியினை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்
    • பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் கலெக்டர் வழங்கினார்.

    அரியலூர்,

    மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பெரம்பலூர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் 4 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 2023-24-ம் ஆண்டிற்கான எண்ணும்-எழுத்தும் திட்டத்தினை தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்து முதலாம் ஆண்டிற்கான 3 நாள் பயிற்சியை தொடங்கியது. அதன்படி அரியலூர் மாவட்டம், திருமானூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி. வட்டார அளவிலான பயிற்சியானது 6 ஒன்றியங்களில் 698 ஆசிரியர்களுக்கு நாளை வரை நடத்தப்படுகிறது.இதில், திருமானூர் வட்டார வள மையத்தில் நடைபெற்ற பயிற்சியினை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மாணவர்களுக்கு மகிழ்ச்சியான கற்றல் தொடர்ந்திட, அனைத்து நிலை மாணவர்களும் செயல்பாடுகளில் பங்குபெற, படைப்பாற்றல் சிறந்து விளங்கிட, பேச்சுத்திறன் வளர்ந்திட, சக மாணவர்களுடன் இணைந்து செயல்படுதல் ஆகிய செயல்பாடுகள் பயிற்சியின் கருப்பொருளாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்(பொ) முருகண்ணன், மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகள் குறைதீர்வு சிறப்பு அமர்வு வருகிற 9-ந் தேதி நடைபெறுகிறது என கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அறிவித்துள்ளார்
    • ஆண்டிமடம் அண்ணங்காரங்குப்பம் அண்ணா பெரியார் திருமணமண்டபத்தில் இந்த குறைதீர்வு அமர்வு நடைபெற உள்ளது.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள அண்ணங்கா ரங்குப்பத்திலுள்ள அண்ணா பெரியார் திருமண மண்டபத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான குறை தீர்வு அமர்வு நடைபெறவுள்ளது என்று கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பாக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான குறை தீர்வு அமர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. அதன் ஒரு மாவட்டமாக அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம் ஒன்றியத்தை தேர்வு செய்து வரும் 9 -ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9 மணியளவில் ஆண்டிமடம் அண்ணங்காரங்குப்பம் அண்ணா பெரியார் திருமணமண்டபத்தில் இந்த குறைதீர்வு அமர்வு நடைபெற உள்ளது.

    இந்த அமர்வில் ஆணைய உறுப்பினர் முன்னிலையில், அனைத்து துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர். எனவே பொது மக்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் தங்களது பகுதிகளில் உள்ள குழந்தைகளின் உரிமை மீறல் சம்பந்தமான பிரச்னைகள், பாதுகாப்பு சார்ந்த பிரச்னைகள், பள்ளி இடைநிற்றல் குழந்தைகள், உடல்ரீதியான தண்டனைக்கு உள்ளான குழந்தைகள் மற்றும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீட்டுத் தொகை கோருவது, ஆதவற்ற குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த மனுக்களை இந்த குறைதீர்வு அமர்வில் நேரடியாக கொடுத்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எதிர்ப்பை மீறி அபிநயாவை திருமணம் செய்துகொள்வதாக பார்த்திபன் உறுதி அளித்துள்ளார்.
    • சாலையில் கிடந்த அபிநயாவை சாலையோர பள்ளத்தில் தூக்கி வீசிவிட்டு பார்த்திபன் அங்கிருந்து சென்றுள்ளார்.

    செந்துறை:

    பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகள் அபிநயா (23). தந்தை இறந்துவிட்ட நிலையில் குடும்பத்தை காப்பாற்றவும், வறுமை காரணமாகவும் இவர் தற்போது அரியலூரில் உள்ள ஒரு மளிகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் வேலைக்கு சென்ற அவர் நேற்று முன்தினம் மதியம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி கடையில் இருந்து வீட்டுக்கு செல்வதாக கூறி புறப்பட்டுள்ளார். ஆனால் அபிநயா வீட்டுக்கு செல்லவில்லை.

    இதற்கிடையே நேற்று காலை உடையார்பாளையம் அருகே சாலையோரத்தில் அவர் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

    தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் பார்த்திபன் (வயது 33). டிப்ளமோ படித்துள்ள இவர் அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அபிநயா தஞ்சாவூருக்கு வேலைக்கு சென்றுவந்தபோது, பார்த்திபனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் ஒருசில ஆண்டுகள் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இருவீட்டிலும் திருமணத்துக்கு எதிர்ப்பு இருந்து வந்துள்ளது.

    ஆனாலும் எதிர்ப்பை மீறி அபிநயாவை திருமணம் செய்துகொள்வதாக பார்த்திபன் உறுதி அளித்துள்ளார். இதனை நம்பிய அபிநயாவும் காதலனுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளார்.

    இதற்கிடையே பார்த்திபனுக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் பெண் பார்த்து திருமணமும் நிச்சயித்தனர். அதன்படி பார்த்திபனுக்கு வருகிற 6-ந்தேதி பந்தநல்லூரில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதனை அறிந்த அபிநயா அதிர்ச்சி அடைந்தார். உடனே பார்த்திபனை செல்போனில் தொடர்பு கொண்ட அவர் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இதையடுத்து நேற்று முன்தினம் இரவு உடையார்பாளையம் பகுதிக்கு தனது நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக வந்த பார்த்திபனை அபிநயா நேரில் சந்தித்துள்ளார். அப்போதும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    பின்னர் இருவரும் மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே பொட்டக்கொல்லை திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புக்கட்டையில் மோதி விபத்து ஏற்பட்டதாகவும், பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

    இதில் பார்த்திபனுக்கு பின்னந்தலையிலும், அபிநயாவுக்கு உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அந்த சமயம் விபத்து நடந்த பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. உதவிக்கு யாரையும் அழைக்க முடியாத நிலையில் பார்த்திபன் மட்டும் அங்கிருந்து தனது மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு பந்தநல்லூர் சென்றுவிட்டார்.

    அத்துடன் சாலையில் கிடந்த அபிநயாவை சாலையோர பள்ளத்தில் தூக்கி வீசிவிட்டு பார்த்திபன் அங்கிருந்து சென்றுள்ளார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அபிநயாவை மீட்கவும், அவருக்கு சிகிச்சை அளிக்கவும் பார்த்திபன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து அபிநயா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்துள்ளார். மேற்கண்ட தகவலை பார்த்திபன் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின்பேரில் விரைந்து சென்ற உடையார்பாளையம் போலீசார் அபிநயாவின் உடலை கைப்பற்றி நடத்திய முதல்கட்ட விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் கிடைத்தன.

    உண்மையிலேயே விபத்தில் ஏற்பட்ட காயத்தால் தான் அபிநயா உயிரிழந்தாரா அல்லது தனது திருமணத்திற்கு பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதற்காக காதலியை நேரில் வரவழைத்து அவரை கொலை செய்துவிட்டு பார்த்திபன் நாடகம் ஆடுகிறாரா? என்பது உள்ளிட்ட கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் சென்ற உடையார்பாளையம் போலீசார் விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய காதலியை காப்பாற்ற முயற்சி எடுக்காமல் சாலையோரம் வீசிச்சென்ற பார்த்திபனை கைது செய்தனர்.

    மேலும் விபத்தில் சிக்கியதாக கூறப்படும் வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து உடையார்பாளையத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இந்த சம்பவம் உடையார்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×